டாக்டர் ஜாகிர் நாயக்கின் பதில்கள் (6 - 10)
தமிழில் : அபு இஸாரா
கேள்வி எண்: 6
முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.
பதில்
உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேற்படி தவறான தகவல் மற்றும் தவறான பிரச்சாரம் - இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கும் தவறாக விமரிசிக்கப்படுவதற்கும் காரணங்களாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நடந்த வெடி குண்டு விபத்தின் பின்னனியில் 'மத்திய கிழக்கு நாடுகளின்' கைவரிசை இருக்கிறது என அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பு செய்தன. ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்க காரணமாயிருந்த குற்றவாளி அமெரிக்காவின் ஆயுதபடையைச் சார்ந்த ஒருவன்தான் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்து இஸ்லாமியர்கள் மீது சுமத்தப்படும்; 'அடிப்படைவாதம்' பற்றியும் - 'தீவிரவாதம்' பற்றியும் நாம் ஆராய்வோம்.
1. அடிப்படைவாதத்திற்கான விளக்கம்:
தான் சார்ந்திருக்கும் கொள்கையை மன உறுதியுடன் பற்றிப் பிடித்து அந்த கொள்கையை தன் வாழ்க்கையில் மிகச் சரியாக நடைமுறைபடுத்துபவனுக்கு அடிப்படைவாதி என்று பெயர். உதாரணத்திற்கு மருத்துவர் ஒருவர் சிறந்த மருத்துவர் என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் மருத்துவ கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த மருத்துவ கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த மருத்துவர் என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - மருத்துவதுறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. கணிதத் துறையில் ஒருவர் சிறந்த கணித மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் கணிதக் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அவர் அறிந்த கணிதக் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த கணித மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - கணிதத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. . அறிவியல் துறையில் ஒருவர் சிறந்த அறிவியல் மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் அறிவியல் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த அறிவியல் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த அறிவியல் மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - அறிவியல் துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி.
2. எல்லா அடிப்படைவாதிகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.
எல்லா அடிப்படைவாதிகளுக்கும் ஒரே வர்ணம் பூசக் கூடாது. எல்லா அடிப்படைவாதிகளும் நல்லவர்கள் என்றோ அல்லது கெட்டவர்கள் என்றோ வகைப்படுத்த முடியாது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை அல்லது அவர்களால் செய்யப்படும் செயல் ஆகியவற்றைக் கொண்டே அவர்கள் நல்ல அடிப்படைவாதியா அல்லது கெட்ட அடிப்படைவாதியா என்பதை வகைப்படுத்த வேண்டும். கொள்ளையடிக்கும் - சிறற்த கொள்ளைக்காரன் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அவனை ஒரு கெட்ட அடிப்படைவாதி என்று கொள்ளலாம். அதே சமயம் ஒரு சிறந்த மருத்துவர் சமுதாயத்திற்கு பயனுள்ளவராக இருப்பதால் அவர் ஒரு நல்ல அடிப்படைவாதி மருத்துவர் என கொள்ளலாம்.
3. நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்.
இறைவனி;ன் மாபெரும் கிருபையினால் - நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி. இஸ்லாத்தின் அடிப்படை விதிகளை அறிந்து - அறிந்த விதிகளை பின்பற்றி - அந்த விதிகளை எனது வாழ்க்கையிலும் நடைமுறைபடுத்துகிறேன். ஓரு உண்மையான இஸ்லாமியன் தான் ஒரு அடிப்படைவாதியாக இருப்பதில் ஒருபோதும் வெட்கமுற மாட்டான். நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில் - இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் உலகம் முழுவதுமுள்ள மனித குலத்திற்கு பயன் தரக் கூடியவை. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் எதுவுமே மனித குலத்திற்கு தீழங்கிழைப்பவையோ அல்லது மனித குலத்திற்கு எதிரானவையோ அல்ல. இஸ்லாத்தின் செயல்பாடுகள் சரியானவை அல்ல. மாறாக தவறானவை என்று ஏராளமானபேர் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கொண்டிருக்கின்றனர். இந்த தவறான எண்ணம் ஏனெனில் - இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் அறைகுறையாக அறிந்து வைத்திருப்பதே காரணமாகும். ஓருவர் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்களை திறந்த மனதுடனும் - மிகக் கவனத்தோடும் பகுத்தாய்வார் எனில் இஸ்லாம் தனி மனிதனுக்கும் - மொத்த மனித சமுதாயத்திற்கும் - முழு பயனுள்ளது என்ற உண்மையை அறிவதிலிருந்து தவற முடியாது.
4. 'அடிப்படைவாதத்திற்கு' டிக்ஷ்னரி தரும் விளக்கம்:
அடிப்படைவாதத்திற்கு வெப்ஸ்டர் டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவென்றால் 'பாதுகாக்கும் கொள்கையை' (Pசழவநளவயnளைஅ) அடிப்படையாக கொண்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் என்பதாகும். நவீன நாகரீகத்தை எதிர்த்தும் பைபிளின் கொள்கைகளான - நம்பிக்கை மற்றும் ஒழுக்கங்கள் மட்டுமல்லாது - வரலாற்று உண்மைகளையும் பைபிளிள் உள்ளபடியே நிலை நிறுத்த வேண்டியும் தோன்றிய இயக்கமாகும். 'கடவுளால் எழுத்து வடிவில் அருளப்பட்ட கட்டளைகளே பைபிள்' என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வரும் இயக்கமாகும். எனவே ஆரம்ப காலங்களில் அடிப்படைவாதம் என்றால் மேற்குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இயங்கி வந்த இயக்கம் என்று பொருள் கொள்ளப்பட்டது.
அடிப்படைவாதத்திற்கு ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவெனில் 'மதங்களின் தொன்மையான அல்லது அடிப்படையான கோட்பாடுகளை நெறி பிறழாது நடைமுறைபடுத்துவது - குறிப்பாக இஸ்லாமிய மத கோட்பாடுகள்' என்பதாகும்.
இன்றைக்கு ஒரு மனிதன் 'அடிப்படைவாதம்' என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது உடனே அவனது எண்ணத்தில் இஸ்லாமியன் - ஒரு பயங்கரவாதியாக தோன்றிவிடுகிறான்.
5. ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும். பயத்துக்கு காரணமானவன் பயங்கரவாதி. காவல்துறையை பார்த்தவுடன் கொள்ளையடிப்பவர்கள் பயப்படுகின்றனர். எனவே கொள்ளையருக்கு காவல் துறையினர் பயங்கரவாதிகள். அதேபோல திருட்டு கொள்ளை மற்றும் வல்லுறவு போன்ற சமுதாயத்தின் குற்றங்களைச் செய்யும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் - ஒவ்வொரு இஸ்லாமியனும் ஓர் பயங்கரவாதியாக தோன்ற வேண்டும். சமுதாயக் குற்றவாளிகள் - ஒரு இஸ்லாமியனை காணும்போதெல்லாம் பயப்படவேண்டும். சமுதாயத்தில் உள்ள எல்லா மனிதர்ளுக்கும் மத்தியில் தீங்கு இழைப்பவனுக்கு பயங்கரவாதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது உண்மை. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்டவர்களுக்கு - அதாவது சமுதாய குற்றவாளிகளுக்கு - மாத்திரம் பயங்கரவாதியாக தோன்ற வேண்டுமே தவிர சமுதாயத்தின் அப்பாவி பொதுமக்களுக்கு அல்ல. மாறாக ஒரு இஸ்லாமியன் - அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியில் அமைதியை நிலைநாட்டுபவனாக இருக்க வேண்டும்.
6. மனிதர்கள் செய்கிற ஒரே வகையான செயலுக்கு - 'பயங்கரவாதிகள்' என்றும் 'விடுதலைப் போராட்ட வீரர்கள்' என்றும் இரண்டு வகையான முத்திரைகள்.
வெள்ளையர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்த இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் - இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என பிரிட்டிஷ் அரசாங்கம் முத்திரை குத்தியது. ஆனால் அதே வீரர்கள் இந்தியர்களால் - சுதந்திர போராட்ட வீரர்கள் என அழைக்கப் பட்டார்கள். இவ்வாறு ஒரே வகையான மனிதர்கள் - அவர்கள் செய்த ஒரே வகையான செயலுக்கு இரண்டு வகையான முத்திரைகள் குத்தப்பட்டார்கள். அவர்கள் 'பயங்கரவாதிகள்' என்று ஒரு தரப்பினராலும் - 'சுதந்திரப் போராட்ட வீரர்கள்' என்று மறு தரப்பினராலும் அழைக்கப்பட்டார்கள். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இருக்கிறது என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை 'பயங்கரவாதிகள்' என்று அழைத்தனர். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இல்லை என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை 'சுதந்திரப் போராட்ட வீரர்கள்' என்று அழைத்தனர்.
எனவே ஒரு மனிதனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் - அவனது கருத்தையும் அறிவது அவசியம். இரண்டு தரப்புகளும் தீர விசாரிக்கப்பட்டு - விசாரணையின் முடிவுகள் அலசி ஆராயப்பட்டு - அதற்கான காரண காரியங்கள் மற்றும் செயலுக்கான நோக்கம் அனைத்தையும் அறிந்த பின்புதான் அந்த மனிதனைப்பற்றி ஒரு நிலையான முடிவு க்கு வரவேண்டும்.
7. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.
'இஸ்லாம்' என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ஸலாம் என்றால் அமைதி என்று பொருள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் - இஸ்லாத்தை பின்பற்றுவோர் அமைதியை கடைபிடிக்குமாறு போதிப்பதுடன் உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டுமாறும் போதிக்கிறது.
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாம் அமைதியை கடைபிடிப்பதில் ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு அடிப்படைவாதியே. சமுதாயத்தில் அமைதியையும் - நீதியையும் நிலைநாட்டுதல் வேண்டி - ஒவ்வொரு இஸ்லாமியனும் - சமுதாயக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு தீவிரவாதியாக இருக்க வேண்டும்.
கேள்வி எண்: 7.
கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?
பதில்:
சைவ உணவு உண்பது - இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது. இந்த இயக்கங்களில் பல கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை. ஏராளமானபேர் - மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு உண்பது என்பது கால்நடைகளின் உரிமைகளை பரிப்பதாகும் என்கிற கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் - அல்லாஹ் இந்த பூமியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும் படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. அல்லாஹ் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.
இந்த விவாதம் பற்றிய மற்ற விபரங்களை ஆராய்வோம்.
1. சைவ உணவு மட்டும் உண்ணக் கூடியவர் கூட இஸ்லாமியராக இருக்க முடியும்.
சைவ உணவை தொடர்ந்து உண்ணக்கூடிய இஸ்லாமியன் ஒரு நல்ல இஸ்லாமியனாக இருக்க முடியும். அவர் கண்டிப்பாக அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை.
2. இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது.
இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயமான ஸுரத்துல் மாயிதாவின் ஒன்றாவது வசனம்இ'முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப் பட்டுள்ளன.' என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.
மேலும் அருள்மறை குர்ஆன் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் ஐந்தாவது வசனம் 'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' எனவும்
அருள்மறை குர்ஆன் 23வது அத்தியாயம் ஸுரத்துன் முஃமினூன் 21ஆம் வசனம் 'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' எனவும் கால்நடைகளின் பயன் பற்றி மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது.
3. மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.
உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
4. மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.
நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.
5. மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.
தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஆனால் மனித செரிமான அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை - இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்?.
6. இந்து வேதங்கள் மாமிச உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருக்கிறது.
இந்துக்களில் ஏரானமானபேர் முற்றிலும் மாமிச உணவு உண்ணாதவர்களாக இருக்கிறார்கள். மாமிச உணவு உண்பது அவர்களின் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் - இந்துக்கள் மாமிச உணவு உண்பதற்கு அவர்களின் வேதங்கள் அனுமதியளித்துள்ளன. இந்து சாமியார்கள் மாமிச உணவு உட்கொண்டதாக இந்துக்களின் வேதங்கள் கூறுகின்றன.
இந்துக்களின் சட்ட புத்தகமான மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:
'உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் - அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் - சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே'.
மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்றாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:
'மாமிச உணவு உண்பதும் - சரியான தியாகமே. இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்'.
மேலும் மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும் கீழக்கண்டவாறு கூறுகிறது:
'பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.'
இவ்வாறு இந்து மத வேதங்களும் - சாஸ்திரங்களும் - இந்துக்கள் மாமிச உணவு உண்ணவும் - உணவுக்காக கால்நடைகளை கொல்லவும் அனுமதியளித்திருக்கிறது.
7. இந்துத்துவம் மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்து மத வேதங்கள் இந்துக்கள் அசைவ உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும் பெரும்பான்மையான இந்துக்கள் மாமிச உணவு உண்ணாமல் - சைவ உணவு மட்டுமே உட்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அசைவ உணவு உட்கொள்ளாத ஜைன மதக் கொள்கையின் பாதிப்பு இந்து மதத்திலும் ஏற்ப்பட்டிருப்பதால் தான்.
8. தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.
பெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதற்கு காரணம் - அவர்களின் மதங்கள் உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற கொள்கையை போதிப்பவைகளாக இருப்பதால்தான். ஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும் எனில் - மேற்படி கொள்கையை கடைபிடிக்கும் மனிதர்களில் முதலாவதாக இருப்பது நானாகத்தான் இருக்கும். முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
9. தாவரங்களாலும் வலியை உணர முடியும்:
தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 Hertz க்கு குறைவான சப்தத்தையும் 20000 Hertz க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது. அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.
10. இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்டு உயரி;வாழக்கூடியவைகளை கொல்வது என்பது குறைந்த பாவம் செய்வது ஆகாது.
ஓருமுறை - ஒரு சைவ உணவு உட்கொள்பவர் - என்னோடு வாதிடும்போது சொன்னார் - மிருகங்கள் ஐந்தறிவு கொண்டவை. ஆனால் தாவரங்கள் - இரண்டு - அல்லது மூன்று புலன்களை கொண்டவைதான். எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களை கொல்வதைவிட - இரண்டு அல்லது புலன்களை கொண்ட தாவரங்களை கொல்வது குறைந்த பாவம் இல்லையா என்று. ஒரு உதாரணத்திற்கு உங்களது சகோதரர் - பிறவியிலேயே செவிட்டு - ஊமையாக இருக்கிறார். அவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது அவர் இரண்டு ஆற்றல்கள் - குறைவாக உள்ளவர்தான். வளர்ந்து ஆளான - உங்களது செவிட்டு ஊமை சகோதரரை - ஒருவர் கொலை செய்து விட்டார் - என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களது செவிட்டு ஊமை சகோதரர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர் - ஆகவே கொலையாளிக்கு - குறைந்த தண்டனை தந்தால் போதும் என்று நீங்கள் நீதிபதியுடன் வாதாடுவீர்களா?. மாட்டீர்கள். மாறாக என்ன சொல்வீர்கள் - காது கேளாத - வாய் பேச முடியாத அப்பாவியை கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்.
11. கால்நடைகள் பெருகும்:
உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான்.
அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 168 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.'
கேள்வி எண் - 8.
இஸ்லாமியர்கள் கால்நடைகளை - இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே?. இது சரியா?.
பதில்:
'ஸபிஹா' என்றழைக்கப்படும் - இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம் குறித்து மக்களில் பொரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் - மேற்படி பொருள் குறித்து - ஒரு சீக்கியருக்கும் - ஒரு இஸ்லாமியருக்கும் நடந்த உரையாடலை உங்களுக்கு சொல்லி விடுறேன்.
சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார் - நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது - அதன் பின்புற மண்டையில் ஒரே போடு போட்டு - கொன்று விடுகிறோம். அதுபோல செய்யாமல் - நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை அறுத்து - சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்?.
மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்: கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. நாங்கள் தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை அறுத்து கொல்கிறோம் என்று.
மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் - ''ஸபிஹா' என்றழைக்கப்படும் - இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம்தான் மனிதத்தன்மை உள்ளது மற்றும் அறிவியல் ரீதியாக சிறந்த முறை என்பதை கீழக்காணும் விபரங்கள் நமக்கு தெரிவிக்கும்.
1. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்.
அரபிமொழியில் 'ஸக்காத்' என்றால் 'தூய்மை' என்ற பொருள். மேற்படி சொல்லிலிருந்து 'ஸக்கய்தும்' (தூய்மைப்படுத்துதல்) என்ற வினைச்சொல் பெறப்பட்டது. இஸ்லாமிய முறையில் காலந்டைகளை அறுப்பதற்கு கீழக்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.
கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு - மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.
B. 'ஸபிஹா' என்றால் அரபிமொழியில் அறுத்தல் என்று பொருள்படும். மேற்படி இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு - கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் - அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் - இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் - இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு - இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.
D. கிருமிகளும் - நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே.
கிருமிகளும் - நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது - கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.
E. .இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீ;ண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் - வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீ;ண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
F. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது - கால்நடைகள் வலியை உணர்வதில்லை.
இஸ்லாமிய முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது - கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் - உடலில் உள்ள சதைப்பாகங்கள் - இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் - துள்ளுவதாகவும் - துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.
கேள்வி எண் - 9.
மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது - இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி?. ஏனெனில் - புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே எப்படி?
பதில்:
1. இஸ்லாமிய மார்க்கம் - தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நைடகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்துள்ளது.
மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் - மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்ற விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை செய்துள்ளது. ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம். அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதித்துள்ளது. மேற்படி பிராணிகள் - அமைதியானதும் - பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான நாங்கள் - அமைதியான பிராணிகளான - ஆடு - மாடு - ஒட்டகம் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் அமைதியை விரும்புகிறவர்களாக - இருக்கின்றோம்.
2. அருள் மறை குர்ஆனும் - நபிகளாரின் பொன்மொழியும் - கெட்ட உணவு வகைகளை உண்பதை தடை செய்துள்ளது.
'(நபியாகிய) அவர் நன்மையான காரியங்களைச் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 07 - ஸுரத்துல் அஃராப் - 157வது வசனம்)
'மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 59 - ஸுரத்துல் ஹஷ்ர் - 7வது வசனம்)
சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்திருக்கும் அல்லாஹ் - சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அல்லாஹ் தடை செய்திருக்கிறான் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொள்ள - நபிகளாரின் பொன்மொழி ஒன்றே போதுமானதாகும்.
3. மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்தி:
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி - ஸஹீஹுல் முஸ்லிம் (ஹதீஸ் எண் 4752) ஸுனன் இப்னு மாஜா (ஹதீஸ் எண் - 3232 முதல் 3234 வரை) போன்ற ஹதீஸ் (செய்தி) நூல்களில் இடம்பெற்றுள்ளன.
அ. மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும் உடைய காட்டு விலங்குகளான - சிங்கம் புலி நாய் ஓநாய் போன்றவைகள்.
ஆ. கொறித்துத் திண்ணக்கூடிய பற்களை உடைய எலி பெருச்சாலி அணில் போன்றவைகள்
இ. ஊர்ந்து திரியக் கூடிய பாம்பு முதலை போன்ற பிராணிகள்
ஈ. கூரிய அலகுகளையும் - கால் நகங்களையும் உடைய கழுகு பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகள் ஆகியவை மனிதர்கள் உணவாக உட்கொள்ள தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும் பறவைகள் ஆகும்.
கேள்வி எண் 10.
குர்ஆனின் சில அத்தியாயங்கள் அலிஃப் - லாம் - மீம் - எனவும் - ஹாமீம் எனவும் - யாஸீன் எனவும் துவங்குகிறதே. இந்த பதங்களின் முக்கியத்துவம் என்ன?.
பதில் :
அலிஃப் - லாம் - மீம், யாஸீன், ஹாமீம் போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் 'அல்-முகத்ததத்' (சுருக்கப்பட்ட எழுத்துக்கள்) என்று பெயர். அரபி மொழியில் மொத்தம் இருபத்து ஒன்பது (அலிஃப் - மற்றும் ஹம்ஸ் என்கிற எழுத்துக்களை இரண்டாக கருதினால்) எழுத்துக்கள் இருக்கின்றன. அதேபோல அருள் மறை குர்ஆனிலும் இருபத்து ஒன்பது அத்தியாயங்கள் மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன. இவ்வாறு சுருக்கப்பட்ட எழுத்துக்கள் சில அத்தியாயங்களில் தனித்தும், சில அத்தியாயங்களில் இரண்டாகவும், சில அத்தியாயங்களில் மூன்று எழுத்துக்களாகவும், சில அத்தியாயங்களில் நான்கு அல்லது ஐந்து எழுத்துக்களாகவும் சேர்ந்து வரும்.
A. அருள்மறையின் கீழ்க்காணும் மூன்று அத்தியாயங்கள் ஒரே ஒரு எழுத்தினை கொண்டு துவங்குகின்றன.
i. அத்தியாயம் 38 ஸுரத்து ஸாத் - ஸாத் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.
ii. அத்தியாயம் 50 ஸுரத்துல் ஃகாஃப் - ஃகாஃப் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.
iii. அத்தியாயம் 68 ஸுரத்துல் கலம் - நூன் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.
அருள்மறையின் கீழ்க்காணும் பத்து அத்தியாயங்கள் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
i. அத்தியாயம் 20 ஸுரத்துத் தாஹா 'தா - ஹா' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
ii. அத்தியாயம் 27 ஸுரத்துன் நம்ல் 'தா - ஸீன்' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
iii. அத்தியாயம் 36 ஸுரத்துல் யாஸீன் 'யா - ஸீன்' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
iv. அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின்
v. அத்தியாயம் 41 ஸுரத்து ஹாமீம் ஸஜ்தா
vi. அத்தியாயம் 42 ஸுரத்துல் அஷ்ஷுறா
vii. அத்தியாயம் 43 ஸுரத்துல் அஜ் ஜுக்ருஃப்
viii. அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான்
ix. அத்தியாயம் 45 ஸுரத்துல் ஜாஸியா
x. அத்தியாயம் 46 ஸுரத்துல் அஹ்காஃப்
மேலே குறிப்பிட்டுள்ள அருள்மறையின் பத்து அத்தியாயங்களும் 'ஹா - மீம்' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
B அருள்மறையின் கீழ்க்காணும் பதினான்கு அத்தியாயங்கள் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
i. அத்தியாயம் இரண்டு ஸுரத்துல் பகரா
ii. அத்தியாயம் மூன்று ஸுரத்துல் ஆல இம்ரான்
iii. அத்தியாயம் இருபத்து ஒன்பது ஸுரத்துல் அன்கபூத்
iv. அத்தியாயம் முப்பது ஸுரத்துல் ரூம்
v. அத்தியாயம் முப்பத்து ஒன்று ஸுரத்துல் லுக்மான்
vi. அத்தியாயம் முப்பத்து இரண்டு ஸுரத்துல் ஸஜ்தா ஆகிய ஆறு அத்தியாயங்களும் அலிஃப் - லாம் - மீம் என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
vii. அத்தியாயம் பத்து ஸுரத்துல் யூனுஸ்
viii. அத்தியாயம் பதினொன்று ஸுரத்துல் ஹுத்
ix. அத்தியாயம் பன்னிரெண்டு ஸுரத்துல் யூஸுப்
x. அத்தியாயம் பதின்மூன்று ஸுரத்துல் ராத்
xi. அத்தியாயம் பதின்நான்கு ஸுரத்துல் இப்றாஹிம்
xii. அத்தியாயம் பதினைந்து ஸுரத்துல் ஹிஜ்ர் ஆகிய ஆறு அத்தியாயங்களும் அலிஃப் - லாம் - ரா என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
xiii. அத்தியாயம் இருபத்து ஆறு ஸுரத்துல் அஸ்ஸுரா
xiv. அத்தியாயம் இருபத்து எட்டு ஸுரத்துல் கஸஸ் ஆகிய இரண்டு அத்தியாயங்களும் தா - ஸீன் - மீம் என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
C அருள்மறையின் கீழ்க்காணும் இரண்டு அத்தியாயங்கள் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
அத்தியாயம் ஏழு ஸுரத்துல் அஃராப் அலிஃப் - லாம் - மீம் - ஸாத் என்னும் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
அத்தியாயம் எட்டு ஸுரத்துல் அன்ஃபால் அலிஃப் - லாம் - மீம் - ரா - என்னும் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
D அருள்மறையின் கீழ்க்காணும் இரண்டு அத்தியாயங்கள் ஐந்து எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
அத்தியாயம் 19 ஸுரத்துல் மர்யம் காஃப் - ஹா- யா- அய்ன்-ஸாத் - என்னும் ஐந்து எழுத்துக்களை துவங்குகின்றன.
அத்தியாயம் 42 ஸுரத்துல் அஷ்-ஷுறா- ஹா- மீம் - அய்ன் -ஸீன் - காஃப் - என்னும் ஐந்து எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன. இந்த ஐந்து எழுத்துக்களும் அத்தியாயத்தின் இரண்டு வசனங்களான தொடர்ந்து வருகின்றன. அதாவது ஹா- மீம் என்னும் இரண்டு எழுத்துக்கள் முதல் வசனமாகவும், அதனைத் அடுத்து அய்ன் -ஸீன் - காஃப் -என்னும் மூன்று எழுத்துக்கள் இரண்டாவது வசனமாகவும் தொடர்கின்றன.
2. சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு உண்டான விளக்கம்:
சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கான அர்த்தமும் நோக்கமும் தெளிவில்லாமல் இருந்தாலும், மேற்படி அருள்மறையில் காணப்படும் சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு வௌ;வேறான பல விளக்கங்கள் அந்தந்த காலத்தில் வாழ்ந்து வந்த மார்க்க அறிஞர்களால் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இப்போது காண்போம்.
i. மேற்படி எழுத்துக்கள் அருள்மறை குர்ஆனில் உள்ள சில வசனங்களுக்கு உண்டான சுருக்கமாக இருக்கலாம். உதாரணத்திற்கு அலிஃப் - லாம் - மீம் என்பதற்கு 'அன-அல்லாஹு-ஆலம்' என்பதின் முதல் எழுத்துக்கள் என்றும், 'நூன்' என்பதற்கு 'நூர்' (ஒளி) என்றும் பொருள் கொள்ளலாம் எனவும்,
ii. மேற்படி எழுத்துக்கள் சுருக்கப்பட்ட எழுத்துக்கள் அல்ல. மாறாக அல்லாஹ்வின் பெயர்கள் அல்லது அவனது அடையாளங்களில் ஒன்றாக இருக்கலாம் எனவும்,
iii. மேற்படி எழுத்துக்கள் ராகத்துடன் உச்சரிப்பதற்காக பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும்,
iv. அரபு எழுத்துக்களில் சிலவற்றுக்கு எண் மதிப்பு உள்ளதைப்போன்று, இந்த எழுத்துக்களுக்கும் முக்கியமான எண் மதிப்புகள் எதுவும் இருக்கக் கூடும் எனவும்,
v. இந்த எழுத்துக்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக (பின்னர் இறைவசனத்தை கேட்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக) இருக்கலாம் எனவும்,
மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துகளுக்குண்டான முக்கியத்துவம் குறித்து எண்ணற்ற விளக்கங்கள் நம்மிடையே உள்ளன.
3. அருள்மறையின் சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு உண்டான சிறந்த விளக்கம்:
மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துகளுக்குண்டான முக்கியத்துவம் குறித்து எண்ணற்ற விளக்கங்கள் நம்மிடையே இருந்தாலும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான இப்னு-கதீர் அவர்களின் விளக்கமும், ஷமக்ஸாரி, மற்றும் இப்னு-தைம்மியா ஆகியோர்களால் சரிகாணப்பட்ட விளக்கங்களும் பின்வருமாறு:
இயற்கையில் காணப்படும் சில அடிப்படை மூலக்கூறுகளால் ஆனது மனித உடல் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். களிமண்ணும், மண்ணும் இயற்கையில் உள்ள அடிப்படை மூலக்கூறுகளில் உள்ளதாகும். இருப்பினும் மனித உடல் மண்ணால் படைக்கப்பட்டது என்பதை எண்ணும்போது சிரிக்கத்தான் தோன்றுகிறது.
மனித உடலின் இயற்கையான மூலக்கூறுகளான மண்ணையும், களிமண்ணையும்;, தண்ணீரையும் நாம் எல்லோரும் எளிதில் பெறக்கூடிய நிலையில்தான் இருந்தாலும், மேற்படி இயற்கையான மூலக்கூறுகளைக் கொண்டு - மனித உடலை படைக்க நம்மால் முடியாது. மனிதன் இன்ன மூலக்கூறுகளை கொண்டுதான் படைக்கப்பட்டான் என்பதை நாம் நன்றாக அறிந்திருந்தும் படைப்பின் ரகசியம் பற்றி நாம் எதுவும் அறியாதவர்களாகத்தான் இருக்கிறோம்.
அதேபோன்று இறைத்தன்மை வாய்ந்த குர்ஆனை மறுப்பவர்களுக்கு - தன்னைப் பற்றி அறிவிக்கிறது. இறைத்தன்மை வாய்ந்த அருள்மறை குர்ஆன் அரபி மொழியிலேயே உள்ளது என்பது பற்றி பெருமை கொண்டிருக்கும் அரேபியர்களுக்கு தன்னைப் பற்றி அறிவிக்கிறது. அரேபியர்கள் அடிக்கடி உச்சரிக்கக்கூடிய எழுத்துக்களை கொண்டுதான் அருள்மறை குர்ஆன் அமைந்துள்ளது என்பதை அரேபியர்களுக்கு அறிவிக்கிறது.
அரேபியர்கள் தங்களது மொழியைப் பற்றி பெருமை கொள்ளக் கூடியவர்கள். அருள்மறை குர்ஆன் இறக்கியருளப்பட்டபோது, அரபு மொழி - புகழின் உச்சக் கட்டத்தில் இருந்த நேரம். ஆலிஃப் - லாம் - மீம், யா - ஸீன், ஹா-மீம் போன்ற வார்த்தைகளை உள்ளடக்கி இறக்கியருளப்பட்ட குர்ஆன் மனித குலத்திற்கு அறை கூவல் விட்டது. அருள்மறை குர்ஆனின் இறதை;தன்மையில் நீங்கள் சந்தேகம் உடையவர்களாக இருப்பின், இது போன்று ஒரு நேர்த்தியான, அழகான அத்தியாயத்தை நீங்கள் கொண்டு வாருங்கள் என்று அருள்மறை குர்ஆன் மனித குலத்திற்கு சவால் விட்டது.
ஆரம்பத்தில் அருள்மறை குர்ஆன் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், அருள்மறை குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்குமாறு சவால் விட்டது. மனிதர்களும் - ஜின்களும் தங்களுக்குள் ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொண்டாலும் - அருள்மறை குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்று சவால் விடுகிறது. இவ்வாறான சவால் அருள்மறை குர்ஆனின் 17வது அத்தியாயம் - ஸுரத்துல் பனீ - இஸ்ராயீலின் 88வது வசனத்திலும், 52வது அத்தியாயம் ஸுரத்துத் தூரின் 34வது வசனத்திலும் காணலாம்.
பின்னர் அருள்மறை குர்ஆன் மேற்படி சவாலை மீண்டும் மனிதர்களிடம் வைக்கிறது. அருள்மறை குர்ஆனின் 11வது அத்தியாயம் ஸுரத்துல் ஹுதின் 13வது வசனம் அருள்மறை குர்ஆனில் உள்ளது போன்று பத்து வசனங்களையாவது கொண்டு வாருங்கள் என்று சவால் விடுகிறது. அருள்மறை குர்ஆனின் 10வது அத்தியாயம் ஸுரத்துல் யூனுஸின் 38வது வசனம் அருள்மறை குர்ஆனில் உள்ளது போன்று ஒரு வசனத்தையாவது கொண்டு வாருங்கள் என்று மனித குலத்திற்கு சவால் விடுகிறது. இறுதியாக அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 23 மற்றும் 24 வது அத்தியாயத்தின் மூலமாக மேற்படி சவாலை இன்னும் எளிதாக்குகிறது:
இன்னும், (முஹம்மது (ஸல் என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து) க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் - அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது - மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும், அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) நிராகரிப்பாளர்களுக்காவே அது சித்தப்படுத்தப் பட்டுள்ளது (அல்-குர்ஆன் அத்தியாயம் 02 ஸுரத்துல் பகராவின் - 23 - 24 வது வசனங்கள்.)
இரண்டு கலைஞர்களின் திறமையை மதிப்பிட வேண்டுமெனில், கலைஞர்கள் இரண்டு பேருக்கும் ஒரே விதமான பொருளைச் செய்யச் சொல்லி, ஒரே விதமான மூலப் பொருள்களை வழங்க வேண்டும். உதாரணத்திற்கு அவர்கள் இரண்டு பேரும் தையற்கலைஞர்கள் எனில், அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே விதமான துணியைக் கொடுக்க வேண்டும். அதபோலவே அரபி மொழியின் மூலப் பொருள் எதுவெனில் அலிஃப் - லாம் - மீம் - யா - ஸீன் போன்ற அரபி எழுத்துக்கள் ஆகும். இறைத்தன்மை வாய்ந்த அருள்மறை குர்ஆனின் மொழி உண்மையையே பேசும். ஏனெனில் அது அல்லாஹ்வின் வேதமாகும். அரபியர்கள் எந்த மொழியயைப் பற்றி பெருமை கொண்டிருந்தார்களோ அதே மொழிதான் அருள்மறை குர்ஆன் இறக்கப்பட்ட மொழியுமாகும்.
அரபியர்கள் தங்களது சொல்லாட்சி திறனுக்கும், நாவன்மைக்கும், அர்த்தமுள்ள உச்சரிப்புக்கும் பெயர் போனவர்கள். எப்படி மனித உடலில் உள்ள மூலக் கூறுகள் என்னவென்று நாம் அனைவரும் அறிவோமோ - அந்த மூலக் கூறுகளை நாம் எவ்வாறு பெறவும் முடியுமோ - அதுபோல -அருள்மறை குர்ஆனின் சுருக்கப்பட்ட அலிஃப் - லாம் - மீம் போன்ற எழுத்துக்களை அரபியர்கள் அனைவரும் அறிவார்கள்;. அந்த எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளையும் உருவாக்குவார்கள்.
மனித உடலில் என்னென்ன மூலக் கூறுகள் உள்ளன என்று நாம் அறிந்திருந்தாலும் மனித உடலை எவ்வாறு நம்மால் உருவாக்க முடியாதோ - அதுபோல அருள்மறை குர்ஆனில் உள்ள எழுத்துக்களை அரபியர்கள் அறிந்து வதை;திருந்தாலும் - அருள்மறை குர்ஆன் பயன்படுத்தவது போன்று சொற் பிரயோகங்களை அவர்களால் பயன் படுத்த முடியாது. இவ்வாறு அருள்மறை குர்ஆன் தன்னுடைய இறைத்தன்மையை நிரூபிக்கிறது.
4. ஒவ்வொரு சுருக்கப்பட்ட எழுத்துக்கு பிறகும்; அருள்மறை குர்ஆன் தனது இறைத்தன்மையை எடுத்து வைக்கிறது.
எனவேதான் ஒவ்வொரு சுருக்கப்பட்ட எழுத்துக்கள் அடங்கிய வசனம் முடிந்ததும் அருள்மறை குர்ஆன் தனது தனித் தன்மையை பற்றி எடுத்து உரைக்கிறது.
உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் முதல் இரண்டு வசனங்கள்:
'அலிஃப் லாம் மீம். இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.'(அல்குர்ஆன் - 2: 1-2).
நன்றி: ஒற்றுமை.நெட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக