தொழுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013



வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்!


ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அவனது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

மனிதர்கள் தங்களின் திருநாட்கள் மீண்டும் மீண்டும் வருவதிலும், அதை கொண்டாடுவதிலும், அந்த நாட்களை நினைவு கூர்வதிலும் சந்தோஷமடைகின்றனர். அதே போன்று தான் இஸ்லாமிய சமூகத்துக்கு அல்லாஹ்வை வணங்கக்கூடிய திருநாளாக வெள்ளிக்கிழமைதினம் இருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை வாராந்திர திருநாளாக ஆக்கி இஸ்லாமிய சமூகத்தை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான். யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது கட்டளைகளுக்கு மாற்றம் செய்ததினால் வழிதவறியவர்களாகவும் ஆக்கினான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யூதர்களுக்கு வணக்கத்துகுரிய தினமாக சனிக்கிழமையையும், கிறிஸ்தவர்களுக்கு வணக்கத்துக்குரிய தினமாக ஞாயிற்றுக்கிழமையையும் ஆக்கினான். நமக்கு முன் சென்ற சமுதாயமாகிய இவர்கள் வெள்ளிக்கிழமையை விட்டும் வழிதவற செய்து விட்டான். நமக்கு இத்தினத்தை தந்து நேர்வழியையும் காட்டினான்.  இதனால் வெள்ளிக்கிழமையை தொடர்ந்து வரக்கூடிய நாட்களாக சனி, ஞாயிற்றுக்கிழமையை ஆக்கினான். உலகத்துக்கு கடைசியாக அனுப்பப்பட்டவர்கள் நாமே! மறுமையில் படைப்பினங்களுக்கு மத்தியில் முதலில் விசாரணை செய்யப்படுபவர்களும் நாமே!” (ஆதாரம் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகின்ற பொழுது, “சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

புனிதம் மிக்க இந்த நாளை சிலர் தூக்கத்திலும், பிரயாணத்திலும், விளையாட்டிலும் கழிப்பதோடு பெண்கள் கடைத்தெருக்களிலும், வீடு வாசல் சுத்தம் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். இந்த நாளின் மகத்துவத்தையும், சிறப்பையும் அறியாதவர்களாக கவனமின்மையாக இருக்கின்றார்கள். இவற்றை விட்டுவிட்டு இந்த நாளின் சிறப்பையும், நன்மையையும், மகத்துவத்தையும் அறிந்து இறைவனை வழிபடுவதிலும், அதிகம் திக்ர் செய்வதிலும் அதிகமதிகம் பிரார்திப்பதிலும் நபி (ஸல்) அவர்கள் மீது  ஸலவாத்துச் சொல்வதிலும் ஈடுபட முயல வேண்டும்.

இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இந்த நாளில் செய்யவேண்டிய சில வழிமுறைகளை காட்டித் தந்துள்ளார்கள். ஏனைய நாட்களை விடவும் குறிப்பாக இந்த நாளில் சில வணக்க வழிபாடுகளை குறிப்பிட்டு சிறப்பித்து மகத்துவப்படுத்தியுள்ளார்கள். மார்க்க அறிஞர்கள் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையா? அல்லது அரபா உடைய நாளா? என்பதில் கூட கருத்து வேறுபாடுபட்டுள்ளார்கள்.

இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் வெள்ளிக்கிழமையின் சிறப்பைப் பற்றி குறிப்பிடும் பொழுது, 30 க்கு மேற்பட்ட சிறப்புக்களை கூறியுள்ளார்கள்.

அவற்றில் சிலவை பின்வருமாறு:

1) மாறி மாறி வரக்கூடிய திருநாள்: வெள்ளிக்கிழமையின் சிறப்புக்களில் ஒன்றுதான் இந்நாளில் தனித்து நோன்பு நேற்பது  தடுக்கப்பட்டுள்ளது, யூதர்களுக்கும், கிறிஸதவர்களுக்கும் மாற்றமாக நடப்பதற்காக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை, குறிப்பாக ஒரு அடியான் இந்த நாளில் தொழுவதிலும், பிரார்த்திப்பதிலும், இவை அல்லாத வணக்கங்களிலும் ஈடுபட்டு இறைவனை வழிப்பட வேண்டும்.

2) நன்மைகள் அதிகமாக  உள்ள நாள்: சுவர்க்கத்தில் இருக்கின்ற இறைவிசுவாசிகளை (முஃமின்களை) இத்தினத்தில் இறைவன் பார்க்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் விரும்புவது அதில் அவர்களுக்கிருக்கிறது. மேலும் (அதைவிட) அதிகமானதும் நம்மிடம் இருக்கிறது” அனஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் “ஒவ்வொரு வெள்ளியன்றும் இறைவன் அவ்ர்களை (முஃமின்களை) பார்வையிடுகின்றான்” (ஆதாரம்: இப்னு பத்தா, அபூ நயீம்)

3) நாட்களிலே சிறந்த நாள்: நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

4) பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நேரம் உள்ள நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கின்றது; அதில் எவரொருவர் இறைவனை தொழுது அவனிடம் பிரார்த்திக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான் என்று கூறிவிட்டு, அது செற்பமான நேரம் என்று தனது கையினால் சுட்டிக்காட்டினார்கள்.” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அந்த நாளில் செய்யக்கூடிய நற்செயல்களின் சிறப்பு: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜந்து  நற்செயல்களை அந்த நாளில் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவர்க்கவாசி என்று கருதுகின்றான். நோயாளியை விசாரிப்பது,   ஜனாஸாவில் கலந்து கொள்வது, வெள்ளியன்று நோன்பு நோற்பது, ஜும்-ஆவுக்கு செல்வது, ஒரு அடிமையை விடுதலை செய்வது போன்றனவாகும்” (அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா: இலக்கம் 1033)

இங்கு வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பது என்பது தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள்  நோன்பு நோற்கக்கூடிய ஒருவர் அந்த நாளில் நோன்பை அடைந்தால் தனியாக  நோற்கலாம் என்பதனையே குறிக்கின்றது.

6) மறுமை நாள்  நிகழக்கூடிய நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்” (ஆதாரம்: முஸ்லிம்)

7) பாவங்கள் மன்னிக்கப்படும் நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குழித்து சுத்தம் செய்துகொண்டு, தலையில் எண்ணை தெய்த்து,வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு பின்னர் பிரரை கடந்து செல்லாமல்  பள்ளியினுல் நுழைந்து தனக்கு கடமையான தொழுகையை தொழுகின்றாரோ அவரது  இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்:புகாரி)

8) ஜும்-ஆவுக்கு நடந்து செல்வதற்குறிய நன்மை: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜும்-ஆதினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து, வாகனத்தில் ஏறாமல், ஜும்-ஆவுக்காக நடந்து சென்று, இமாமுக்கு அருகாமையில் அமர்ந்து, அவர் சொல்வதை செவிமெடுக்கின்றாரோ அவர் நடந்து சென்ற ஒவ்வொரு எட்டுக்கும், நின்று வணங்கிய, நோன்பு நோற்ற  நன்மை கிடைக்கும்” (ஆதாரம்: அபூதாவூத்)

9) இரண்டு வெள்ளிக்கிழமை மற்றும் மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் குளித்து ஜும்ஆவுக்குச் சென்று தொழுதுவிட்டு, இமாம்  ஜும்ஆவை  முடிக்கும் வரை மெளனமாக இருந்துவிட்டு ,அவருடன் தொழுகின்றாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கும் மேலதிகமாக மூன்று நாட்களுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்: முஸ்லிம்)

10) ஜும்ஆ தினத்தில் அல்லது  அன்று இரவில் மரணிப்பவரது மரணம் நல்ல மரணத்தின் அடையாளங்களில் நின்றும் ஒன்றாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிக்கின்றாரோ அவர் மண்ணறை வேதனையை விட்டும் காப்பாற்றப்டும்” (ஆதாரம்: அஹ்மத்)

11) இத்தினத்தில் தர்மம் செய்வது ஏனய நாற்களில் தர்மம் செய்வதனை விடவும் சிறந்ததாகும்: இமாம் இப்னு கையும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “ரமலான் மாதத்தில் தர்மம் செய்வது எவ்வாறு ஏனைய மாதங்களில் தர்மம் செய்வதை விடவும் சிறபானதோ அதே போன்று வெள்ளிக்கிழமையன்று தர்மம் செய்வது ஏனைய நாட்களில் தர்மம் செய்வதைவிடவும் சிறந்ததாகும்” இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் வெள்ளியன்று பள்ளிவாசலுக்கு செல்லும் போது ரொட்டி அல்லது வேறு ஏதாவது உணவு  பண்டங்களை  கொண்டு சென்று இரகசியமாக தர்மம் செய்வார்கள்.

மேற்கூறப்பட்ட விஷயங்கள்  வெள்ளிக்கிழமைகுரிய சில சிறப்புக்களாகும்,

வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:

1) நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுபஹ் தொழுகையில் அத்தியாயங்களான அஸ் ஸஜ்த, அல் இன்ஸான் என்ற இரண்டையும் ஓதுபவராக இருந்தார்கள். இவ்வத்தியாயங்களில் மனிதனின் பிறப்பு மற்றும் கப்ரிலிருந்தும், மறுமை நாளிலும் எழுப்பப்படுவன சம்பந்தமான விஷயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2) ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வது: இந்த விஷயத்தில் முஸ்லிங்கள் அதிகம் பொடுபோக்காக இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை காலையில் சிலர் தூங்கிக் கொண்டும், இன்னும் சிலர் ஜும்ஆ ஆரம்பமான பின்னரும், மேலும் சிலர் இமாம் ஜும்ஆவுக்கு மின்பருக்கு ஏறுவதற்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்னருமாகவே செல்கின்றனர். இதில் கூடிய கவனம் செலுத்தி வெள்ளிக்கிழமை தினத்தில் நேரத்தோடு பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும்  என்பதற்கான ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பின்வருமாறு பார்ப்போம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் பள்ளிவாசலில் அனைத்து நுழைவாயிலிலும் நிற்பார்கள். அவர்கள் முதல் முதலில் வருபவர்களது பெயர்களை பதிவு செய்வார்கள். பிரசங்கத்திற்காக இமாம் வந்துவிட்டால் தங்களது ஏடுகளை மூடிவிட்டு பிரசங்கத்தை செவிமெடுப்பதற்காக அமருவார்கள். இத்தினத்தில் பள்ளிவாசலுக்கு முதலில் வருபவர் ஒரு ஒட்டகத்தையும், இரண்டாவது வருபவர் ஒரு மாட்டையும், மூன்றாவது வருபவர் ஒரு ஆட்டையும், நான்காவது வருபவர் ஒரு கோழியையும், ஜந்தாவது வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவரை போன்றாவார்”

இந்த நபிமொழியில், பள்ளிவாசலுக்கு நேரத்தோடு வருபவரை தனது பொருளாதாரத்தால் தர்மம் செய்து அல்லாஹ்விடம் நெருங்குகின்றவர்களுக்கு ஒப்பாக கூறுகின்றார்கள். இதனால் எவர் நேரத்தோடு பள்ளிவாசலுக்கு வருகின்றாரோ அவர் உடல் ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான இரண்டு வணக்கங்களையும் செய்தவர்களாக ஆகிவிடுகின்றார்கள்.

நமக்கு முன் சென்ற அறிஞர்கள் வெள்ளிக்கிழமை தினத்தில் வழக்கமாக நேரத்தோடு பள்ளிவாசலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். சில இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடும் பொழுது “வெள்ளியன்று சுபஹ் தொழுகைக்கு முன்னர் ஜும்ஆவுக்கு செல்வது நன்றாக இருக்கும்” ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டில் மக்கள் ஸஹருடைய நேரத்திலும் சுபஹ் தொழுகைக்கு பின்னாலும் பாதைகளில் திருநாட்களை போன்று பள்ளிவாசலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள், ஜும்ஆவுக்கு முன்னால் 12 ரக்அத்துக்கள் நபிலான தொழுகையை தொழுபவராக இருந்தார்கள், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 8 ரக்அத்துக்கள் தொழுபவர்களாகவும் இருந்தார். அன்மைகாலத்தில் ஒருவர் ரியாதில் இருக்கின்ற பெரிய பள்ளிவாசலுக்கு சுபஹ் தொழுகைக்காக செல்பவர் ஜும்ஆ முடிந்ததன் பின்னரே வெளியே வருபவராக இருந்தார்.

பள்ளிவாசலுக்கு இத்தினத்தில் நேரத்தோடு செல்வதற்கு மிக முக்கியமான காரணி, இரவில் விழித்திருக்காமல் நேரத்தோடு தூங்கி காலையிலே உலக காரியங்களை விட்டுவிட்டு ஜும்ஆவுக்காக தாயாராவதாகும். இதனால் அல்லாஹ் அடியானுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்ற மகத்துவமான முழுமையான கூலியை அடைய முடியும்.

3) இத்தினத்தில் அதிகமாக நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களிடத்தில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அத்தினத்தில் தான் நபி ஆதம் (ஆலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர் மரணித்தார், அதிலேதான் மறுமை நாள் நிகழும், மனிதன்  விசரனைக்காக மீண்டும் எழுப்பப்படுவான். இத்தினத்தில் அதிகமதிகம் என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள்  சொல்லக்கூடிய ஸலவாத்து என்னிடத்தில்  எடுத்துக் காட்டப்படும், நபிமார்கள் உடலை  பூமி உண்பதை (அழிப்பதை) விட்டும்  அல்லாஹ் ஹராமாக்கினான்” (ஆதாரம்: அஹ்மத்)

4) ஜும்ஆ தினத்தில் குழிப்பது சுன்னத்தாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு செல்பவராக இருந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) பல் துலக்கி, வாசனை திரவியங்களை தடவி, அழகான ஆடையை அணிந்து கொள்வது சுன்னத்தாகும்: இந்த விஷயத்தில் மனிதர்கள் பொடுபோக்காக இருக்கின்றனர். இதற்கு மாற்றமாக திருமண வைபவங்களுக்கும், விழாக்களுக்குமாக அழகான ஆடைகளை அணிந்து செல்லக்கூடிய முஸ்லிம்கள் நபிகளார் காட்டித்தந்த வாராந்திர திருநாளாகிய வெள்ளிக்கிழமை தினத்தில் கவனமின்மையாக இருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து, பல் துலக்கி, தன்னிடம் இருக்கின்ற வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு, தன்னிடம் இருக்கின்றவற்றில் நல்ல ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு சென்று, பள்ளியில் இருக்கின்ற மனிதர்களை கடந்து செல்லாமல் தன்னால் முடியுமான அளவு தொழுதுவிட்டு மெளனமாக இருந்து இமாம் சொல்வதை சிறந்த முறையில் செவிமெடுத்துவிட்டு தொழுகை முடியும் வரை இருக்கின்றாரோ அவருடைய முந்தைய வெள்ளிக்கிழமைக்கும் இந்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்: அஹ்மத்)

6) அத்தியாயம் கஃபை ஓதுவது சுன்னத்தாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் வெள்ளிகிழமை தினத்தில் அத்தியாயம் கஃபை ஓதுகின்றாரோ அவருக்கு இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடையில் பிரகாசம் கிடைக்கும்” (ஆதாரம்: ஹாகிம்)

இந்த அத்தியாயத்தை பள்ளிவாசலில் மாத்திரம்தான் ஓத வேண்டிய அவசியமில்லை! வீட்டில் ஓதினாலும் போதுமானதாகும்.

7) இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது அதனை சிறந்த முறையில் செவிமெடுக்க அதனை விளங்கி பிரயோஸனம் அடைய வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது ஒருவர் தனது சகோதரனுக்கு வாயை மூடு என்று கூறினால் அவர் தனது ஜும்ஆவை வீனாக்கிவிட்டார்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

8) மனிதர்களின் பிடரியை கடந்து செல்வதை விட்டும், தொழுகையாளியை நோவினை செய்வதை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் பிரசங்கத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒருவர் மனிதர்களின் பிடரியை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். உடனே நபியவர்கள் அவரைப் பார்த்து “உக்கார்ந்து விடுங்கள். நிச்சயமாக நீங்கள் அவர்களை நோவினை செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத்) பெரும்பாலும் பள்ளிவாசலுக்கு பிந்திவருபவருக்கே இவ்வாரான சந்தர்ப்பம் நிகழும்.

9) ஜும்-ஆ தொழுகை முடிந்து விட்டால் தொழுகைக்கு பின்னால் ஓதக்கூடிய துஆக்களை ஓத வேண்டும்; பின்னர் பள்ளிவாசலில் 4 ரக்அத்துக்கள் சுன்னத்து தொழுது கொள்ளவேண்டும். வீட்டில் தொழக்கூடியவராக இருந்தால் பள்ளிவாசலில் இரண்டும், வீட்டில் இரண்டும் தொழுது கொள்ளவேண்டும்.

சகோதரர்களே! இத்தினத்தின் சிறப்புக்களையும் நபியவர்களின் வழிமுறைகளையும் இத்தினத்தில் நடந்து கொள்ளவேன்டிய ஒழுங்குமுறைகளையும் அறிந்த நாம், இதனது முழுமையான சிறப்பையும் நன்மையையும் அடைய இறைவன் அருள் புரிவானாக! இறைவனிடத்தில் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அந்த நேரத்தை அடைவதற்கு இறைவன் அருள் புரிவானாக!

நாம் அனைவரும் இறைவனை அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி அவனை மாத்திரமே வணங்குவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அரபி மூலம்: அப்துல் மலிக்  அல் காஸிம்
தமிழில்: அர்ஷத் ஸாலிஹ்.

நன்றி: சுவனத்தென்றல்.காம்

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013



“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை!


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!

நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர் ஓரிரு மணி நேரம் விளையாட்டு என்று அவனுடைய இளம்பருவத்தின் வயது கழிகின்றது. ஓரளவு மார்க்கப்பற்றுள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் காலையிலோ அல்லது பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வந்த பின்னர் மாலையிலோ அல்-குர்ஆனை (பொருளறியாமல்) ஓதுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை பயில்வதற்கும் அனுப்புகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை!

முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஒரு சில கல்விக்கூடங்களிலே உலகக் கல்வியுடன் சேர்த்து இஸ்லாத்தின் அடிப்படைகள் சிலவற்றையும் சேர்த்து கற்றுத் தருகின்றனர். இவ்வாறு மார்க்கத்தின் அடிப்படையை சிறுபிராயத்திலேயே கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மிக மிக அரிதானதாகவே இருக்கின்றது. ஏன் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலே கூட மேலை நாட்டின் நாகரீகத்தைப் பின்பற்றி அந்நிறுவனங்களிலே படிக்கின்ற குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் பெற்றோர் தனிப்பட்ட முறையில் அக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர, அந்தப் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவு என்பதே இல்லாமல் போகின்றது.

இதைவிட வேதனை என்னவென்றால், சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நடத்தப்படுகின்ற ‘முஸ்லிம் சிறுபாண்மையின’ பள்ளிக் கூடங்களிலே வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுவதற்கு கூட வாய்ப்புத் தராமல் பள்ளி நேரங்களை அமைத்திருக்கின்றார்கள். மதிய உணவுக்காக விடப்படுகின்ற சொற்ப இடைவெளி நேரத்தில் மதிய உணவருந்தினால் ஜூம்ஆவுக்குச் செல்ல இயலாது; ஜூம்ஆவுக்குச் சென்றால் மதிய உணவருந்த முடியாமல் பட்டினியாக இருக்க வேண்டியது தான்!

ஜூம்ஆவிற்கே இந்த நிலை என்றால் மற்ற நேரத் தொழுகைகளைப் பற்றி பேசவே தேவையில்லை!

இந்தச் சூழ்நிலையில் மார்க்க அறிவு அறவேயில்லாத அல்லது போதிய மார்க்க அறிவில்லாமல் வளர்க்கப்படுகின்ற அந்த சிறுவன் வாலிப பருமடைந்து கல்லூரிக்குச் சென்றால் அவன் சேருகின்ற கல்லூரியைப் பொறுத்து அவன் சிறுபிராயத்தில் நடைபெற்ற அதே நிகழ்வு ஏற்படுகின்றது.

சிறுபாண்மையினரால் நடத்தப்படுகின்ற ஒருசில கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்கள் தொழுவதற்காக பள்ளிவாயில்கள் போன்றவை கட்டித் தரப்பட்டிருந்தாலும் கல்வித் தரம், கல்வி நிறுவனத்தின் மதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நம் பெரும்பாண்மையான முஸ்லிம் மாணவர்கள் விரும்புவது என்னவோ மாற்று மதத்தவர்களால் நடத்தப்படும் இஸ்லாமிய சூழல்களில்லாத கல்வி நிறுவனங்களைத் தான்! எனவே இங்கேயும் அந்த மாணவர்களால் இஸ்லாத்தைப் பற்றி பயில்வதற்கு வாய்ப்பு குறைந்து விடுகின்றது.

அவர்கள் படிப்பை முடித்தவுடன் மூஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்திற்காக அவர்களுக்குத் தகுந்த வேலை கிடைப்பது என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. அப்படியே ஒருவழியாக வேலை கிடைத்துவிட்டால் அந்த வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக அரும்பாடுபட்டு உழைத்து தம் மேலதிகாரிகளை திருப்திபடுத்த வேண்டியதிருக்கின்றது.

இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவழியாக நல்ல வேலையில் செட்டில் ஆனவுடன் திருமணம்! பிறகு சந்தோசமான குடும்ப வாழ்க்கை, குழந்தைகள்; பிறகு அக்குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி என்று ஹாஸ்பிடல் அலைச்சல்; பிறகு அக்குழந்தைகளை பள்ளிக்கூடம் சேர்த்து நம்மைப் போலவே அக்குழந்தைகளையும் நல்லமுறையில் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும்!

அண்டை வீட்டார்களெல்லாம் புதிய சொகுசு வீடு கட்டி வசதியாக வாழ்வது போல் நாமும் புதிய பங்களா கட்டி நல்ல முறையில் வாழ வேண்டும். இதற்காக இரவு, பகல் பாராமல், நேரம் காலம் பார்க்காமல் பகுதி நேர ஊழியம் கூட பார்த்து பொருள் ஈட்ட வேண்டும்! அதற்கு நம் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் பரவாயில்லை! ரிடையர்ட் ஆனவுடன் அமைதியான முறையில் வாழவேண்டும்!

இவ்வாறாக ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்க்கை அலுவலகம், வீடு, மனைவி மக்களை கவனிப்பது என்று நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அலுவலக நேரம் போக மீதமுள்ள நேரங்கள் டீ.வி, நியூஸ், இமெயில், இன்டர்நெட் பிரவுசிங் ஆகியவற்றுக்கே போதவில்லை!

குழந்தைகள் பருவ வயதையடைந்து பள்ளிப்பருவத்தின் இறுதியை அடைந்துவிட்டால் அவர்களை நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரி அல்லது பயன்தரும் படிப்பைத் தருகின்ற பிற நல்லக் கல்லூரிகளில் சேர்ப்பதற்காக அவர்களின் படிப்பின் மீது நமது நேரங்களைச் செலவிட்டு அவர்கள் நன்றாக படிக்கின்றார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பின்னர் அவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அதிகமாக கேபிடேசன் ஃபீஸ் கட்ட வேண்டும்; அதற்காக கடினமாக உழைத்து அதிக பொருளீட்ட வேண்டும்.

ஒருவழியாக அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர்ந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்வித்து அழகுபார்க்க வேண்டும். பிறகு பேரக்குழந்தைகள், அவர்களோடு கொஞ்சுவது, அகமகிழ்வது அப்பப்பா! வாழ்க்கையிலே நேரமே போதவில்லை!!

நீங்களும் இந்த சராசரி முஸ்லிமின் வட்த்திலிலுள்ளவரா! அப்படியாயின் இந்தக் கட்டுரை உங்களுக்களுக்காகத் தான். தொடர்ந்து வாசியுங்கள்!

இந்த சராசரி முஸ்லிமிடம் போய் தொழுகை, மார்க்க கல்வியைக் கற்பது பற்றிப் பேசினால் அவர்களின் உடனடி பதில் ‘நேரமில்லை’ என்பது நாம் சொல்லித் தான் தெரிய வேண்டு மென்பதில்லை!

அன்பு சகோதர, சகோதரிகளே!

நாம் ஒரு பேருண்மையை மறந்து விட்டோம்! ஆம் சகோதர, சகோதரிகளே! அது தான் இறைவன் நம்மைப் படைத்ததன் நோக்கம்! இறைவன் நம்மை எதற்காகப் படைத்தான்? எதற்காக இப்பூமியில் வசிக்கின்றோம்?  வேலை செய்வது, சாப்பிடுவது, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது, பிள்ளைக் குட்டிகளுடன் மகிழ்வாக இருப்பது, செல்வம் சேர்ப்பது, காலமெல்லாம் உழைத்து சிறுக, சிறுக பொருள் சேர்த்து வீடு கட்டுவது இதுதான் இறைவன் நம்மைப் படைத்ததன் நோக்கமா?  இல்லை சகோதர, சகோதரிகளே! நாம் படைக்கப்பட்டதன் உண்ணத நோக்கம் இதுவல்ல!

மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை!

அல்லாஹ் கூறுகின்றான்:

“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்குர்ஆன் 51:56)

இங்கு நம்மில் சிலருக்கு ஒரு ஐயம் ஏற்படலாம்! மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வழிபடுவது மட்டுமென்றிருந்தால் நாம் எவ்வாறு உண்பது, உறங்குவது, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது போன்ற செயல்களைச் செய்ய இயலும் என்ற சந்தேகம் எழலாம்!

இதுவும் இஸ்லாத்தைப் பற்றிய போதிய தெளிவின்மையால் ஏற்படுவதாகும். “இபாதத் – வணக்கம்” என்பது விரிந்த பொருடைய பதமாகும். சுருங்க கூறுவதென்றால், ‘அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் கட்டளையிட்ட ஏவல்-விலக்கல்களை ஒருவர் முறையாகப் பேணி நடந்தால்’ அதுவே இபாதத்-வணக்கம்’ ஆகும். மற்றொரு வகையில் கூறுவதென்றால் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாம் காட்டித் தந்த நெறிமுறையில் அமைத்துக் கொள்வாரேயானால் அதுவே வணக்கமாகும்.

அடுத்தது தொழுகை! நாம் திருமறையை எடுத்துப் படித்தோமென்றால் அதில் பல இடங்களில் தொழுகையைப் பற்றியும் ஜக்காத் பற்றியும் இறைவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருப்பதைக் காணலாம். அந்த அளவிற்கு தொழுகை இஸ்லாத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

ஒரு முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் உள்ள வித்தியாசமே தொழுகை தான் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.

முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)

“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)

இனி தொழுகையை விடுபவர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையைப் பார்ப்போம்!

நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்:

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)

“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)

“இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.” (அல்-குர்ஆன் 107:4-5)

மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்:

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)

எனவே அலுவலக வேலையின் காரணமாகவோ அல்லது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் காரணமாகவோ “நேரம் கிடைக்கவில்லை! அதனால் தொழவில்லை” என்ற கூற்று அடிப்படையற்ற இஸ்லாத்திற்கு முரணான வாதமாகும் என்பதையும் மனிதன் படைக்கப்பட்ட முதல் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத்தான் என்பதையும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

தொழுகைக்கு கூட அனுமதியில்லாத இடங்களில் வேலை செய்வதைப் பற்றியும் நாம் மறுபரிசீலனை செய்து இஸ்லாமிய சூழல் நிறைந்த வேலையில் சேருவதற்கு நம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் நமது பிரதான கடமையாகிய தொழுகையை விட்டுவிடக்கூடாது.

முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையில் உள்ள வித்தியாசமே தொழுகை என்றிருப்பதால் அத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு எங்கு வசதிப்படுமோ அவ்விடத்தை நோக்கி அல்லது தொழுகைக்கு இடையூறு ஏற்படுத்தாத நிறுவனம் எதுவோ அதில் சேர்ந்து நம்முடைய பணியினை அமைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் இறைவனின் இப்பூமியோ விசாலமானது! இறை மறுப்பாளர்களின் சூழலில் நாம் விரும்பி சேர்ந்துக் கொண்டு பிறகு அங்கு இறைவணக்கத்திற்கு நேரம் கிடைக்கவில்லை அல்லது அவர்கள் எங்களை தொழுவதற்கு அனுமதிப்பதில்லை என்பது அறிவுடைய வாதமாகாது! மாறாக நஷ்டத்திற்குள்ளானதுமாகும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது,

‘நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?’ என்று கேட்பார்கள்.

(அதற்கவர்கள்) ‘நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்’ என்று கூறுவார்கள்.

அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?’ என (மலக்குகள்) கேட்பார்கள்;

எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர – ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்” (அல்-குர்ஆன் 4:97-98)

அடுத்ததாக, ‘மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வணங்குவதே’ என்றிருப்பதால் அவன் தன் வாழ்வை இறைவனை வணங்குவதற்காகவே அமைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். அதாவது அவன் தன்வாழ்வை இஸ்லாமிய வாழ்வு நெறியில் அமைத்துக்கொள்வது!

இஸ்லாமிய வாழ்வு நெறி என்றால் என்ன? எவை எவை அவசியமானவை? எவை எவற்றை அவசியமாக நிறைவேற்ற வேண்டும்? எவை எவற்றை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டணை உண்டு? எந்தெந்த காரியங்களைச் செய்தால் ஒருவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிடுவான்? எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் செல்ல நேரிடும்? (நவூதுபில்லாஹ்), எந்தெந்த காரியங்களைச் செய்தால் நாம் இரவு, பகல் பாராமல் கண்விழித்து கஷ்டப்பட்டுச் செய்த தொழுகை, காலமெல்லாம் உழைத்துச் சேர்த்த செல்வங்களையெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் ஜக்காத் கொடுத்தது, பகலெல்லாம் பட்டினி கிடந்து நோற்ற நோன்புகள் போன்ற அமல்கள் எல்லாம் மறுமையில் பரத்தப்பட்டப் புழுதியைப் போன்று எவ்வித பலன்களும் இல்லாமல் பாழாகிவிடும்?  (நவூதுபில்லாஹ்) எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் இறைவனுக்கு உகந்த அவனுடைய நல்லடியார்களின் கூட்டத்தினருடன் சுவர்க்கச் சோலையில் நுழைவோம்? எந்தெந்த காரியங்களைச் செய்தால் நரகத்தின் அடிப்பாதாளத்திற்கு முகம் குப்புறத் தள்ளப்படுவோம்? (நவூதுபில்லாஹ்)

இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்வது எப்படி?

அன்பு சகோதர, சகோதரிகளே!

இவ்வுலக வாழ்க்கையில் சொகுசான வீடு, கார் மற்றும் இன்னபிற வாழ்க்கை வசதிகளுடன் வாழ்கின்ற மற்றவர்களைப் போல நாமும் நமது பிள்ளைகளும் வாழ வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உண்டு! பொருளாதார வசதிகளைப் பெருக்கிக் கொள்வதையோ அல்லது அதற்கு வழிவகுக்கின்ற இவ்வுலகக் கல்வியைக் கற்பதையோ இஸ்லாம் ஒரு போதும் தடைசெய்யவில்லை! மாறாக இஸ்லாம் கல்வி கற்பதை ஊக்குவிக்கின்றது.

ஒரு முஸ்லிமின் வெற்றி என்பது மறுமையில் சுவர்க்கத்தை அடைவதாகும்! இதுவே மகத்தான வெற்றி! மறுமை வெற்றியை புறந்தள்ளியவர்களாக மறுமைக்குப் பலனளிக்காத இவ்வுலகக் கல்வியை மட்டும் பலவருடங்கள் பயின்று இவ்வுலகில் கோடி கோடியாக சம்பாதித்து இவ்வுலக வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தால் நிச்சயமாக அது நம்முடைய வெற்றியல்ல! மாறாக அது நம்மை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்தில் ஆழ்த்திவிடும். அல்லாஹ் நம்மைக் பாதுகாப்பானாகவும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“(நபியே!) நீர் கூறுவீராக: ‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது” (அல்-குர்ஆன் 4:77)

அழியக்கூடிய இவ்வுலகத்தின் அற்ப சுகங்களை அடைவதற்காக அழிவே இல்லாத மறுமை வாழ்வை புறந்தள்ளியவர்களாக இவ்வுலகக் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து மார்க்கக் கல்வியைப் புறக்கணித்தோமேன்றால் அல்லாஹ்வின் எச்சரிக்கையை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். எனவே, எவன் வரம்பை மீறினானோ- இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்” (அல்-குர்ஆன் 79:34-39)

எனவே நாம் இறைவனின் வழிகாட்டுதலின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு மார்க்கக் கல்வியைக் கற்பது அவசியமாகும். இம்மையில் வெற்றிபெற இவ்வுலகக் கல்வி எந்த அளவிற்கு முக்கியமோ அது போல மறுமையில் வெற்றி பெற மார்க்கக் கல்வியை கற்பதும் அவசியமாகும். இதை முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியிருக்கிறார்கள்.

“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)

எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைககளை பள்ளிக்கு அனுப்பி  ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் இவ்வுலகக் கல்வியைப் பயிற்றுவிக்கும் போது குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவழித்து மறுமைக்குப் பலனளிக்கக் கூடிய மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது அவசியமாகும்.  அடுத்து நம்முடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது எந்தப் பள்ளியில் தரமான கல்வியுடன் மறுமைக்குப் பலன்தரும் மார்க்கக் கல்வியையும் சேர்த்துக் கற்றுத் தருகிறார்கள் என்பதைப் பார்த்து சேர்க்க வேண்டும்.

அடுத்து சமுதாய நலனில் அக்கரை உள்ள நமது சகோதர, சகோதரிகள் முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிகளின் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு குழந்தைகளுக்கு மார்க்கக்கல்வியை போதிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் உலகக் கல்வியில் சிறந்து விளங்குவதோடு அல்லாமல் மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் மார்க்க கல்வியையும் சேர்த்தே போதிக்கின்ற சிறந்த கல்வி நிறுவனங்களாக மாறுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும். வசதியுடைய சகோதரர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இதுபோன்ற பள்ளிக்கூடங்கள் பலவற்றை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்பிலிருந்து வெளிவரும் ஒரு மாணவன் பொறியியல், மருத்துவம் போன்ற சிறந்த மேற்கல்விக்கு  தகுதியான சிறந்த மாணவனாக வெளிவருவதோடல்லாமல் குர்ஆன், ஹதீதுகள் மற்றும் இறைவன் நமக்கருளிய சட்டத்திட்டங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அதை பிறருக்கு எடுத்துச் சொல்கின்ற அளவிற்கு சிறந்த ஆலிமாகவும் அவன் வெளிவர வேண்டும்.

இது ஒன்றும் முடியாத காரியம் இல்லை! இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக சாத்தியமானதே! If there is a will, there is a way!

இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது போன்ற கல்வி நிறுவனங்கள் பல வெற்றிகரமாக செயல்படுகின்றன. ஏன் இந்தியாவில் கூட டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இது போன்ற கல்வி நிறுவனத்தை துவக்கி தலைசிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கி வருகின்றார். எனவே நாமும் முயற்சித்தால் இன்ஷா அல்லாஹ் நமது வருங்கால சந்ததியினர் சிறந்த மார்க்க அறிவைப் பெற்ற ஆலிம்களாகவும் அதே சமயத்தில் சிறந்த பொறியியல் வல்லுனர்களாகவும், மருத்துவ மேதைகளாகவும் திகழ்வார்கள்.

அடுத்ததாக நாம் நம்முடைய அலுவலக நேரம் போக மீதியுள்ள நேரங்களிலும், அலுவலக விடுமுறை நாட்களிலும் நமது குடும்பத்திற்காக நமது நேரத்தைச் செலவழித்தது போக எஞ்சியுள்ள நேரங்களை சினிமா, டீ.வி. சீரியல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களிலும் தேவையற்ற இன்டர்நெட் சாட்டிங், பிரவுசிங் போன்ற அத்தியாவசியமற்ற செயல்களில் நம்முடைய நேரத்தை வீணடிக்காமல் நமது மறுமை வாழ்விற்குப் பலன் தரக்கூடிய மார்க்க கல்வியை கற்பது, குர்ஆனை பொருளறிந்து ஓதுவதற்கு முயற்சிப்பது, குர்ஆனின் அரபி இலக்கணத்தைப் படிப்பது, பிறருக்கு குர்ஆனை கற்றுக்கொடுப்பது, மாற்றுமதத்தவர்களுக்கு இஸ்லாத்தைக் எடுத்துச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும்.

ஏனெனில், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தை மற்றவர்களுக்குப் போதிப்பதை இறைவன் நம்மீது விதித்திருக்கின்றான்.

“காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல் அஸ்ர் 103: 1-3).

இவ்வசனத்தின் மூலம் நஷ்டத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காக ஒருவருக்கொருவர் உபதேசம் செய்வது அவசியம் என்பதை உணரலாம்.

எனென்றால் நம்முடைய ஒவ்வொரு மணித்துளி நேரத்திற்கும் அதை எந்த முறையில் செலவிட்டோம் என்பதை இறைவனிடம் கணக்குக்கூற கடமைப்பட்டுள்ளோம்.

“வாழ்நாளை எப்படி கழித்தான்? வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்து, எவ்வழியில் செலவு செய்தான்? கற்றவைகளில் எதை செயல்படுத்தினான்? என ஐந்து விசயங்கள் பற்றி விசாரிக்கப்படாத வரை மறுமை நாளில் எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); ஆதாரம்: திர்மிதி.

டி.வி, சீரியல், அரட்டை அடிப்பது, வீண் விளையாட்டுகள் மற்றும் பிற பயனற்ற வழிகளில் தமது ஓய்வு நேரத்தைச் செலவழிப்பவர்கள் பின்வரும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை மீறியவர்களாவர்கள் என்பதையும் நாம் இங்கு நினைவூட்டுகின்றோம்.

‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)

அன்பு சகோதர, சகோதரிகளே!

‘நேரம் பொன் போன்றது’ – இது முதுமொழி! இஸ்லாத்தைப் பொறுத்தவரை இது உண்மைதான். ஒரே ஒரு முறை நமக்கு இவ்வுலக வாழ்வில் கிடைத்திருக்கின்ற இந்தப் பொன்னான நேரத்தை இறைவனுக்கு உவப்பான வழியில் நாம் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ் அதற்குரிய மனவலிமையை நமக்குத் தந்து நம் அனைவரையும் அவனது நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.

நன்றி: சுவனத்தென்றல்.காம்

சனி, 16 பிப்ரவரி, 2013



சுன்னத் மற்றும் நபில் தொழுகையின் முக்கியத்துவம்!


தொழுகை என்பது இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவக் கலிமாவிற்கு அடுத்தபடியாக தலையாய கடமையாக இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் எத்தகையதெனில், “ஒரு முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளக்கும் (காஃபிர்) இடையிலுள்ள வித்தியாசமே தொழுகை தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த சிறிய தொகுப்பில் பர்லு, நபில் மற்றும் சுன்னத் தொழுகை பற்றிய சிறு குறிப்புகளைப் பார்ப்போம்.

பர்லு தொழுகை: -

இது ஒவ்வொரு நாளும் நேரம் குறிக்கப்பட்ட ஐந்து நேர கட்டாய தொழுகையாகும். ஒருவர் இந்த தொழுகைகளை முறைப்படி சரியாக தொழுது வந்தால் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலியை பெறுவார். ஒருவர் இவற்றை தொழவில்லையெனில் கேள்வி கணக்கு கேட்கப்பட்டு தண்டணை அளிக்கப்படுவார்கள்.

நபில் தொழுகை: -

இவைகள் அதிகப்படியான (உபரியான) தொழுகை. ஒருவர் இவற்றை தொழுதால் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரும் நற்கூலி கிடைக்கும். ஒருவர் இந்த தொழுகைகளைத் தொழவில்லை எனில் அவர் மீது பாவமில்லை.

சுன்னத் தொழுகை: -

தானாக மனமுவந்து தொழக் கூடிய தொழுகை. நபி (ஸல்) அவர்கள் இந்தத் தொழுகையைத் தொழுது வந்ததால் அவர்களைப் பின்பற்றி நாமும் தொழுது வருவது சிறந்ததாக இருக்கும். ஒருவர் இந்தத் தொழுகைகளை தொழுது வந்தால் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலி கிடைக்கும். ஒருவர் தொழவில்லை எனில் அவர் மீது குற்றமில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தொழுது வந்த இந்த சுன்னத் தொழுகைகளை தொழாதவர் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலியை அடையக் கூடிய பாக்கியத்தை இழந்தவராவார்.

மறுமையில் முதல் விசாரணை தொழுகையைப் பற்றியதாகும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும் போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : அபூதாவுத்.

சுன்னத் மற்றும் நபில் தொழுகையின் முக்கியத்துவம்:-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

மறுமை நாளில் தொழுகையைப் பற்றித்தான் மக்கள் முதன்முதலாக விசாரிக்கப்படுவார்கள். மலக்குகளிடத்தில் நம்முடைய இறைவன், தான் நன்றாக அறிந்திருந்த போதிலும், சொல்லுவான், “என்னுடைய இந்த அடியானின் தொழுகையை (பர்லு), அவன் அதை சரியாக நிறைவேற்றி உள்ளானா அல்லது அதைவிட்டும் பாராமுகமாகி இருந்திருக்கிறானா என்று பாருங்கள். அவன் அதை சரியாக செய்திருந்தால் அதற்குரிய வரவு எழுதப்பட்டுவிடும். அதை விட்டும் அவன் தவிர்ந்திருந்தால் ஏதாவது அதிகப்படியான (நபில், சுன்னத்) தொழுகைகளை தொழுதிருக்கிறாரா என்று பார்க்கும்படி அல்லாஹ் கூறுவான். “அவர் அதிகப்படியான தொழுகையை தொழுதிருந்தால் அவர் விட்டு விட்ட கட்டாய தொழுகையை அவரின் அதிகப்படியான தொழுகையைக் கொண்டு ஈடுசெய்யுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான். அதற்குப் பிறகு அவருடைய அனைத்து செயல்களும் இவ்வாறே முடிவு செய்யப்படும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.

எனவே சகோதர சகோதரிகளே!  இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான தொழுகைகளையும் உபரியான நபில் தொழுகைகளையும் முறைப்படி பேணி தொழுது வருவோமாக. அல்லாஹ் நமக்கு அதற்கு அருள் புரிவானாகவும்.

நன்றி: சுவனத்தென்றல்.காம்



ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை!


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

அன்பான சகோதர, சகோதரிகளே! குர்ஆன், ஹதீஸ் என்று பேசும் நம்மில் பலர் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்தாக தொழுவதில் அலட்சியம் காட்டுகின்றனர். ஜமாஅத்தாக தொழுவதின் முக்கியத்துவத்தையும் அதை தவற விடுவதால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் நிறைய இருக்கின்றன.

ஜமாத்அத் தொழுகைகளை விடுபவர்களுக்கான நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்: -

“ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கண்பார்வையற்றவருக்கே வீட்டில் தொழ அனுமதியில்லை: -

கண்பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருபவர் யாருமில்லை. எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி, அவர் சென்று கொண்டிருக்கும் போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதை நீர் கேட்கிறீரா? என்றனர். அதற்கவர் ஆம் என்றதும் அந்த அழைப்புக்கு நீ (ஜமாஅத்துக்கு வருவதன் மூலம்) பதிலளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்.

இயலாதவரைக் கூட கைத்தாங்கலாக பள்ளிக்கு அழைத்துவரவேண்டும்: -

ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப் போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டீர்களானால் நிச்சயம் வழிதவறிப் போவீர்கள். எவர் உளூச் செய்து – அதை நல்ல முறையில் செய்து இப் பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகிறாரோ அல்லாஹ் அவருக்கு – அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதி, ஒரு பதவியை உயர்த்துகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். எங்களிடையே நான் பார்த்திருக்கிறேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதிகளைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்க மாட்டார். திண்ணமாக இயலாதவரைக் கூட இரண்டு பேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் :முஸ்லிம்.

ஜமாஅத்தை விட்டு தனியாக தொழுபவர் ஷைத்தானின் பிடியில் எளிதில் அகப்பட்டுவிடுவார்: -

‘ஒரு பேரூரில் அல்லது சிற்றூரில் முஸ்லிம்களில் மூவர் மட்டுமே வாழ்ந்து, அங்கு ஜமாஅத்துடன் தொழுகை நிறைவேற்றப்படவில்லையானால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் பெற்றுவிடுகிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதை இன்றியமையாததெனக் கொள்! ஏனென்றால், இடையனை விட்டும், மந்தையை விட்டும் விலகிச் செல்லும் ஆட்டையே ஓநாய் (எளிதில்) வேட்டையாடுகிறது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அறிவிப்பவர் : அபுத் தர்தா (ரலி), ஆதாரம் : அபூதாவூது.

ஜமாஅத் தொழுகையை விடுவது முனாஃபிக் (நயவஞ்சகத்)தனம்: -

எவரொருவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையில் மறுமைநாளில் அவனைச் சந்திக்க விரும்புகின்றாரோ அவர் – ஐவேளைத் தொழுகைகளை மிகவும் பேணுதலுடன் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றைப் பள்ளியில் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் உங்களின் தூதருக்கு ‘சுன்னத்துல் ஹுதா’வைக் கற்றுத் தந்துள்ளான். இத்தொழுகைகள்யாவும் அதனைச் சார்ந்தவைதாம். நயவஞ்சகர்கள் தம் தொழுகைகளை வீட்டில் இருந்துகொண்டு நிறைவேற்றுவது போல் நீங்களும் வீட்டில் இருந்தவாறே தொழுகைகளை நிறைவேற்றுவீர்களாயின் நீங்கள் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை விட்டுவிட்டால் நேரிய வழியை (ஸிராத்துல் முஸ்தகீமை) விட்டவர்களாகின்றீர்கள். ஆதாரம் :முஸ்லிம்.

தக்க காரணமின்றி ஜமாத் தொழுகையை விட்டுவிட்டால் அவனின் தொழுகை மறுமையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது: -

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன், முஅத்தின் (பாங்கு சொல்பவர் ) தொழுகைக்காக விடுக்கம் அழைப்பினைச் செவியேற்றதும் – அதன்பக்கம் விரைந்து வருவதிலிருந்து தடுக்கும் காரணம் எதுவுமில்லையானால், தனித்து நின்று நிறைவேற்றப்படும் அவனின் தொழுகை (மறுமைநாளில்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.’

அப்போது தோழர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘காரணம் என்று கூறினீர்களே, அது என்ன? எவை எவை காரணங்களாக அமைய முடியும்?’ என வினவ, ‘அச்சமும் நோயும் தாம்!’ என்று பெருமானார் (ஸல்) விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அபூதாவூத்

ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்: -

ஜமாஅத் தொழுகை தனியாக தொழுவதை விட இருப்பத்தி ஐந்து மடங்கு சிறந்தது. மேலும் வானவர்களும் ஜமாத் தொழுகைக்காக செல்பவர்களுக்காக பிரார்த்திக்கின்றனர்: -

“ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் ‘இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!’ என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

ஜமாஅத்தாக தொழுபவரின் ஈமான் செழித்தோங்குகிறது: -

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன் தனித்து நின்று நிறைவேற்றும் தொழுகையைவிட மற்றொருவனுடன் சேர்ந்து நிறைவேற்றம் தொழுகை ஈமானின் வளப்பத்திற்கும் முன்னேற்றதிற்கும் காரணமாகின்றது. மேலும், ஒருவருடன் சேர்ந்து அவர் நிறைவேற்றும் தொழுகையைவிட இருவருடன் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை மென்மேலும் ஈமான் செழித்தோங்கக் காரணமாகின்றது. இன்னும் எத்தனை அதிகப் பேருடன் மக்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றார்களோ அல்லாஹ்விடத்தில் அது மிகவும் உதந்ததாகும். (அந்த அளவு அல்லாஹ்வுடன் தொடர்பு வலுப்பெறும்.) அறிவிப்பவர்: உபைபின் கஅப் (ரலி), ஆதாரம் : அபூதாவூது

ஜமாஅத் தொழுகைக்காக நீண்ட தூரம் நடந்து வருபவர்களுக்கு அதிக நன்மையுள்ளது: -

‘யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

பஜ்ர் மற்றும் இஷா தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்: -

நம்முடைய சகோதரர்களில் சிலர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுதாலும் இஷா மற்றும் பஜ்ர் தொழுகை நேரங்களில் பள்ளிக்கு வருவதற்கு அலட்சியமாக இருந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக பஜருடைய தொழுகையில் பள்ளியில் எண்ணிக்கை மிக சொற்பமாகவே காணப்படுகின்றது.

தவழ்ந்தாவது பள்ளிக்கு வருவார்கள்: -

“தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

நன்றி: சுவனத்தென்றல்.காம்

புதன், 13 பிப்ரவரி, 2013



தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்!


‘பிலாலே! தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும்; தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம் மன நிம்மதி பெறுகின்றோம்’ (அபூதாவுத்).

இது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதி இருக்கின்றது என்பதை இந்தக் கூற்று உறுதி செய்கின்றது. ஆனால் இன்றைய நமது தொழுகைகளையின் நிலையை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவைகள் நமக்கு சுமைகளாக மாறிவட்டனவா? அல்லது அதன் மூலம் உண்மையில் மன நிம்மதியைத் தான் பெற்றுக்கொண்டிருக்கின்றோமா?

தொழுகையாளிகளே! உங்களுக்கு எத்தனை எத்தனை நற்பாக்கியங்கள். தொழுகையை நிறைவேற்றும் உங்களுக்கு மாத்திரம் தான் இந்த என்னற்ற நற்பாக்கியங்கள். தொழுகையை பாழ் படுத்தும் பாவிகளுக்கு அல்ல!

தொழுகையாளிகளுக்கு வெற்றி உறுதி என்ற சுபச்செய்தி:

‘ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்முஃமினூன் 23: 1,2).

தொழுகையை ஏனைய அனைத்து வணக்கங்களை விடவும் சிறப்பிற்குரியது என்ற நற்செய்தி:

‘அல்லாஹ்வின் தூதிரடம் நற்கருமங்களில் மிகச் சிறந்தது எது? என கேட்கப்பட்ட போது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது என பதிலளித்தார்கள்’. (முஸ்லிம்).

அடியான் அகிலங்களின் இரட்சகனுடன் உரையாடுகின்ற இடம் தொழுகை என்ற நன்மாராயம்:

‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் போது தனது ரப்புடன் உரையாடுகின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (புஹாரி).

அடியான் அல்லாஹ்விற்கு மிக நெறுக்கமாக இருக்கின்றான் என்ற நற்செய்தி:

‘ஒரு அடியான் தனது ரப்புக்கு மிக நெறுக்கமாக இருக்கும் சந்தர்பம் ஸுஜுதாகும், எனவே அதில் பிறார்த்தனையை அதிகப்படுத்துங்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).

தொழுகை இஸ்லாத்தின் தூன் என்ற சுபச்செய்தி:

‘செயல்களின் அடிப்படை இஸ்லாம், அதன் தூன் தொழுகை’ என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (திர்மிதி).

தொழுகை பேரொளி என்ற நன்மாராயம்:

‘தொழுகை பேரொளி’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம், திர்மிதி).

தொழுகை நயவஞ்சத்தன்மையிலிருந்து பாதுகாக்கும் என்ற சுபச்செய்தி:

‘நயவஞ்சகர்களுக்கு பஃஜ்ர், இஷா தொழுகையை போன்று சிறமமான வேறு எந்தத் தொழுகையும் இல்லை. அந்த இரு தொழுகைகளுக்கு கிடைக்கும் நற்கூலிகளை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்த நிலையிலாவது வந்து அதில் கலந்துகொள்வார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை என்ற சுபச்செய்தி:

‘எவர் இஷா தொழுகையை கூட்டாக நிறைவேற்றுவாரோ அவர் இரவின் ஒரு பகுதியையும், அவர் பஃஜ்ர் தொழுகையையும் கூட்டாக நிறைவேற்றும்போது முழு இரவும் நின்று வணங்கிய நன்மையை பெற்றுக்கொள்கின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

தொழுகை நரக நெறுப்பிலிருந்து பாதுகாக்கும் என்ற நன்மாரயம்:

‘சூரிய உதயத்திற்கு முன்னும், சூரிய மறைவிற்கு முன்னும் தொழுகையை நிறைவேற்றும் எவரையும நரகம் தீண்டாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).

இந்த ஹதீஸ் குறிப்பிடுவது: பஃஜ்ருத் தொழுகையும், அஸர் தொழுகையுமாகும்.

தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களில் இருந்து தடுக்கும் என்ற சுபசோபனம்:

‘நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டும் தடுக்கும்’. (அல் அன்கபூத் 29: 45).

தொழுகை நீங்கள் அல்லாஹ்விடம் உதவி பெறுவதற்கு உள்ள சிறந்த ஊடகம் என்ற நன்மாரயாம்:

நீங்கள் பொறுமையைக்கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்’ (அல்பகரா 2: 45).

‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்’. ;’ (அல்பகரா 2: 153).

தனியாக நிறைவேற்றப்படும் தொழுகையை விட கூட்டாக நிறைவேற்றப்படும் தொழுகைக்கு கிடைக்கும் சுபசோபனம்:

‘தனித்துத் தொழுவதை விட கூட்டாக தொழுகையை நிறைவேற்றுவது இருபத்தேழு மடங்கு நன்மையை உங்களுக்கு பெறுக்கித்தரும்’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முத்தபஃகுன் அலைஹி).

  ‘தொழுகையாளிக்கு வானவர்கள் அல்லாஹ்விடம் அருள் வேண்டி பிறார்த்திக்கின்றார்கள் என்ற நன்மாராயம்:

‘உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் இடத்தில் வுழூ முறிந்துவிடாமல் அமர்ந்திருக்கும் காலமெல்லாம், வானவர்கள் அவருக்காக அல்லாஹ்விடம் யா அல்லாஹ்! அவரது பாவங்களை மன்னிப்பாயாக! யா அல்லாஹ் அவருக்கு அருள் புரிவாயாக! என்று பிறார்த்தித்துக்கொண்டிருப்பார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நன்மாரயம்:

ஒருவர் தொழுகைக்காக நல்ல முறையில் வுழூச் செய்து, கடமையான தொழுகையை மக்களுடன் மஸ்ஜிதில் கூட்டாக நிறைவேற்றினால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) . ‘உங்களில் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் ஒரு ஆறு பெறுக்கெடுத்து ஓடுகின்றது, அவர் அதில் ஒரு நாளைக்கு ஐந்து தடவை குளிக்கின்றார் அவரது உடளில் அழுக்குகள் ஏதும் தங்கி இருக்குமா? என அல்லாஹ்வின் தூதர் தனது தோழர்களிடம் கேட்டபோது, அவர்கள் தங்கியிருக்காது என பதிலளித்தனர். இதே போன்று தான் ஐவேலை தொழுகையும் பாவங்கள் அனைத்தையும் கழுவி விடும்’ என கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையாளிக்கு சுவர்க்கத்தில் உயர் பதவிகள் கிடைக்குமென்ற நன்மாராயம்:

‘எவர் மஸ்ஜிதுக்கு எட்டுகளை வைத்துச் செல்கின்றாரோ (அல்லது மஸ்ஜிதுக்கு போய் திரும்புகின்றாரோ) அவர் செல்லும் பேதும், திரும்பும் போதும் வைக்கின்ற ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்கத்தில் அவரது பதவிகள் உயர்தப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையாளியின் ஒவ்வொரு எட்டுக்கும் பாவங்கள மன்னிக்கப்படும், பதவிகள் உயரும் என்ற சுபச்செய்தி:   ‘ஒருவர் தனது வீட்டிலிருந்து வுழூச் செய்து, அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் ஏதாவது ஒரு மஸ்ஜிதுக்கு கடமையான தொழுகையை நிறைவேற்றும் என்னத்தில் எட்டுகளை எடுத்து வைப்பாரானால், அவர் வைக்கும் ஒரு எட்டுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும், மற்ற எட்டுக்கு அவரது பதவிகள் (சுவர்கத்தில்) உயரும்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).

தொழுகைக்கு நேரகாலத்துடன் செலபவர்களுக்கு கிடைக்கும் நன்மாராயம்:

‘மக்கள் பாங்கின் மற்றும் முன் வரிசையின் சிறப்பை அறிந்துகொள்வார்களானால், சீட்டுக் குழுக்கி பார்பதன் மூலமே தவிர அந்த சந்தர்பத்தை மற்றவர்களுக்கு வழங்கமாட்டார்கள், தொழுகை;கு நேரகாலத்துடன் வருவதன் சிறப்பை அறிந்துகொளவார்களானால் அதற்கும் நேரகாலத்துடன் வந்திருப்பார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவரும் தொழுகையாளி தான் என்ற நன்மாராயம்:

‘உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பாரென்றால், அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார். அவன் தனது குடும்பத்தின் பக்கம் செல்வதை தொழுகையைத் தவிர வேறெதுவும் தடுக்கவில்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

எவர் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமினுடன் நேர்பட்டுவிடுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்ற நற்செய்தி:

‘நீங்கள் ஆமீன் கூறும் போது வானிலுள்ள மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர், அவர்களது ஆமீனுடன் உங்கள் ஆமீனும் நேர்பட்டு விடும்போது நீங்கள் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

ஸுரதுல் பாஃதிஹாவின் இறுதியில் இமாம் ஆமீன் கூறுவார், அத்துடன் பின்னாலுள்ளவர்களும் ஆமீன் கூறுவார்கள் இந்த ஆமீனுடன் நேர் படுவதை தான் மேல் உள்ள ஹதீஸ் குறிப்பிடுகின்றது.

தொழுகையாளி அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார் என்ற நற்செய்தி:

‘எவர் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றுவாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).   தொழுகையாளிக்கு மறுமையில் முழுமைiயான பிரகாசம் என்ற நற்செய்தி:

‘இருள் நேரங்களில் மஸ்ஜிதை நோக்கி நடைபோட்டவர்களுக்கு நாளை மறுமையில் முழுமையான பிரகாசம் இருக்கின்றது என்று நன்மாராயம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அபூதாவுத், திர்மிதி).

பஃஜ்ர், அஸர் தொழுகைகளை நிறைவேற்றுபவருக்கு சுவர்க்கத்தைக்கொண்டு சுபச்செய்தி:

‘எவர் ஸுபஹ் மற்றும அஸர் தொழுகையை நிறைவேற்றி வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

நன்றி: சுவனத்தென்றல்.காம்

புதன், 6 பிப்ரவரி, 2013



முதன்மையான கடமை தொழுகை


கடமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும். தொழுகை என்பது என்ன? எதன் மீது நாம் நம்பிக்கை (ஈமான்) கொண்டிருக்கிறோமோ அதனை, நாள் தோறும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் சொல்லாலும், செயலாலும் நிறைவு செய்து புதுப்பிக்கின்ற நிரந்தர வழிபாட்டு முறைகளே தொழுகையாகும். அதிகாலையில் எழுந்து அனைத்திற்கும் முதலாவதாக சுத்தமாகி இறைவன் முன் வருகிறீர்கள். அவன் முன்னிலையில் நின்றும், குனிந்தும், சிரம் தாழ்த்தியும் உங்களை அடிமை என்று ஒப்புக் கொள்கிறீர்கள். இறைவனிடம் உதவி கோருகிறீர்கள். அவனிடம் போதனை கேட்கிறீர்கள். அவனுக்குக் கீழ்ப்படியும் வாக்குறுதியைப் புதுப்பிக்கிறீர்கள். அவனுடைய திருப்தியைப் பெறவும், கோபத்திலிருந்து தப்பிக்கவும் அடிக்கடி இறைஞ்சுகிறீர்கள். அவனுடைய வேதத்தின் பாடத்தை நினைவூட்டிக்கொள்கிறீர்கள். அவனுடைய தூதரின் மெய்மையைப் பற்றிச் சான்று பகர்கிறீர்கள். அவனுடைய நீதிமன்றத்தில் நீங்கள் வந்து உங்களுடைய நடத்தையைப் பற்றிப் பதில் கூறவேண்டிய அந்த நாளை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் பகற் பொழுது தொடங்குகிறது.

சில மணி நேரம் நீங்கள், உங்கள் அன்றாட அலுவல்களில் ஈடுபடுகிறீர்கள். லுஹர் வேளையில், முஅத்தின் (தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர்) உங்களுக்கு நினைவூட்டுகிறார். “வாருங்கள்! இறைவனை மறந்து அலட்சியமாக இருந்து விடாதிருக்கும் பொருட்டுச் சில நிமிஷங்கள் அந்தப் பாடத்தை மீண்டும் நினைவூட்டிக் கொள்ளுங்கள்!’ என்று அழைக்கிறார். நீங்கள் எழுந்து மீண்டும் ஈமானைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் உலக அலுவல்களின் பக்கம் திரும்புகிறீர்கள். சில மணி நேரம் கழித்து மீண்டும் அஸர் வேளை  மீண்டும் ஈமானைப் புதுப்பித்துக் கொள்கிறீர்கள். அதற்குப்பின் மக்ரிப் வேளை வருகிறது. இரவு தொடங்குகிறது. காலைப்பொழுதை நீங்கள் எவ்வாறு தொழுகையோடு தொடங்கினீர்களோ அவ்வாறே அந்தப் பாடத்தை மறந்து விடாதிருக்கும் பொருட்டும், மறந்து வழி தவறிவிடாதிருக்கும் பொருட்டும் தொழுகையோடு இரவையும் தொடங்குகிறீர்கள். பிறகு இஷா வேளை வருகிறது. தூங்கும் சமயம் நெருங்குகிறது. இது அமைதியான காலம். ஆதலால் இறுதியாக உங்களுக்கு ஈமானின் போதனைகள் அனைத்தும் நினைவூட்டப்படுகின்றன. பகற்பொழுதின் ஆரவாரத்தில் உங்களுக்கு முழுக்கவனமும் செலுத்த வாய்ப்பில்லா விட்டால் இந்த வேளையில் நிம்மதியாகக் கவனம் செலுத்த முடியும்.

தொழுகை ஒவ்வொரு நாளும், ஐவேளையும் உங்களுடைய இஸ்லாமிய அடிப்படையை வலுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்தத் தொழுகையால் உங்கள் உளத்தூய்மை, ஆன்மநேயம், ஒழுக்க விழுப்பம், நற்செயல்கள் பற்றிய அறிவுரை ஆகிய அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதன் மூலம் முன் கூறியபடி பெரிய வழிபாட்டிற்கு சித்தப்படுத்தப்படுகிறீர்கள். ஒலூச் செய்வதில் (தொழுகைக்கு முன் முகம், கைகால்களைத் தூய்மை செய்வதில்) ரசூலுல்லாஹ் அவர்கள் காட்டிய வழிமுறையையே நீங்கள் ஏன் பின்பற்றுகிறீர்கள்? தொழுகையின்போது ரசூலுல்லாஹ் அவர்கள் போதித்துள்ள படியே குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் ஏன் ஓதுகிறீர்கள்? முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப் படிவதை நீங்கள் உங்கள் கடமையாகக் கருதுவதால் தானே இவையெல்லாம் செய்கிறீர்கள் ?

குர்ஆனை நீங்கள் வேண்டும் என்றே தவறாக ஏன் ஓதுவதில்லை? அது அல்லாஹ்வின் வாக்கு எனும் நம்பிக்கை உங்களுக்கு இருப்பதால்தானே? தொழுகையில் மௌனமாக ஓத வேண்டியதை நீங்கள் ஓதாவிட்டால் அல்லது அதற்குப் பதிலாக வேறு ஏதாவது ஓதினால் உங்களுக்கு யாருடைய அச்சம் இருக்கிறது? மனிதர் யாரும் நகைக்கப் போவதில்லை. ஆயினும் மௌனமாக நாம் எதை ஓதிக்கொண்டிருந்தாலும் அதையும் அல்லாஹ் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கருதுவதால்தான் அல்லவா? நமது மறைவான நடவடிக்கைகளையும் அவன் அறியாதவன் அல்லன் எனும் எண்ணம் இருப்பதால்தான் அல்லவா?

பார்ப்பவர் எவரும் இல்லாத இடத்தில் உங்களைத் தொழுகைக்காக எழுப்பி விடுவது எது? இறைவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எனும் நம்பிக்கைதான் அல்லவா? தொழுகை வேளை வந்ததும் மிகவும் அவசியமான வேலையிலிருந்தும் உங்களைப் பிரித்துத் தொழுகையின் பக்கம் உங்களை இட்டுச் செல்வது எது? “தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான்’ எனும் உணர்வே அல்லவா? குளிர் காலத்தில் அதிகாலையிலும், கோடைக்காலத்தில் நடுப்பகலிலும், மாலையில் இன்பமாய்ப் பொழுது போக்கும் மக்ரிப் சமயத்திலும் தொழுது கொள்ளும்படி எது உங்களை நிர்ப்பந்திக்கிறது? அது கடமையுணர்வு இல்லையானால் வேறு என்ன? தொழாமல் இருப்பதற்கும், தொழுகையில் அறிந்தே தவறு செய்வதற்கும் ஏன் அஞ்சுகிறீர்கள்? இறைவனின் அச்சம் உங்களுக்கு இருப்பதால்தானே? அவனுடைய நீதிமன்றத்திற்கு ஒருநாள் வர வேண்டியிருக்கிறது என்று நீங்கள் நம்புவதால்தானே?

உங்களை மெய்யான முழுமையான முஸ்லிம் ஆக்குவதற்காகத் தொழுகையைக் காட்டிலும் வேறு சிறந்த பயிற்சி எது இருக்கிறது? ஒவ்வொரு நாளும் பலமுறை இறைவனின் நினைவு, அவனுடைய அச்சம், அவன் எங்கும் நிறைந்திருந்து எல்லாவற்றையும் கண்காணிக்கிறான் எனும் நம்பிக்கை, அவனுடைய நீதிமன்றத்தில் நிற்க வேண்டும் எனும் கொள்கை ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும் பயிற்சியை அளிப்பதற்குத் தொழுகையைவிடச் சிறந்ததாய் வேறு எது இருக்கிறது?

நாள்தோறும் பலமுறை கட்டாயமாக ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதற்கும், வைகறை முதல் இரவு வரை ஐவேளைகளில் இறைவனுக்குச் செய்யும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இது பயிற்சியளித்துக் கொண்டே இருக்கிறதல்லவா? இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவன், தொழுகையை நிறைவேற்றிவிட்டு உலக அலுவல்களில் ஈடுபடும்போது அங்கும் அவன் இறைவனுக்கு அஞ்சுவான். அவனுடைய சட்டங்களைப் பின்பற்றுவான். ஒவ்வொரு பாவச்செயலின் போதும் அவனுக்கு அல்லாஹ்வின் நினைவு வந்துவிடும். தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தான் பாவம் செய்யக்கூடாது என்று அஞ்சி விலகுவான் என்று நம்பலாம் அல்லவா? யாராவது ஒருவன் இத்தகைய சிறந்த பயிற்சிக்குப் பின்பும் இறைவனுக்கு அஞ்சாமலும் அவனுடைய கட்டளைகளை மீறியும் நடந்து கொண்டிருந்தால் அது, தொழுகையின் குறை ஆகாது. மாறாக அக்குறை அந்த மனிதனின் உள்ளக் கோளாறின் விளைவேயாகும்.

அல்லாஹ் தொழுகையை பலருடன் கூடி (ஜமாஅத்துடன்) தொழும்படியே உத்தரவிட்டிருக்கிறான். குறிப்பாக வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை (ஜும்ஆ)த் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதைக் கடமையாக்கி இருக்கிறான். இதனால் முஸ்லிம்கள் இடையே ஒற்றுமையும் சகோதரத்துவமும் தோன்றுகின்றன. தொழுகை முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி ஒரு வலுவான குழுவாக்குகிறது. முஸ்லிம்கள் அனைவ ரும் ஒன்றுகூடி ஒரே இறைவனைத் தொழும்போது ஒன்றாயிருந்து பழகுவதால், இயற்கையாக ஒருவருடைய நெஞ்சம் மற்றொருவருடைய நெஞ்சத்தோடு இணைகிறது. நாம் அனைவரும் சகோதரர்கள் எனும் உணர்வும் பிறக்கிறது. தவிர, இது முஸ்லிம் தலைவனுக்குப் பணிந்து செயல்படும் இயல்பை உண்டாக்குகிறது. அவர்களுக்கு ஒழுங்கையும் கட்டுப்பாட்டுக்கான பாடத்தையும் கற்பிக்கிறது. இதனால் அவர்களுக்குள் அன்பும் அனுதாபமும் மலர்கின்றன. சமத்துவமும், ஒருமையுணர்வும் பிறக்கின்றன. செல்வனும், ஏழையும், பெரியவனும், சிறியவனும், உயர்ந்த அதிகாரியும், தாழ்ந்த வேலைக்காரனும் சரிசமமாகத் தோளோடு தோள் இணைந்து நிற்கிறார்கள். எவரும் உயர் ஜாதியாகவோ, கீழ் ஜாதியாகவோ இருப்பதில்லை.

இவை யாவும் உங்களுடைய தொழுகையால் இறைவனுக்கன்றி உங்களுக்கே கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளுள் சிலவாகும். இறைவன், இதை உங்களுடைய நன்மைக்காகவே கடமையாக்கியிருக்கிறான். தொழாவிட்டால் இறைவன் உங்கள் மீது கோபப்படுவது, அவனுக்கு நீங்கள் ஏதோ பெரிய நஷ்டம் விளைவித்து விட்டீர்கள் என்பதற்காக அன்று. உங்களுக்கு நீங்கள் நஷ்டம் விளைவித்துக் கொண்டீர்களே என்பதற்காகத்தான். தொழுகையின் மூலம் இறைவன் எத்தகைய வலிமையை உங்களுக்குத் தருகிறான்! நீங்களோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.

வாக்கால் இறைவனின் இறைமையையும், இறைத்தூதருக்குக் கீழ்ப்படிவதையும், மறுமையில் நீதி விசாரணையையும் ஒப்புக்கொண்டு செயலில் இறைவனும், இறைத்தூதரும் உங்கள் மீது சுமத்தியுள்ள அனைத்திற்கும் பெரிய கடமையை நிறைவேற்றாமல் இருந்தால் அது எத்தகைய வெட்கக் கேடான நிலை என்பதை உணர வேண்டும். இத்தகைய செயல் உங்களைப் பற்றி இரண்டு விஷயங்களை வெளிப்படுத்துகிறது. ஒன்று, தொழுகை முக்கிய கடமை என்பதை நிராகரிக்கிறீர்கள். இரண்டு, அதைக் கடமை என்று ஒப்புக்கொண்டும் அதை நிறைவேற்றாமல் தப்பி ஓட முயலுகிறீர்கள். தொழுகையையே கடமையல்லவென நிராகரிப்பதால் குர்ஆனையும், ரசூல்(ஸல்) அவர்களின் போதனையையும் பொய்யாக்க முயலுகிறீர்கள். அதே சமயம் அவ்விரண்டின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்ப தாய்ப் பொய்யுரைக்கிறீர்கள்.

நீங்கள் தொழுகையைக் கடமை என்று ஒப்புக் கொண்டும் அதை நிறைவேற்றா விட்டால் நீங்கள் கொஞ்சமும் நம்பிக்கைக்குரிய மனிதர் அல்லர். எந்த உலக விவகாரம் தொடர்பாகவும் உங்களை நம்பவே முடியாது. இறைவனுடைய கடமையை நிறைவேற்றாத உங்களிடம் மனிதனின் கடமையை நிறைவேற்றுவீர்கள் என்று எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?.

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்

திங்கள், 19 நவம்பர், 2012



முதன்மையான கடமை தொழுகை
அபுல் அஃலா மௌதூதி


கடமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும். தொழுகை என்பது என்ன? எதன் மீது நாம் நம்பிக்கை (ஈமான்) கொண்டிருக்கிறோமோ அதனை, நாள் தோறும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் சொல்லாலும், செயலாலும் நிறைவு செய்து புதுப்பிக்கின்ற நிரந்தர வழிபாட்டு முறைகளே தொழுகையாகும். அதிகாலையில் எழுந்து அனைத்திற்கும் முதலாவதாக சுத்தமாகி இறைவன் முன் வருகிறீர்கள். அவன் முன்னிலையில் நின்றும், குனிந்தும், சிரம் தாழ்த்தியும் உங்களை அடிமை என்று ஒப்புக் கொள்கிறீர்கள். இறைவனிடம் உதவி கோருகிறீர்கள். அவனிடம் போதனை கேட்கிறீர்கள். அவனுக்குக் கீழ்ப்படியும் வாக்குறுதியைப் புதுப்பிக்கிறீர்கள். அவனுடைய திருப்தியைப் பெறவும், கோபத்திலிருந்து தப்பிக்கவும் அடிக்கடி இறைஞ்சுகிறீர்கள். அவனுடைய வேதத்தின் பாடத்தை நினைவூட்டிக்கொள்கிறீர்கள். அவனுடைய தூதரின் மெய்மையைப் பற்றிச் சான்று பகர்கிறீர்கள். அவனுடைய நீதிமன்றத்தில் நீங்கள் வந்து உங்களுடைய நடத்தையைப் பற்றிப் பதில் கூறவேண்டிய அந்த நாளை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் பகற் பொழுது தொடங்குகிறது.

சில மணி நேரம் நீங்கள், உங்கள் அன்றாட அலுவல்களில் ஈடுபடுகிறீர்கள். லுஹர் வேளையில், முஅத்தின் (தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர்) உங்களுக்கு நினைவூட்டுகிறார். “வாருங்கள்! இறைவனை மறந்து அலட்சியமாக இருந்து விடாதிருக்கும் பொருட்டுச் சில நிமிஷங்கள் அந்தப் பாடத்தை மீண்டும் நினைவூட்டிக் கொள்ளுங்கள்!’ என்று அழைக்கிறார். நீங்கள் எழுந்து மீண்டும் ஈமானைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் உலக அலுவல்களின் பக்கம் திரும்புகிறீர்கள். சில மணி நேரம் கழித்து மீண்டும் அஸர் வேளை  மீண்டும் ஈமானைப் புதுப்பித்துக் கொள்கிறீர்கள். அதற்குப்பின் மக்ரிப் வேளை வருகிறது. இரவு தொடங்குகிறது. காலைப்பொழுதை நீங்கள் எவ்வாறு தொழுகையோடு தொடங்கினீர்களோ அவ்வாறே அந்தப் பாடத்தை மறந்து விடாதிருக்கும் பொருட்டும், மறந்து வழி தவறிவிடாதிருக்கும் பொருட்டும் தொழுகையோடு இரவையும் தொடங்குகிறீர்கள். பிறகு இஷா வேளை வருகிறது. தூங்கும் சமயம் நெருங்குகிறது. இது அமைதியான காலம். ஆதலால் இறுதியாக உங்களுக்கு ஈமானின் போதனைகள் அனைத்தும் நினைவூட்டப்படுகின்றன. பகற்பொழுதின் ஆரவாரத்தில் உங்களுக்கு முழுக்கவனமும் செலுத்த வாய்ப்பில்லா விட்டால் இந்த வேளையில் நிம்மதியாகக் கவனம் செலுத்த முடியும்.

தொழுகை ஒவ்வொரு நாளும், ஐவேளையும் உங்களுடைய இஸ்லாமிய அடிப்படையை வலுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்தத் தொழுகையால் உங்கள் உளத்தூய்மை, ஆன்மநேயம், ஒழுக்க விழுப்பம், நற்செயல்கள் பற்றிய அறிவுரை ஆகிய அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதன் மூலம் முன் கூறியபடி பெரிய வழிபாட்டிற்கு சித்தப்படுத்தப்படுகிறீர்கள். ஒலூச் செய்வதில் (தொழுகைக்கு முன் முகம், கைகால்களைத் தூய்மை செய்வதில்) ரசூலுல்லாஹ் அவர்கள் காட்டிய வழிமுறையையே நீங்கள் ஏன் பின்பற்றுகிறீர்கள்? தொழுகையின்போது ரசூலுல்லாஹ் அவர்கள் போதித்துள்ள படியே குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் ஏன் ஓதுகிறீர்கள்? முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப் படிவதை நீங்கள் உங்கள் கடமையாகக் கருதுவதால் தானே இவையெல்லாம் செய்கிறீர்கள் ?

குர்ஆனை நீங்கள் வேண்டும் என்றே தவறாக ஏன் ஓதுவதில்லை? அது அல்லாஹ்வின் வாக்கு எனும் நம்பிக்கை உங்களுக்கு இருப்பதால்தானே? தொழுகையில் மௌனமாக ஓத வேண்டியதை நீங்கள் ஓதாவிட்டால் அல்லது அதற்குப் பதிலாக வேறு ஏதாவது ஓதினால் உங்களுக்கு யாருடைய அச்சம் இருக்கிறது? மனிதர் யாரும் நகைக்கப் போவதில்லை. ஆயினும் மௌனமாக நாம் எதை ஓதிக்கொண்டிருந்தாலும் அதையும் அல்லாஹ் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கருதுவதால்தான் அல்லவா? நமது மறைவான நடவடிக்கைகளையும் அவன் அறியாதவன் அல்லன் எனும் எண்ணம் இருப்பதால்தான் அல்லவா?

பார்ப்பவர் எவரும் இல்லாத இடத்தில் உங்களைத் தொழுகைக்காக எழுப்பி விடுவது எது? இறைவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எனும் நம்பிக்கைதான் அல்லவா? தொழுகை வேளை வந்ததும் மிகவும் அவசியமான வேலையிலிருந்தும் உங்களைப் பிரித்துத் தொழுகையின் பக்கம் உங்களை இட்டுச் செல்வது எது? “தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான்’ எனும் உணர்வே அல்லவா? குளிர் காலத்தில் அதிகாலையிலும், கோடைக்காலத்தில் நடுப்பகலிலும், மாலையில் இன்பமாய்ப் பொழுது போக்கும் மக்ரிப் சமயத்திலும் தொழுது கொள்ளும்படி எது உங்களை நிர்ப்பந்திக்கிறது? அது கடமையுணர்வு இல்லையானால் வேறு என்ன? தொழாமல் இருப்பதற்கும், தொழுகையில் அறிந்தே தவறு செய்வதற்கும் ஏன் அஞ்சுகிறீர்கள்? இறைவனின் அச்சம் உங்களுக்கு இருப்பதால்தானே? அவனுடைய நீதிமன்றத்திற்கு ஒருநாள் வர வேண்டியிருக்கிறது என்று நீங்கள் நம்புவதால்தானே?

உங்களை மெய்யான முழுமையான முஸ்லிம் ஆக்குவதற்காகத் தொழுகையைக் காட்டிலும் வேறு சிறந்த பயிற்சி எது இருக்கிறது? ஒவ்வொரு நாளும் பலமுறை இறைவனின் நினைவு, அவனுடைய அச்சம், அவன் எங்கும் நிறைந்திருந்து எல்லாவற்றையும் கண்காணிக்கிறான் எனும் நம்பிக்கை, அவனுடைய நீதிமன்றத்தில் நிற்க வேண்டும் எனும் கொள்கை ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும் பயிற்சியை அளிப்பதற்குத் தொழுகையைவிடச் சிறந்ததாய் வேறு எது இருக்கிறது?

நாள்தோறும் பலமுறை கட்டாயமாக ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதற்கும், வைகறை முதல் இரவு வரை ஐவேளைகளில் இறைவனுக்குச் செய்யும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இது பயிற்சியளித்துக் கொண்டே இருக்கிறதல்லவா? இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவன், தொழுகையை நிறைவேற்றிவிட்டு உலக அலுவல்களில் ஈடுபடும்போது அங்கும் அவன் இறைவனுக்கு அஞ்சுவான். அவனுடைய சட்டங்களைப் பின்பற்றுவான். ஒவ்வொரு பாவச்செயலின் போதும் அவனுக்கு அல்லாஹ்வின் நினைவு வந்துவிடும். தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தான் பாவம் செய்யக்கூடாது என்று அஞ்சி விலகுவான் என்று நம்பலாம் அல்லவா? யாராவது ஒருவன் இத்தகைய சிறந்த பயிற்சிக்குப் பின்பும் இறைவனுக்கு அஞ்சாமலும் அவனுடைய கட்டளைகளை மீறியும் நடந்து கொண்டிருந்தால் அது, தொழுகையின் குறை ஆகாது. மாறாக அக்குறை அந்த மனிதனின் உள்ளக் கோளாறின் விளைவேயாகும்.

அல்லாஹ் தொழுகையை பலருடன் கூடி (ஜமாஅத்துடன்) தொழும்படியே உத்தரவிட்டிருக்கிறான். குறிப்பாக வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை (ஜும்ஆ)த் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதைக் கடமையாக்கி இருக்கிறான். இதனால் முஸ்லிம்கள் இடையே ஒற்றுமையும் சகோதரத்துவமும் தோன்றுகின்றன. தொழுகை முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி ஒரு வலுவான குழுவாக்குகிறது. முஸ்லிம்கள் அனைவ ரும் ஒன்றுகூடி ஒரே இறைவனைத் தொழும்போது ஒன்றாயிருந்து பழகுவதால், இயற்கையாக ஒருவருடைய நெஞ்சம் மற்றொருவருடைய நெஞ்சத்தோடு இணைகிறது. நாம் அனைவரும் சகோதரர்கள் எனும் உணர்வும் பிறக்கிறது. தவிர, இது முஸ்லிம் தலைவனுக்குப் பணிந்து செயல்படும் இயல்பை உண்டாக்குகிறது. அவர்களுக்கு ஒழுங்கையும் கட்டுப்பாட்டுக்கான பாடத்தையும் கற்பிக்கிறது. இதனால் அவர்களுக்குள் அன்பும் அனுதாபமும் மலர்கின்றன. சமத்துவமும், ஒருமையுணர்வும் பிறக்கின்றன. செல்வனும், ஏழையும், பெரியவனும், சிறியவனும், உயர்ந்த அதிகாரியும், தாழ்ந்த வேலைக்காரனும் சரிசமமாகத் தோளோடு தோள் இணைந்து நிற்கிறார்கள். எவரும் உயர் ஜாதியாகவோ, கீழ் ஜாதியாகவோ இருப்பதில்லை.

இவை யாவும் உங்களுடைய தொழுகையால் இறைவனுக்கன்றி உங்களுக்கே கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளுள் சிலவாகும். இறைவன், இதை உங்களுடைய நன்மைக்காகவே கடமையாக்கியிருக்கிறான். தொழாவிட்டால் இறைவன் உங்கள் மீது கோபப்படுவது, அவனுக்கு நீங்கள் ஏதோ பெரிய நஷ்டம் விளைவித்து விட்டீர்கள் என்பதற்காக அன்று. உங்களுக்கு நீங்கள் நஷ்டம் விளைவித்துக் கொண்டீர்களே என்பதற்காகத்தான். தொழுகையின் மூலம் இறைவன் எத்தகைய வலிமையை உங்களுக்குத் தருகிறான்! நீங்களோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.

வாக்கால் இறைவனின் இறைமையையும், இறைத்தூதருக்குக் கீழ்ப்படிவதையும், மறுமையில் நீதி விசாரணையையும் ஒப்புக்கொண்டு செயலில் இறைவனும், இறைத்தூதரும் உங்கள் மீது சுமத்தியுள்ள அனைத்திற்கும் பெரிய கடமையை நிறைவேற்றாமல் இருந்தால் அது எத்தகைய வெட்கக் கேடான நிலை என்பதை உணர வேண்டும். இத்தகைய செயல் உங்களைப் பற்றி இரண்டு விஷயங்களை வெளிப்படுத்துகிறது. ஒன்று, தொழுகை முக்கிய கடமை என்பதை நிராகரிக்கிறீர்கள். இரண்டு, அதைக் கடமை என்று ஒப்புக்கொண்டும் அதை நிறைவேற்றாமல் தப்பி ஓட முயலுகிறீர்கள். தொழுகையையே கடமையல்லவென நிராகரிப்பதால் குர்ஆனையும், ரசூல்(ஸல்) அவர்களின் போதனையையும் பொய்யாக்க முயலுகிறீர்கள். அதே சமயம் அவ்விரண்டின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்ப தாய்ப் பொய்யுரைக்கிறீர்கள்.

நீங்கள் தொழுகையைக் கடமை என்று ஒப்புக் கொண்டும் அதை நிறைவேற்றா விட்டால் நீங்கள் கொஞ்சமும் நம்பிக்கைக்குரிய மனிதர் அல்லர். எந்த உலக விவகாரம் தொடர்பாகவும் உங்களை நம்பவே முடியாது. இறைவனுடைய கடமையை நிறைவேற்றாத உங்களிடம் மனிதனின் கடமையை நிறைவேற்றுவீர்கள் என்று எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

வெள்ளி, 16 நவம்பர், 2012



ஸஜ்தா ஓர் விளக்கம்


பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! என்று சொன்ன போது இப்லீஸித் தவிர மற்ற அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவன் மறுத்து அகந்தை பேசினான். நிராகரிப்பவர்களில் ஒருவனாக அவன் ஆனான். (அல்குர்ஆன்2:34)

இந்த வசனத்தில் கூறப்படும் செய்தி எல்லா  முஸ்லிம்களுக்கும்  தெரிந்த ஒன்றே. மலக்குகள் எனும் வானவர்கள் முதல் மனிதராகிய  ஆதம் (அலை)  அவர்களுக்கும்  ஸஜ்தா செய்ததாக இந்த வசனம் கூறுகின்றது. இந்தக் கருத்து திருகுரானிலும் இன்னும் அனேக இடங்களில் கூறப்படுகின்றது.

15:30,37:73,7:11,17:61.18:50,20:11 ஆகிய வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த வசனங்கள் பற்றி ஏகத்துவவாதிகளுக்கு இடையே ஒரு குழப்பம். இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய வேண்டும் எனும் போது வானவர்களும் கூட இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய கடமைப்பட்டு இருக்கும் போது அவர்கள் ஏன் ஆதமுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும்? அவ்வாறு செய்யுமாறு இறைவன் ஏன் கட்டளையிட வேண்டும்? இந்தக் கேள்விகளால் அவர்களுக்கிடையே குழப்பம்.

ஏகத்துவத்துக்கு எதிரானவர்களுக்கோ இந்த வசனம் ஒரு வரப்பிரசாதம். ஆதம் அவர்களுக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததால் பெரியவர்களுக்கு மகான்களுக்கு சாதாரணமானவர்கள் ஸஜ்தா செய்யலாம் என வாதிடுவோருக்கு இந்த வசனமும் இந்தக் கருத்திலமைந்த  ஏனைய வசனங்களும் மிகப் பெரும் சான்றுகளாகத்  தெரிகின்றன.

இரண்டிலும் சேராதவர்களுக்கோ தடுமாற்றம்! எங்கே சாய்வது என்று தீர்மானிக்க முடியாதது அவர்களது நிலைமை. இஸ்லாத்திலேயே முரண்பாடுகள் உள்ளனவோ என்ற எண்ணத்தைக் கூட சிலர் இதனால் தங்கள் அடி மனதில் புதைத்து வைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக இந்த வசனம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகி விடுகின்றது.

“ஆதம்(அலை) அவர்களுக்கு வானவர்கள் ஸஜ்தா செய்தனர்” என இங்கே கூறப்படுகின்றது. ‘ஸஜ்தா’ என்றதும் நெற்றியைத் தரையில் வைத்து பணிவது தான் நமது நினைவுக்கு வரும். ஸஜ்தா என்பதை இந்த ஒரு பொருளில் தான் நாம் பயன்படுத்தி வருகின்றோம் என்பது தான் இதற்குக் காரணம்.

‘ஸஜ்தா’ என்பதற்கு நாம் நினைக்கின்றது போல் நெற்றி தரையில் படுமாறு பணிதல், என்று அர்த்தம் இருப்பது போலவே அதற்கு வேறு சில அர்த்தங்களும் உள்ளன. இதற்கான சான்றுகளும் திருக்குர் ஆனிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. முதலில் ‘ஸஜ்தா’வுக்குரிய ஏனைய அர்த்தங்களை அறிந்துவிட்டு இந்த இடத்தில் எது பொருத்தமான பொருள் என்பதையும் தக்க சான்றுகளுடன் விளங்குவோம்.

மூசா(அலை)  அவர்களின்  சமுதாயத்தை  ஒரு  நகருக்குள்  பிரவேசிக்குமாறு  இறைவன்  கூறும் போது, “ஸஜ்தா செய்தவர்களாக இந்த வாசல் வழியாக நுழையுங்கள்” என்று இறைவன் கட்டளையிட்டான். இந்தக் கட்டளை 2:58,4:154,7:161 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது.

இந்த இடத்தில் பரவலாக நாம் விளங்கி வைத்திருக்கின்றவாறு பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இந்தப் பொருளின்படி ஸஜ்தா செய்தால் உள்ளே செல்லுங்கள் என்றே இதற்கு பொருள் கொள்ள புடியும். மணிவுக்கும், அடக்கத்துக்கும் ‘ஸஜ்தா’ எனும் பதத்தை  இறைவன் இங்கே       பயன்படுத்தியிருக்கிறான். ” மரங்களும், செடி கொடிகளும் (அவனுக்கு) ஸஜ்தா செய்கின்றன”. (அல்குர்ஆன் 55:6)

இந்த வசனத்தில் மரம் செடிகள் ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் கூறுகிறான். இந்த   இடத்தில் முதலாவது அர்த்தமும் இரண்டாவது அர்த்தமும் கொள்ள முடியாது. ஏனெனில் மரம் செடிகளுக்கு நெற்றி கிடையாது அதை தரையில் வைப்பதென்பதும் கிடையாது.முதலாவது அர்த்தம் கொள்ள இந்த இடத்தில் வழியே இல்லை. இரண்டாம் அர்த்தம் செய்யவும் வழியில்லை. ஏனெனில் மரம் செடிகளிடம் பெருமையையும்,பணிவையும் கற்பனை செய்ய முடியாது,அவை எவ்வாறு இருக்க வேண்டுமென இறைவன் விதித்திருக்கின்றானோ அவ்வாறு அவை நடக்கின்றன என்பதே இதன் பொருளாக இருக்க முடியும்.அவை ஸஜ்தா செய்கின்றன என்றால் இறைவன் என்ன நோக்கத்தில் அதை படைத்துள்ளானோ அதன்படி அவை இயங்குகின்றன என்பதே  பொருள்.

அல்லாஹ் படைத்திருப்பவைகளை அவர்கள் உற்று நோக்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும்,இடமுமாக இறைவனுக்காக ஸஜ்தா செய்தவையாக சாய்கின்றன. மேலும் அவை அல்லாஹ்வுக்கு பணிகின்றன. (அல்குர் ஆன் 16:48) வலமும் இடமுமாக பொருள்களின் நிழல்கள் சாய்வதை இங்கே இறைவன் ஸஜ்தா என்று குறிப்பிடுகிறான்.அதை தொடர்ந்து

வானங்களிலிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும், ஜீவராசிகளூம் மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்கின்றனர். (அல்குர்ஆன் 16:49)

வானம், பூமியில் உள்ள யாவும்,சகல ஜீவராசிகளூம் இறைவனுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் இங்கே குறிப்பிடுகின்றான்.நெற்றியை நிலத்தில் வைத்துப் பணிவது என்ற அர்த்தத்தை இங்கே இடம் பெற்ற ஸஜ்தா எனும் சொல்லுக்கு கொடுக்க முடியாது.

பதினோரு நட்சத்திரங்களூம், சூரியனும் சந்திரனும் எனக்கு ஸஜ்தா செய்யக் கூடியவையாக நான் கனவு கண்டேன்.  (அல்குர்ஆன் 12:4)

யூசுப் நபியவர்கள் இவ்வாறு கனவு கண்டதாக அல்லாஹ் கூறுகிறான். சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களூம் நாம் நினைக்கின்ற அர்த்தத்தில் ஸஜ்தா செய்திருக்க முடியாது. எனெனில் ஸஜ்தாவுக்குரிய உறுப்புகள் அவற்றுக்குக் கிடையாது இந்தச் சான்றுகளிலிருந்து ஸஜ்தாவுக்குப் பல பொருள்கள் இருப்பதை நாம் அறிய முடிகின்றது.

அப்படியானால் இந்த இடத்தில் ஆதம் [அலை] அவர்களூக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததாகக் கூறப்படும் இடத்தில் ஸஜ்தாவுக்கு எந்தப் பொருள் கொள்ள வேண்டும்.தொழுகையில் நாம் செய்கின்ற இந்த ஸஜ்தாவையே அவர்கள் செய்தார்களா? அவ்வாறு பொருள் கொள்ள முடியுமா?

நிச்சயமாக அவ்வாறு பொருள் கொள்ள முடியாது.இந்த ஸஜ்தாவை மலக்குகள் இறைவனைத் தவிர வேறு எவருக்கும் செய்ய மாட்டார்கள் என்று திருக்குர்ஆனே தெளிவுபடுத்தி விடுகின்றது.

உம்முடைய இறைவனிடத்தில் இருப்பவர்கள் (வானவர்கள்) அவனை வணங்குவதைவிட்டும் பெருமையடிப்பதில்லை.அவனைத் துதிக்கின்றனர்.மேலும் அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர்.  (அல்குர்ஆன் 7:206)

இந்த வசனத்தில் ‘லஹுயஸ்ஜுதூன்’ என்று இறைவன்  குறிப்பிடுகிறான். ‘யஸ்ஜுதூன லஹு’ என்பதற்கும் ‘லஹுயஸ்ஜுதூன்’ என்பதற்க்கும் வித்தியாசம் உள்ளது. ‘யஸ்ஜுதூன லஹு’ என்று சொன்னால் ‘அவனுக்கு ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள் என்று சொன்னால்  ‘அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள்.அதாவது வேறு எவருக்கும் ஸஜ்தா செய்ய மாட்டார்கள் என்பது இதன் கருத்து.

மலக்குகள் இறைவனுக்கு ஸஜ்தா செய்வதுடன் வேறு எவருக்கும் ஸஜ்தா செய்யாமலிருப்பார்கள் என்று அவர்களைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர்கள் இறைவனுக்குச்  செய்யப்படும் ஸஜ்தாவை ஆதமுக்கு செய்திருக்க மாட்டார்கள் என்பதைத் தெளிவாக விளங்கலாம் இந்த வசனத்திற்கு முரண்படாத வகையிலேயே 2:34 வசனத்தையும் நாம் விளங்க வேண்டும்.

அப்படியானால் மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்ற அந்த வசனத்தின் பொருள் என்ன? ஆதம்  (அலை)அவர்களைப் படைக்க இறைவன் விரும்பி மலக்குகளிடம் சொன்ன போது அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள்.அவரைவிட தாங்களே உயர்ந்தவர்கள் எனவும் கூறினார்கள்.அல்குர்ஆனின் 2:30 வசனத்திலிருந்து இதை அறியலாம்.மனிதனைவிடத் தங்களை உயர்ந்தவர்கள் என்று அவர்கள் கருதியிருந்ததை தவறென்று காட்டுவதற்காக அவர்களைவிட ஆதம்(அலை) அவர்கள் தமது ஞானத்தை வெளிப்படுத்தியபின், அவருடைய உயர்வை அவருக்கு இருக்கும் சிறப்பை மலக்குகள் ஒப்புக் கொண்டனர்.

மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்றால் ஆதம்(அலை) தங்களை விட அறிவில் சிறந்தவர் என்று அவரது உயர்வை ஒப்புக் கொண்டார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் பொருள் கொள்ளக் காரணம் அல்குர்ஆன் 7:20ம்  வசனத்தில் மலக்குகள் இறைவனைத்தவிர வேறு எவருக்கும் (சிரம்பணியும்)ஸஜ்தாவை செய்ய மாட்டார்கள் என்று இறைவன் குறிப்பிடுவதானாலேயே.

மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தார்கள் என்பதற்கு தவறான அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு போலி ஷைகுகள் தங்கள் முரீதுகளைக் காலடியில் விழச் செய்வதற்கும்,ஸஜ்தா செய்ய வைப்பதற்கும் இந்த வசனத்தில் எந்தச் சான்றுமே கிடையாது.

ஸஜ்தா என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் கொள்ள வேண்டும் என்பது இப்போது தெளிவாகி விட்டது. ஒரு வாதத்துக்காக மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தது நாம் தொழுகையில் ஸஜ்தா செய்வது போன்றதே என்பதை எற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு சாதகமாக இதில் எந்தச் சான்றும் இல்லை என்பதை உணர வேண்டும். அவர்கள் செய்யும் அர்த்தம் சரி என்று வைத்துக் கொண்டாலும் அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

மலக்குகளும், மனிதர்களும் வெவ்வேறானவர்கள். மனிதர்களுக்கு இருப்பது போன்ற சட்டதிட்டங்கள் மலக்குகளுக்குக் கிடையாது.மலக்குகள் செயததை எல்லாம் மனிதர்களும் செய்ய முடியாது. இது முதலாவது வித்தியாசம். ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளை யிட்டதனாலேயே மலக்குகள் ஸஜ்தாச் செய்தனர். சுயமாக அவர்கள் செய்யவில்லை. ஆனால் அல்லாஹ், ஷைகுகளுக்கும், பெரியார்களுக்கும் ஸஜ்தாச் செய்யுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை.மாறாக அவனது திருத்தூதர் மூலமாக இதற்கு இறைவன் தடையும் விதிக்கின்றான்.

“நான் ‘ஹியாரா’ எனும் பகுதிக்குச் சென்றேன். அங்குள்ள மக்கள் தங்கள் தலைவர்களுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன்”. நபி(ஸல்) அவர்கள்தாம் ஸஜ்தா செய்யப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் என்று (எனக்குள்) சொல்லிக் கொண்டேன். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஸஜ்தாச் செய்ய உங்களுக்கு மிகவும் தகுதி உண்டு என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் அடக்கஸ்தலத்தின் அருகே சென்றால் நீ அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று கேட்டார்கள். நான் ‘மாட்டேன்’ என்றேன். (அதே போல் உயிருடன் இருக்கும் போதும்) செய்யாதே! ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்; என்று நபி(ஸல்) கூறினார்கள்”. கைஸ் இப்னு ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபுதாவுத், தாரிமீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இதே கருத்து முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிப்பதாக இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வின் தூதருக்கு கூட ஸஜ்தா செய்ய அனுமதியில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

ஆதம்(அலை) அவர்கள் மலக்குகளுக்கு கற்றுத்தரும் ஆசானாக ஆனதால் அவர்கள் ஸஜ்தாச் செய்தனர். எனவே இந்த அடிப்படையில் ஞானத்தை கற்றுத்தரும் ஷைகுகளுக்கு ஸஜ்தா செய்யலாம் என்ற இந்த ஷைகுகளில் வாதத்திற்கு இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளதை உணரலாம்.

நபி(ஸல்) அவர்கள் தாம் அஞ்ஞானத்தில் இருந்த மக்களுக்கு சரியான ஞானத்தைப் போதித்தவர்கள். அவர்களை விட சிறப்பாக உலகில் எவருமே போதிக்க அனுமதி கேட்ட நபித்தோழருக்கு அனுமதி மறுக்கின்றார்கள்.இந்த ஷைகுமார்கள் நபி(ஸல்) அவர்களை விடவும் தங்களை உயர்ந்தவர்களாக கருதுகின்றார்கள் என்பதைத்தான் இவர்களின் போக்கு காட்டுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கைஸர், கிஸ்ரா,அலெக்ஸான்ரிய மன்னர் ஆகியோரிடம் தூதர்களை அனுப்பினார்கள். என்னை நஜ்ஜாஷி மன்னரிடம் அனுப்பினார்கள். நான் நஜ்ஜாஷி மன்னரிடம் வந்தபோது சிறிய வாசல் வழியாக குனிந்தவர்களாக மக்கள் உள்ளே செல்வதைக் கண்டேன். (அரசரைச் சந்திக்க செல்லும்) அந்த வாசல் குனிந்து செல்லும் அளவுக்கு உயரம் குறைந்ததாகவே அமைக்கப்பட்டிருந்தது.

“நான் உள்ளே நுழையும் போது முதுகுபக்கம் திரும்பிக் குனிந்தவனாக உள்ளே சென்று நிமிர்ந்தேன். அபீஸீனிய மக்கள் இதைக் கண்டு திடுக்குற்றனர். என்னைக் கொல்ல அவர்கள் நாடினார்கள். நாங்கள் நுழைந்தது போலவே நீரும் ஏன் நுழையவில்லை? என்று என்னிடம் கேட்டனர்” நாங்கள் எங்கள் நபிக்கே இவ்வாறு (மரியாதை) செய்ய மாட்டோம். இவ்வாறு செய்வது (கூடுமென்றால்) நபி(ஸல்) அவர்களுக்கே தகுமாகும் என்று நான் கூறினேன்” என்று அம்ரு இப்னு உமய்யா அள்ளமீர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தப்ரானியின் அவ்ஸத் நூலில் நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது

அரசரை நோக்கிச் செல்லும் வாசல் உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருந்தால் அதில் குனிந்து தான் செல்லவேண்டும். அரசருக்காக் குனிந்ததாக ஆகிவிடுமோ என்று அம்ரு அவர்கள் முதுகைக்காட்டிக் குனிந்து உள்ளே சென்று நிமிர்ந்தார் என்றால் நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தவர் எவ்வாறு சுயமரியாதை மிக்கவர்களாக உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதை விளங்கலாம்.

தனி மனிதனுக்காக குனிவதும் கூட கூடாது என்றால் ஒரு மனிதரின் காலில் விழுந்து ஸஜ்தா செய்வது எப்படி அனுமதிக்கப்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கே இவ்வாறு குனிந்து மரியாதை செய்யமாட்டோம் என்ற அம்ரு(ரலி) அவர்களின் கூற்றும் சிந்திக்கத்தக்கது.

ஆக ஆதம்(அலை) அவர்களுக்கு மலக்குகள் செய்த ஸஜ்தாவுக்கு நாம் சாதாரணமாக நினைக்கும் அர்த்தம் அல்ல. அதுதான் அர்த்தம் என்று வைத்து கொண்டாலும் மனிதர்களின் கால்களில் விழவோ அவர்களுக்காக குணிந்து மரியாதை செய்யவோ நமக்கு அனுமதி இல்லை என்பதையாவது சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும். இந்த வசனத்தை கொண்டு மக்களை ஏமாற்றி அடிமைப் படுத்த நினைக்கும் முரீது வியாபாரிகளிடம் ஜாக்கிரிதையாக நாம் இருக்க வேண்டும்.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்



திக்ர் என்ற பெயரால்…..
இமாம் பிர் முஹம்மது,( JAQH )மர்கஸ் ஏர்வாடி


திக்ர் என்ற பெயரால் அரங்கேற்றப்படும் அனாச்சாரங்கள். ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மா பரிசுத்தப்பட வேண்டும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் தீமை, பாவங்களின் கரைகள் கழுவப்பட்டு அதிலிருந்து பாதுகாப்பும் பெறவேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றது. மிகக் கெட்டவனாக இருந்தபோதிலும் எப்போதவது அவன் உள்ளம் இப்படி சிந்திப்பதுண்டு. இறை நினைவு ஒன்று மட்டுமே இத்தீய நிலைகளிலிருந்து காப்பாற்றி… தன்னை மகிழ்வுடனும், அமைதியுடனும் வாழச்செய்யும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஆனால் இறை நினைவு வரவேண்டும் என்று சொல்லி தம்மைத்தாமே வருந்தித் கொள்வதும் இயல்புக்கு மாற்றமாக செயல்படுவதும் நாம் காண்கிறோம். துறவரம் தானே வகுத்துக்கொண்டு அதை தாமே மீறுபவர்களை பற்றி ”குர்ஆன்” குறிப்பிடும்போது அவர்களாகவே தங்களை கஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறது. இவை இறை நினைவா? உண்மையில் இறை நினைவு என்றால் என்ன, என்பதை இரத்தின சுருக்கமாக இங்கு நாம் காண்போம்.

இறைவனை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் திருப்தி அடையவில்லையா? (13:28) என்று அல்லாஹ் கேட்கிறான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்.

அதிகமதிகம் இறைவனை நினைவு கூறுங்கள் திக்ர் செய்யுங்கள்!(62:10)

இறைவனை மறந்துவிட்ட மக்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள் இறைவன் அவருடைய ஆன்மாக்களையே அவர்களை மறக்கடிக்க வைத்துவிட்டான்.(59:19)

என்னுடைய நினைவை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.(20:42) மேலும் அல்லாஹ் கூறுகிறான்.

ஈமான் கொண்டவர்களே! பொருட் செல்வமும், குழந்தை செல்வமும், அல்லாஹ்வை திக்ர் செய்வதை விட்டும் உங்களை அலட்சியப்படுத்திவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.(63:09)

திக்ரைப்பற்றி ஓரு சில ஹதீஸ்களைப் காண்போம். முஃபர்ரித்துன் முன்னேறிச் சென்றுவிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது, யாரஸுலல்லாஹ்! முஃபர்ரித்துன் யார்? என ஸஹாபிகள் கேட்டனர் ”அல்லாஹுதலாவின் திக்ருக்காகத் தம்மைத் தாமே அர்ப்பணித்துக் கொண்டவர்கள், திக்ரு அவர்களின் சுமையைக் குறைத்துவிடும். எனவே, கியாமத் நாளன்று அவர்கள் சுமை குறைந்தவர்களாக வருவார்கள். என நபி (ஸல்} அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்.(திர்மீதி)

”என் அடியான் என்னை நினைத்து, அவன் உதடுகள் என் நினைவில் அசைந்து கொண்டிருக்கும் போது, நான் அவனுடன் இருக்கிறேன்” என்று அல்லாஹுதலா கூறுவதாக நபி (ஸல்) சொன்னார்கள்.(இப்னுமாஜா)

”எவர் அல்லாஹ்வைய் திக்ரு செய்து, பின்பு அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் பூமியில் விழும்வரை கண்ணீர் சிந்து வாரோ அவரை கியாமத் நாளன்று அல்லாஹ் வேதனை செய்ய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஹாகிம்) இவைப்போன்ற ஏராளமான குர்ஆன் வசனங்கள், ஹதிஸ்கள் பல இருக்கின்றன.

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் சொல்லித் தந்த முறைப்படி திக்ர் அமைய வேண்டும். அதல்லாமல், நமது நாவுகளில் பொருளற்ற ”ஹா,ஹு” ”ஹீ,ஹு யா மன் ஹு” ”ஹக்து ஹக்” ”அஹ்,அஹ்” இருட்டு அவ்லியா என்ற பெயரால் இருட்டில் உட்காந்திருந்து ’4444: சலவாத்து என்று இதையெல்லாம் திக்ர் என்று கூறுகின்றனர். இது அல்லாஹ்யும் அவனுடைய தூதரும் காட்டித்தராதவையாகும். இன்று திக்ர் என்ற பெயரால் அரங்கேற்றப்படும் அனாச்சாரம் (பித்அத்) நம் சமுகத்தில் மலிந்து கிடக்கின்றன, இதையெல்லாம் ஓதுக்கி தள்ளிவிட்டு அல்லாஹ் மற்றம் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில், அச்சத்தோடும், அமைதியாகவும், உரக்க சப்தமில்லாமலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நல்வழியில் நம்மை சேர்த்தருள அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

வியாழன், 8 நவம்பர், 2012



தொழுகையை விட்டவன்   
ஆக்கம்: மௌலவி. முஹம்மது ஜலீல் மதனி
அழைப்பாளர், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம், அல் ஜூபைல்.

 
புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

தொழுகையை விட்ட என் சகோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நண்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய். உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் ரப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விஷயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!.

அல்லது உன்னைப் பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ! நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ!

அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து விட்டானோ! உனது மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ!

 நன்றாகத் தெரிந்து கொள் சகோதரனே! நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா?! அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும்!. நீ பிறக்கும் போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல்ப் பிறந்தாயே! நீ போகும் போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா!? முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்த வாழ முடிகின்றது.

இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப்படுவாயே! அவ்வேளை எந்த முகத்தோடு அவனைச் சந்திப்பாய்?, உன்னைப் படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா? என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்?. நீ என்னைப் படைக்க வில்லையென்று சொல்வாயா?, நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா?, நீ என்னைக் காக்கவில்லையென்று சொல்வாயா?.

நீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் எப்போதென்று நீ அறிவாயா?. இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன்? இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்து விட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா?. இல்லை, கொஞ்சம் தாமதப் படுத்தவாவது முடியுமா? முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்த, வாழ்ந்த இந்த உலகை விட்டுச் செல்லும் போது உனக்கு வழித்துணையாக வருவது எது? துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னைக் காப்பாற்றுவது எது? உனது பணமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை. ஓரேயொன்றைத் தவிர அதுதான் நீ செய்த நல்ல அமல்கள். நீ புரிந்த தொழுகை நோன்பு இன்ன பிற வணக்கங்கள். அதைத் தான் நீ உலகத்தில் சேமிக்க வில்லையே! நீ உண்டாய், உழைத்தாய் உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னைப் படைத்தவனை நினைக்க வில்லையே!. அவனுக்காக உன்சிரம் பணிய வில்லையே, அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்ல வில்லையே!. அவனைப் பயந்து உன் விழிகள் அழ வில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்ய வில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாத போது உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா?. உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்காகப் பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா?. அது ஒரு போதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...

போதும் நண்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது. யவ்வனம் விருத்தாப்பியத்தில் முடிகின்றது. அன்பு பிரிவில் முடிகின்றது. வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.

தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளமென்பது உனக்குத் தெரியாதா?. அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறியாயோ!

நபியவர்கள் கூறினார்கள்...

'இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்து விட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்,) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)

தொழுகையை மறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும் வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா? நபியவர்கள்' எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகையை நிறைவேற்றுவதுதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ அவன் காபிராகி விட்டான்' என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ் விடத்தில் நீ முஸ்லிம்தானா?. தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்???

 'நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்க மாட்டார்கள்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்.)

இமாம் தஹபி அவர்கள் கூறுகின்றார்கள் ...
   
'தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துபவன் பெரும்பாவம் செய்தவனாவான். யார் தொழுகையை விட்ட நிலையில் இறக்கின்றானோ அவன் துரதிஷ்ட்ட வாதியும் பெரும் பாவியுமாவான்.' என்கின்றார்கள்.

என் தோழனே! தொழுகையில் அலட்சியமாயிருப்பதும் நேரம் கிடைக்கும் போது தொழுவதும் முனாபிக் - நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா?
அல்லாஹ் சொல்கின்றான்...

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُواْ إِلَى الصَّلاَةِ قَامُواْ كُسَالَى يُرَآؤُونَ النَّاسَ وَلاَ يَذْكُرُونَ اللّهَ إِلاَّ قَلِيلاً

 நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்ய எத்தனிக்கின்றனர் . ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும் போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் செற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை.
(நிஸாஃ 142ம் வசனம்)

நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸுப்ஹுத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்து விட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நாக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழவில்லையா?

பார் நண்பா! பார்! அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள், ஆனால் நீயோ நிரந்தரமாகப் பள்ளிவாயலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே!

கொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா! உனக்குப் பகுத்தறிவுண்டல்லவா?. அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது. ஆனால் பார்! உன்னை விடக் கேவலமான ஐயறிவுள்ள மிருகங்கள் பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே! அவனை மறந்து நொடிப்பொழுது கூட அவை இருந்த தில்லையே!

அல்லாஹ் கூறுகின்றான் ..

'நிச்சயமாக வானங்கள் பூமியிலுள்ள அனைத்துமே.. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மலை, மரம், உயிரினங்கள், இன்னும் அனேக மனிதர்களும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டிருக்கின்றன என்பதை நீ பார்க்க வில்லையா? (இவ்வாறு செய்யாத) அதிகம் பேருக்கு அவனது வேதனையும் நிச்சயமாகி விட்டது, (அல்ஹஜ் : 18)

ஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம் இருக்க முடிகின்றது.?, ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே! உனக்கு அந்த நன்றி எங்கே?. உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே! அவனுக்கு மாறு செய்கின்றாயே! உனக்கு மனச் சாட்சியே இல்லையா? உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா?.

மனிதா! ஐயறிவுள்ள மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னை விட அல்லாஹ்விடம் மதிப்புப் பெறுவதும் அவற்றை விடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு வெட்கமில்லையா? உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா?

என்னருமைச் சோதரனே! நிச்சயம் மரணம் வரும் நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும் கைசேதத்துக்குமுரியவன் வேறு யார்?. கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா?

நபியவர்கள் கூறியதைக் கொஞ்சம் கேள்!!

'ஜும்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும், (ஆதாரம் முஸ்லிம்)

தொழுகையைப் பாழ்படுத்திய என் சினேகிதா! இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்தக் கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ?. கேள் நண்பா! நபியவர்கள் சொல்லியிருப்பதைக் கேள்.

'யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக் அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகி விடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்.' (ஆதாரம் முஸ்லிம்)

அல்குர்ஆன் சொல்வதைக் கேள்!...

وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى ، قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا، قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى  ، وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى

'யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குறுடனாக எழுப்புவோம் . அப்போதவன் என் ரப்பே! நான் உலகில் கண்பார்வையுள்ளவனாகத்தானே இருந்தேன்? என்னை ஏன் குறுடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான் .அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்த போது அவற்றை மறந்து (குருடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது (காலத்தை) விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124)

ஆகவே நண்பா! நீ நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப்படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது அதை இது வரைக்கும் மண்ணாக்கி விட்டாய்!. இது வரை தூங்கியது போதும். இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதிச் சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு, அதையும் வீணாக்கி விடாதே!

போதும் நண்பா! போதும்!. இத்தோடு நிறுத்திக் கொள். நான் என்னைப் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச்சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப் கோரிடு. அழு, அழு நன்றாக அழு உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு, இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற விடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதி மொழி எடுத்துக் கொள் .

(அல்லாஹ்வை) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வர வில்லையா?

தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! .. நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கிருபையுள்ளவனுமாவான்.
(ஸூரா அல் ஹதீத் 53)

ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டுவிட்டால் அவனது விஷயத்தில் என்னென்ன இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா?. இதோ கேள்!.

 தொழுகையை விட்டவன் காபிராக ஆகி விடுகின்றான்.

 அவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது

 அவனுக்காக எவரும் துஆக் கேட்கக் கூடாது.

அவனைக் குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மைய வாடியில் அடக்கம் செய்யவும் கூடாது.

அவனுடைய மகளுக்கு வலியாக இருந்து திருமணம் முடிந்து வைக்கவும் கூடாது.

அவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால் அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை.

அவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை.

அவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக் கூடாது.

அவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி முடித்திருந்தால் அந்தத் திருமணத்தை ரத்துச் செய்ய வேண்டும்.

அவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கூட அவனது குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.

பார்த்தாயா சினேகிதனே? நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது என்பதைப் பார்த்தாயா?. ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா?

இன்றே நீ தவ்பாச் செய்வாயல்லவா? ஆம். அதைத் தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து விடு. அவன் உன்னைக் கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார்? அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை . கடவுளை நம்பினார் கைவிடப்படார்.

அதே போல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்து விடு. இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகி விடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடு. இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்,

(அல்லாஹ்வின் அருள் எம் அனைவர் மீதும் உண்டாகட்டும்.)

செவ்வாய், 6 நவம்பர், 2012



இறந்தவருக்காக!


ஜனாஸாத் தொழுகை யார் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. யார் அடக்கம் செய்யும் வரை கலந்துக் கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு, என்று நபி (ஸல்) கூறினார்கள். அப்போது கீராத் என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)
என்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி 1325

இவ்வளவு அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் இந்த ஜனாஸாத் தொழுகை
விஷயத்தில் நம்மில் பலரும் அலட்சியமாக இருப்பதைக் காணமுடிகின்றது. ஜனாஸாவைத் தூக்கிக் கொண்டு வரும்போது உடன் வருபவர்கள் ஜனாஸாத் தொழுகைக்காக தொழுமிடத்தில் இறக்கி வைத்துவிட்டு, பலரும் ஓரமாக ஒதுங்கி நின்றுக் கொள்வதைப் பரவலாகப் பல ஊர்களிலும் காண்கிறோம். இறந்து போய் இங்கு கொண்டு வரப்பட்டுள்ள மைய்யித் அவர் தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருப்பினும் அவருக்காகப் பிரார்த்திப்பதும், ஜனாஸாத்
தொழுகை என்னும் பிரார்த்தனையில் பங்கு கொள்வதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையல்லவா?

நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுவிக்கும் போது பின்வருமாறு ஓதுபவர்களாக இருந்தனர்.



அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா வமய்யிதினா வஷாஹிதினா

வகாயிபினா வஸகிரின, வகபீரினா வதகரினா வவுன்ஸானா

அல்லாஹும்ம மன் அஹ்யைதஹஹு மின்னா ஃபஅஹிஹி

அலல் இஸ்லாம் வமன் தவஃப்ஃபைதவு

மின்னா ஃபதவஃபவு அலல் ஈமான் அல்லாஹும்ம

லாதஹரிம்னா அஜ்ரவு வலாதுளில்லினா பஅதஹு


பொருள்:

யா அல்லாஹ்! எங்களில் உயிரோடிருப்பவர்களையும் மரணத்து விட்டவர்களையும் இங்கே வந்திருப்பவர்களையும், வராமலிப்பவர்களையும், எங்களில் சிறுவர்களையும்,பெரியவர்களையும்எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்துவிடுவாயாக! இறைவா!

எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில்மரணித்துவிடுபவர்களை ஈமானுடனே மரணிக்க செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! இவருக்கு பிறகு எங்களை வழிதவறச் செய்து விடாதே! 
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி




அல்லாஹும்மபி(F)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(F)ஹி வபு(F) அன்ஹு
வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B)ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B)ல் அப்(B)யள மினத் தனஸி வ அப்(B)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்ஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B)ல் கப்(B)ரி


இதன் பொருள் :

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!

மேற்கண்ட துவாக்கள் அல்லாமல் வேறுபல துவாக்களை ஜனாஸாத் தொழுகையில் பிரார்த்திக்க நபி(ஸல்) அவர்கள் கற்றுதந்துள்ளார்கள்.

இனியும் ஒதுங்கி நிற்காமல் ஒரு முஸ்லிம் மரணித்தவுடன்
நூறுபேர் அளவுக்கு எட்டக் கூடிய முஸ்லிம்கள் தொழுகை நடத்தி அவருக்காகப் பரிந்துரை செய்தால், அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை. என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதி

இனியும் ஒதுங்கி நிற்காமல் இறந்தவருக்காக ஜனாஸா தொழுகையில்
கலந்துகொண்டு நாமும் ஒரு நாள் இப்படி ஜனாஸாவாக இங்கே கொண்டு வரப்படுவோம் என்பதை உணர்ந்து கொள்வோமாக!

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்