திங்கள், 27 ஆகஸ்ட், 2012
இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணம்!
வல்லோனின் திருநாமம் போற்றி..
மதங்கள் என்பது இறைநம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர்.
இஸ்லாம் தவிர்ந்த இதர அனைத்து மதங்களும் பல தெய்வ வழிபாட்டையும், ஏக இறைவனுக்கு இணைகற்பிக்கும் மன்னிக்க முடியா குற்றத்தை தூண்டுவனவாகவே உள்ளன. நாம் இப்படிக் கூறும் போது சிலருக்குக் கோபம் வரலாம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தாலும் நம்மை சத்தியத்தை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கோபத்தை சிறிது நேரம் ஓரங்கட்டிவிட்டு நாம் கூறும் கருத்துக்களை சற்று சிந்தித்துப் பாருங்கள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
எல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்பகள் பற்றி சரியாகக் குறிப்பிடாமைதான் சில மதங்களில் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் தன்னகத்தே ஏற்படுத்தியுள்ளன. போதாமைக்கு நாளுக்கு நாள் இன்னும் பல கடவுளர்கள் புதிது புதிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தோன்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு தாங்கள் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு வயிறு வளர்ப்பதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம். அதேநேரம் தாம் கடவுளின் அவதாரம் என்று கூறி ஒரு அப்பாவி முஸ்லிமைக் கூட ஏமாற்ற முடிவதில்லை. ஏனென்றால் உடனே கடவுள் எப்படி மனிதரானார்? கடவுள் மனிதனாக மாறினால் கடவுளின் இடத்தில் தற்போது யார் இருக்கிறார்? போன்ற கேள்வியைக் கேட்டு போலித் தனத்தை தோலுறித்துக் காட்டிவிடுவர்.
இஸ்லாத்தின் இறுதி வேத நூலான அல்-குர்ஆன் ஏனைய மதங்கள் விட்டுள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்து இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணத்தை கச்சிதமாகக் கூறி பல தெய்வ வணக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றது.
இந்த அத்தியாயத்தின் சிறப்பம்சம் என்ன வென்றால், எல்லோருக்கும் புறியும் விதத்தில் அதன் வசனங்கள் உள்ளன. வெரும் நான்கே வசனங்கள். மற்றும் மிக எளிய நடையிலமைந்த சின்னச் சின்ன வசனங்கள் நம்மை வியக்க வைக்கின்றன!.
அது மட்டுமல்ல இப்படி இரத்தினச் சுருக்கமாக ஒருக்காலும் மனிதனால் இறைவனுக்குறிய இலக்கணத்தைக் கூற முடியாது என்பது அல்-குர்ஆன் இறைவாக்கு என்பதற்கான ஒரு சான்றாகும். எனவேதான் அல்-குர்ஆன் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நிச்சயமாக சிந்திப்போருக்கு நிறைய சான்றுகளை பரிசாக வைத்திருக்கின்றது அல்-குர்ஆன்.
(நபியே!) நீர் கூறுவீராக: அவன் – “அல்லாஹ்” ஒருவனே! அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன). அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.
இந்த வசனங்களை ஒரு முறை ஆழ்ந்து கவணிப்போமானால் இந்த தன்மைகளுக்கு உட்பட்டவன் தான் உண்மையான கடவுளாக, வணங்குவதற்குத் தகுதியுள்ளவனாக இருக்க முடியும் என்பதனையும், உண்மையான கடவுளாகிய அல்லாஹ் தவிர்ந்த வணங்கப்படும் அனைத்தும் மதனிதக் கற்பனையில் உதித்த போலிக் கடவுள்கள் என்பதனையும் இலகுவில் புறிந்து கொள்ள முடியும்.இதோ சத்தியத்தைத் தேடி ஒரு சலனமற்ற பயணம் தொடங்குகிறது.
மேற் கூறப்பட்டுள்ள அத்தியாயத்திலுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக அனுகுவோம்.
01. “(நபியே!) நீர் கூறுவீராக, அவன் – ‘அல்லாஹ்’ ஒருவனே!
“ஒரு விடயத்தை நாம் நன்கு தெறிந்து கொள்ள வேண்டும். அதாவது எல்லா மத்திலும் பல கடவுளர்கள் இருப்பது போல் ‘அல்லாஹ்’ என்பது முஸ்லிம்களின் கடவுள் எனக் கருதுவது தவறாகும். யாரை முஸ்லிம்களாகிய நாம் ‘அல்லாஹ்’ என்று வணங்கி வழிபடுகின்றோம் என்றால், இந்த உலகத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயனான அந்த ஏக சத்தனைத்தான். தவிர ‘அல்லாஹ்’ முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள தனிக் கடவுள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
இந்த வசனமானது கடவுள் என்பவன் நிச்சயமாக ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதனை அடித்துக் கூறுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை யூகித்துக் கொள்ளலாம். வேற்று மதப் புராணங்களில் கடவுளர்களுக்கிடையில் இடம் பெற்ற சமர்கள், சச்சரவுகள், இழிவான செயல்கள் என்பன எண்ணிலடங்காதவை. ஒரு சாதாரன சிறிய நாட்டைக் கூட ஆழுவதற்கு ஒரே ஒரு ஜனாதிபதி மட்டும் தான் இருக்க வேண்டும் என உலகமே ஏற்றுக் கொண்டுள்ள போது அகிலம் அனைத்தையும் அடக்கியாழ ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளன் இருக்கவே முடியாது என்பதனைத்தான் இந்த வசனம் விளக்குகிறது.
02. “அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)”.
இறைவனானவன் அனைத்துத் தேவைகளை விட்டும் அப்பாற் பட்டவன். நம்மைப் போல தேவைகளுடையவன் இறைவனாகவே இருக்க முடியாது. மனிதனுக்கு எது எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அவையனைத்தும் குறைகளே. எனவே இதே குறைகளை இறைவனுக்கும் கற்பிப்பது நாம் இறைவனை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல நமது தேவைகளை முறையிடுவதற்காக இறைவனிடம் கையேந்துகின்றோம். அவனே தேவையுள்ளவன் எனும் போது அவனிடம் நாம் எப்படி உதவி கோற முடியும்! பிச்சைக் காரனிடம் பிச்சை கேற்பது போன்றாகி விடும். இந்த இழுக்கை நீக்கும் விதமாகத்தான் அல்லாஹ் தனது திருமறையில் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது மூலம் தனக்கு மனிதர்கள் ஏற்படுத்திய பலவீத்தை அப்புறப்படுத்துகிறான்.
இறைவனானவன் எள்ளும் பிசகாமல் தன் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருப்பவன். அவனுக்கு நம்மைப்போன்றே ஆசா பாசங்கள் இருந்தால் அவற்றை நிறைவு செய்யும் நேரத்தில் உலகத்தாரின் கோறிக்கைகளை யாரிடம் முறையிடுவது?
எல்லாம் வல்ல நாயனை எவ்விதக் குறைகளும் இன்றி வணங்கி வழிபடுவோமாக!
03. “அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை”.
இறைவனானவன் தனித்தவன் எனும் பொழுது அவனுக்கு பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ இருக்க முடியாது. மனிதன் நினைப்பது போன்று இறைவனுக்கும் குடும்பம், கோத்திரம் இருக்குமானால் இறைவன் சமூகம் என்று ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சமூகத்தை யாரும் பார்த்ததும் கிடையாது. அதற்கு சாத்தியமும் இல்லை. அல்லது அப்படி ஆரம்பத்தில் இருந்தார்கள் என்று கூறினால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தோடு மறைத்தது யார்? அல்லது குறிப்பிட்டதோர் காலத்துடன் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால், இறைவனுக்கு இறப்பு தகுமா? என்ற கேள்வி நம் சிந்தனையைக் குடைகின்றது. இன்று சிலைகளாக சித்தரிக்கப்பட்டுள்ள கடவுளர்கள் அனைத்தும் கற்பனையில் தோன்றியவைகள் என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் அவர்களே தெறிந்து கொள்வார்கள்.
கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று இயேசு இறைமகன் கிடையாது. ஏனன்றால் இறைவன் வாரிசு எனும் தேவையை விட்டும் அப்பாற்பட்டவன். போதாதற்கு பைபிளில் கூட இயேசு தன்னைப்பற்றிய வாக்கு மூலத்தில் தான் இறைவனின் மகன் என்று ஒரு இடத்தில் கூட கூறவில்லை. அப்படி தனது சீடர்களில் ஒருவர் கூட நம்பவுமில்லை. மாறாக பவுலின் கற்பனையில் உதித்த காவியமாகத் தான் இந்த நம்பிக்கையைக் கூற முடியும். அதற்கு பைபிளே சான்றாகவும் உள்ளது.
அடுத்தது கடவுள் மனிதனாக வரவேண்டிய அவசியம் தான் என்ன? முதலாவது கடவுள் மனிதவடிவில் வந்துதான் இவ்வுலக மாந்தருக்கு வழிகாட்ட வேண்டும் என்பது கிடையாது. கடவுள் கடவுளாக இருந்து கொண்டே தனது பனிகளைச் செய்வதுதான் கடவுளுக்குறிய பண்பாகும். உதாரணமாக, ஒரு நாட்டு ஜனாதிபதி தனது சட்டங்களை அமுல்படுத்த சாதார ண தொழிலாளியாக மாறித்தான் தொழிலாளிகள் சட்டங்களைக் கூற வேண்டும் என நினைப்பது தவறாகும்! அவ்வாறு யாராவது நினைத்தால் பைத்தியகாரத்தனம் என்போன். கடவுள் விடயத்தில் மட்டும் ஏன் இந்த நீதமான பார்வை இல்லாமற் போனது?! கவணத்திற் கொள்க!
அடுத்தது கடவுள் மனிதனாக இவ்வுலகிற்கு வந்தால் கடவுளுக்கு இருக்கும் எத்தனையோ பிரத்தியேகத் தன்மைகளை இழக்க வேண்டியேற்படும். இது போன்ற இன்னோரன்ன தத்துவங்களை உள்ளடக்கியதாக இந்த வசம் இடம் பெற்றுள்ளது.
04. “மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை”.
இந்த வசனமானது ஒன்றே இறைவனது தனித்தன்மையை விளக்கப் போதுமானது. இறைவனுக் ஒப்பாக எதுவுமில்லை என்று அல்-குர்ஆன் மட்டுமல்ல எல்லா மத நூல்களும் கூறிக் கொண்டிருக்கும் போதே எத்தனையோ கடவுளர்களை உண்டாக்கியவன் மனிதன். இறைவனுக்கு யாராவது அல்லது எதாவதொன்று ஒப்பாக இருக்குமானால் தன்னிகரற்ற இறைவன் என்று சொல்ல முடியாது போய்விடும். இவ்வையகத்தில் இறைவனைக் கண்டவன் எவருமில்லை. இப்படியிருக்க யாரும் காணாத, காணமுடியாதவனுக்கு யாரை ஒப்பாக்கி சிலைகளை வடித்தார்கள்? புரியாத புதிர்!!
எனவே சுருக்கமாகக் கூறினால், இந்த நான்கு பண்புகளும் இறைவனின் இலக்கணங்களாகும். உண்மையான இறைவனைத் தேடுபவர்களுக்கு ஒரு(touch stone) உராய் கல்லாக எடுத்துக் கொள்ளலாம்.படைத்தவனை விட்டுவிட்டு நாமேன் படைப்பினங்களை வணங்க வேண்டும்.
இதோ நீங்கள் தேடும் சத்தியப் பாதையில் ஓர் நிகரற்ற தோழனாக இந்த நான்கு வசனங்களும் இருக்கட்டும்..
மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!
ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது …” (அல்-குர்ஆன் 2:185)
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)
ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)
அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்-குர்ஆன் 12:1-2)
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:2)
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)
தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். (அல்-குர்ஆன் 18:1-3)
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 43:43-44)
முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: -
“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)
“இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக, இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொண்டிருக்கும்போது யார் உயிர் நீத்தார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
யார் ஒருவர் தன்னுடைய சகோதரனை இந்த உலக ஆசைகளின் துன்பங்களில் இருந்து நீக்குகிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களில் இருந்து நீக்குவான். யார் ஒருவர் இந்த உலகத்தில் ஒரு முஸ்லிமின் குற்றத்தை மறைக்கிறாறோ, அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய குற்றத்தை மறைப்பான்; தன்னுடைய சகோதரனுக்கு பின்னால் இருந்து உதவி செய்யக் கூடியவனுக்கு, அல்லாஹ் அவரின் பின்னால் இருந்து உதவி செய்வான். அறிவைப் பெறுவதற்காக யார் நடந்து செல்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் அவருடைய பாதையை இலகுவாக்குகிறான்; சொர்க்கத்திற்கான வழியையும் காட்டுகிறான்; யாரெல்லாம் அல்லாஹ்வின் இல்லத்தில் ஒன்று கூடி குர்ஆனை ஓதி, பிறருக்கும் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளும் மலக்குகளும் சுழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் உள்ளவர்களிடம் அவர்களைப்பற்றி சிலாகித்துக் கூறுவான். (திர்மிதி)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
இரவில் ஒரு மணி நேரம் மார்க்க அறிவைப் பெறுவதற்காக வெளியே செல்வது முழு இரவிலும் நின்று வணங்கி செலவழிப்பதை விட சிறந்தது. (திர்மிதி)
இறை இல்லத்தில் இரண்டு கூட்டங்களின் பக்கம் (நபி {ஸல்}) சென்றார்கள்; இரண்டு வகுப்பினரும் சிறந்தவர்கள் என்றாலும், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரைவிட சிறந்தவர். ஒரு வகுப்பினர் அல்லாஹ்விடம் துவா கேட்டுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் நாடினால் அவர்கள் கேட்டதை அவர்களுக்கு வழங்குவான் அல்லது தாமதப்படுத்துவான்; மார்க்கத்தைப் புரிந்து கொள்வதற்காக மார்க்க அறிவைப் பெற முயற்சித்து அதை அறியாதவர்களுக்கும் கற்பித்துக் கொண்டும் அந்த இரண்டாம் வகுப்பினரே சிறந்தவர். நிச்சயமாக நான் ஒரு கற்றுக் கொடுப்பவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்” என்று சொல்லி அவர்களிடையே அமர்ந்து விட்டார்கள்.
இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெறுவது ஒவ்வொரு பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் ஒரு மனதாக குரல் கொடுக்கின்றனர்.
ஒரு சில மக்கள் தான், மார்க்க அறிவைப் பெருவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக, வெட்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை சொல்லி தங்களுடைய செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.
மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் முயற்சிக்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
நன்றி : www.islamhelpline.com
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012
பெண் கல்வியின் முக்கியத்துவம்
சுமைய்யா
[ஜாஹிலியாக் காலம் என்று அறியப்பட்ட அறியாமைக் காலத்தில் கூட பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக திகழ்ந்துள்ளார்கள். அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகளும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியுமாகிய அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இஸ்லாமிய ஷரிஅத்தில் அதிகம் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவின் வெளிப்பாடு என்றால் அது மிகையாகாது.
அதே போன்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகள் ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவுக்கூர்மை நம்மை வியக்க வைக்கிறது. தனது காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதியை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றொரு மனைவியான ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தோல்பதனிடும் கைத்தொழில் அறிந்தவர்களாக இருந்தார்கள்.
இதிலிருந்து பெண்கள் வீட்டில் முடங்கி கிடக்கக்கூடியவர்கள் அல்லர் மாறாக, அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யலாம், வியாபாரம் செய்யலாம் ஆனால் இவைகள் அனைத்தும் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.]
''அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே'' (அல்குர்ஆன் 39:9)
கல்வி கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது. கல்வி மனிதனின் அறிவுக்கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. கல்வியென்பது மார்க்கம் மற்றும் உலகம் பற்றிய அறிவைப் பெறுவதாகும்.
நாம் கற்கக்கூடிய கல்வி இவ்வுலகிற்கு மட்டுமின்றி மறுமைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
இஸ்லாத்தில் பெண்களின் நிலை:
இஸ்லாத்திற்கு முன்பு பண்டைய அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிப்பொருளாகவும், சொத்துரிமைப் பெற தகுதியற்றவர்களாகவும், பெண்களும் அவர்களின் சொத்துக்களாகவும் இருந்த நிலையில், இஸ்லாம் இக்கொடிய நிலையை தரைமட்டமாக்கி பெண்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வாரி வழங்கியது.
இன்று கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யாரென்றுப் பார்த்தால் பெரும்பாலும் முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதில் மிக மிக பின் தங்கியிருக்கிறார்கள், இல்லை பின் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. காரணம் கல்வியைப் பற்றிய சரியான அடிப்படையறிவு இல்லாததினால்தான்.
இஸ்லாம் ஒரு போதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாமென்று தடை போடவில்லை. அந்நிய ஆண்களும், அந்நிய பெண்களும் இரண்டறக் கலந்து விடக்கூடாது என்பதுதான் இஸ்லாமிய சட்டமே தவிர கல்வி கற்கக் கூடாது என்றோ, தொழில் செய்யக்கூடாது என்றோ இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறது
பெண்களின் மகத்துவம்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்,
அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்,
அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்
பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்
ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள் அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்
மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)
ஆணும், பெண்ணும் ஒன்றையொன்று சார்ந்திருப்பது இறைவன் வகுத்த இயற்கையின் நியதி இத்தகைய பெண்கள் சிறுமை படுத்தப் படக்கூடாது என்பதற்காகவே இறைவன் ஆணிலிருந்து பெண்ணைப் படைத்ததாக மேற்கூறிய வசனத்தின் மூலம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் பெண்ணினத்தை சிறுமைபடுத்துவதும், அறியாமையில் ஆழ்த்துவதும் ஆணினத்தைப் பாதிக்குமென எச்சரிக்கை செய்கிறான்.
ஓடி, ஆடித் திரிந்து தனது அன்றாடத் தேவைகளுக்கென்று சம்பாதிக்கும் ஆண்கள் அலுப்புடன் இல்லம் திரும்புகையில் இன்முகம் காட்டி இனிய சொல் பேசி, பட்ட கஷ்டம் மறந்து சந்தோஷத்தை அள்ளித்தருபவள் பெண் என வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 30:21).
ஆணின் அனைத்துக் குறைகளையும் மூடி மறைத்து ஆதரவோடு ஆடையாக இருப்பவளும் பெண்ணே என பெண்ணின் மகத்துவத்தை விவரிக்கின்றான்.
பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம்
பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறாள். குறிப்பாக, தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே பெண்ணாகிய தாய்தான். ஒரு குழந்தை முதலில் அறிமுகம் ஆவது தன் தாயாரிடம்தான் அந்தக் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பாலூட்டுவதுடன் இறைபக்தியையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே ஊட்டுகிறாள்.
எனவே ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் முதல் பள்ளிக்கூடமாகவும் பாலகப்பருவ ஆசிரியையாகவும் திகழ்பவள் தாயாகிய பெண்தான். அந்தத் தாய்க்கு நல்ல அறிவும், கேள்வி ஞானமும் இருந்தால்தான் அவளிடம் பாடம் கற்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்பதைத்தான் "தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை" என்கிறார்கள். ஆகவே, அவளுக்கு கல்வியறிவும் கேள்வி ஞானமும் வேண்டுமென்றால் கல்வி மிக அவசியமாக இருக்கிறது.
அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகின்றான்
நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிவாகவும் நடப்பார்கள். அவர்கள் இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடமை மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 4:34)
இல்லத்தரசி எனப் புகழப்படக்கூடியவள் இறைநம்பிக்கை உடையவளாகவும், நல்லொழுக்கம் உடையவளாகவும், தனது கற்பை பாதுகாக்கக் கூடியவளாகவும், தனது கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றக் கூடியவளாகவும், தனது குடும்பத்தின் சொத்து, சுகங்களைப் பேணக்கூயடிவளாகவும் இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற பெண்மணி கற்புநெறி எது? தன்னை எவ்விதம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் தன் கணவனின் புகழை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்ற தெளிவான அறிவைப் பெற கல்வி அறிவு வேண்டுமல்லவா?
ஜாஹிலியாக் காலம் என்று அறியப்பட்ட அறியாமைக் காலத்தில் கூட பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக திகழ்ந்துள்ளார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகளும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியுமாகிய அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இஸ்லாமிய ஷரிஅத்தில் அதிகம் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவின் வெளிப்பாடு என்றால் அது மிகையாகாது.
அதே போன்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகள் ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவுக்கூர்மை நம்மை வியக்க வைக்கிறது. தனது காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதியை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றொரு மனைவியான ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தோல்பதனிடும் கைத்தொழில் அறிந்தவர்களாக இருந்தார்கள்.
இதிலிருந்து பெண்கள் வீட்டில் முடங்கி கிடக்கக்கூடியவர்கள் அல்லர் மாறாக, அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யலாம், வியாபாரம் செய்யலாம் ஆனால் இவைகள் அனைத்தும் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
குர்ஆன் கூறும் கல்வி ஞானம்
நிச்சயமாக தன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும், உண்மையைப் பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், கற்பை பேணும் ஆண்களும், பெண்களும், இறை தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தி வைத்திருக்கிறான் (அல்குர்ஆன் 33:35).
ஆக, ஈமான், இஸ்லாம், இஹ்ஸான் பற்றிய அறிவு இருந்தால்தான் மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் இடம்பெற முடியும் என்பதை எவருமே மறுக்க முடியாது. இதனைப் பற்றிய ஞானத்தைப் ஆண்களும், பெண்களும் பெற்று செயல்படுத்தினால்தான் மறுமையில் அல்லாஹ்வுடைய அளப்பெரும் கருணையும், மன்னிப்பும் கிடைக்கும். அதற்கான கல்வியறிவை பெண்களும் நிச்சயம் பெற வேண்டும்.
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பெண்கள் நல்ல தெளிந்த அறிவுப் பெற்று திகழ வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒரு நாளை பெண்களுக்கென ஒதுக்கினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)
பெண் கல்வியினால் ஏற்படும் பயன்கள்
1. ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் அவள் தன்னை முதலில் திருத்திக் கொண்டு, மார்க்கம் அனுமதிக்காத அனாச்சாரங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறாள்.
2. தன் கணவனோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவள் அறிந்து கொள்வதின் மூலம் குடும்பத்தில் ஏற்படும் அதிகபட்ச பிரச்சனைகள் தீர்ந்து சந்தோசமான குடும்ப சூழ்நிலைநிலை உருவாகி ஒரு ஆண் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடைமைகளை சிறப்பாக செய்ய பெண் உதவியாக இருப்பாள்.
3. தன் உறவினர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து உறவினர்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை உருவாக்குவதன் மூலம் சமூகத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
4. தன்னுடைய குழந்தைகளை ஸாலிஹான முறையில் வளர்த்து அதன் மூலம் எதிர்கால சமுதாயம் உருவாகுவதில் அதிக பங்கு வகிக்கின்றார்கள்.
5. பெண்கள் தங்களது நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். பெண்களுக்கே உரிய அச்சம், மடம், ஞானம் ஆகிய சிறப்புக்கள் கல்வி அறிவால் மேலும் பலப்படும்.
பெண்களுக்கு கல்வியறிவு நிச்சயம் தேவை அது முழு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக இயம்பிக் கொண்டு இருக்கிறது. இச்செய்தியை அறியாதவர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
இன்று முஸ்லிம் பெண்கள் எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்றால் தலாக், வரதட்சணை கொடுமை, அடக்குமுறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ சுமைகளை சுமந்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளிலிருந்து விடுபட்டு நம் நியாயமான கோரிக்கைகளைப் பெற கல்வி மிக மிக அவசியமானதாக இருக்கிறது.
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலகிலும் பயன்தரக்சுடிய கல்வியைத் தந்து நம் அனைவரையும் ஈடேற்றம் பெறச் செய்வானாக!
(சுவனப்பாதை நடத்திய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் ஆறாவது ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை)
திங்கள், 20 ஆகஸ்ட், 2012
நூஹ் (அலை) அவர்கள்
நூஹ்(அலை) காலத்து மக்கள் நீண்ட வயதையுடையவர்களாவார்கள். ஒவ்வொரு சமுதாயத்து மக்களுக்கும் ஒரு சிறப்பை அல்லாஹ் வழங்கினான். நூஹ்(அலை) காலத்து மக்களுக்கு அல்லாஹ் நீண்ட நெடிய ஆயுளை வழங்கினான் நூற்றுக்கணக்கான வயதையுடையவர்களாக வாழ்ந்தார்கள். உலகின் சுகமான வாழ்க்கை அவர்களை மதிமயங்கச் செய்து ஏகஇறைவனை மறுக்கச் செய்தது, அவனின் தூதுத்துவத்தைப் பொய்ப்பிக்கத் தூண்டியது மறுமையயையும் மறுக்கச் செய்தது.
இதனால் தன்னுடன் வாழ்ந்த இறைத் தூதரை வெறுக்கச் செய்து அவர்களை விரட்டி அடிக்கும் நிலைக்கு தள்ளச் செய்ததால் ஒரு நாள் இறைத் தூதர் நூஹ்(அலை) அவர்களே இறைவனிடம் இவர்கள் அனைவரையும் ஒன்று விடாமல் அழித்துவிடு இறைவா ! என்று பிரார்த்திக்கும் அளவுக்கு அவர்களின் மீதான நெருக்குதல் எல்லை மீறிச் சென்று விட்டது. இதனால் அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றும்படி இறைவனிடம் பிரார்த்திக்கலானார்கள்.
''நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!'' என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார். 54:10.
இதன் பின்னர் அந்த சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் இறங்கத் தொடங்கியது. அவர்களின் அழிவுக்காக வெள்ளப்பிரளயம் ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்
வெள்ளப்பிரளயத்தை அனுப்பி அநியாயக்கார மக்களை அழிக்கப்போவதை நூஹ்(அலை) அவர்க அல்லாஹ் அறிவித்து விடுகிறான்,
நூஹ்(அலை) அவர்க அல்லாஹ்விடமிருந்து பேரழிவு வர இருக்கிறது என அம்மக்களிடம் இறுதி எச்சரிக்கையும் செய்து விடுகிறார்கள்.
நபியையும், நம்பிக்கை கொண்ட மக்களையும் வெள்ளப்பிரளயத்திலிருந்து காப்பதற்காக மிகப் பெரும் கப்பலைக் கட்டுவதற்கு நபிக்கு அல்லாஹ் கட்டளை இடுகிறான்.
அல்லாஹ்வின் கட்டளைக்கொப்ப மிகப் பெரியகப்பலை நூஹ்(அலை) அவர்கள் கட்டத்தொடங்குகிறார்கள். அவ்வழியே போக வரக்கூடிய மக்கள் அதைக் கண்டு பரிகாசிக்கத் தொடங்கினர்,
அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். ''நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்'' என்று அவர் கூறினார்..11:38
இச்சமுதாயம் அழிக்கப்பட்டு வேறொரு சமுதாயம் உருவாக்கப்படுவதற்காக அனைத்து உயிரினங்களிலிருந்தும் ஒவ்வொரு ஜோடிகளையும், நம்பிக்கையாளர்களையும், நபியின் குடும்பத்தினரையும் கப்பலில் ஏற்றிக்கொள்ளும் படி இறைவன் நபிக்கு உத்தவிடுகிறான்.
ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, . . .
நபியின் மகன் மட்டும் மறுத்து ஓரமாக நிற்பதைக கண்ட நபி தனது மகனையும் ஏறிக்கொள்ளச் சொல்கின்றார்கள். ஆனாலும் மகன் மறுத்துவிடுகிறான்.
இதற்கிடையே இறைவன் வானத்திற்கு மழைப்பொழியவும், பூமிக்கு நீரூற்றுகளை பொஙகச்செய்யவும் உத்தரவிடுகிறான்.
வானத்திலிருந்து மழையும், நிலத்துக்கடியிலிருந்து நீரும் கொப்பளிக்கத் தொடங்குகிறது கப்பல் மிதந்து புறப்பட ஆயத்தமாகும் பொழுது அதிலிருந்து கிளம்பிய அலை ஒன்று நபியின் மகனை அவரது கண்முன்னே தூக்கி வீசுகிறது.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி ''அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!'' என்று நூஹ் கூறினார்.
''ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்'' என்று அவன் கூறினான். ''அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். 11:42,43,
மகன் அடித்துச் செல்வதைக் கண்ட நபி இறைவனிடம் கீழ்காணுமாறுக் கூறுகிறார்கள்.
நூஹ், தம் இறைவனை அழைத்தார். ''என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்'' என்றார். 11:45
இதை செவியுற்ற அல்லாஹ் நபியின் மீது கோபம் கொண்டு கீழ்காணுமாறுக் கூறுகிறான்.
''நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்'' என்று அவன் கூறினான். 11:46.
இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவ விஷயம் யாதெனில் நபியின் மகன் இறை நிராகரிப்பில் இருந்ததுடன் அல்லாமல் அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒழுக்கக் கேடான செயல்களில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தான் அதனால் நபியின் பெற்ற மகனாக இருந்தும் அவனை அவரது குடும்பததைச் சார்ந்தவனல்ல என்று அல்லாஹ் கூறி விடுகிறான்.
சீர்திருத்தம் செய்ய வந்த நபியின் மகனே இப்படி என்றால் வெளியில் உள்ளவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் ?
பூமியிலிருந்து எண்ணற்ற ஊற்றுக்கண்கள் உருவாகி அதன்மூலம் வெள்ளம் பீறிட்டுப் கட்டுக்கடங்காமல் பாய்ந்தோடியது பூமியின் நீருற்றுக்கள் அல்லாஹ்வின் கட்டளையாகிய ''பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! எனும் உத்தரவு வரும் வரை பொங்கிப் பீறிட்டு நகரம் முழுவதையும் கடல் போல் ஆக்கிக் விட்டது.
ஒரு வழியாக நிராகரிப்போர் அனைவரும் மூழ்கடிக்கப்பட்டப் பின் மழைக்கும், நீரூற்றுக்கும் சீற்றத்தை நிருத்திக் கொள்ளும்படி இறைவன் உத்தரவிட்டான்.
''பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!'' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. ''அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்'' எனவும் கூறப்பட்டது.11:42,43,44.
மேற் கூறப்பட்ட வெள்ளப்பிரளயம் என்பது இன்று நேற்று நடந்ததல்ல மாறாக நூஹ் (அலை) காலம் என்பது முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கடுத்த சமுதாயமாகும், அது மட்டுமல்ல அல்லாஹ்வுடைய இறைச்செய்தியைப் பெற்ற இரண்டாம் சமுதாயமுமாகும்.
மேற் கூறப்பட்ட வெள்ளப் பிரளயம் எப்பொழுதோ நடந்த ஓர் சம்பவம் என்பதால் மக்களால் மறக்கப்படும், அல்லது பிற்கால வழித் தோன்றல்களால் மறுக்கப்படும் அதனால் அந்த கப்பலை அழியாமல் அப்படியே விட்டு வைத்து அந்நிகழ்வுக்கு அல்லாஹ் அதை சாட்சியாக்கினான் அந்நிகழ்வுக்கு திருக்குர்ஆனின் கூற்றும், அந்த கப்பலுமே அழிக்க முடியாத சாட்சிகளாகும்.
அக்கப்பல் இன்று துருக்கி குழுவினரால் ரஷ்யாவின் ஜூதி மலைத்தொடரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
29:13. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம்.
29:14. அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி.
29:15. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா?
அதனால் அந்த வெள்ளப் பிரளயத்தை இயற்கையின் சீற்றம் என சாதாரணமாக நினைத்திட முடியாது. மேலும் அந்த வெள்ளப் பிரளயம் திடீரெனத் தோன்றியவை அல்ல ! திடீரெனத் தோன்றி தாக்கினால் அதை இயற்கையின் சீற்றம் எனக் கூறிடலாம். ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கீழ்காணுமாறு அறிவித்து விட்டுச் செய்கிறான்.
தொடக்கத்தில் கொட்டும் மழையைக்கொண்டு வானங்களின் வாயில்களைத்திறந்து விட்டோம், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், என்று 55:11 வது வசனத்திலும் இறுதியில் ''பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்'' என்று 11:44 வது வசனத்திலும் இறைவன் கூறுவதால். அல்லாஹ்வின் வேதத்தையும் நபியையும் பொய்யாக்கியதுடன் பகிரங்கமாக ஒழுக்கங்கெட்ட செயல்களில் ஈடுபட்டு தொடர்ந்து அட்டூழியங்கள் நிகழ்த்தி வந்தமையால் அநியாயக்கார மக்களை அழிக்க அல்லாஹ்வே அந்தப்பேரழிவை ( வெள்ளப் பிரளயத்தை ) ஏற்படுத்தினான் என்பதை திருக்குர்ஆன் கூறுவதிலிருந்து குர்ஆனிய சமுதாயமாகிய நாம் அதை ஏற்று விளங்கிக் கொண்டுத் திருந்தி அல்லாஹ்வை பயந்து வாழ கடமைப் பட்டுள்ளோம்..
நீண்ட நெடிய 950 வருடங்களுக்கு மேல் பூமியில் அரசோட்சிய பெரும் தொகையிலான மக்கள் அடங்கிய பெரும் பிரதேசத்தை அழித்தொழித்து தரை மட்டமாக்கிய அவ்வெள்ளப் பிரளயப் பேரழிவு இயற்கையின் சீற்றமல்ல! மாறாக இறைவனின் கோபம் தான் என விளங்கிக் கொள்ளலாம்
நன்றி: அழைக்கிறோம்சுனாமி.ப்ளாக்ஸ்பாட்.காம்
ஆதம் (அலை) வரலாறு
வரலாறு முன்னுரை:
நபி ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை களிமண்ணிலிருந்துப் படைத்தான். அவனின் பிரதிநிதியாக பூலோகத்திற்கு அனுப்பியும் வைத்தான். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு தன்னால் படைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை அவனே கற்றுக்கொடுத்தான். பின் அப்பெயர்களை மலக்குமார்களுக்கு விவரிக்குமாறு பணித்தான். பிறகு தன்னால் படைக்கப்பெற்ற மலக்குமார்கள் போன்றோர்களை நபி ஆதம் (அலை) அவர்களுக்கு சிறம் பணிய அல்லாஹ் கட்டளையிட்டான். இப்லீஸ் தவிர மற்ற ஏனையவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க சிறம் பணிந்தார்கள். இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்ட ஆணவத்தால் களிமண்ணால் படைக்கப்பட்ட மனித வர்க்கத்திற்கு சிறம்பணிய மறுத்ததுடன் கியாமத் நாள் வரை அல்லாஹ்விடத்தில் அவகாசமும் வாங்கி வந்தான். இனி என் வேலை ஆதமுடைய மக்களை நேரான வழியில் செல்வதை தடுத்து அவர்களுக்கு முன்னும், பின்னும், இடமும், வலமும் சென்று அவர்களை நரகத்தின் பக்கம் இழுத்து வருவேன் என கூறினான்.
நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்தே அவர்களது துணைவியர், (ஹவ்வா (அலை)) அவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்தான். இதையே திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு பயந்துக் கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்: பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் ( வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்துக் கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (4:1)
இப்லீஸ் கூறியவாறே ஆதம் (அலை) அவர்களை வழிக்கெடுக்க நினைத்து, இறைவன் ஆதம் (அலை) அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தும், இப்லீஸ், நீங்கள் இந்த கனியை உண்டால் நீங்கள் மலக்குகளாக ஆகிவிடுவீர்கள் அல்லது இந்த சுவனபகுதியிலேயே தங்கிவிடுவீர்கள் என இனியப் பேச்சில் மயங்கி இறைவன் தடுத்திருந்த மரத்தின் கனிகளை தின்றதினால் அவர்களுடைய வெட்கஸ்தலங்கள் வெளிப்பட்டன, அவர்கள் அங்கிருக்கும் இலைகளை எடுத்து மறைத்த வன்னம் இருந்தனர், அப்போது இறைவன் என் கட்டளையை மீறிச் சென்றதால் உங்களை இங்கிருந்து பூமிக்கு அனுப்புகிறேன் அங்கு சில காலம் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்து பிறகு என்னால எழுப்பப்படுவீர்கள் என கூறி அனுப்பினான்.
இவ்வுலகில் மனித வாழ்வின் துவக்கம் - வானவர்களின் உரையாடல்:
(நபியே!) இன்னும் உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதினிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள். அதற்கு இறைவன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். (2:30)
இன்னும் (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாள்ர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான் (2:31)
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன் விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள். (2:32)
"ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக" என்று (இறைவன்) சொன்னான் அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா! என்று (இறைவன்) கூறினான். (2:33)
மலக்குகள் - மனிதன் - வேறுபாடு:
இறைவன் கட்டளையை சிறிதும் மாற்றமில்லாமல் அப்படியே செய்யக்கூடியவர்க்ள் மலக்குமார்கள், ஆனால் மனிதன் போதிய அறிவு பெற்றமையால் தவறிழைக்கக் கூடியவன். எனவே மலக்குகள் அவ்வாறு கேட்டார்கள். மனிதன் தவறிழைத்தாலும் அத்தவறுக்காக செய்யும் பாவமீட்சியை இறைவன் விரும்புகிறான் என்பதை கீழ்காணும் நபிமொழி தெளிவாக உணர்த்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவனின் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் பாவம் செய்யவில்லையாயின், அல்லாஹ் உங்களை போக்கிவிட்டு, பாவம் செய்யும் வேறொரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான். அவர்கள் அல்லாஹுதஆலாவிடம் பிழைப் பொறுப்பு இறைஞ்சுவார்கள். அவர்களுக்கு அவன் மன்னிப்பளிப்பான். (நூல் - முஸ்லீம் : அபூஹுரைரா (ரலி)).
இறைவன் ஆதமுக்கு கற்றுக்கொடுத்தான்:
இன்னும், (இறைவன்) எல்லாப் பொருட்களின் பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, கற்றுக்கொடுத்தவற்றை விவரிக்க சொன்னான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹுதஆலா, ஆதம் (அலை) அவர்களைப் படைத்த பொழுது அவர்களுக்குக் கூறினான்: (ஆதமே!) நீர் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் மலக்குகளின் கூட்டத்தினருக்கு ஸலாம் கூறுவிராக! (அதற்குப் பதிலாக) அவர்கள் உமக்கு வழங்கும் காணிக்கையை செவிமடுப்பீராக! நிச்சயமாக அது உமக்கும், உம் சந்ததியினருக்கும் உரிய காணிக்கையாகும். அதன்படி ஆதம் (அலை), (அம்மலக்குகளின் கூட்டத்தினரிடம் சென்று) "அஸ்ஸலாமு அலைக்கும்", உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டவதாக என்று கூறினார்கள். அதற்கு அம்மலக்குகள், "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி" உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அவனின் கருணையும் உண்டாவதாக என்று கூறினார்கள், "வரஹ்மத்துல்லாஹி" என்ற சொல்லை ஸலாமின் மறுமொழியில் அவர்கள் அதிக்ப்படுத்தினார்கள். (நூல் - புகாரி, முஸ்லீம் : அபூஹுரைரா (ரலி))
ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுதந்த பாவமீட்சிக்கான பிரார்த்தனை:
அதற்கு அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்". என்று கூறினார்கள். (7:23)
ஆதம் (அலை) அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் பூமிக்கு இறக்கப்படுதல்:
(அதற்கு) இறைவன், "இதிலிருந்து நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள் உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" (7:24)
"அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள் அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள் (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்". (7:25)
ஒரே வழித்தோன்றல்:
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துக் கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவர்களிலிருந்தே அவர்களுடைய மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான் ஆகவே அல்லாஹுக்கே பயந்துக் கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான். (4:1)
களிமண்ணால் படைத்தான்:
இறைவன் தனது திருமறையில் முதல் மனித படைப்பினமான ஆதம் (அலை) அவர்களை படைத்ததுப் பற்றி தெளிவாக கூறுகிறான்.
ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (15:26)
(அதற்கு) முன்னர் ஜின்னை (ஜிங்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (15:28)
மலக்குகள் நூர் எனும் ஒளியால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்பின் ஜுவாலையால் படைக்கப்பட்டார்கள். ஆதம் (அலை) உங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பொருளால் (மண்ணால்) படைக்கப்பட்டார்கள். (முஸ்லீம்: ஆயிஷா (ரலி))
அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தான். எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் வெள்ளையாகவும், சிலர் சிவப்பாகவும், சிலர் கறுப்பாகவும், சிலர் இரண்டும் கலந்துமுள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும், சிலர் மென்மையான குணமுடையோராகவும், சிலர் கடின சித்தமுடையோராகவும், சிலர் நடுநிலையிலும் உள்ளனர். (அஹ்மத் : ஆபூமூஸா (ரலி))
ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நாள்:
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்தது, ஜும்ஆ நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைந்தார்கள், அன்றுதான் அவர்கள் செர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். (முஸ்லிம் : அபூஹுரைரா (ரலி))
ஆதமுடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்களே, அப்பாவத்தை உணர்ந்து இறைவனிடத்தில் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்தால் இறைவன் தன் பாவங்களை மன்னித்து நல்வாழ்வினைத் தருவான். நாம் அனைவரும் ஷைத்தானுடைய வலையில் விழுந்துவிடாமல் இறைவன் கட்டளைப்படி, எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழியில் சென்று ஈருலக நல்வாழ்வினைப் பெற்று, நல்லடியானாக மர்ணிப்பதற்கு கருணை உள்ள ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
நன்றி: இனியமார்க்கம்.ப்ளாக்ஸ்பார்ட்.காம்
வியாழன், 16 ஆகஸ்ட், 2012
நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்கதுல் ஃபித்ர்)
யார் யாரெல்லாம் நோன்புப் பெருநாள் தர்மம் கொடுக்கவேண்டும்?
பொருளாதாரக் கடமையான 'ஜகாத்' எவ்வாறு பொருள் வளத்தைத் தூய்மைப்படுத்தி இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதாரத் தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றதோ, அதேபான்று இந்த 'ஜகாத்துல் ஃபித்ரு'ம் ஏழைகளின் சந்தோஷத்தில் பெரும் பங்காற்றுகிறது. பொருள்கள் மீதான கட்டாயக் கடமையான 'ஜகாத்' குறிப்பிட்ட செல்வ வளமுள்ள முஸ்லிம்களில் யார் அதற்குரிய 'நிஸாப்' எனும் எல்லை அளவையை எட்டுகின்றனரோ அவர்கள் மீது மட்டுமே கடமையாகின்றது. ஆனால் இந்த ஜகாத்துல் ஃபித்ர் அவ்வாறல்ல! நோன்பாளிகள், நோன்பு நோற்க இயலாமல் இருந்தவர்கள், வசதியில் குறைந்தவர்கள் யாராக இருந்தாலும், தன் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் சார்பாகவும் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றாகிவிடுகின்றது. எனவே தன் குடும்பத்தின் பெருநாள் செலவு போக இதைக் கொடுக்கச் சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும். பெரும் செல்வந்தர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது இதில் கிடையாது.
-:பெருநாள் தர்மம் கொடுப்பதின் நோக்கம்:-
ரமலானைத் தொடர்ந்து வரும் ஈகைத் திருநாள் எனும் இஸ்லாமிய பண்டிகையின்போது எந்தவொரு முஸ்லிமும் அப்பண்டிகை நாளின் மகிழ்ச்சியிலிருந்து தூரமாகி நிற்கக்கூடாது எனும் பரந்த நோக்கமும் இந்த தர்மத்தின் மூலம் வியாபித்து நிற்கின்றது! இதனால் நோன்பு நோற்றவர்களில் பணக்காரர்கள் ஏழைகளுடனும், ஏழைகள் அவர்களைவிட வறிய ஏழைகளுடனும் நேரடியாக தொடர்புகொண்டு பெருநாளின் சந்தோஷத்தை பகிர்ந்துக்கொள்ள முடிகிறது. இதனால் அவர்களிடையே மகிழ்ச்சியின் தாத்பர்ய அம்சம் சகோதரத்துவ வாஞ்சையுடன் மிளிர்கின்றது.
இந்த நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கிய நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள், ஏழை மக்கள் பெருநாள் பொழுதை மகிழ்வுடன் கழிப்பதற்காகவும், நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி ஏதாவது வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதற்கு பரிகாரமாகவும் இந்த தர்மம் அமைவதாக கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி,"இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்"என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:பைஹகீ,தாரகுத்னீ
ஸதக்கதுல் ஃபித்ர் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்கள்:அபூதாவூத்,இப்னுமாஜா,தாரகுத்னீ,பைஹகீ
பெருநாள் தர்மம்(ஸதக்கதுல் ஃபித்ர்) எப்போது வழங்க வேண்டும்...?
இந்த தர்மமானது புனித ரமலானின் முடிவில், ஈகைத் திருநாள் தொழுகைக்கு முன்பே வழங்கப்படுவதாகும். ஒவ்வொரு முஸ்லிமான ஆண்-பெண்கள், அன்று பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் சார்பாகவும் வழங்கப்படவேண்டும்.
ஃபித்ர் ஜகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படும் முன்பே வழங்கிவிடவேண்டுமென நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ
நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக பெருநாள் தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி); நூல்:புகாரி
எனவே பெருநாள் தர்மத்தினைப் பெறக்கூடிய மக்கள் பெருநாளைக்கான உணவுகளை தயார்படுத்திக்கொள்ள வசதியாக ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாக கொடுத்துவிடவேண்டும்.
-:பெருநாள் தர்மத்தின் அளவு:-
முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர்.
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம்,அஹ்மத்,நஸயீ,அபூதாவுத்,திர்மிதீ,இப்னுமாஜா
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு 'ஸாவு' ஃபித்ர் தர்மம் வழங்குவோம். அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது.
அறிவிப்பாளர்: அபூஸயீத்(ரலி); நூல்:புகாரி
குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் ஒரு "ஸாவு" அளவுக்கு கொடுக்கவேண்டும் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.
(குறிப்பு:- இரு கை கொள்ளளவின் நான்கு மடங்கே ஒரு "ஸாவு" என்பதாகும். அதாவது இருகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்கு முறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும். கிராம் கணக்கில் சொல்வதாக இருந்தால் சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.)
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். உதாரணமாக, நமது பராமரிப்பில் 3 நபர்கள் இருந்தால் தன்னையும் சேர்த்து தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் (4 x 2.5 கிலோ) 10 கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா தர்மத்தின் அளவாகும்.
எதைக் கொடுக்கலாம்......?
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் பெருநாளின் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள்தான் திரட்டி விநியோகிக்கப்பட்டது. அவர்கள் காலத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாக காசுகள் கொடுக்கப்பட்டதில்லை. உணவுப் பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன. நபித்தோழர்களின் அன்றைய உணவாக இருந்த பேரீத்தம்பழம், தீட்டப்படாத கோதுமை (தோல் நீக்கப்படாதது) ஆகியவற்றைத் தான் கொடுத்து வந்தனர். ஆனால் நபி(ஸல்) காலத்தில் கோதுமை, பேரீத்தம்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைதான் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்குப் பயன்படும் விதத்தில் எந்த ஒரு உணவுப் பொருளையும் கொடுக்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு "ஸாவு', பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு 'ஸாவு', உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ்)யில் ஒரு 'ஸாவு' என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி(ரலி); நூல்: புகாரி 1506
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு "ஸாவு' உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி); நூல்: புகாரி 1510
ஆக, மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலிருந்தும் பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவதுதான் முக்கியம் என்றும் அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதைதான் வழங்கினார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். எனவே நமது உணவாக எது இருக்கின்றதோ அதை பெருநாள் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவாக இருப்பதை நபியவர்கள் காரணம் காட்டியுள்ளதால் அந்தந்தப் பகுதிகளில் எது மக்களுக்கு உணவாக அமைந்துள்ளதோ அவற்றைக் கொடுக்கலாம். அப்போது தான் இந்த நோக்கம் நிறைவேறும். நமது உணவுப் பழக்கத்தில் முதன்மையானதாக அரிசி இருப்பதால் அதை ஒரு 'ஸாவு' அளவு கொடுக்கவேண்டும். இதர உணவுப் பொருள்களுக்கும் இது பொருந்தும்.
ஆனால், வெறும் அரிசியைப் பெற்றுக் கொள்பவர்களின் தேவைப் பூர்த்தியாகிவிட்டது என்று நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில் அரிசி சோறு சாப்பிட வேண்டுமானால் குழம்பு போன்றவை தேவைப்படுகிறது. அப்போதுதான் உணவு என்ற அந்தத் தேவைப் பூர்த்தியாகும். அன்றைய மக்கள் பேரீத்தம் பழத்தை மட்டுமே உணவாக உட்கொண்டார்கள். ஆனால் வெறும் அரிசியை மட்டும் உணவாகச் சாப்பிட முடியாது. அதனால் அரிசியையும், உணவிற்கு தேவையான இதர பொருட்களையும் அதனுடன் சேர்த்து கொடுக்கலாம். அதே சமயம்,
அரிசிக்குப் பதிலாக அதற்கான பணத்தைக் கொடுக்கலாமா? என்றால்,
தாராளமாக கொடுக்கலாம். அன்றைக்குப் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததால் உபரியாக உள்ள பேரீத்தம் பழத்தைக் கொடுத்துவிட்டு கோதுமையை வாங்கிக்கொள்ள முடிந்தது. அதுபோல் உபரியாக கிடைக்கும் எந்த பொருளையும் கொடுத்து தேவையான மற்ற எந்த பொருட்களையும் வாங்கிக்கொள்ள முடியும். இன்றைக்கு நம்மிடம் உள்ள அரிசியைக் கொடுத்து விட்டு தேவையானதை எந்தக் கடையிலும் வாங்க முடியாது.
'அன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்' என்பது நபிமொழி. எல்லோரும் அரிசியை தர்மமாக வழங்கும்போது அன்றைய தினம் ஏழைகள் வீட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடில்லாமலிருக்கும். அன்றைக்கு துணைத் தேவையே அதிகரித்து நிற்கும் என்பதால் பணமாக கொடுப்பது ஹதீஸுக்கு மாற்றமானதல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம். எனவே தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்குரிய மொத்த பணமாக கொடுக்கலாம். பணமாகக் கொடுத்தால்தான், தன் குடும்பத்திற்கு தேவையான அளவுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக் கொள்ளவும் மக்களுக்கு வசதியாக இருக்கும். எனவே ஏழைகள் மகிழ்வோடு அந்த நாளைக் கொண்டாட அரிசியைவிடப் பணமே சிறந்ததாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, பணமாகக் கொடுத்தாலும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் என்பதால் ரூபாயாகக் கொடுப்பதைத் தடுக்க எந்த நியாயமும் இல்லை. அப்படி பணமாகக் கொடுக்கும்போது நாம் எதைப் பிரதான உணவாக உட்கொள்கிறோமோ அந்த அரிசியின் விலையைதான் அளவுகோலாகக் கொண்டு, மேலே சொன்ன அளவில் கொடுக்கவேண்டும். அல்லது அரிசியும் அதனுடன் சேர்த்து தேவையான மற்ற பொருட்களையும் கொடுக்கலாம்.
அப்படி கொடுக்கும்போது அன்றாடம் நாம் எந்த வகையான தரத்தில் உணவைப் பயன்படுத்துகிறோமோ, அந்த தரத்திலிருந்து குறைந்துவிடாமல் தரமானதாக கொடுக்கவேண்டும். சிலர், தான் மட்டும் உயர்தர அரிசியை பயன்படுத்திவிட்டு இதுபோன்ற ஸதகாவுக்காக விலை மலிவான, தரம் குறைந்த அரிசியை வாங்கி விநியோகிப்பார்கள். இது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டியதாகும். இஸ்லாம் (நாம் முந்திய பதிவில் பார்த்தபடி) இதுபோன்ற தர்மங்களை அங்கீகரிக்கவில்லை, சிறந்தவற்றையே கொடுக்கச் சொல்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
எனவே பரிவுடன் ஏழைகளுக்கு உதவுவது, குறைந்த பட்சம் அவர்களைப் பெருநாளன்று பிறரிடம் கையேந்திக் கேட்காதிருக்கச் செய்வது போன்ற உன்னத மனிதம் கலந்திருக்கும் இந்த உயரிய நோன்புப் பெருநாள் தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்து, உரிய நேரத்தில் அலட்சியமின்றி அனைவரும் இந்த பெருநாள் தர்மத்தை ஈந்து, நாம் நோற்ற நோன்பைத் தூய்மைப்படுத்திக் கொள்வோம்! அதன்மூலம் நாம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இந்த பண்டிகை நாளில், வறண்ட பாலையிலிருந்து ஏழை எளிய மக்களை வெளியேற்றி சோலைவன சுகந்தத்தை நம்முடன் பகிர்ந்திடச் செய்வோம்!இறைவனின் முழு திருப்பொருத்தத்தையும் நாம் அடைவோம், இன்ஷா அல்லாஹ்!
நன்றி: பயணிக்கும் பாதை.ப்ளாக்ஸ்பாட்.காம்
நோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்!
பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் ஈத் என அழைக்கப்படுவதுண்டு. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது. ஆண்டுதோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர்கள் உண்டு!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே! அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக் கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது. இது தவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது!
பெருநாட்களின் நோக்கம்!
யாவற்றையும் அறிந்த வல்ல இறைவன் மிக உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒன்று ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாள். மற்றொன்று ஈதுல் அல்ஹா எனும் தியாகத் திருநாள்.
பெருநாள் கொண்டாட்டம்!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் நன்மைகள் செய்யக்கூடிய நல்வாய்ப்பாகவே பெருநாட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இறைவனை அதிகமாக நினைவுகூர்ந்து திக்ர் செய்தல், அவனுக்கு நன்றி செலுத்தல், தான தருமங்கள் செய்தல், நல்வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளல் மூலம் இணக்கத்தையும் சகோதரத் துவத்தையும் வலிமையாக்கிக் கொள்ளல், பகையும் குரோதமும் களைந்து உற்றார் உறவினர்களை சந்தித்து உறவுகளை பலப்படுத்திக் கொள்ளல், நோயாளிகளை நலன் விசாரித்தல், அண்டை அயலாரோடு பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ளல், பகை கொண்ட உள்ளங்களை சேர்த்து வைத்தல், பெற்றவர்களை மனம் குளிரச்செய்தல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதுடன் அனுமதிக்கப்பட்ட வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு இன்புற்று மகிழுமாறு இஸ்லாம் எமக்கு கற்றுத் தருகின்றது.
இதற்கு மாற்றமாக பண்டிகை என்ற பெயரில் மது அருந்தி, போதையில் மிதந்து, சூதாட்டத்தில் புதைந்து, வீடுகளிலும் வீதிகளிலும் வன்முறையை ஏற்படுத்தி சண்டைசச்சரவுகளில் ஈடுபட்டு, துன்புற்று சீரழியும் நிலையை இஸ்லாம் தடுத்துள்ளது.
நோன்புப் பெருநாள்!
ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை பொறுத்தமட்டில் புனிதமிகு ரமளான் மாதத்தில் நோன்பு எனும் உயர்தரமான கடமையை நிறைவேற்றி களைப்புற்ற மனிதர்களை களிப்பூட்டி மகிழ்வித்து அவர்களின் உள்ளங்களில் உவகைப் பெரூற்றினை பீறிட்டுப் பாயச்செய்து தனது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆம்! தனது அடியார்கள் இழைத்த பாவக்கறைகளை புனித ரமளான் மாத நோன்பின் மூலம் அகற்றி சுத்தப்படுத்தி சலவை செய்து, நரகவாசிகள் என்ற கருப்புப் பட்டியலிலிருந்து அவர்தம் பெயர்களை நீக்கி, அளவிட முடியாதளவு அபரிமிதமான நன்மைகளை வழங்கி அவர்களின் மதிப்பை உயர்த்துகின்றான் ஏக இறைவன்! அத்தகையவனுக்கு நன்றி செலுத்தாமலும் உள்ளத்தால் எவ்வாறு களிப்படையாமலும் இருக்க முடியும்?!
இந்த இன்பக்களிப்பை வெளிப்படுத்தி கொண்டாடி மகிழவே ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாளை இறைவன் எமக்களிதுல்லான்.
பெருநாள் தொழுகை!
இஸ்லாமிய மார்க்க சட்டத்தில் – ஷரீஅத்தில் – ஹிஜ்ரி முதலாம் ஆண்டு பெருநாள் தொழுகை விதியாக்கப்பட்டது. இது சுன்னத் முஅக்கதா வகையை சேர்ந்ததாகும் என எல்லா இமாம்களும் ஏகோபித்து ஏற்றுக்கொள்வதாக இமாம் நவவி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நபி (ஸல்) அவர்களும் ஸஹாபக்களும் தொடர்ந்து இதனை தொழுது வந்திருக்கிறார்கள்.
“நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது அஞ்ஞான கால வழக்கத்தில் இருந்து வந்த இரண்டு தினங்களை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் இந்த இரண்டு தினங்களுக்கும் பகரமாக வேறு இரண்டு தினங்களை உங்களுக்கு கொண்டாடுவதற்குரிய தினங்களாக ஆக்கிவிட்டான். அவை ஈதுல் அள்ஹா தினமும் ஈதுல் பித்ர் தினமும் ஆகும் என்பதாக குறிப்பிட்டார்கள்”
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : அபூ தாவுத்
தொழுகைக்குரிய நேரம்!
பெருநாள் தொழுகைக்குரிய நேரம் சூரியன் உதித்து சுமார் 15 நிமிடங்களின் பின் தொடங்கி லுதார் தொழுகைக்குரிய நேரம் ஆரம்பிப்பதுடன் முடிவடைகிறது என இப்னு உசைமீன் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முஸல்லா – தொழுகைக்குரிய இடம்!
பெருநாள் தொழுகை எல்லோருக்கும் வசதியாக ஒரு திறந்த வெளியிலேயே நடத்தப்படுவது சிறந்ததாகும்.
“நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாட்களையும் திறந்த வெளியிலேயே நிறைவேற்றியிருக்கிறார்கள்” (புகாரி)
எனினும் மஸ்ஜிதில் அதனை நிறைவேற்றுவதில் எந்த தவறும் கிடையாது, ஆயினும் மிகச்சிறந்ததை விட்டுவிட்டு சிறந்ததை செய்வதாகவே அது நோக்கப்படும்.
தொழுகைக்குச் செல்லும் ஒழுங்கு!
பெருநாள் தொழுகைக்குச் செல்லும் போது குளித்து சுத்தமாகி சிறந்த ஆடை அணிந்து ஆண்கள் மட்டும் நறுமணம் பூசி செல்லுதல்.
ஈதுல் பித்ர் தினத்தில் காலை உணவை முடித்து விட்டு செல்லுதல்.
முஸல்லாவை அடையும் வரை தக்பீர் சொல்லிக்கொள்ளல்.
தொழுகைக்கு செல்லும்போது ஒரு பாதையையும் திரும்பி வரும் போது வேறு பாதையையும் பயன்படுத்துதல்.
பார்வையை தாழ்த்திக் கொள்ளல்.
ஆண், பெண் கலந்துறவாடும் வகையிலான அமைப்பை தவிர்த்துக் கொள்ளல்.
தக்பீர் – கொள்கை முழக்கம்!
நோன்புப் பெருநாளில் ஷவ்வால் தலைப் பிறை தென்பட்டது என உறுதி செய்யப்பட்டது முதல் இமாம் தொழுகையை ஆரம்பிக்கும் வரை தக்பீர் எனும் கொள்கை முழக்கம் முழங்குவதட்குரிய நேரமாகும்.
தக்பீர் சொல்லும் முறை!
தக்பீர் சொல்வதற்கு பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. எனினும் “அல்லாஹு அக்பர் (2 தடவை) லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து” என கூறிக் கொள்ளலாம்.
தொழும் முறை!
பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக்களை கொண்டது. முதல் ரக்அத்தில் முதலாவது தக்பீர் தவிர 7 தக்பீர்கள். இரண்டாவது ரக்அத்தில் முதல் தக்பீர் தவிர 5 தக்பீர்கள் சொல்லப்பட வேண்டும். தக்பீர்களுக்கு இடையில் சொல்லப்பட வேண்டியவை என நபிமொழிகளில் எதுவும் குறிப்பாக இல்லை.
தவிர்க்கப் பட வேண்டியவை!
அதிகமான சகோதரர்கள் பெருநாள் தினத்தன்று அடக்கஸ்தளங்களை தரிசிக்கின்றனர். இது உண்மையில் பித்அத் எனும் நூதன கிரியை ஆகும். பெருநாள் தினம் என்பது எமது கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விதியாக்கப் பட்டிருக்கும் போது எமது கவலைகளை புதுப்பித்துக் கொள்ளும் தினமாக இந்த தினத்தை மாற்றிக் கொள்ளவது இஸ்லாமிய சட்டத்துக்கு முரணான செயலாகும் என்பதனை நாம் கவனத்தில் கொண்டு உரிய முறையில் பெருநாளை கொண்டாடி ஈருலக பயன்களையும் அடைந்துகொள்ள முயற்சிப்போம். அதற்கு இறையருள் என்றும் துணை நிற்கட்டும்.
நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்:திர்மிதி, தாரகுத்னீ.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.
தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.
நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள்.அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.
இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.
நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.
நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர்இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.
நபி (ஸல்) ஏழு – ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்:அஹ்மத்.
இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா…’ என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் ‘ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..’ என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.
இரு பெருநாள் தொழுகைகளில் ‘காஃப் வல் குர்ஆனில் மஜீத்’ என்ற (50வது) அத்தியாயத்தையும் ‘இக்தரபதிஸ்ஸாஅத்’ என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.
நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் – உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.
உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.
புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள், “இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா…” என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், “அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும்” என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர்அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.
தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அந்தச் சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும்” என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.
நன்றி: ஐபிசி பிளாக்கர். நெட்
ரஹ்மத்துல்லாஹ். பிளாக்.காம்
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012
லைலத்துல் கத்ர் இரவின் மகத்துவம்
அப்துல் காதிர் O.M. பாகவி மண்ணடி, சென்னை
வல்லோன் அல்லாஹ் மனிதர்களை நேசிக்கின்றான். ஷைத்தான் செய்த தவறுக்காக அவனை விரட்டியடித்தான். ஆதம் (அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு எவ்வாறு மன்னிப்பு தேடுவது என்று சொல்லிக் கொடுத்தான்.
மனிதர்கள் பாவ மன்னிப்பு கோருவதற்கு பல சந்தர்ப்பங்களை அல்லாஹ் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றான். அதில் ஒரு மகத்தான சந்தர்ப்பந்தான் இந்த புனித இரவு.
லைலத்துல் கத்ரின் சிறப்பு
பி.ஜைனுல் ஆப்தீன்
லைலத்துல் கத்ரின் சிறப்பு
பாடம் : 1
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு
அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக, நாம் அதை (-குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் வானவர்களும் ரூஹும் (-ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை நீடிக்கும்! (97:1:5)
குர்ஆனில் ஒன்றைப் பற்றி மா அத்ராக்க (உமக்கு எது அறிவித்தது?) என்று கூறப்பட்டால் அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விட்டான் என்று பொருள்; வ மாயுத்ரீக்க (எது உமக்கு அறிவிக்கும்?) என்று கூறப்பட்டால் அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கவில்லை என்று பொருள்! என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2014 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். யார் லைலத்துல் கத்ர்-கண்ணியமிக்க இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்றுவணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 2
லைலத்துல் கத்ர் இரவை (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் தேடுதல்.
2015 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித் தோழர்கள் சிலர் கண்ட கனவில், (ரமளானின்) கடைசி ஏழு (இரவு)களில் ஒன்றில் லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கடைசி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதனைத் தேடுபவர் (ரமளானின்) கடைசி ஏழு(இரவு)களில் தேடிக் கொள்ளட்டும்! என்று கூறினார்கள்.
2016 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்ட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களிமண்ணில் சஜ்தா செய்வது போன்று (கனவு) கண்டேன்! ஆகவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்! என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக்கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால் பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரிச்ச மட்டையினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி (ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் சஜ்தா செய்யும் நிலையில் நான் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை நான் பார்த்தேன்.
பாடம் : 3
கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல்.
இது பற்றிய ஹதீஸை உபாதா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2017 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2018 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். பின்னர், நான் இந்தப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் அந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது: பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது; எனவே, (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாட்களிலுள்ள) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) சஜ்தா செய்வதுபோன்று (கனவு) கண்டேன்! எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை நான் என் கண்களால் பார்த்தேன்! மேலும் நபி (ஸல்) அவர்கள், தமது முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, சுப்ஹு தொழுது விட்டுத் திரும்புவதையும் நான் கண்டேன்.
2019 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(லைலத்துல் கத்ரைத்) தேடுங்கள்!
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2020 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்: ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்! என்று கூறுவார்கள்.
2021 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2022 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது ; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!
இதை இப்னு அப்பாஸ்( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பாடம் : 4
மக்கள் சச்சரவிட்டுக் கொண்டிருந்ததால் லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் நீக்கப்படுதல்.
2023 உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லீம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர்: எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்!. எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்! எனக் கூறினார்கள்.
பாடம் : 5
ரமளானின் கடைசிப் பத்தில் புரிய வேண்டிய வணக்கவழிபாடு.
2024 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!
லைத்துல் கத்ர் சிறப்பு
எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி
723. நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர் (இரவு) காட்டப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் ‘உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!” என்று கூறினார்கள்.
புஹாரி: 2015 இப்னு உமர் (ரலி).
புஹாரி :2016 அபூஸலாமா (ரலி).
புஹாரி : 2018 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).
புஹாரி :2020 ஆயிஷா (ரலி).
லைலத்துல் கத்ரின் சிறப்புகள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)
1) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
3) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதை பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி, அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே, அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ’83 வருடம் நாம் வாழ்வோமா?’ என்பதே கேள்விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே, இச்சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபடவேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறப்பான இரவைப் பெற்று, நல் அமல்கள் புரிய வாய்ப்பளிப்பானாக!
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
அடிப்படை நம்பிக்கைகள்
ஸூறா யாசீன் றஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த கடைசிக் காலப்பரிவில் அருளப்பட்ட ஓர் அத்தியாயமாகும். மக்காவில் இறங்கிய ஏனைய ஸூறாக்களைப் போலவே இந்த ஸூறாவும் அகீதா எனும் இஸ்லாத்தின் நம்பிக்கை சார்ந்த அடிப்படை அம்சங்களை விளக்குவதாக அமைந்துள்ளது. ஸூறா யாசீனின் ஆரம்ப வசனங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களது ரிஸாலத் எனும் தூதுத்துவத்தின் உண்மையை நிரூபிக்கும் விதத்தில் அமைந்து காணப்படுகின்றன. அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவே இருக்க வேண்டுமென்பதற்கான அறிவார்ந்த தர்க்கரீதியான ஆதாரங்களை இவ்வசனங்கள் முன்வைக்கின்றன.
மேலும் இவ்வத்தியாயம் தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தின் உண்மைபற்றி பிரபஞ்ச அத்தாட்சிகளை எடுத்துக்காட்டியும், பகுத்தறிவு ரீதியாவும் விளக்குகின்றது.
இவற்றுடன் மறுமை பற்றிய ஆதாரங்களும் இந்த ஸூறாவில் இடம்பெற்றுள்ளன. மரணத்தின் பின்னுள்ள வாழ்வினதும் மறுமையினதும் அவசியத்தை இவ்வத்தியாயம் பிரபஞ்ச அத்தாட்சிகளை ஆதாரங்களாகக் கொண்டும் நிரூபிக்கின்றது.
இவை மாத்திரமன்றி ரஸூல் (ஸல்) அவர்களின் நபித்துவத்தை பொய்ப்பித்து, அன்னாரை நிராகரித்து, அவர்களின் தஃவா பணிக்கும் தடையாக இருந்து கொடுமைகள் பல புரிந்துவந்த குறைஷியருக்கு எச்சரிக்கை விடுக்கும் பலவசனங்களும் இந்தச் ஸூறாவில் காணப்படுகின்றன.
இவ்வாறு யாசீன் ஸூறாவானது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான ஏகத்துவம் பற்றிய நம்பிக்கை, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவம் பற்றிய நம்பிக்கை, மரணத்தின் பின்னுள்ள மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை ஆகியவற்றைச் சிறப்பாக விளக்குவதாகவும், இஸ்லாத்தை மறுத்து பொய்ப்பித்து அதற்கெதிரிகளாக இருப்போரை எச்சரிப்பதாகவும் அமைந்து காணப்படுகின்றது. இவ்வாறு இந்த ஸூறா இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை அழகாக விளக்குவதாக அமைந்திருப்பதனால் தான் இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில் ஒவ்வொன்றுக்கும் ஓர் இதயமுண்டு. அல்குர்ஆனின் இதயமாக இருப்பது யாசீனாகும் (ஆதாரம்: திர்மிதி, தாரமி)
மேலும் ஒரு நபிமொழி இவ்வாறு காணப்படுகின்றது:
நீங்கள் இதனை (யாசீன் ஸூறாவை) மரணப்படுக்கையில் இருப்பவர்கள் மீது ஓதுங்கள். (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)
உலகை விட்டும் பிரியும் தறுவாயிலுள்ள முஸ்லிமின் உள்ளத்தில் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பசுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மறுமையின் காட்சிகள் அவர் கண்முன்னே வந்து விட வேண்டும் என்பதற்காகவுமே நபியவர்கள் மரணவேளையில் இருப்போரிடத்தில் யாசீன் ஸூறாவை ஓதுமாறு போதித்திருக்க வேண்டும்.
இந்த அத்தியாயம் யாசீன் எனும் இரு அறபு எழுத்துக்களுடன் ஆரம்பமாகின்றது. இதற்கு பொருள் உண்டா இல்லையா என்பதிலும் பொருளிருப்பின் அது என்ன என்பதிலும் முபஸ்ஸிரீன்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. யாசீன் என்பது மனிதனே! எனும் பொருளைக் கொடுக்குமென இப்னு அப்பாஸ் (றழி) அவர்களும் இன்னும் பல தாபிஈன்களும் கூறியுள்ளனர். சிலர் இது அல்லாஹ்வுக்குரிய ஒரு திருநாமமாகும் என்கின்றனர். வேறு சிலர் தலைவரே எனும் சொல்லின் சுருக்கமான வடிவமே யாசீன் என்பதாகும் எனக்குறிப்பிடுகின்றனர்.
இதற்கு மேலுமோர் பொருத்தமான விளக்கமும் காணப்படுகின்றது. அதாவது யாசீன் என்பது அரபு அரிச் சுவடியிலுள்ள இரு எழுத்துக்களாகும். இவற்றையும் இவை போன்ற ஏனைய எழுத்துக்களையும் கொண்டு அல்குர்ஆனில் வசனங்கள் அமைந்துள்ளன. ஆனால் இவ்வெழுத்துக்களை நன்கு தெறிந்து வைத்துள்ள அரபிகளுக்கு இவற்றை கொண்டு அல்குர்ஆனில் உள்ள வசனங்களை போல அவற்றின் தரத்தில் அமைப்பில் வசனங்களை அமைக்க முடியாதிருந்தது. இது ஒன்றே அல்குர்ஆன் நிச்சயமாக அல்லாஹ்வினாலேயே அருளப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு போதிய சான்றாகும்.
யாஸீன் எனும் இவ்வெழுத்துக்களுக்கு இறுதியாக நாம் குறிப்பிட்ட இவ்விளக்கம் பொருத்தமாக உள்ளது என்பதற்கு இவ்வெழுத்துக்களை தொடர்ந்து வல்குர்ஆனில் ஹகீம் என்று குர்ஆனைப் பற்றி பிரஸ்;தாபிக்கப்பட்டிருப்பது ஆதாரமாக அமைகின்றது.
அல்குர்ஆனில் பல ஸூறாக்களின் ஆரம்பத்தில் அரபு அரிச்சுவடியின் தனி எழுத்துக்கள் காணப்படுவதையும் அவற்றை தொடர்ந்து வரும் வசனம் பெரும்பாலும் அல்குர்ஆனைப் பற்றி குறிப்பிடுவதை அவதானிக்கலாம்.
ஸூறாவின் அடுத்த வசனம் பின்வருமாறு:
முற்றிலும் ஞானம் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக புனித அல்குர்ஆன் மீது சத்தியம் செய்யும் அளவிற்கு அல்லாஹ் எந்த உண்மையை வலியுறுத்திக் கூற விரும்புகின்றான்? அதனை அடுத்து வரும் வசனம் கூறுகின்றது.
நிச்சயமாக நீர் எமது தூதர்களில் ஒருவர்
இந்த உண்மையை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரே என்ற உண்மையை நிரூபிப்பதற்காகவே அல்லாஹ் அல்குர்ஆன் மீது சத்தியம் செய்துள்ளான். அந்தக் குர்ஆனை முற்றிலும் ஞானம் நிறைந்தது என்றும் வர்ணித்துள்ளான். அதாவது அல்லாஹ் இங்கு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஞானம் நிறைந்த அறிவார்ந்த விஷயங்கள் பொதிந்த இந்த குர்ஆன் ஒன்றே நீங்கள் எமது தூதர்தான் என்பதற்கு தக்க சான்றாகும். இத்தகைய ஞானம் நிறைந்த கருத்துக்களை ஓர் இறைத்தூதரே கூற முடியும் என்பதனை இந்த குர்ஆனை நோக்குகிறவர் புரிந்து கொள்ள முடியும். இது முஹம்மத் ஆகிய உங்களது கருத்துக்களாகவோ, பிரிதொரு மனிதனின் கருத்துக்களாகவோ இருக்க முடியாது என்பதையும் விளங்க முடியும் என்று அல்லாஹ் கூற விரும்புகின்றான்.
அடுத்து வரும் வசனம் இவ்வாறு அமைகின்றது.
நீர் நேர்வழியில் இருக்கின்றீர்
நீர் ரஸூல்மார்களில் ஒருவராவீர் என்று கூறி முஹம்மத் நபியவர்களின் இறைத்தூதின் உண்மையைக் குறிப்பிட்டு தொடர்ந்து நீர் நேர்வழியில் இருக்கின்றீர் எனக் கூறுவதன் மூலம் அவர்கள் கொண்டு வந்த அந்த தூதின் தன்மை விளக்கப்படுகிறது. அத்தூது எத்தகைய கோணலும் மாணலும் இன்றி நேராகவும் சீராகவும் இருக்கின்றது. அது கூறும் சத்தியத்திலும் எவ்வித மயக்கமும் குழப்பமுமற்ற சீர்மை காணப்படுகின்றது என விளக்கப்படுகின்றது.
உண்மையில் இத்தூது நேரானதும் சீரானதும்தான். பிரபஞ்சத்தின் இயல்புடனும் அதன் சட்டத்துடனும் மனிதனைச் சூழவுள்ள பொருட்கள் ஜீவராசிகள் ஆகிய அனைத்துடனும் கூட முட்டாமல் மோதாமல் முரண்படாமல் சீராக இணங்கிச் செல்வதாக இது உள்ளது. அல்லாஹ்வைச் சென்றடைதற்குரிய நேரான பாதையாகவும் இந்த தூதே காணப்படுகின்றது. ஆம்! இதுதான் நீர் நேரான வழியில் இருக்கின்றீர் என்ற இவ்வசனத்திற்குரிய விளக்கமாகும்.
ஸூறாவின் அடுத்த வசனம் இவ்வாறு அமைகின்றது.
இது யாவரையும் மிகைத்தோனும் கிருபையுடையோனுமாகிய அல்லாஹ்வால் அருளப்பட்டதாகும்.
மேலே எந்த குர்ஆனின் மீது சத்தியம் செய்து முஹம்மத் நபியவர்களின் இறைத்தூதின் உண்மை வலியுறுத்தப்பட்டதோ அந்த அல்குர்ஆனை இறக்கியவனின் அந்த நேரான பாதையைக் காட்டியவனின் இரு பண்புகள் இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ளன. ஒன்று அவன் அஸீஸ - சக்தி வாய்ந்தவன், யாவற்றையும் மிகைத்தவன் என்பதாகும். அடுத்தது ரஹீம் - அருளாளன் எனும் பண்பாகும். அல்லாஹ்வுக்கு பல திருநாமங்கள் இருக்க குறிப்பாக இவ்விரு பண்புகள் மாத்திரம் இங்கு தெரிவு செய்யப்பட்டு குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணம் இந்த குர்ஆன் கூறும் உபதேசங்களை புறக்கணிப்பதால், ஏற்க மறுப்பதால் எத்தகைய பாதகமும் ஏற்படப்போவதில்லை என்று மனிதர்கள் நினைக்கக்கூடாது. ஏனெனில் இதனை அருளியவன் சாமானியமானவனல்ல. அவன் அஸீஸ் - பலமானவனாகவும் யாவற்றையும் மிகைத்தோனுமாக இருக்கின்றான் என்பதனை உணர்த்துவதற்காகத்தான். அடுத்து ரஹீம் - அருளாளன் எனும் பண்பு கூறப்பட்டுள்ளதற்கான காரணம் யாதெனில் அவன் உங்கள் மீது கொண்ட அருளின் காரணமாகவே ஈருலகிலும் வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்கான நேர்வழியை காண்பிக்கக் கூடிய தனது தூதரையும் மகத்துவமிக்க இந்தக் குர்ஆனையும் அனுப்பிவைத்தான் என்பதனை விளக்குவதற்காகத்தான்.
அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்டுகொள்ள முடியாதவாறு அவர்கள் ஆக்கப்பட்டிருப்பதையும் அவர்களைப் பொருத்தவரையில் ஈமானின் வாயில்களும் வழிகளும் முற்றாக மூடப்பட்டிருப்பதையும் இவ்வசனங்கள் இவ்வுதாரணத்திற்கூடாக சித்தரித்துக் காட்டுகின்றன.
செத்துவிட்ட உள்ளங்களைப் பொருத்தவரையில் அவற்றுக்கு எதுவும் பலிக்காது. எனவேதான் அத்தகையோரைப் பற்றி அடுத்துவரும் வசனம் பின்வருமாறு கூறுகின்றது.
அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் செய்யாமல் இருப்பதும் சமமே. அவர்கள் விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள்.
தொடர்ந்து எத்தகையோருக்கு நல்லுபதேசமும் எச்சரிக்கை செய்வதும் பயனளிக்கும் என்பது விளக்கப்படுகின்றது.
எவர்கள் நல்லுபதேசமான இவ்வேதத்தைப் பின்பற்றி மறைவாகவும் ரஹ்மானுக்கு பயந்து நடக்கின்றாரோ அவர்களுக்குத்தான் நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல் வேண்டும் வேதத்தை ஏற்று பின்பற்றி அல்லாஹ்வை பயந்து வாழும் இத்தகையோர் எச்சரிக்கை செய்யப்படுவதற்கு மாத்திரமன்றி நன்மாராயணம் கூறப்படுவதற்கும் அருகதையுடையவர்களாவர். இதனால் தான் அல்லாஹ் அடுத்து பின்வருமாறு கூறுகின்றான்:
ஆகவே இத்தகையோருக்கு மன்னிப்பும் கன்னியமான கூலியும் உண்டென்று நீர் நற்செய்தி கூறுவீராக
ஆம்! இவர்கள் பிடிவாதமின்றி செய்கின்ற பாவங்களுக்கு மன்னிப்புக் கிட்டும். அல்லாஹ்வை, அவனைக் காணாமலேயே அஞ்சி பயந்து நடந்து கொள்வதற்காகவும் அவன் அருளியதை ஏற்று பின்பற்றுவதற்காகவும் அவர்களுக்கு நற்கூலியும் கிடைக்கும்.
உண்மையில் இறையச்சமும் இறைவேதத்தைப் பின்பற்றுதலும் ஒன்றோடொன்று இணைந்த பிரிக்க முடியாத அம்சங்களாகும். இறையச்சம் குடிகொண்ட உள்ளத்தை உடையவனிடத்தில் இயல்பாகவே இறைவேதத்தை பின்பற்றும் தன்மை வந்து விடும்.
அடுத்துவரும் வசனம் இந்த வேதம் இறக்கப்பட்டதற்கான நோக்கத்தை விளக்குகின்றது. யாதொரு தூதராலும் தங்கள் மூதாதையர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி முற்றிலும் கவலையற்று) பாராமுகமாக இருக்கின்ற மனிதருக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவேண்டும் என்பதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டது)
குறிப்பாக இவ்வசனம் அல்குர்ஆன் அருளப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த அரபிகளை விழித்துப் பேசுகின்றது. தொடர்ந்து வரும் வசனம் இந்த அரபியரில் இருந்த பிடிவாதக் காரனைப் பற்றிய அல்லாஹ்வின் முடிவைக் கூறுகின்றது. நிச்சயமாக இவர்களில் பெரும்பாலோர் மீது அவர்கள் நரக வாசிகள் தாம் என்ற (இறைவனின்) வாக்கு உண்மையாகி விட்டது. அதனால் அவர்கள் விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள். நிச்சயமாக நாம் அவர்களின் கழுத்துக்களில் மோவைக் கட்டைகள் வரை விளங்குகளைப் போட்டு விட்டோம். ஆதலால் அவர்களின் தலைகள் குணியமுடியாதவாறு நிமிர்ந்து விட்டன. அவர்களுக்கு முன்புறம் ஒரு தடுப்பையும், பின்புறம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தி நாம் அவர்களை மூடிவிட்டோம். எனவே அவர்கள் எதனையும் பார்க்க முடியாது.
இவ்வசனங்கள் அந்தப் பிடிவாதக்காரர்களின் நிலையை விளக்குவதற்கான ஓர் உதாரணத்தை முன்வைக்கின்றது. அவர்களின் பிடிவாதத்தின் காரணமாகவும் வம்புத்தனத்தின் காரணமாகவும் இதனை அடுத்து வரும் வசனம் அற்புதமாக விளக்குகின்றது.
நபியே! நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் (குர்ஆன்) ஆகிய நல்லுபதேசத்தை பின்பற்றி மறைவில் ரஹ்மானை (அல்லாஹ்வை) அஞ்சுகின்றாரோ அவருக்குத்தான்.
நன்றி: ஷெய்க்அகார்.org
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
