செவ்வாய், 4 செப்டம்பர், 2012



பெண்ணே பெண்ணே! – (தொடர் 6)
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

தப்பெண்ணம் வேண்டாம் கண்ணே!
சிலருக்கு அடுத்தவரைப் பற்றி எப்போதும் கீழ்த்தரமான எண்ணம் தான் இருக்கும். அடுத்தவர் எதை ஏன்இ என்ன நியாயத்திற்காகச் செய்கின்றனர் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். சிலர் பொறாமை காரணத்திற்காகவும் உளவு மனபப்பான்மையாலும் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். பெண்களில் பலருக்கு இந்த நோய் இருக்கின்றது.

ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவருக்கு அருகில் செல்ல வேண்டி ஏற்பட்டால் இவர்களின் நடையின் வேகம் குறையும் தேவையில்லாமல் அந்த இடத்தில் ஏதேனும் ஒரு வேலையை ஆரம்பிப்பர். அவர் பேசும் பேச்சில் முடிந்தவரை சிலதையாவது கேட்டு அதற்கு கைஇ கால்இ மூக்குஇ காது வைத்து இவள் எப்படியாவது ஒரு கதை அமைத்துவிடுவாள்.

இருவர் இரகசியமாக ஏதாவது பேசுவது போல் தென்பட்டால் காதைக் கூர்மையாக்கிக் கொண்டு அவர்களின் உதட்டு அசைவைக் கண்காணித்தவாறு அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அபரிமிதமான முயற்சி செய்வாள்.

அடுத்த வீட்டு முற்றத்தில் யாராவது பேசிக் கொண்டிந்தால் தனது முற்றத்தைக் கூட்டுவது போல் தோரணை செய்து அவர்களின் பேச்சு எதைப்பற்றிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை அவதானித்துக் கேட்டு அனுமானித்துக் கொள்வாள். இத்தகைய பெண்களுக்கு ஜன்னல் ஓரம்இ வீட்டு வாசல்இ வேலியோரம் என்பன பிடித்த இடமாகத் தெரியும்.

சில பெண்கள் தனது மகளும்இ மருமகனும்இ மகனும் மருமகளும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காகக் கூட கண்ணையும்இ காதையும் கூர்மையாக்கிக் கொண்டு அலைவதுண்டு.

அடுத்தவர்களின் கடிதங்கள்இ அவர்களின் ஓட்டோகிராப்இ டயரிஇ இஈமெயில்இ செல்போனில் வந்துள்ள ளுஆளு கள் இவற்றைப் படிப்பது சிலருக்கு விறுவிறுப்பான நாவல் படிப்பதை விட சுவாரஷ;யமாக இருக்கும்.

இன்னும் சிலர் இருக்கின்றனர். தூரத்தில் இருவர் பேசிக் கொண்டிருப்பர். அவர்கள் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை அறிய வேண்டும் என்று ஆவல் கொள்வர். இவர்கள் சிலபோது ஏதேனும் உள நோயால் பாதிக்கப்பட்டிருப்பர். யார் என்ன பேசினாலும் தன்னைப் பற்றித்தான் பேசுகின்றார்களோ என்ற சந்தேகம் இவர்களுக்கு எழும். இதே நேரம் அவர்களில் யாராவது இவளைப் பார்த்துவிட்டால் தன்னைப் பற்றித்தான் பேசுகின்றனர் என உறுதியாக நம்ப ஆரம்பித்து விடுவாள். எனவேஇ அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை அறிய முயற்சிப்பாள். முடியாவிட்டால் சிலபோது அவர்களில் ஒருவரிடம் மெதுவாகக் கதை கொடுத்து என்ன பேசப்பட்டது என்பதை அறியும் வரை அவளுக்கு உறக்கமே வராது. அடுத்தவர்கள் மீது கெட்ட எண்ணம் ஏற்படுவதால்தான் இந்த உளவுக் குணம் உண்டாகின்றது. குர்ஆனும்இ ஹதீஸும் இந்த உளவுக் குணத்தைத் தடுக்கின்றது.

உளவு பார்ப்பவர்களுக்கு ஏதேனும் செய்தி கிடைத்தால் வேட்டைக்குச் சென்றவர்களுக்கு நல்ல வேட்டை மிருகம் கிடைத்த மகிழ்ச்சியைப் பெறுவார்கள். உளவு பார்த்தால் போதும் என்றிருந்தவருக்கு தனது உளவுப் பணியின் முடிவை அடுத்தவர்களுக்குச் சொல்லும் வரை நிம்மதியிருக்காது. எனவேஇ அவள் புறம் பேச வேண்டிய நிலை ணஏற்படுகின்றது. எனவேதான் அல்லாஹ் தன் திருமறையில்இ

‘நம்பிக்கை கொண்டோரே! எண்ணங்களில் அதிகமானதைத் தவிர்ந்து கொள்ளுங்கள். நிச்சயமாக எண்ணங்களில் சில பாவமாகும். மேலும்இ நீங்கள் துருவித்துருவி ஆராயாதீர்கள். இன்னும்இ உங்களில் சிலர் மற்றும் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்த தனது சகோதரனின் மாமிசத்தை உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுத்து விடுவீர்கள்’ (49:12) என்று கூறுகின்றான்.

இந்த திருமறை வசனத்தை நன்றாக அவதானியுங்கள். இதில் அல்லாஹுத்தஆலா
1. தீய எண்ணத்தைத் தடுக்கின்றான்.
2. உளவு பார்ப்பதைத் தடுக்கின்றான்.
3. புறம் பேசுவதைத் தடுக்கின்றான்.
இந்த மூன்று தவறுகளும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்தவைகளாகும். எனவேதான் நபி(ஸல்) அவர்களும் ‘தப்பெண்ணம் கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் தப்பெண்ணம்தான் பெரிய பொய்யாகும். உங்களில் ஒருவருக்கொருவர் ஒற்றுக் கேட்காதீர்கள்இ உளவு பார்க்காதீர்கள்இ இரகசியம் பேசாதீர்கள்இ பொறாமை கொள்ளாதீர்கள்இ பகைமை கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாகவும்இ உங்களுக்கு மத்தியில் சகோதரர்களாகவும் ஆகிவிடுங்கள். என்று கூறினார்கள்.’ (அறி: அபூஹுரைரா(ரழி)இ ஆதாரம்: புஹாரி:6066)

எனவேஇ இந்த ஹராத்திலிருந்து நாம் விடுபட வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் என்ன பேசினால் நமக்கென்ன? அவர்கள் பேசுவதைப் பதிவதற்கு மலக்குகள் இருக்கிறார்கள். நாம் என்ன செய்கின்றோம் என்பதும் அல்லாஹ்வால் கண்காணிக்கப்படுகின்றது. என உறுதி கொண்டுஇ இந்த உளவுப் பணியை உதறித் தள்ளுங்கள்.
அடுத்தவர்களின் குறைகளை அறிந்து கொள்வதில் அலாதிப் பிரியத்துடன் திரியும் பெண்கள் தம்மைச் சூழும் பெரும் ஆபத்தை அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அடுத்தவர் குறைகளை அறிய ஆவல் கொண்டால் உங்கள் குறைகளும் பகிரங்கத்திற்கு வந்துவிடும். இதை நடைமுறையிலும் நீங்கள் உணரலாம்.

‘உள்ளத்தில் ஈமான் நுழையாமல் உதட்டளவில் மட்டும் ஈமான் கொண்டவர்களே! முஸ்லிம்கள் குறித்து புறம் பேசாதீர்கள்! அவர்களின் குறைகளையும் தேடித் திரியாதீர்கள்! ஏனெனில்இ யார் முஃமின்களின் குறைகளைத் தேடித் திரிகின்றார்களோ அவர்களின் குறைகளை அல்லாஹ் தேட ஆரம்பித்துவிடுவான். யாருடைய குறையை அல்லாஹ் தேடுகின்றானோ அவனது வீட்டிலேயே அவனை அல்லாஹ் இழிவுபடுத்துவான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (ஆறி: அபூபர்ஸா அல் அஸ்லமிஇ ஆதா: அபூதாவுத்:48:82)

எனவேஇ அடுத்தவர் குறையைத் தேடுவதை அடியோடு நிறுத்துங்கள்.

சில பெண்கள் இந்த இயல்பு காரணமாக அடுத்தவர்களை உற்றுப் பார்ப்பார்கள். அடுத்த வீட்டில் என்ன நடக்கிறதுஇ யார் வருகின்றார்கள்இ என்ன கொண்டு வருகின்றார்கள்இ எவ்வளவு நேரம் தங்கினார்கள்இ இவ்வளவு நேரம் என்ன பேசியிருப்பார்கள் எனப் பல ஆய்வுக் கேள்விகள் இவர்களது அடி மனதில் உதித்துக் கொண்டே இருக்கும். விடை கிடைக்காவிட்டால் இவர்களுக்கு நிம்மதியாக இருக்க முடியாது. எனவேஇ கேட்டுத் தொலைத்துவிடுவது என்று முடிவு செய்துவிடுவர்.

இதனால் யார் வந்தது? என்ன பார்சல் பெரிதாக இருந்திச்சே! அவ்வளவு நேரம் என்ன செய்தார்கள்! உங்கட வீட்டுக்காராரும் இல்லை! அவங்க எங்க தங்கினார்கள்! என அலுத்துப் போகும் வரைக்கும் கேட்டுத் தொலைப்பர். இத்தகைய பெண்கள் யாரிடத்திலும் நல்ல பெயர் வாங்க முடியாது. அடுத்தவர் விஷயத்தில் அளவுக்கு மீறி மூக்கை நுழைப்பது ஆகுமானதுமல்ல. அழகானதுமல்ல. உண்மையில் இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் இவர்களுடன் கூடப் பிறந்த பொறாமைக் குணமும் அடுத்தவர் பற்றிய தப்பான எண்ணங்களும்தான் காரணியாக இருக்கும்.
அடுத்த வீட்டுக்குள் அவர்களது அனுமதியில்லாமல் பார்வையை ஓடவிடுவது ஹராமாகும். எனவேதான் ஸலாம் கூறி பதில் வந்த பின்னர்தான் உள்ளே செல்ல வேண்டும். அந்த ஸலாத்தைக் கூட உள்ளே பார்த்துக் கொண்டு சொல்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

‘நபி(ஸல்) அவர்களது வீட்டுக்குள் ஒருவர் பார்வையை விட்டார். அவர் பார்ப்பதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் நீ பார்ப்பது முன்னரே தெரியுமென்றால் உன் கண்களில் குத்தியிருப்பேன். பார்வை நுழைவதற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என்று கூறினார்கள்.’ (புஹாரி:6901)

இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸுக்குத் தலைப்பிடும் போது

ஒருவர் வீட்டுக்குள் உற்றுப் பார்த்து அவர்கள் இவரது கண்ணைப் பழுதாக்கினால் இதற்குத் தெண்டப் பரிகாரம் இல்லை என்ற தலைப்பில் இடம்பெறச் செய்துள்ளார்கள்.

எனவேஇ இது சாதாரண குற்றமில்லை என்பதைக் கவனத்திற் கொள்ளவும். அடுத்தவர்கள் பேசுவதை ஒற்றுக் கேட்பது குறித்து நபி(ஸல்) அவர்கள் கண்டித்துக் கூறும் போதுஇ

‘யார் ஒரு கூட்டத்தில் பேசும் பேச்சை அவர்கள் வெறுக்கும் நிலையில் கேட்கின்றாரோ அவரது காதில் மறுமையில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படும் எனக்கூறினார்கள்.’ (முஸன்னப் இப்னு அபீiஷபா:102இ 25964 – அல் அதபுல் முப்ரத்:1159 – தபரானி:11472)

எனவேஇ ஒற்றுக் கேட்காதீர்கள்ளூ உளவு பார்க்காதீர்கள்ளூ அடுத்தவர்களைப் பற்றி தப்பாகக் கவலைப்படாமல் உங்களைப் பற்றி சிந்தியுங்கள். சில பெண்களிடம் இந்த இயல்பு இருக்கும் அதே நேரத்தில் இந்த உளவு வேலைக்குத் தமது உளவினர்களைம் பயன்படுத்தி அவர்களையும் குற்றவாளியாக்குகின்றனர். மறுமையை மனதில் கொண்டு இந்தக் குற்றச் செயலை விட்டும் விலகிக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக