திங்கள், 24 செப்டம்பர், 2012




முரண்பட்ட இரு செய்திகளை இணைத்துத் தீர்வு காண்பதே சிறந்தது!

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.T.M.ஹிஷாம் மதனீ

முரண்பாடு என்பது இரு விஷயங்கள் ஒன்றுக்கொன்று எதிராக அமையும் நிலையினைக் குறிக்கும்.

பரிபாசை அடிப்படையில் இப்பதத்தை நோக்கினால், “இரண்டு ஆதாரங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு, சரியானதொரு தீர்மானத்தை எடுக்கமுடியாமல் போகும் நிலையினைத் தோற்றுவிப்பதுஎன்று அமையும்.

முரண்பாடுகளை எவ்வாறு கண்டறிவது?

பொதுவாக, இரு செய்திகளுக்கு மத்தியில் உண்டாகும் முரண்பாடுகள் அனைத்தும் உண்மையான முரண்பாடுகளாகக் கருதப்படுவதில்லை. மாற்றமாக, அதற்கென்று தனியான சில நிபந்தனைகள் உள்ளன. அந்நிபந்தனைகள் எம்முரண்பாட்டில் தாக்கம் செலுத்துகின்றனவோ அதனையே உண்மையான முரண்பாடாகக் கருதமுடியும். அவையாவன:

1. இரு செய்திகளும் குறித்த ஒரு விஷயத்தில் ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு செய்தி குறித்த விடயத்தைக் கூடும் என்று மற்றைய செய்தி கூடாது என்றும் கூறக்கூடியதாக இருக்க வேண்டும். ஏனெனில், இரு செய்திகளும் ஒரே வகையான தீர்வுகளை முன்வைக்கும் போது அதனை முரண்பாடாகக் கருத முடியாது.

2. இரு செய்திகளும் தரத்தில் சமமானதாக இருக்கவேண்டும். ஏனெனில், இரண்டுக்கும் மத்தியில் தரத்தில் வேறுபாடு காணப்படும் போது அங்கு மிகவும் தரமானதே தேர்ந்தெடுக்கப்படும்.

3. இரு செய்திகளும் ஒரே காலத்தில் இடம்பெற்ற விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். காலம் வேறுபடும் போது அங்கு முரண்பாட்டிக்கான சந்தர்ப்பம் அற்றுப் போகின்றது. உதாரணமாக அன்னை ஆயிஷா (ரழி) மற்றும் அன்னை உம்மு ஸல்மா (ரழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் நோன்பாளியாக இருக்கும் நிலையில் குளிப்பு கடமையானவராக காலைப்பொழுதை அடையவார்கள்.” (புகாரி, முஸ்லிம், அபூதாவுத்)

இச்செய்திக்கு மாற்றமாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்: யார் குளிப்பு கடமையானவராக காலைப்பொழுதை அடைகின்றாரோ, அவருடைய நோன்பு செல்லுபடியற்றதாகும்.” (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, அஹ்மத், முஅத்தா)

மேலே குறிப்பிடப்பட்ட இரு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் காண்கின்றோம். இம்முரண்பாட்டின் உண்மையான வடிவினைப்பற்றி அல் ஹத்தாபி (ரஹ்) பின்வருமாறு கூறுகின்றார்: நான் இவ்விரு செய்திகளைப்பற்றிக் கேட்ட விளக்கங்களில் மிகச்சிறந்தாகக் கருதுவது, அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தி நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்பகாலத்திலும், நபியவர்களின் மனைவிமார் அறிவிக்கும் செய்திகள் ரமழானுடைய இரவில் உடலுறவு கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதிற்குப் பிறகும் அறிவிக்கப்பட்டனவாகும். ஏனெனில், நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ரமழானுடைய இரவுகளில் உடலுறவு கொள்வது தடுக்கப்பட்டிருந்தது. பின்பு அத்தடை நீக்கப்பட்டதுஎன்கிறார். (மஆலிமுஸ்ஸுனன்)

எனவே மேற்குறிப்பிடப்பட்ட விளக்கத்தின் மூலம் இரு செய்திகளும் ஒரே காலத்தில் இடம்பெறவில்லை என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். இதனால் இது விஷயத்தில் முரண்பாடு இருப்பதாகக் கூற முடியாது.

4. இரு செய்திகளினதும் முரண்பாடு ஒரே விஷயத்திலாக இருக்க வேண்டும். ஏனெனில், இரு செய்திகளும் வௌ;வேறு அம்சங்களைப் பற்றிப்பேசும் போது அங்கு முரண்பாடு காண முடியாது.

உதாரணமாக அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளைநிலங்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள்.” (2:223)

இவ்வசனம் திருமணமான பெண் அவளது கணவனுக்கு ஹலாலானவள் என்று கூறுகின்றது. ஆனால் இவ்வனுமதி அவளது தாயை அணுகுவது ஹராம் என்ற செய்தியுடன் முரண்படாது (பார்க்க: 4:23) காரணம், இவ்வசனம் யார் யாரைத் திருமணம் செய்ய முடியாது என்பதைக் கூறுகின்றது. எனவே, இவ்விரு விடயங்களும் இரு இடங்களில் அமையப்பெற்று வௌ;வேறு தகவல்களைக் கூறுவதால் இதனை முரண்பாடாகக் கொள்ள முடியாது.

மேற்குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்குற்பட்ட விதத்தில் இரு செய்திகளை முரண்பாடாக நாம் கண்டால் இரண்டையும் சேர்த்துத் தீர்வு காண்பதா? அல்லது அவற்றில் ஒன்றைக் கொண்டு மாத்திரம் சுருக்கிக் கொள்வதா? என்பதே எமது கட்டுரையில் ஆராய இருக்கும் அம்சமாகும்.

இக்கேள்விக்கு பதிலளிக்க முற்பட்ட அறிஞர்களின் கூற்றுக்களிலிருந்து இருவிதமான முடிவுகளைப் பெற முடிகின்றது.
அவர்களுள் முதலாவது சாரார் கூறுகையில்: நாம் அவ்விரு செய்திகளையும் ஏதாவதொரு வழிமுறை மூலம் ஒன்றிணைத்துத் தீர்வு காணவேண்டும். அவ்வாறு தீர்வுகாண முடியாத போது ஏதாவதொரு வழிமுறை மூலம் அவற்றில் ஒன்றைக்கொண்டு மாத்திரம் செயற்படுத்த வேண்டும். அப்படியும் முடியாத போது இரண்டு செய்திகளும் அறிவிக்கப்பட்ட காலத்தைப் பார்க்கவேண்டும். அதன் போது அவ்விரண்டும் வௌ;வேறு காலங்களில் அறிவிக்கப்பட்டதாகக் கண்டால் இறுதியாக அறிவிக்கப்பட்ட செய்தியைக் கொண்டு செயல்படுத்த வேண்டும். அதற்கும் முடியாத போது குறித்த அவ்விரு செய்திகளையும் விட்டுவிட்டு தீர்வுகாண முற்பட்ட விஷயத்திற்கு அடிப்படையில் அனுமதியுள்ளது என்ற முடிவை வழங்க வேண்டும். காரணம் இரு முரண்பட்ட செய்திகளில் சரியானதொரு தீர்வைக்காண முடியாத போது அவ்விரண்டும் அடிப்படையில் செல்லுபடியற்றது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்இக்கருத்தை பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகின்றார்கள். மேலும், இக்கருத்துக்கு அவர்கள் பின்வரும் விடயங்களை ஆதாரங்களாக முன்வைக்கின்றார்கள்.

1. இரு முரண்பட்ட செய்திகளும் உறுதியானதாக இருக்குமானால் அவை இரண்டைக்கொண்டும் தீர்வு காண்பதே முறையானதாகும். மாற்றமாக ஏதாவது ஒரு வழிமுறை மூலம் இரண்டைக் கொண்டும் தீர்வுகாண முடியுமான வேளையில் ஒன்றோடு மாத்திரம் சுருக்கிக் கொள்வதோ அல்லது இரண்டையும் ஒதுக்கி விடுவதோ முறையற்ற செயலாகும்.

2. முரண்பட்ட இரு செய்திகளையும் ஒன்றிணைத்து தீர்வு காண்பது மிகச் சிறந்தது என்ற கருத்தை வலுப்படுத்தும் வித்தில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் பின்வரும் செயல்முறை அமைந்துள்ளது.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அல்குர்ஆனிய வசனங்களான : அந்நாளில் மனிதர்களோ ஜின்னோ தம் பாவத்தைப் பற்றி (வாய் மொழியாக)க் கேட்கப்படமாட்டார்கள்.” (அர்ரஹ்மான்: 39)

ஆகவே உமதிரட்சகன் மீது அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் (விசாரணை செய்து) கேட்போம்.” (அல்ஹிஜ்ர்: 92) ஆகிய வசனங்களை ஓதிவிட்டு பின்வருமாறு கூறினார்கள்: ஓர் இடத்தில் அல்லாஹுத்தஆலா விசாரிப்பதாகவும் மற்றோர் இடத்தில் விசாரிக்கமாட்டான் என்றும் கூறுகின்றான். எனவே, அவை இரண்டையும் இணைத்து இவ்வாறு கூறமுடியும், “அல்லாஹுத்தஆலா மறுமை நாளில் மக்களிடத்தில் நீங்கள் இதை இதையெல்லாம் செய்தீர்களா? என்று செயல்களைக் குறிப்பிட்டு கேட்கமாட்டான்;. ஏனெனில், அவன் அவர்களை விட இது விடயத்தில் நன்கறிந்தவனாகவுள்ளான். எனவே, அவர்களை நோக்கி ஏன் நீங்கள் இப்படி இப்படியெல்லாம் செய்தீர்கள் என்றே விசாரிப்பான்”" என்று அமைகிறது அவரது விளக்கம். (இப்னு கஸீர், அழ்வாஉல் பயான்)

எனவே, இங்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இரு வசனங்களையும் இணைத்தே தீர்வு கண்டுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.

3. இரு செய்திகளையும் இணைத்துத் தீர்வு காண்பதின் மூலம் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. மேலும், இரு செய்திகளையும் அமுல்படுத்தியவர்களாகவும் ஆக முடியும். மாற்றமாக இரண்டில் ஒன்றைக் கொண்டு செயல்படுத்துவதினால் எப்போதும் ஒன்று கேள்விக்குறியாக இருந்து கொண்டே இருக்கும். அத்தோடு ஒரு செய்தி மாத்திரம் தான் அமுல்படுத்தப்படும். இவ்வாறான நிலையையே இதற்கடுத்த படித்தரங்களும் ஏற்படுத்துகின்றன.

இரண்டாவது சாரார் கூறும் போது: இரு செய்திகள் முரண்பட்டால், முதலாவது அவ்விரு செய்திகளும் அறிவிக்கப்பட்ட காலத்தைப் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும்போது காலத்தில் வேறுபாடு இருந்தால் காலத்தில் பிந்தியதைக் கொண்டு செயற்படுத்த வேண்டும். அதற்கும் முடியாதபோது அவைகளில் ஏதாவதொன்றைக்கொண்டு சுருக்கிக்கொள்ள வேண்டும். அதற்கும் முடியாதபோது அவை இரண்டையும் இணைத்து ஒரு தீர்வுக்கு வரவேண்டும். அதற்கும் முடியாதபோது அவை இரண்டையும் விட்டுவிட்டு அதற்குக் கீழ்தரத்தில் பதிவாகியுள்ள செய்திகளைக் கொண்டு தீர்வுகாண வேண்டும்.இக்கருத்தை ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் கூறுகின்றார்கள். இதற்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள்.

1. ஸஹாபர்ககளிடத்தில் இரண்டு ஹதீஸ்கள் ஒன்றோடொன்று முரண்பட்டால் அவற்றில் ஒன்றைக் கொண்டு மாத்திரம் தீர்வு காணும் வழிமுறையே இருந்தது. உதாரணமாக நபியவர்கள் கூறினார்கள்: ஆணுருப்பும் பெண்ணுருப்பும் சந்தித்தால் குளிப்பு கடமையாகும்.இந்த ஹதீஸிக்கு மாற்றமாகப் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது. நிச்சயாமாக நீர் -இந்திரியம்- வெளியானால் குளிப்புக்கடமையாகின்றது.ஸஹாபாக்களைப் பொருத்தளவில் அவர்கள் முதலாவது ஹதீஸான ஆயிஷா (ரழி) அவர்களின் ஹதீஸைத் தெரிவு செய்துள்ளார்கள். இதன்மூலம் இவ்விரு ஹதீஸ்களையும் இணைத்து தீர்வு காண்பதைவிட ஏதாவதொன்றை மாத்திரம் தெரிவுசெய்து செயல்படுத்துவதே சிறந்ததாகும் என்பது புலனாகின்றது.

இவ்வாதத்திற்கு பதிலளிக்க முற்பட்ட அறிஞர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். மேற்குறிப்பிடப்பட்ட உதாரணம் இரண்டு முரணான செய்திகள் ஒன்றிணைக்கப்பட்டு தீர்வு காணப்பட முடியாத வேளையில் அவற்றில் ஒன்றைக் கொண்டு தீர்வு காண்பதற்கு சிறந்த உதாரணமாகும். இதில் எக்கருத்து வேறுபாடும் கிடையாது. மாற்றமாக, இப்படியான சந்தர்ப்பங்களில் எவ்வழிமுறை முற்படுத்தப்பட வேண்டும் என்பதே கருத்து வேறுபாட்டிற்குரிய விடயமாகும். மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரம் ஒருபோதும் இக்கருத்துவேறுபாட்டிற்கு தீர்வாக அமையாது என்பதே எமது கருத்தாகும்என்கிறார்கள்.

2. ஆய்வாளர்களின் கருத்துக்களில் இருந்து, “இரு முரண்பட்ட செய்திகளுக்கு மத்தியில் சரியான தீர்வைக் காண்பதற்கு அவை இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும், மற்றையதை விட்டுவிட வேண்டும், அவற்றிற்கு மத்தியில் சமநிலை கிடையாதுஎன்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆயினும், மேற்குறிப்பிட்ட வழிமுறைமூலம் இரு செய்திகளுக்கு மத்தியிலுள்ள முரண்பாடு நீங்கிவிடுகின்றது. ஆனால், ஒரு செய்தி செயலற்றுப்போகின்றது. மாற்றமாக, இரண்டையும் ஒன்றிணைத்துத் தீர்;வுகாணும் வழிமுறையை முற்படுத்தும் போது இரண்டும் செயல்படுத்தப்படுகின்றன. அதுவே மிகவும் பொருத்தமானதும் கூட.

எனவே, மேலே குறிப்பிடப்பட்ட வாதப்பிரதிவாதங்களிலிருந்து முதலாவது சாராரின் கருத்தே ஏற்புடையதாக இருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். மேலும், அவர்கள் முன்வைத்த ஆதாரங்கள் மிகவும் பலமானவையாகவும், கூடுதலான அநுகூலங்களைப் பெற்றுத்தரக் கூடியவையாகவும் இருக்கின்றன.

இரு ஆதாரங்களை ஒன்றிணைத்துத் தீர்வு காண்பதற்கான நிபந்தனைகள்
மேற்குறிப்பிடப்பட்ட முடிவுக்கு வந்த நாம் அவ்வழிமுறையை செயற்படுத்துவதற்கான நிபந்தனைகளைக் காண்போம்.

1. இரு முரண்பட்ட ஆதாரங்களும் உறுதியானதும், ஆதாரபூர்வமானதுமாக இருக்கவேண்டும். ஏனெனில், பலவீனமான இரு செய்திகளை ஒன்றிணைத்துத் தீர்வுகாண முடியாது. காரணம், அவை இரண்டும் அடிப்படையில் ஆதாரம் கிடையாது.

2. இரு முரண்பட்ட செய்திகளும் ஒரே தரத்தை உடையதாக இருக்கவேண்டும். தரத்தில் ஏற்றத்தாழ்வுள்ள இரு ஆதாரங்களைக் கொண்டு தீர்வுகாண முடியாது.

3. இரு ஆதாரங்களை ஒன்றிணைத்துத் தீர்வுகாணும் போது பின்வரும் அம்சங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அறபு மொழிவழக்கில் ஏற்படுத்திவைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு முரணாக அமையக்கூடாது.
மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்காறுகள் மற்றும் அடிப்படை அம்சங்களுக்கு முரணாக அமையக்கூடாது.
அல்லாஹ்வின் சொல்லுக்கு பங்கமேற்படுத்தும் விதத்தில் வசனப்போக்குகள் அமையக்கூடாது.
4. இப்பணியில் ஈடுபடுபவர்கள் சட்ட மூலாதாரங்களை ஆய்வு செய்து தீர்வுகாணத் தகுதியானவர்களாக இருக்கவேண்டும்.

5. இவ்வழிமுறை மூலம் எடுக்கப்பட்ட தீர்வுகள் பின்வரும் தன்மைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

குறித்த விடயம் மார்க்கமாக்கப்பட்டதற்குரிய எதார்த்தத்தைத் தெளிவுபடுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். மாற்றமாக, அதனைவிட்டும் முற்றாக வெளியேறி சொந்த வியாக்கியானங்களைச் செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எடுக்கப்பட்ட தீர்மானம் மார்க்க சட்டதிட்டங்களில் கருத்தொருமித்த அம்சங்களை சீர்குலைக்கக்கூடியதாக அமையக்கூடாது. அல்லது அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் உறுதியாகக் கூறப்பட்ட விடயங்களுக்கு முரணானதாக அமையக்கூடாது. மேலும், மார்க்கத்தில் அவசியமெனக் கருதப்பட்ட விடயங்களுக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் இருக்கக் கூடாது.
இவ்வாறான அம்சங்களைத் தழுவிப் பெறப்பட்ட தீர்மானங்கள் நிச்சயமாக நிறைவானதாகவும், காத்திரமானதாகவும் இருக்குமென்பதில் ஐயமில்லை. எனவே, மேற்குறிப்பிடப்பட்ட விஷயங்கள்அனைத்தையும் கருத்திற்கொண்டு இப்படியான சந்தர்ப்பங்களில் இவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்றி சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு அல்லாஹ் எமக்கு அருள்புரிவானாக. அல்லாஹ் மிக அறிந்தவன்.

நன்றி: இஸ்லாம்கல்வி.காம் 



விமர்சனங்களை வென்றவர்


கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த உலகில் மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது.

சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம், வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது. இன்றும் நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாக இடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கான அவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிற துறைகளாகும். அந்தப் பாலைவனச் செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.

மூன்றாம் உலகம் யுத்தம் ஒன்று வருமென்றால் அதற்கு தண்ணீர் தான் காரணமாக இருக்கப் போகிறது என ஐ நா மன்றம் எச்சரித்துள்ளது. நீர் பங்கீடு மற்றும் நீர்ப்பாசனம் குறித்து முஹம்மது நபியின் வழிகாட்டுதல்கள் ஏற்றுக் கொள்ளப் படுமானால் அந்த அச்சத்திற்கு வழியே இருக்காது.

இந்த துறைகளிலெல்லாம் முஹம்மது (ஸ்ல்) அறிவுரைகள், அல்லது கருத்துக்களை கூறினார் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியாது. இத்துறைகள் அத்தனையும் அவர் பரிசோதனை முயற்சிகளை செய்து அதில் பெரும் வெற்றி கண்டார் என்று சொன்னால் அது கூட அவரை பற்றிய முழு அறிமுகமாகிவிடாது. தான் உருக்கொடுத்த அத்தனை சிந்தனைகளையும் வழிவழியாக பின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிச் சென்றார், அந்த சமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம் வரையும் அவரது சிந்தனைகளை ஆலோசனைகளை உத்தரவுகளாக தலைமேற் கொண்டு செயல்படக் காத்திருக்கிறது.

அவர் மறைந்து இன்றும் அவரைப் பற்றியும் அவர் விட்டுச் சென்ற தத்துவங்கள் நடைமுறைகள் குறித்தும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை பத்ரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உலகம் கொண்டாடும் மற்ற தலைவர்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது. இயேசு. புத்தர், ஆதி சங்கரர் விவேகானந்தர், காந்தி, போன்ற பலரும் அனைத்து மக்களாலும் பாராட்டப்படுகிறவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் இன்றைய நவ நாகரீகத்தின் அழுத்த்தை தாண்டி இவர்களை பின்பற்றுகிற ஆட்கள் உண்டா என்பதும் அப்படியே இருந்தாலும் அவர்களின் சதவீதம் எத்தனை என்பதும் கேளிவிக்குரியதாகும். முஹம்மது நபி (ஸல்) பாராட்டப்படுகிறவராக மட்டுமில்லாது இன்றளவும் கண்டங்கள் அத்தனையிலும் பின்பற்றப்படுகிறார் என்பதை கூர்ந்து யோசிக்க வேண்டும்.

இராக் நகரின் ஒரு வீதியில் திடகாத்திரமான ஒரு இளைஞனை முதியவர் ஒருவர் நியாயமின்றி அடிக்கிறார். அவன் அதை தடுக்காமலும் திருப்பி தாக்காலும் நிற்கிறான். ஏனென்று கேட்டால் பெரியவர்களை மதிக்க்காதவர் என்னை சார்ந்தவர் அல்ல என்று முஹமது கூறியுள்ளார். நான் அந்த பழிக்கு ஆளாக விரும்பவில்லை என்கிறான்.

வாஷிங்டன் தெருக்களில் முகத்தை மறைத்த படி இளம் கல்லூரி மாணவி நடந்து கொண்டிருக்கிறாள். ஏன் இப்படி என்று கேட்டால். இது முஹம்மது நபியின் உத்தரவு என்கிறாள்.

ஆஸ்திரேலியாவின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சாக்லேட் வேண்டும் என்று சிறுவன் அடம் பிடிக்கிறான். அதை எடுத்துப் பார்த்த தந்தை இது ஹலால் அல்ல என்கிறார். சிறுவனின் அழுகை நின்றுவிடுகிறது. என்ன என்று விசாரித்தால் முஹம்மது (ஸல்) என்று பெயர் சொல்லப்படுகிறது.

சோவியத் ஆக்ரமித்த பால்டிக் நாடுகளில் ஒன்றில் ஒரு இளைஞன் தொழுகைகான அழைப்பு பாங்கு வாசகங்களை கூறுகிறான். காவலர்கள் அடித்து உதைக்கிறார்கள், அவன் பாங்கை நிறுத்தவில்லை. அவனை சிறையிடைக்கிறார்கள் அங்கும் அவன் பாங்கு சொல்வதை நிறுத்தவில்லை. சொல்லனா தொல்லகளுக்குப் பிறகும் அவன் பாங்கு சொல்கிறான், கிருக்கன் என்று கூறி அவனை விடுதலை செய்கிறார்கள்.எதற்காக இப்படி என்று கேட்டால் முஹம்மது (ஸல்) கற்றுக் கொடுத்த அற்புதமல்லவா அது என்று அவன் பதிலளிக்கிறான்.

காஷ்மீரின் பனிப்பொழிவுகளின் அடர்த்திக்கு இடையேயும் மதுவின்றி வாழும் ஒரு சமுதாயம், வெட்கத்தை விலை பேசி விற்று விட்ட டென்மார்க்கிய நிர்வாணப் பிரதேசத்திலும் வரன்முறைக்கு உட்பட்டு வாழும் ஒரு சமுதாயம். பாரிஸ் நகரின் வீதிகளில் பர்தாக்களுக்களோடு உலாவருகிற ஒரு சமுதாயம். இன்றைய வால்ஸ்ட்ரீட்ளின் சாம்ராஜயத்தில் வட்டிக்கும் முறையற்ற வர்த்தகங்களும் எதிராக எப்போதும் கொடிபிடித்துக் கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் அமரிக்க விமானங்களில் இன்னும் தாடிகளுடன் பயணம் செய்கிற ஒரு சமுதாயம். நேட்டோ நாடுகளின் ஆக்ரமிப்பு குண்டு வீச்சுக்களுக்கு நடுவேயும் தொழுகைக்காக துண்டுவிரிக்கிற ஒரு சமுதாயம், சர்வதேச அளவில், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அன்றாடம் அணுகுண்டுகளை வீசிக் கொண்டிருக்கிற ஊடகங்களை தாண்டி உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் முஹம்மது என்ற பெயரை இன்னும் எத்தகைய உயிர்த்துடிப்போடு உச்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நியாயமாக யோசித்துப் பார்க்க வேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.

இத்தகைய ஆகர்ஷணம் கொண்ட ஒரு சக்தி எத்தகைய சத்திய வெளிச்சத்திற்குரியது என்பதை அறிஞர்கள் அளவிட வேண்டும். அற்பத்தனமாக் குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசுவதை விட்டுவிட்டு அவர் விசயத்தில் நியாயாமான ஒரு பரிசீலனைக்கு மக்கள் தயாராக வேண்டும்.

முஹம்மது நபியை களங்கப்படுத்தும் முயற்சியை அணு அளவிலும் விட்டுவைக்காத முஸ்லிம் சமுதாயம் அவரைப் பற்றிய கருத்து விவாதங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது.

அவரை தீவிரமாக எதிர்தவர்கள் அந்த சத்திய தரிசனத்தை நேரிட்டுக் கணட நிமிடச் சருக்கில் சரணாகதி அடைந்தனர் என்பதுதான் வரலாறு. உமர் ஒரு உதாரணம் போதாதா? ஒரு கவிஞன் சொன்னது போல் முஹம்மது என்ற நன் மலரை வெட்ட வந்த விரல்களே அந்த மலருக்கு காம்பாக மாறிவிடவில்லையா? எதிர்ப்பு எங்கே வலுவாக இருக்கிறதோ அங்கே பலமான தளத்தை அமைத்துக் கொண்டது தான் முஹம்மது நபியின் தனிச்சிறப்பு.

முஹம்மது நபி (ஸல்) தனது ஊர் மக்களிடம் “உங்களது உறவினன் நான். அந்தக் காரணத்தினாலேனும் என் வழியில் செல்ல என்னை அன்மதியுங்கள் என்று கோரிய போது அதைக் கூட ஏற்க மறுத்தனர் அம்மக்கள். ஆயினும் முஹம்மது நபி (ஸ்ல்) அவர்களது வாழ்வில் குற்றம் கண்டு பிடித்து அவரை தரம் தாழ்த்திட அவர்கள் முறசிக்கவில்லை.

முஹம்மது (ஸல்) தனது பிரச்சாரத்தின் தொடக்க முயற்சியாக கஃபா ஆலயத்தின் அருகே இருந்த சபா குன்றின் மீதேறி சப்தமிட்டு “பஹ்ர் குடும்பமே! அதீ குடும்பமே! கஃபு குடும்பமே ! இந்த மலைகனவாயினூடே உங்களை தாக்குவதற்கு ஒரு படை வரப்ப்போகிறது என்று நான் சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார். அதற்கு அம்மக்கள் சொன்ன வார்த்தையை வரலாறு பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறது. “நஅம்! மா ஜர்ரப்னா அலைக்க இல்லா சித்கன்” ஆம்! நம்புவோம்! நீர் உண்மையாளர் என்பது தான் எங்களது அனுபவம்” என்று அம்மக்கள் கூறினர். தனது சொல்லை ஏற்கச் செய்வதற்கான பீடிகியை அமைத்துக் கொண்ட பிறகு முஹம்மது ஸல்) தனது பிரச்சாரத்தை எடுத்துரைத்த போது “இதற்குத்தானா எங்களை அழைத்தாயா என்று கடிந்து கொண்ட அம்மக்கள் கடைசி வரை நபிகள் நாயகத்தின் நம்பகத் தன்மையில் குறை பேசவே இல்லை.

வரலாற்றில் ஒரு பேரதிசயமாக முஹம்மது நபியின் பிரதான எதிரியாக இருந்த அபூஜஹ்ல் “ நீ பொய் சொல்கிறாய் என்று கூறமாட்டேன்! ஆனால் உன்னை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று நபிகள் நாயகத்திடம் கூறினான். முஹம்மது நபி வாழ்ந்த காலத்தில் அவரை சூழ்ந்திருந்த சமுதாயம் அவரது வாழ்வின் மீது எந்தப் பழிச் சொல்லையும் சொல்லவில்லை.

இறைத்த்தூதர்களைப் பற்றி அனுபவமின்மை காரணமாக மக்காவின் மக்கள் நபி (ஸல்) பற்றி, கவிஞராக இருப்பாரோ! மந்திரவாதியோ! ஒரு வேலை இதுவும் ஒரு வகை சித்த பிரமையே! என்றெல்லாம் பேச முற்பட்டார்கள் என்றாலும் அப்படிக் கூட அவர்களால உறுதியாக பேச முடியவில்லை.

மக்காவின் செல்வாக்கு மிக்க செல்வந்தர் வலீது பின் முகீரா நபிகள் நாயகத்தை குறை சொல்லும் வார்த்தைய கண்டுபிடிப்பதற்காகவே தன்னுடைய வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நபிகள் நாயகத்தின் எதிரிகள் ஒன்று கூடினர். “கவிஞர்” “மந்திரவாதி” “சித்தபிரமை பிடித்தவர்” என் ஒன்றன்பின் ஒன்றாக பழிச் சொற்கள் கூறப்பட்டன. வலீது அவை ஒவ்வொன்றையும் மறுத்தார். முஹம்மதுவிடம் இந்தக் குறை இல்லை. இதை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அனைத்தையும் நிராகரித்தார்.. கருத்துச் சொன்னவர்கள் கடுப்படைந்தனர், நீங்களாவது ஒன்றை சொல்லுங்கள் என்றனர். வலீது சொன்னார். முஹம்மது விசயத்தில் நீங்கள் எதைச் சொன்னாலும் அது எடுபடாது. பொய்யென்று தெரிந்து விடும். “மா அன் தும் பிகாயீலீன பிஸய்யின் பீஹி இல்லா உரிப அன்னஹூ பாதில்)

ஒரு உத்தமரை வார்த்தையால் ஊனப்படுத்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அல்ல. தங்கத்தை உரசிப் பார்த்த பொற்கொல்லனின் தீர்ப்பாக – முஹம்மது நபியின் யோக்கியதாம்சத்தை நிறுவும் சான்றாக அமைந்தது.

தங்களது ஊர்கார்ரும் மரியாதையான குடும்பத்தவரும் நாணயமிக்கவருமான முஹம்மது (ஸல்) அவர்களை ஒன்று சேர்ந்து கொன்று விடலாம் என்று தீர்மாணித்தவர்கள் கூட முஹம்மது (ஸல்) வை பழிச் சொல்லுக்கு ஆளாக்கவில்லை.

ரோமப் பேரரசர்சர் ஹிர்கல் பாரசீகத்திடம் பெற்ற வெற்றிக்கு பரிகாரமாக பாலஸ்தீனத்திற்கு நடை பயணம் வந்திருந்த போது, அங்கு முஹம்மது நபியின் கடிதம் அவருக்கு கிடைத்தது. முஹம்மது நபியை பற்றி விசாரிப்பதற்காக அவர் மக்காவிலிருந்து வந்திருக்கும் வியாபாரக் குழுவை அழைத்தார். மக்கத்து எதிர்களுக்கு நபிகள் நாயகத்தை பழி தீர்க்கும் ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் கூட அவர்கள் முஹம்மது ஸல் அவர்கள் மீது அவர்கள் பழி கூறி ஒரு வார்த்தை கூறவில்லை.

முஹம்மது என்றால் புகழுக்குரியவர் என்று பொருள், அந்த பொருளுக்கேற்பவே முஹம்மது (ஸல்) வாழ்ந்தார்.

ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றின் மீதும் களங்கத்தை பூசும் முயற்சியை ஐரோப்பிய கிருத்துவர்களே முதன் முதலாக ஆரம்பித்தனர். சிலுவை யுத்தங்களின் போது இந்த வகையான தூற்றுதல் பெருந்தூரலாக இருந்தது. தம் மனம் போனபடிக்கு நாயகத்தை பழித்துப் பேசினர். அவரைப் போர் வெறியர் என்றனர்- பெண்ணாசை கொண்டவர், மோசடியாளர், என்றனர் சகிப்துத்தன்மை அற்றவர் என்றனர்.

அன்றிலிருந்து இன்றுவரை இந்த குற்ற இயல்புகளை அனைத்திற்கும் ஐரோப்பியர்களே பிறப்பிடமாக இருந்தனர். கீழ்த்தரமான, ஒழுக்கக்கேடு நிறைந்த குரூரமான செயல்களுக்கு இன்று வரை ஐரோப்பிய கிருத்துவ மேற்குலகை தவிர வேறு உதாரணம் இல்லை. இன்னும் சொல்வதானால் உலகிற்கு கொடுப்பதற்கு அவர்களிடம் இவற்றை தவிர வேறு எதுவும் இல்லை. ஐரோப்பிய கிருத்துவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிப் பேசிய கருத்துக்கள் பலவும் அவர்களுடைய மன விகாரத்தின் வெளிப்பாடாக அமைந்ததே தவிர, அதில் ஆத்திரமும் பொறாமையும் பொங்கி வழிந்ததே தவிர அதில உண்மை துளியும் இருக்கவில்லை. இஸ்லாமிற்கு எதிராக கிருத்துவர்களை திருப்புவதற்காக பெரும்பாலும் பாதிரிகளே இக்குற்றச் சாட்டுகளை கூறினார். அதனால் தான் அவர்கள் கூறிய குற்றச் சாட்டுக்கள் எதுவும் காலத்தின் காதுகளில் பதியவே இல்லை.

முஹம்மது நபியின் வரலாற்றின் வழக்கப்படி, அவருக்கு எதிரான குற்றச் சாற்றுகளுக்கு எதிர் தரப்பிலிருந்தே மறுப்புச் சொல்லப்பட்டது. முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களை கருத்து ரீதியில் சந்தித்து நறுக்கான பதில்களை முஸ்லிம் சமூகம் முன்வைக்கத் தவறவில்லை. ஆனாலும் முஸ்லிம் அல்லாத பிற சிந்தனையாளர்களின் தளத்திலிருந்து தரப்பட்ட பதில்கள் முஹம்மது நபியின் வாழ்வில் சத்திய வெளிச்சத்திற்கு சான்றாக அமைந்தன.

முஹம்மது நபிக்காக வாதிட்டு முஸ்லிம்கள் கூறும் பதில்களில் சமய ரீதியான அணுகுமுறை மிகைத்து இருந்தது என்றால் பிற சிதனையாளர்களின் பதில்கள் முஸ்லிம்கள் சிந்திக்காத மற்றொரு கோணத்தில் வாழ்வியல் ரிதியான எதார்த்தமான பதில்களாக அமைந்தன. “இதைக் கூடவா நீங்கள் கவனிக்கவில்லை” என எதிர்ப்பாளர்களை நோக்கி கேள்வி கேட்கிற தொனியில் அவை அமைந்திருந்தன.

மக்காவில் வலீது நட்த்திய கூட்டம் எப்படி நபிகள் நாயகத்தின் வரலாற்றுக்கு எதிர்திசையிலான புதிய பரிமாணத்தை தந்ததோ அதே போல ஐரோப்பியர்களின் குற்றச் சாட்டுகளும் முஹம்மது நபியின் வாழ்வில எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐரோப்பிய யூத காழ்ப்புணர்வின் குரூரத்தை அம்பலப்படுத்தினவே அன்றி முஹம்மது நபி புகழ் வாழ்வில் ஒரு தூசு அளவுக்கு கூட மாசுபடுத்திடவில்லை.

19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய உலகில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எதிராக புயல் வீசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வீச்சு மிகுந்த சிந்தனையாளரும் அற்புதமான பேச்சாளருமான தாமஸ் Heroes and Hero-Worship என்ற தலைப்பில் உலகின் கதாநாயகர்களைப் பற்றி தொடர் உரைகள் நிகழ்த்தினார். எடின்பரா பல்கலையில் சட்டம் பயின்ற அவரது உரைகளை மக்கள் கட்டணம் செலுத்திக் கேட்டனர். அவர் எழுதிய The Heroes என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. கார்லைல் தனது உரைகளுக்கு கவிதை கதாநாயகர்க்களாக தாந்தே, ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரையும், கதாநாயக பாதிரியாராக மார்டின் லூதரையும், கதாநாயக இலக்கிய எழுத்தாளராக ஜான்ஸனையும் ரூஸோவையும், ஆட்சியாளராக நெப்போலியனையும் தேர்வு செய்து அவர்கள் குறித்து ஆழமான கருத்துரைகளை வழங்கினார். 1840 ம் மே 8ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கதாநாயகர் – ஒரு தீர்க்க தரிசியாக என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது இந்த தலைப்பிற்கு தீர்க்க தரிசிகளின் பட்டியலிலிருந்து மோஸேவையோ இயேசுவையோ தேர்ந்தெடுக்காமல் யாரும் எதிர்பாரத விதமாக முஹம்மது (ஸல்) அவர்களை தேர்வு செய்தார்.

வெளையர்கள் கருப்பின மக்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைபோல் அந்த கிருத்துவ சமுதாயம் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது வெறுப்புக் கொண்டிருந்தது. தலைப்பே அவர்களை திடுக்கிட வைத்தது என்றால் தொடர்ந்து அவர் பேசிய தகவல்களில் ஐரோப்பிய மக்களுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் காத்திருந்தன.

“முஹம்மதுவுக்கு எந்த வேதச் செய்தியும் வரவில்லை என்று நையாண்டி பேசிய 17 ம் நூற்றாண்டைச் சார்ந்த Hugo Grotius என்ற டச்சு கவிஞனின் கருத்தை மறுத்து தன்னுடைய உரையை தொடங்கிய கார்லைல், “It is a great shame for anyone to listen to the accusation that Islam is a lie and that Mohammad was a fabricator and a deceiver என்று தொடர்ந்தார்.

இஸ்லாம் பொய்யான ஒரு சமயம்; முஹம்மது ஒரு ஏமாற்றுக்காரர் என்று குற்றச் சாட்டை ஏற்பது எந்த நாகரீகமான பிரஜைக்கும் வெட்கரமானது. என்ற அவரது தொடக்கம் நேயர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது,

Hugo Grotius கற்பனையாகவும் கிறுக்குத்தனமாகவும் சொன்ன கதைகளில் கிருத்துவ உலகம் அகமகிழ்ந்து கொண்டிருந்த்து. முஹம்மது சில புறாக்களை வளர்த்தார், அந்தப் புறாக்களுக்கு அவர் நல்ல பயிற்சி கொடுத்தார். அவை அவரது தோளில் வந்து உட்கார்ந்து அவரது காதோரம் வைக்கபடுகிற தானியங்களை சாப்பிடும், அதைதான் தனக்கு வஹி இறைச் செய்தி வருவதாக அவர் என முட்டாள்தனமாக கதை கட்டி விட்டிருந்தான். Hugo Grotius. இவன் மட்டுமல்ல கிருத்துவ உலகத்தைச் சார்ந்த புத்திசாலிகள்(?) பலரும் இப்படித்தான் உண்மைக்கு சற்றும் தொடர்பில்லாத அறிவீனமான கற்பனைகளை முஹம்மது (ஸல்) அவர்கள் விசயத்தில் நம்பியிம் பேசியும் வருகிறார்கள். இஸ்லாம் தொடர்பாக தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்ட அறிவீனமான கருத்துக்களை நம்பி, பேசி, அதையே விவாதம் செய்து பரப்புவதன் மூலம் அற்பமாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த கிருத்துவர்கள் நிறைந்திருந்த அந்த திரளான சபையில் கார்லைல் உரத்துக் கூறினார்.

“இந்த மனிதர் விசயத்தில் இனவெறியோடு திட்டமிட்டு நாம் உருவாக்கிய இந்தப் பொய்களால் நமக்குத்தான் இழிவே தவிர ஒருபோதும் அவருக்கல்ல.”

தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் நாணயம், உள்ளத்தூயமை ஆகியவற்றை கிலாகித்துப் பேசிய கார்லைல், நபிகள் நாயகத்தின் ஒரு செயலை மிக உவப்போடு குறிப்பிட்டார்.

முஹம்மது (ஸல்) ஒரு முறை மக்காவின் தலைவர்க்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஏழை கண் தெரியாதவரான அப்துல்லாஹ் பின் உம்மி மக்தி இடைமறித்து பேசினார். நபிகள் நாயகம் முகம் சுளித்தார். அப்போது அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற கருத்தில் “ பார்வையற்றவர் தேடி வந்த போது முகம் கடுகடுத்தார் என்ற கருத்தில் இறைவசன் அருளப்பெற்றது.

அதற்கு பிறகு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) தன்னிடம் வருகிறபோது அவரை “நான் கண்டிக்கப்பட காரணமாக இருந்தவரே வருக என பாசத்தோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்பார்கள். வெளியூர்களுக்குச் சென்ற நேரங்களில் இரண்டு முறை அவரை மதீனா நகரின் பொறுப்பாளராக நியமித்தார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளை எடுத்துக் காட்டிய கார்லைல் “கதாநாயக தீர்க்கதரிசியின் உளத்தூய்மையும் நேர்மையும் இந்த அளவுக்கு இருந்தன என்று கூறினார்.

நபிகள் நாயகத்தின் சத்தியத்தன்மையை எடுத்துக்காட்ட கார்லை அற்புதமான – உலக அனுபவத்தின் சத்தாக அமைந்த ஒரு நியதியை எடுத்துவைத்தார்.

“முஹம்மது ஒரு ஏமாற்றுக்கார்ராக இருந்திருந்தால் 12 நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கிற – 18 கோடி மக்கள் நிழல் பெறுகிற ஒரு சமயத்தை அவரால நிறுவி இருக்க முடியாது. சரியான அடித்தளமில்லாத ஒரு கட்டிடம் சீக்கிரம் விழுந்து விடும். மோசடியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. பொய் சீக்கிரமே வெளுத்து விடும்.”

ஐரோப்பிய சமுதாயம் மட்டுமே இன்று வரை நபி (ஸல்) அவர்களது திருமணங்களை கொச்சைப் படுத்தி வருகிறது. அவரை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்க முயல்கிறது. வெட்கங்கெட்ட வாழ்கையுடையோர் உயரிய ஒழுக்கம் சார்ந்த திருமண வாழ்வை குறைகூறுவது ஏற்புடையதல்ல.

இருப்பினும், தாமஸ் கார்லை ஐரோப்பியர்களுக்கு அன்றைய பாரசீக மன்னரான கிஸ்ராவின் ஆடம்பர வாழ்வையும் ரோமச் சக்ரவர்த்தியான கைஸைரின் டாம்பீகத்தையும் நினைவு படுத்திக் காட்டுகிறார். வானத்தோடு தொடர்பு கொண்டிருந்த முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பூமியின் மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடங்களில் அக்கறையிருக்கவில்லை என்பதை விவரிக்கிறார். சிற்றின்ப ஆசை அவரது திருமணங்களுக்கு காரணமல்ல என்பதை முஸ்லிம் அறிஞர்கள் பலவகையிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

முதல் மனைவி கதீஜா (ரலி) இறந்த பிறகே நபி (ஸல்) 10 திருமணங்களைச் செய்தார். அன்றைய அரபகத்தில் பல பெண்களை திருமணம் செய்வது சர்வசாதாரண வழக்கமாக, குறை காணப்படாததாக இருந்தது. அப்படி இருந்தபோதும் அதுவரை ஒரு மனைவியுடனேயே வாழ்ந்தார்.

நபிகள் நாயகத்தின் 50 வயதுக்குப் பின்னரே இரண்டாவது திருமணம் நடைபெற்றது. மற்ற அதிகமான திருமணங்கள் ஹிஜ்ரி 5 க்குப்பின் நடைபெற்றன. அப்போது பெருமானார் 58 வயதை கடந்து விட்டிருந்தார். இத்தனை திருமணங்களுக்குப் பிறகும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த பல பெண்களை பெருமானார் நபி (ஸல்) ஏற்க மறுத்ததை வரலாறு காட்டுகிறது.

நபி(ஸல்) கடைசி மனைவி மைமூனா (ரலி). அவரை திருமணம் செய்து கொண்டது முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக பல நனமைகளை தந்தது. பிற்காலத்தில் இஸ்லாத்திற்கு மாபெரிய வெற்றிகளை வாரிக்குவித்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அத்திருமணத்திற்கு பின்னரே இஸ்லாமை தழுவினார். அவருடன் மற்றொரு பிரபலமான அம்ரு பின் ஆஸ் (ரலி) இஸ்லாமைத் தழுவினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) தன்னுடைய தோழர்களிடம் மக்கா தன்னுடைய ஈரல்துண்டுகளை நம்மிடம் வீசி விட்டது என்று கூறினார். இதற்கு ஒருவகையில் காரணமாக இருந்த மைமூனா அம்மையார் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சித்தியாவார்.

தாமஸ் கார்லைல் மற்றவர்கள் யோசிக்காத புது வகையில் நபி(ஸல்) அவர்களின் புனித்ததை நிரூபிக்கிறார்.

“முஹம்மது, அவர் மீது அக்கிரம்மாகவும் வரம்பு மீறியும் சொல்லப்படுவது போல சிற்றிண்ப ஆசை கொண்டவரல்ல. எளிய உணவு எளிய இருப்பிடம் மற்ற அனைத்திலும் எளியதை கொண்டு திருப்தி கொள்ளும் ஒரு துறவியாக அவர் இருந்தார். பல மாதங்கள் பசியால வாடிய வாழ்க்கை அவருடையது”

சத்தான உணவு, கவர்ச்சியான ஆடைகள், வசதியான தங்குமிடம், வளமான பொருளாதாரம், கவலையற்ற வாழ்க்கை ஆகியவை சிற்றின்ப உல்லாச வாழ்க்கைகு மனிதனை தூண்டுபவை. இவை எதுவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் கிடைக்கவில்லை என்பது எதார்த்தம்.

முஹம்மது (ஸல்) தனது எதிரிகளை முழு வீரத்தோடு எதிர்த்துப் போராடி வெற்றி கண்டார் என்பதை ஐரோப்பிய கிருத்துவர்களால தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் முஹம்மது (ஸல்) பல யுத்தங்களுக்கு காரணமாக இருந்தார். வாள் முனையில் சமயத்தை பரப்பினார் எனப் புகார் கிளப்பினர். அவர் கற்றுக் கொடுத்த ஜிஹாத் என்ற சொல் மனித சமூகத்தின் நிம்மதியை குலைத்து விட்டதாக இப்போதும் சிலர் புலம்புகின்றனர்.

உயிர்ப்பலியை முஹம்மது (ஸல்) எவ்வளவு வெறுத்தார், அதை தடுப்பதற்க்கு அவர் மேற்கொண்ட முயற்சி என்ன? அவரது வரலாற்றை படித்தால் குறைந்த பட்சம் அவரது பொன்மொழித் தொகுப்பில் இருக்கிற ஜிஹாத் பற்றிய அத்தியாயத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் திறந்த புத்தகமாக எங்கும் கிடைக்கிறது.

ஒரு அரசியல் தலைவரின் முழு வாழ்வும் அப்பட்டமாக திறந்து காட்டப்படும் அதிசயம் முஹம்மது (ஸல்) அவர்களது வரலாறில் கிடைப்பது போல வேறு எங்கும் காணக்கிடைக்காது. அந்தப் புனித வாழ்வில் மர்மத் திட்டங்கள் இல்லை, இரகசிய உத்தரவுகள் இல்லை. பொறி பறக்கும் விஷம் தோய்ந்த வார்த்தைகள் இல்லை.

யுத்தம் என்பது ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாதது. சில சந்தர்ப்பங்களில் அது அவசியமானதும் கூட. அத்தகைய நிர்பந்த சந்தர்ப்பங்களிலேயே முஹம்மது (ஸல்) அவர்கள் யுத்தம் செய்தார்.

போர்க்களத்தில் அகிம்சையை வலுயுறுத்தி முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மது (ஸல்) ஒருவராகத்தான் இருக்க முடியும். ஹிஜ்ரி 5ல் நடைபெற்ற முரைசிஃ களத்தில் தோழர்களுக்கு அவர் சொன்னார். எதிரிகளை சந்திக்க ஆசைப்படாதீர்கள்! இறைவனிடம் அமைதியை பிரார்த்தியுங்கள். எதிரிகளை சந்தித்தால் முந்திக் கொண்டு வாளை உயர்த்தாதீர்கள். ஒருவேளை நீங்கள் தாமதிக்க அவர்கள் உங்கள் மீது வாள் வீசி விட்டால். அறிந்துகொள்ளுங்கள்! அந்த வாட்களின் நிழ்லில் உங்களது சொர்க்க காத்திருக்கிறது.

இன்றைய முன்னேறிய உலகில் கூட போர் மரபுகள் கடை பிடிக்கப்படுவதில்லை. இராக்கில் நூற்றுக் கணக்கான பெணகளும் குழந்தைகளும் தங்கியிருந்த பதுங்கு குழியின் வாசலை குறி பார்த்து அமெரிக்கா ஏவுகணையை வீசியது. மற்றொரு தடவை ஈரான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்றை ஏவுகணை வீசி அழித்தது.

முஹம்மது நபி உலகில் முதன் முறையாக போர் மரபுகளை சட்டமாக்கி அமுல் படுத்தியவர் ஆவார். பெண்கள், சிறுவர், முதியோர், சண்டைக்கு வராது ஆலயங்களிலிம், பதுங்கு குழுகளிலும் அடைக்கலம் தேடியிருப்பவர்களை கொல்லக் கூடாது. யாரிடமும் சண்டையிடுவதற்கு முன் அவர்களிடம் நியாயம் பேச வேண்டும் என்பது மட்டுமல்ல. மரங்களை வெட்டக் கூடாது. விலை நிலங்களுக்கு தீ வைக்க கூடாது என்பதும் முஹம்மது (ஸல்) வரைந்து கொடுத்த போர் நியதிகளாகும்.

முஹம்மது (ஸல்) தன் வாழ்வில் 9 சண்டைகளை சந்தித்தார் என்பதை படிக்கிற நியாயவான்கள். அந்த சண்டைகளின் போது அவர் போட்ட உத்தரவுகளையும் அது கடைபிடிக்கப் பட்ட ஒழுங்கையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

முஹம்மது (ஸல்) ஆயுதங்களின் வழியே சமயத்தை பரப்பினார் என்று புலம்புவோரைப் பார்த்து திலாஸி ஒலேரி கூறுகிறார். “ஆயுத பலத்தால் மக்களை இஸ்லாமை ஏற்க முஹம்மது நிர்பந்தித்தர் என்பது சுத்தமான கற்பனையாகும். சிரிப்பை வரவழைக்க கூடியது. அது உணமையிலிருந்து வெகு தூரம் விலகிய ஆரோக்கியமற்ற வாதமாகும்.” (islam at the cross road By De Lacy O’Leary- london – 1923 )

முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை நியாயமாக எடை போடுகிற யாரும், ஓளிவு மறைவோ, சூதுவாதோ அற்ற அந்த மகத்தான வாழ்வை மதிப்பாகவே கருதுவர். அதில் பிரமிக்கவே செய்வர். இது போல தூய வாழ்வு இன்னொன்று இல்லை என்று தாமாகவே கூறுவர். – ஜி.ஜி. கெல்லட் – கூறுவதை கேளுங்கள்!

“ இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.”

முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை அவர் யார் என்ற எதார்த்தமான கேள்வியோடு வாசிக்கும் எவருக்கும் இந்த அனுபவச் சிலிர்ப்பு ஏற்படவே செய்யும். ஏனென்றால்
அந்த வாழ்வில்

· கருணைக்கு எதிரான ஒரு பார்வையில்லை
· நீதிக்கு எதிரான் ஒரு செயல் இல்லை
· ஒழுக்கத்திற்கு எதிரான் ஒரு அசைவில்லை
· பெண்களுக்கு எதிரான ஒரு ஒரு வசை இல்லை
· சிறுவர்களுக்கு எதிரான் ஒரு கடுப்பில்லை
· நேர்மைக்கு எதிரான ஒரு சூது இல்லை
· பொது நன்மைக்கு எதிரான ஒரு சிந்தனை இல்லை
· சமத்துவத்திற்கு எதிரான ஒரு சமிக்ஞை இல்லை
· சகிப்புத்தன்மைக்கு எதிரான ஒரு உத்தரவில்லை
· சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு சூழ்ச்சி இல்லை
· மொத்தமாக சொல்வதானால்
· சத்தியத்திற்கு எதிரான ஒரு சொல் இல்லை.

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். என்றார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற நூலாசிரியரான – எஸ். எச். லீடர் (-S.H. Leeder – Modern Sons of the Pharaohs)

நன்றி: கோவை அப்துல் அஜீஸ் பாகவி
                 ரீட்இஸ்லாம்.நெட்


இன்றைய இளம்பெண்கள்

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.

இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;

தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;

மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.

அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்


திருமணத்தில் தீய பழக்கங்கள்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.

ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம் பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான ஆண்களா?

மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்” வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-

திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும்  மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும்   பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும்   ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும்   எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?

சமுதாயம் சீர் பெற   இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பெருமைக்காகவும்   ஆடம்பரத்துக்காகவும்   செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்.

‘குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.” என்பது நபி மொழி. (அறிவிப்பவர். ஆயிஷா (ரலி) ஆதாரம் அஹ்மத்)

வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.

கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.

வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர்.

என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம்.

சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல்   பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு   கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக் கழிக்கிறார்கள்.

மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து விட வேண்டும். மஹர் தொகையை இப்போது கொடுப்பதால் ‘தலாக்” ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கை. அறியாமல் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வளவு அனாச்சாரங்கள் அரங்கேரும் போதும் உலமாக்கள் என்று சொல்லுபவர்கள் உக்கார்ந்து மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள் என்றால் இதுதான் இஸ்லாத்தை போதிக்கின்ற முறையா? திருமணத்தை எதிர்நோக்குகின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது திருமணம் ஆடம்பரமில்லாமல் சுன்னாஹ்வின் வழியில் நடைபெற உதவிபுரிய வேண்டும். ஊர் வழமை, சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டிய திருமணத்தை, எளிய திருமணத்தை நடத்திக்காட்டி சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்

சனி, 22 செப்டம்பர், 2012



இஸ்லாத்தின் பெருமையுணர்ந்த தற்கால எதிரிகள்!



சென்ற வார சர்ச்சையாளன் அமெரிக்க கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் (Terry Jones), இந்த வாரம் ஃபிரெஞ்சு பத்திரிக்கையாளன் Charb என்று அழைக்கப்படும் Stéphane Charbonnier! இவன் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் எனச்சொல்லி நிர்வாணப் படமாக‌ தனது பத்திரிக்கையில்  (19.09.12) வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்ச் அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கையாக உலகெங்கிலும் உள்ள ஃப்ரெஞ்ச் தூதரகங்களில் இதுவரை 20 க்கும் மேற்பட்ட தூதரகங்களுக்கும், ஃப்ரெஞ்ச் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொருமுறை இஸ்லாம் விமர்சிக்கப்படும்போதும் அது அபரிமிதமான‌ வளர்ச்சியே கண்டுள்ளது! அந்த வளர்ச்சிவேகம் மேலும் கூடவேண்டும் என இறைவன் நாடியுள்ளானோ, என்னவோ... மதவெறி பாதிரியைத் தொடர்ந்து, அந்த சூடு அடங்குவதற்குள் அடுத்த வாரமே மீண்டும் எதிரிகளின் கயமைத்தனங்கள்! இஸ்லாத்தை ஆயுதமாக வைத்து தங்களுக்கு உலக அளவில் விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பும் கேடுகெட்ட ஜென்மங்களே..! அந்நியப் பெண்ணை ஆசையாய் பார்ப்பதுகூட கண் செய்யும் விபச்சாரம் என எச்சரித்தார்களே அந்த அண்ணல் நபி முஹம்மத்(ஸல்)...!! அந்த பத்தரை மாற்றுத் தங்கத்தை உரசிப் பார்க்கிறீர்களா..? இறைவன் நாடினால் நீங்களும் உணர்வீர்கள் ஒருநாள் அந்த 'முஹம்மத்' யாரென்று!

உலகெங்கிலும் இஸ்லாம் மார்க்கம் மளமளவென வளர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை யாருக்கும் நாம் சொல்லிதான் தெரிய வேண்டியதில்லை. இஸ்லாத்தின் இத்தகைய வளர்ச்சி இவ்வுலகுக்கு ஒன்றும் புதிதல்ல! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்தவொரு தனிமனிதனும் உரிமைக் கொண்டாட முடியாத அளவுக்கு நாம் நினையாத புறத்திலிருந்து அதன் வளர்ச்சி தொடர்ந்துக் கொண்டேயுள்ளது. அது ஏன்...? இப்படியொரு வளர்ச்சி எப்படி...? அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒருசில‌ முக்கிய/அடிப்படைக் காரணங்களை இஸ்லாமியர்கள் அனைவரும் புரிந்திருக்கிறார்களோ இல்லையோ, இஸ்லாத்தின் எதிரிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்! அவையென்ன அந்த முக்கிய‌ காரணங்கள்...?

1) ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அணுவளவுகூட மாறிவிடாத, மனிதக் கரங்களால் மாசுபடுத்த முடியாத, முக்காலமும் பேசக்கூடிய, வாழும் அற்புதமாக விளங்கும் ஒரே வேதமான அல்குர்ஆன்!!

2) அகிலமே அண்ணார்ந்து பார்க்கும் உன்னத நபியான, மனிதருள் மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தூய்மையான, உயரிய வாழ்க்கை நெறி!!

உலக மக்கள் தொகை எந்தளவுக்கு அதிகமாகிக் கொண்டே வந்துள்ள‌தோ, அதைவிட அதிவேகமாக இஸ்லாம் வளர்ந்துக் கொண்டிருப்பதற்கு மேலே சொன்ன அந்த இரண்டு காரணங்கள்தான் அடிப்படையானவை என்பதை 'இஸ்லாமோஃபோபியா'வில் ஊறித் திளைத்த எதிரிகளும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இப்போது உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை!

அதாவது இறைவனின் அற்புத வேதமான அல்குர்ஆனும், அதற்கு விளக்கவுரையாக அமைந்த அண்ணலெம் பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்ந்துக் காட்டிய‌ வாழ்க்கை முறையும் இவ்வுலக மாந்தர்களை இஸ்லாமிய வழியில் நாள்தோறும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன! அதன் அருமை, பெருமைகளை சிந்தித்துணர்ந்த மக்கள் மனமுவந்து குடும்பத்துடனும், குடும்பத்தைவிட்டு தனியொரு ஆளாகவும் இஸ்லாத்தின் பக்கம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்! கிறிஸ்துவக் கொள்கைப் பரப்பாளர்களைப்போல் பணத்தையும், பதவியையும் காட்டி யாரும் இஸ்லாத்திற்கு அழைக்கவில்லை. மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள எந்தவித கட்டாயங்களுக்கோ, மிரட்டல்களுக்கோ இஸ்லாத்தில் இடமில்லை. இவ்வுலக-மறு உலகுக்கான உண்மை வழியை உணர்ந்த மக்கள்தான் தத்தமது வாழ்வின் நற்பலன்களை அடைய‌ விரும்பி அணி அணியாய் இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள்!!

அதேசமயம் மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும், ஒவ்வொரு படிநிலைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முறையான தீர்வு சொல்வதாக இருக்கும் அல்குர்ஆனுக்கு ஈடான எந்த‌வொரு வேதத்தையும் இஸ்லாத்தின் எதிரிகளால் காட்ட இயலவில்லை! அதனால்தான் சில‌ வல்லரசுகள் அதைத் தடை செய்யவும், அழிக்கவும் துடிக்கின்றன. கையில் கிடைக்கும் குர்ஆனையெல்லாம் தீயிட்டு கொளுத்தி தன் துவேஷத்தை வெளிப்படுத்துகின்றனர். தீக்கிரையாக்கினாலும், கடல் நீரோடு கரைத்துவிட்டாலும், மண்ணில் புதைத்து மக்க வைத்தாலும் அல்குர்ஆன் இவ்வுலகை விட்டு அழிந்துவிடுமா? என்னவொரு அறியாமை!!

அயோக்கியப் பாதிரி

அதன் மீது சிறுநீர் கழித்து அவர்களின் மதவெறியைத் தணித்துக் கொண்டால், அல்குர்ஆன் சிறுமைப்பட்டு விடுமா? அல்லது அதன் அற்புதத் தன்மைகள்தான் குன்றிவிடுமா? அவர்களின் இச்செயல்கள் மடத்தனத்தின் உச்சக் கட்டமல்லவா? அதேபோல் மாமனிதர் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி படமெடுத்தால், நிர்வாணக் கார்ட்டூன் வரைந்தால் இஸ்லாமிய சமூகத்தை வேண்டுமானால் மனதால் காயப்படுத்தலாம். ஆனால் அத்தகைய‌ ஈனச்செயல்கள் மூலம் அந்த மனிதப் புனிதரை, அந்த உத்தம நபியை அவருடைய‌ அந்தஸ்திலிருந்து அணுவளவும் இறக்கிவிட முடியாது என்பதுகூட தெரியாத இவர்கள்.. கடைந்தெடுத்த‌ மடையர்களல்லவா?

பொய்யான காரணங்கள் சொல்லியும், வேண்டுமென்றே காரணங்களை உண்டாக்கியும் இஸ்லாமிய நாடுகளுக்குள் ஊடுருவி அப்பாவி முஸ்லிம்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவிப்பதும், பெண்களை மானபங்கப்படுத்துவதும், தங்களின் கோர தாண்டவ‌த்தில் சிறுவர்களைக்கூட விட்டுவைக்காமல் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், 'இஸ்லாம்' என்ற மார்க்கமோ, அதைப் பின்பற்றுப‌வர்களோ இவ்வுலகில் இருக்கக்கூடாது என்ற ரத்தவெறிப் பிடித்த காட்டேரிகளின் எண்ணங்களின்படி நடந்துக் கொண்டிருக்கின்றன. அவர்களின் வியூகம் எப்படிப்பட்டது என்பது யாருக்கும் விளங்காமல் இல்லை. இஸ்லாம் மார்க்கம் எல்லாவிதமான‌ சவால்களையும் வென்றெடுத்து உலகம் முழுதும் மிக வேகமாகப் பரவி வருவதை இவர்கள் காண்கிறார்கள். ஆய்வுகளின் மூலம் அதனை உறுதியும் செய்திருக்கிறார்கள். (விபரத்திற்கு: பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை) இதே விகிதத்தில் இஸ்லாம் உலகில் பரவும் என்றால் 2020 ஆம் வருடத்தில் இஸ்லாம் உலகின் மிகப் பெரிய சமயமாகும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன!!

2001, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. உலகின் எந்த வன்முறை நிகழ்வாக இருந்தாலும், யார் செய்த குற்றம் என உறுதிபடுத்த முன்னரே, ஏன்.... அடுத்த சில நிமிடங்களிலே அந்த குற்றத்திற்குரியவர்கள் இஸ்லாமியர்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள்! இதனால்,
"அதிக அளவில் இஸ்லாம் விமர்சிக்கப்படுவது ஏன்" என்று நடுநிலையாளர்களிடம் எழும் ஐயத்தின் மூல‌ம், அவர்கள் "இஸ்லாத்தினைத் தெரிந்துக் கொள்ள முயன்று இஸ்லாமிய புத்தகங்களை தேடிப்பிடித்து படித்தபொழுதுதான் இஸ்லாத்தைப் பற்றிய முழு அறிவு தமக்கு கிடைத்தது" என்பதே 2001 க்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர் கூறிய கருத்துக்களாக பதிவு செய்யப்பட்டது.
 இதே காலகட்டத்தில் அமெரிக்க புத்தகக் கடைகளிலும் லைப்ரரியிலும் அதிகம் விற்றுத்தீர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்ட ஒரே நூல், இறைவேதமான திருக்குர்ஆன்தான் என்ற செய்தி வெளிவந்தமை கவனிக்கப்பட வேண்டிய‌தாகும்.

கத்தோலிக்க மதத்தலைவராக உள்ள போப் ஆண்டவர், “உலகத்தில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம்” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என போப் விடுத்த அறிக்கையை மேற்கோள் காட்டி வாடிகன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும், கிறித்தவ மத நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும், உலக மக்கள் தொகையில் நூற்றில் 17.5 சதவிகிதத்தினர் கிறிஸ்தவர்களென்றால் அதில் 19 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். வருடந்தோறும் 40 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும், கிறித்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். (நன்றி: tntj.net)

இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாகவும், அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி மக்கள் சென்றுக் கொண்டிருப்பதாகவும், இதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தியும் டென்மார்க் நாட்டில் கடந்த மார்ச் மாதம் இஸ்லாமிய எதிரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். (பார்க்க‌). வல்ல இறைவனின் இம்மார்க்கம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துக் கொண்டு செல்கின்றது என்பதற்கு இதுவும் மிகப்பெரிய‌ சான்றாக அமைந்துள்ளது! இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்துவிட எண்ணி இவர்கள் நடத்தும் இத்தகைய போராட்டங்களினால்கூட சத்திய மார்க்கத்தை நோக்கி மக்களை திருப்பக்கூடிய எதிர்வினைகளே நடந்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் 'இஸ்லாம்' என்பது அனைவரையும், அனைத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம்!

ஆக விரும்பியோ, விரும்பாலோ இஸ்லாத்தின் பெருமையை உணர்ந்திருக்கும் இஸ்லாத்தின் எதிரிகள், அதன் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி குறைக்கூறி வெற்றிபெற முடியாது என்பதைப் புரிந்துதான் இஸ்லாமியர்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விஷமத்தனங்கள், பொய்ப் பிரச்சாரங்கள், புண்படுத்தும் வரம்பு மீறல்கள், வன்முறையாட்டங்கள், கொலைவெறித் தாக்குதல்க‌ளின் மூலமாக‌ காய் நகர்த்துவதெல்லாம் இஸ்லாம் இன்னும் வளர்ந்துவிடுமோ, இஸ்லாமியர்கள் மேலும் பெருகிவிடுவார்களோ என்ற வெறித்தனமானதொரு அச்சத்தின் விளைவுகளே! யார் எதன்மீது பொய்ப் பிரச்சாரங்கள் செய்தாலும் அவை எப்போதுமே அதற்கு எதிர்மாறான விளைவுகளையே கொடுக்கும். இஸ்லாத்தின் மீதான இன்றைய திட்டமிட்டப் பொய்ப் பிரச்சாரங்களும், அவற்றை அநாயசமாக எதிர்க்கொண்டு தன்மீது பொய்யாக போடப்படும் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு மக்களிடையே வேகமாக வளரும் இஸ்லாம் மார்க்கமும் இதற்கு கண்கூடான சாட்சிகள்!!!

கார்ட்டூன் கயவன்

எனவேதான் நாகரீகம் தெரியாத கற்றறிந்த மூடர்களாலும், மனிதத்தைப் புரிந்துக் கொள்ள இயலாத மனித நேயமற்ற கயவ‌ர்களாலும், அடுத்த‌வர்களை அடக்கியாளத் துடிக்கும் அநியாயக்காரர்களாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. எதைச் சொன்னால் இஸ்லாமியர்கள் பொங்கி எழுவார்கள் எனத் தெரிந்துக் கொண்டு, தங்கள் உயிரைவிட மேலாக மதிக்கும், மாசற்ற‌ வாழ்வை வாழ்ந்துக் காட்டி உலக மாந்தர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்த‌ அண்ணல் நபியவர்களின் மீது களங்கம் கற்பிக்கத் துணிந்திருக்கிறார்கள். எட்டாத உயரத்தில் உள்ள வெந்நிலவை நோக்கி சேற்றை அள்ளியெறிந்தால் எறிந்தவன் முகத்தையே அது நாசப்படுத்தும் என்பது இன்னும் அவர்களுக்கு ஏனோ புரியவில்லை!

வளர்ந்துவரும் இஸ்லாத்தின் மீதுள்ள வெறியினால் வரம்பு மீறும் கையாலாகாத கோழைகளே! உங்களிடம் சில கேள்விகள்:

* வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் என்ற பந்தம் இல்லாமலே சேர்ந்து வாழ, உங்கள் பெண் குழந்தைகளுக்கு கர்ப்பத்தடை சாதனங்களை கையில் மறவாமல் கொடுத்து வெளியில் சுற்றித்திரிய அனுமதிக்கும் மான‌ங்கெட்ட வாழ்க்கைக் கலாச்சாரத்தைக் கொண்ட அமெரிக்க/ஐரோப்பிய சமுதாயமே! ஒழுக்கம் சார்ந்த உயரிய திருமண வாழ்வினை வாழ்ந்துக் காட்டிய‌ முஹம்மத் நபியை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்கும் தகுதி உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

* ஒழுக்கமின்மை தலைவிரித்தாடும் கட்டுக்கோப்பில்லாத உங்கள் சமூகத்தின் ஆண்களுக்கு வீட்டில் ஒரு மனைவியும், வெளி உல்லாசத்திற்கு பல பெண்களையும் அனுபவிக்கும் ஒழுக்கக்கேடு உங்களுக்கு அருவருப்பாக‌ தோன்றவில்லையா?

* பெண்ணுரிமை இயக்கங்களைச் சார்ந்த பெண்கள் எனக் கூறிக்கொண்டு, இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாபுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் வீதியில் போராட்டம் பண்ணும் விபச்சாரிகளை காரித் துப்பாமல், கண் கொட்டாமல் பார்த்து அதை செய்திகளாகவும் வெளியிட உங்களுக்கு வெட்க உணர்வே கொஞ்சமும் இல்லையா?

* ஓரினச் சேர்க்கைக்காக திருமணம் செய்வ‌தை வீடியோக்களாக
உலகமே பார்க்கும் வண்ணம் பெருமிதத்தோடு வெளியிடும் உங்கள் காட்டுமிராண்டி கலாச்சாரத்தினை முற்போக்குத்தனம் என்பீர்களா?

* ஜெபம் பண்ண வந்த பெண்களையும், சிறுமிகளையும் உங்கள் பாதிரியார்கள் நாசம் பண்ணியதை மத போதகம் என மார்தட்டிக் கொள்வீர்களா?

* நைட் க்ளப்களில்தான் உங்கள் காமவெறியினைத் தணித்துக் கொள்கிறீர்கள் என்றால், சில பொது நிகழ்ச்சிகளிலும் அந்நிய ஆண்களும் பெண்களுமாக கைக் கோர்த்து, ஒட்டி உரசி, உதடோடு உதடுகள் முத்தமிட்டு... (ச்சீ... த்தூ...) உங்களின் நாறிப்போன அந்த கலாச்சாரத்தை நாகரிகம் என்பீர்களா?

* ச‌ன்பாத் எடுக்கிறோம் என்று உங்கள் பெண்கள் டூ பீஸிலும், முழு நிர்வாணமாகவும் கடற்கரை மணல்களில் புரண்டு சூரிய குளியல் எடுப்பதையும், த‌ங்கள் கண்முன்னால் அதை அடுத்தவன் படம் எடுப்பதையும் அனுமதிக்கும் கலாச்சாரத்தினை சூடு, சொரணை இல்லாத சுதந்திரம் என்பீர்களா?

அந்த அயோக்கியர்கள் அதே கலாச்சாரத்தில் வளர்ந்ததால்தான் இவ்வளவு சுலபமாக அண்ணல் நபி கண்மணி நாயகத்தின் பெயரில் நிர்வாணக் கார்ட்டூனை கைக்கூசாமல் வரையவும், உண்மைக்கு புறம்பான‌ ஆபாசப் ப‌டமெடுக்கவும் முடிகிறது!

மதுவில் சுகம் காணலாம் என அதை வெறுக்க மனமின்றி வாழும் மக்கள் மத்தியில் மதுவை விஷமாகப் பார்க்கும் ஒரு சமுதாயம்.. வட்டிக்கும், மோசடியான வியாபாரங்களுக்கும் எதிராக போராடும் ஒரு சமுதாயம்..  அந்நிய ஆண் ‍- பெண் சகவாசத்தை அடியோடு வெறுக்கும் ஒரு சமுதாயம்.. காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை அந்த 'முஹம்மத்' என்ற இறைத்தூதர் வழியிலும், அவர் மூலம் கிடைக்கப்பெற்ற திருக்குர்ஆனின் வழியிலும் வாழத்துடிக்கும் ஒரு சமுதாயம்.. இத்தகைய நேர்வழிக்கு வழிவகுத்துச் சென்ற‌ கண்ணியமிகு ஒரு உத்தமரை இழிவுபடுத்துவதை எவ்வாறு தாங்கிக் கொள்ளும்? ஆனாலும் அதற்காக சில நாடுகளில் குற்றத்தில் சம்ப‌ந்தமில்லாத அப்பாவிகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்தக்கூடிய‌ வன்முறையையும் கலவரங்களையும் இஸ்லாமியர்கள் யாரும் ஆதரிக்க முடியாது.

உண்மை இஸ்லாத்தினை சரியாகவோ, முழுமையாகவோ புரிந்துக் கொள்ளாத ஒருசில முஸ்லிம்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். தவறுக்கேற்ற தண்டனையை தகுந்தவர்களுக்கு கொடுக்க சொல்லும் அதே இஸ்லாம், அப்பாவிகளின்மீது நடத்தும் வன்முறையை அனுமதிக்கவே இல்லை.

ஏனெனில் இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்! ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாத நிர்பந்தமாக நடந்த போர்களையும், போர் தர்மத்தையும் அழகிய கட்டுப்பாடுகளோடு வரையறுத்து, அதை வலுயுறுத்திய‌ முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மது (ஸல்) ஒருவர் மட்டுமே என்பதில் சந்தேகமில்லை! இதுபோலவே மனித வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு மனிதன் சகமனிதனுக்குக் கொடுக்கவேண்டிய உரிமைகள், ஆற்ற‌வேண்டிய கடமைகளைக் கட்டளையாகப் பிறப்பித்து, மனித உரிமை மீறல்களிலும் தலையிட்டு சமநீதியை நிலைநாட்டியது இஸ்லாம்!

அப்படிப்பட்ட இஸ்லாத்தினைக் கொண்டுவந்து மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்த தன்னையே அர்ப்பணித்த‌ மாமனிதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தத் துடிக்கும் அயோக்கியர்களே! நீங்கள் உண்மையிலேயே அறிவுடைய மக்களாக இருந்தால்...,

'முஹம்மத்' என்ற அந்த‌ இறைத் தூதரை இஸ்லாமிய மக்க‌ள் எதற்காக‌ தன் உயிரைவிட மேலாக மதித்து நேசம் கொள்கிறார்கள் என்பதை முதலில் சிந்தித்துப் பாருங்கள்! முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 'புகழுக்குரியவர்' என்ற தன் பெயருக்கேற்ப வாழ்ந்துக் காட்டிய உண்மை சரித்திரங்களை புரட்டிப் பாருங்கள்! திறந்த புத்தகமாக எங்கும் கிடைக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வினைம் வாக்கினையும் நடுநிலையோடு உற்று கவனியுங்கள்!

கால சூழ்நிலைக்கேற்றவாறு எத்தனையோ தலைவர்களை இவ்வுலகம் கொண்டாடும், புகழ்பாடும்! ஆனால் எந்த தலைவர்களையாவது தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அசைவிலும், மூச்சிலும் பின்பற்ற வேண்டும் என்று ஒரு சமுதாயமே தன் முழு வாழ்வின் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டதுண்டா? எங்கோ ஒரு மூலையில், யாரையாவது கைக் காட்டலாம்.. இதோ இவர், இன்ன‌வருடைய வழியைப் பின்பற்றுகிறவர் என! ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அப்படியே அடிக்கு அடி பின்பற்றுபவர்களும்,  அவர்களின் உத்தம வாழ்க்கையை நடுநிலையோடு ஆராய்ந்து, வியந்து, பாராட்டி, தானும் அதுபோன்றதொரு அழகிய கொள்கையை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட (முன்னாள்) மாற்றுமத சகோதர, சகோதரிகளும் இன்றைய வரலாற்றில் ஏராளம்! இதற்கு எந்த‌ நாட்டவர்களும், எந்த மொழியினரும் விதிவிலக்கில்லையே? ஏனென்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

மேலும் உங்கள் நலம் விரும்பி சில‌ எச்சரிக்கைகள்!

உங்களின் வெறிச் செயல்களால் நீங்கள்தான் மக்கள் மன்றத்தில் இழிவாகிக் கொண்டிருக்கிறீர்கள்! இஸ்லாத்தை நீங்கள் எதிர்க்க, எதிர்க்கதான் நடுநிலை மக்கள் சிந்திக்கிறார்கள். உங்களை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இயந்திரத் தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட, சிந்திக்க நேரமில்லாத மக்களைக்கூட உங்களின் இஸ்லாமோஃபோபியாவினால் இஸ்லாம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! சிகரம் ஏறுவதாக நினைத்து அதள பாதாளத்தில் வீழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் ..!

இவையனைத்தும் உங்களுக்கு எச்சரிக்கையாக நாங்கள் சொல்லிக் கொண்டாலும், எதிரணியில் நின்றுக் கொண்டு சேம் சைட் கோல் போடுகிறீர்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்! உலகின் ஒட்டுமொத்த‌ முஸ்லிம்களின் மனங்களையும் நீங்கள் ஒருசேரக் காயப்படுத்தினாலும், உங்கள் எதிர்ப்பில்தான் இஸ்லாம்  மார்க்கம் மிக மிக‌ வேகமாக வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் இறைவன் தன்னுடைய மார்க்கத்தை வளர்த்து, முழுமைப்படுத்தியே தீருவான் என்ற இறைவசனம் இத்தகைய நிகழ்வுகளின் மூலம் உண்மையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது!
‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் அல்லாஹ்வேயாவான்’
           (அல்குர்ஆன் 3:54) 

இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனைவிட மிகப்பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

இணை கற்பிப்போர் வெறுத்தபோதிலும் அனைத்து மார்க்கங்களைவிட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
(அல்குர்ஆன் 61 : 7,8,9)

(குறிப்பு: உண்மைக்கு புறம்பாக ஆபாச‌ படம் எடுத்தவனையும், அதனை பரப்பிக் கொண்டிருப்பவனையும், தன் மதவெறியைத் தணித்துக் கொள்ள‌ நிர்வாணக் கார்ட்டூன் வரைந்தவனையும், அதையெல்லாம் ஆதரிக்கும் சிலரையும் கண்டிக்கவே இந்த கட்டுரையே தவிர, நடுநிலையான எண்ணம் கொண்ட மற்றவர்களை புண்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை.)

இஸ்லாமோஃபோபியாவினால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளுக்கு இறைவா நேர்வழிக் காட்டுவாயாக!

நன்றி: பயணிக்கும்பாதை.ப்ளாக்ஸ்பாட்.காம்

புதன், 19 செப்டம்பர், 2012



திருமண அழைப்பிதழ்
எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ உமர்

கம்ப்யூட்டரில் ஒரு ஃபைலை தேடிக்கொண்டிருக்கும் போது அகப்பட்டது என் திருமண அழைப்பிதழ். மைக்ரோ சாப்ட் வேர்டில் நானே தொகுத்து நானே டைப் செய்தது (அல்ஹம்துலில்லாஹ்). எளிமையாகவும் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வையும் ஊட்டியதால் பத்திரிகையின் மாடலை பலபேர் காப்பி செய்து வாங்கி போயிருக்கிறார்கள். உங்களுக்கும் உதவியாக இருக்கலாம் என்பதால் யுனிகோடில் மாற்றி இங்கு பதிவு செய்கிறேன். நீங்களும் வரதட்சணையும் வாங்காமல் திருமணம் செய்ய முயற்சி செய்யுங்கள். சீர் வாங்குவதைக்கூட தவிர்க்க பாருங்கள். அவர்களாக கொடுத்தாலும்தான். மனைவியுடன் சந்தோசமாக இருக்க உங்கள் உழைப்பில் வாங்கிய கட்டிலைத்தானே விரும்புவீர்கள்?. அப்படிப்பட்ட ஆண்மகனுக்கு எனது வாழ்த்துக்கள்.

என் நண்பரின் கவிதை ஒன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

வரதட்சணை

கன்னிகள் சந்தையில்

மணமகன் விலைபோக

பெற்றோர்கள் முணுமுணுக்கும்

வர்த்தகப் பரிபாஷைகள்!

உழைத்து மானத்தோடு

பிழைக்கத் தெரியாதோர்…”

பிச்சைக்கு” சூட்டிக்கொண்ட

புதிய புனைப் பெயர்கள்!

அழைப்பிதழின் அளவு:

சாதாரண A4 size பேப்பரை இரண்டாக மடக்கினால் வரும் நான்கு பக்கங்களைக் கொண்டது. உபரியாக எந்த பேப்பரும் இணைக்கப்படவில்லை. 786, பிறை இவைகள் இல்லாத எளிமையான அழைப்பிதழ்.


முதல்பக்கம்

திருமண ஒப்பந்த அழைப்பிதழ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்



மணமகன்

(மணமகனின் பெயர்)

(தந்தை பெயர்) இப்னு (அவரின் தந்தை பெயர்)

ஊர் மற்றும் விபரம்

மணமகள்

(மணமகளின் பெயர்)

(தந்தை பெயர்) பின்த் (அவரின் தந்தை பெயர்)

ஊர் மற்றும் விபரம்

மணநாள்

இன்ஷா அல்லாஹ், (அரபி பிறை, மாதம், வருடம்)

00.00.0000 ——– கிழமை, மதியம் 11.30 மணி

மணஅவை

இடம் அல்லது மண்டபத்தின் பெயர் மற்றும் விபரம்

மணவிருந்து

பகல் 12.30

மண-கவிதை

“ஆணினம்” நான் என மார்தட்டி,

அவளிடம் நீ வாங்கிடும் பெட்டி,

அன்பரே! அல்லாஹ்வின் பிடி கெட்டி,

“அஞ்சிடுக!” அது ஒன்றே ஈருலக வெற்றி!

மற்ற பக்கங்கள்


……அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான்……. (அல்குர்ஆன் 2:185)

திருமணம் பற்றி அல்குர்ஆனும் நபிமொழியும்
மணப் பெண் தேர்வு

பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அழகுக்காகவும் பாரம்பரியத்திற்காகவும், மார்க்கப்பற்றிற்காகவும் மணந்துக் கொள்ளப்படுகின்றனர். நீ மார்க்கப்பற்றுள்ள பெண்ணை தேர்வு செய்து வெற்றியடைந்துக் கொள் என நபி(ஸல்) கூறினார்கள்.

அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

பெண்ணின் சம்மதம்

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெறவேண்டும் என்று நபி(ஸல்) கூறியபோது, கன்னிப்பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி), நூல்: புகாரி

மஹர் Vs வரதட்சணை

பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (திருமண கொடைகளை) மகிழ்வோடு வழங்கி விடுங்கள். (அல்குர்ஆன் 4:4)

….ஒரு (பொற்)குவியலையே (மஹராக) நீங்கள் அவர்களுக்குக் கொடுத்திருந்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது….. (அல்குர்ஆன் 4:20)

மஹர் எனும் மணக்கொடையை உங்கள் மனைவியருக்கு மகிழ்வோடு வழங்கிவிடுங்கள் என்று இறைவன் கூறியிருக்க, இன்று இறைவனின் கட்டளைக்கு எதிராக, பெண்வீட்டாரிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களைக் காட்டி பணமாகவும், பண்டமாகவும், நகையாகவும், விருந்தாகவும், பொருட்களாகவும், துணிகளாகவும், நிலம் மற்றும் வீடுகளாகவும் வரதட்சணை வாங்குவதை பார்க்கிறோம். இதில் சிலர் உங்கள் பெண்ணுக்கு, போடுவதை போடுங்கள்…..உங்கள் பெண்ணுக்கு போடுவதை போடாமலா இருப்பீர்கள்…? என பொடிவைத்து மறைமுகமாக வரதட்சணை எனும் தூண்டிலை, முதலில் போட்டுவிடுகின்றனர்.

ஊர் வழக்கம் மற்றும் சடங்கு சம்பிரதாயப்படி கொடுத்தனுப்பவில்லை எனில் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்கள் அல்லது தம் பெண்ணை நிம்மதியாக வாழவிடாமல் குத்திக் காட்டுவார்கள் என்ற பயத்தில், பெண் வீட்டார்கள் பொருட்களை கொடுத்தனுப்புகின்றார்கள். உண்மை நிலை இப்படியிருக்க, பெண் வீட்டாரிடம் கேட்டுப் பெறுவதுதான் வரதட்சணை, அவர்களாக தந்தால் தவறேதுமில்லை, பெற்றுக்கொள்ளலாம் என சிலர் கூறுகின்றனர்.

இப்படி கொடுத்துப் பழக்கப் படுத்தியிருப்பதால்தான் மணமுடிக்க முடியாத முதிர்கன்னிகளின் எண்ணிக்கை, சமுதாயப் பந்தலில் அதிகமாக படர்ந்து விட்டது. அவர்கள் “வடிக்கும் கண்ணீருக்கும்… வெடிக்கும் பெருமூச்சுக்கும்…. அவர்தம் பெற்றோர்களின் மன உலைச்சலுக்கும்…” இவையே காரணமாக இருப்பதால், இத்தகைய “தீய முன்மாதிரியை” தவிர்ந்துக் கொள்வதே சிறந்ததாகும்.

நாள், நட்சத்திரம், ஜாதகம் இல்லை

எவர் ஜோதிடனிடம் (எதிர்காலத்தையும், மறைவான விஷயத்தையும் கணிப்பவனிடம்) வந்து, அவன் கூறுபவற்றை (கேட்டு) உண்மைப்படுத்துவாரோ, அவர் முஹம்மது(ஸல்) மீது இறக்கிவைக்கப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டார், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூஹுரைரா(ரலி), நூல்: அபூதாவுத்

அன்பளிப்பு அல்லது மொய்

ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ், அவருக்கு வழங்கிய பாக்கியமாகும், என நபி(ஸல்) கூறினார்கள்.

காலித் பின் அதீ(ரலி), நூல்: அஹ்மத்

அன்பளிப்பு செய்துவிட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன், வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவன் போன்றவனாவான் என நபி(ஸல்) கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி

வலிமா விருந்து

செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலிமா (திருமண) உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும். அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

தம்பதியரின் கடமைகள்

நல்ல குணம் கொண்டவர்களே, ஈமானில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே. அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி

ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சுவனத்தில் நுழைவாள்.

உம்மு ஸலமா(ரலி), நூல்: இப்னுமாஜா

மணமக்களை வாழ்த்துதல்

நபி(ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்”

அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும் என்று கூறுவார்கள்.

அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத்

எச்சரிக்கை

எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, (அல்லாஹ்வாகிய) அவன் (விதித்துள்ள) வரம்புகளை மீறி விடுகின்றாரோ அவரை (அல்லாஹ்வாகிய) அவன் நரகில் புகுத்துவான். அதில் அவர் நிரந்தரமாக தங்கிவிடுவார் அவருக்கு இழிவான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 4:14)

நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012


இல்லறம் இனிக்க

 திருமணமான புதிதில், எல்லாருமே சந்தோஷமா தான் இருக்காங்க. ஓரிரு வருஷம் கழித்து கேட்டால், கல்யாணம் செய்யாமலேயே இருந்திருக்கலாம்; ஏன் தான் கல்யாணம் செய்து கொண்டேனோ? என்று புலம்புபவர்கள் தான் அதிகம். நீங்களும் அப்படி புலம்பித் தவிப்பவரா? கவலையை விடுங்கள். சின்ன சின்ன அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டாலே போதும் உங்கள் பிரச்னை காணாமல் போய்விடும். இல்லறத்தை இனிதாக்க இதோ சில டிப்ஸ் உங்களுக்காக…

* உங்கள் கணவரது விருப்பு, வெறுப்புகளை அறிந்து, அதன்படி விட்டுக் கொடுத்து நடந்துங்கோங்க. அவருடைய விருப்பங்களை அலட்சியப்படுத்தாதீங்க. உங்களுக்கு பிடிக்காததா இருந்தாலும், அவருக்கு பிடித்ததை நீங்க ரசிக்கப் பழகிக்கோங்க.

* உங்க கணவர் உங்கள விட அறிவிலோ, கல்வியிலோ, பொருளாதாரத்திலோ குறைவாக இருந்தால், அவரை குறைகூறாதீங்க; மற்றவருடன் ஒப்பிட்டும் பேசாதீங்க.

* உங்க கணவருக்கு தேவையான சிறுசிறு உதவிகளை செய்ய மறக்காதீங்க.

*மத்தவங்க முன்னாடி உங்க கணவரை ஒரு போதும் விட்டுக் கொடுத்துப் பேசாதீங்க.

*கடுமையான வார்த்தையை பேசி காயப்படுத்தாதீங்க; அதுவும் மத்தவங்க முன்னாடி கூடவே கூடாது; கூலான, அன்பான வார்த்தைகளை மட்டுமே பேசுங்க. சந்தோஷமா இருக்கும் போது மட்டுமில்லை, சங்கடமான சமயங்களிலும் பேசணும்.

*நிறைய பேசுங்க, பேசவிடுங்க, பேசுறதை கேளுங்க… நீங்க மட்டும் பேசிபேசிப் போரடிக்காம, உங்க கணவர் பேசுவதையும் காதுகொடுத்து கேளுங்க.

*கணவருடன் சண்டை போட்டுட்டு மனக் குமுறலோடு படுக்கைக்குப் போகாதீங்க. படுக்கப் போகும் முன் சண்டையை சுமூகமாக தீர்த்துக்கோங்க.

*முடிந்த வரை இருவரும் சேர்ந்தே சாப்பிடுங்க. அட்லீஸ்ட் தினமும் டின்னர் மட்டுமாவது சேர்ந்து சாப்பிடுங்க.

*உங்க அன்பை, காதலை வெளிக்காட்ட அடிக்கடி கிப்ட்ஸ் கொடுங்க… விசேஷ நாட்கள்ல மட்டுமல்ல; மற்ற நாட்களிலும் கொடுக்கலாமே!

*வீட்டில் பர்ஸ்ட் பிரிபரன்ஸ் உங்க கணவனுக்கு தான் இருக்கணும்; அதுக்கு அப்புறமா தான் குழந்தைங்க கூட.

*நமக்கு தான் வயசு நாற்பதை தாண்டிடுச்சே, இனிமே என்ன இருக்கு என்று நினைக்காம, உங்களோட அழகுல கவனம் செலுத்த மறக்காதீங்க.

*தினமும் இரவில், குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்க. சினிமா, அரசியல் என, உங்களுக்குள் கருத்து வேறுபாடு வராதவரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுங்க.

*ஐ லவ் யூ! இந்த வார்த்தையை உங்கள் கணவரிடம் அடிக்கடி சொல்லுங்க. இந்த வார்த்தையோட பவரை புரிஞ்சுப்பீங்க.

*நீங்க தவறு செய்யும் போது, உங்க கணவரிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீங்க.

 *வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக, உங்கள் கணவருடன் எங்காவது டூர் போயிட்டு வாங்க. குழந்தைகள் இருந்தா தாத்தா பாட்டி அல்லது நண்பர்கள் என யாரிடமாவது விட்டுச் செல்லுங்கள். அந்த நாட்களை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை திட்டமிட்டு என்ஜாய் பண்ணுங்க. இப்படியெல்லாம் நீங்க இருந்தா உங்க குடும்பத்துலயாவது… சண்டையாவது… பின் என்ன? வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. வாழ்க்கை வாழ்வதற்கே!

*இஸ்லாத்தை பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் மறக்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்க.....

நன்றி: அஜீஸ்அஹ்மத்.வோர்ட்பிரஸ்.காம்


நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்

மஸ்ஹர் ஸகரிய்யா

இன்றைய நவீன விஞ்ஞான தொழிநுட்ப உலகில் பேசப்படும் சிந்தனைகளுள் மிகக் கவர்ச்சியான ஒரு சிந்தனையே பெண்ணியம் பற்றிய சிந்தனையாகும். ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி மற்றும் பிரான்சியப் புரட்சி என்பவற்றை தொடர்ந்தே பெண் விடுதலை தொடர்பான எண்ணக்கருக்கள் சர்வதேச ரீதியில் வலுப்பெறத் தொடங்கின.

மேற்கத்தேய சமூகத்தில் பெண்ணியம் தொடர்பாக முன்வைக்கப்படும் சிந்தனைகளுக்கு சமனும் எதிருமான சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்திலிருந்து முன்வைக்கப்படாததால் பெண்ணியல் வாதிகளின் சிந்தனைகள் பெரும் விமர்சனத்திற்குட்பட வேண்டியதாக இருப்பினும் அவர்களது சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் நவீன உலகிற்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பான சில சிந்தனைகளை இக்கட்டுரையினூடாக முன்வைத்து இஸ்லாம் எதிர்பார்க்கும் பல முஸ்லிம் பெண்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

சமூக சீர்கேடு (பித்னா), குடும்ப கௌரவம் என்று பெண்களைப் பயமுறுத்தி வீட்டோடு அவர்களை முடக்கும் பாரம்பரிய மரபுகளுக்கும் பெண்ணுரிமை, பெண் விடுதலை எனும் சொல்லாடல்களைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணப்படுத்தி உலகின் பிரதான விளம்பரக் கவர்ச்சிப் பொருட்களாக அவர்களை மாற்றி வரும் புதிய ஐரோ–அமெரிக்க தாராளவாத சிந்தனை மரபுகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

இவ்விரு சிந்தனைகளும் மனித சிந்தனையை நேர்முரணாண இரு தீவிர நிலைகளுக்கு இட்டு சென்றிருப்பதன் காரணமாகவே பெண்கள் தொடர்பான ஆய்வுகள் உலகின் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
அண்மையில்ஒரு சஞ்சிகை பூகோள ரீதியில் பெண்களின் முன்னேற்றத்தை தரப்படுத்தி ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. பெண்கள் தொடர்பாக நிலவிவரும் மேற்கூறிய இரு துருவ நிலைப்பாடுகளின் விளைவாக ஏற்பட்ட அறிக்கையாகவே இந்த அறிக்கையை நோக்க வேண்டி இருக்கின்றது.

எந்ந நாடுகளிலெல்லாம் பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள் அதிகம் பேசப்பட்டு பெண்கள் கவர்ச்சிப் பொருட்களாக மாற்றப்பட்டுள்ளனரோ அந்த நாடுகள் இவ்வறிக்கையில் முதலிடங்களைப் பெற்றுள்ளன. அதே சமயம் மிக பிற்போக்கான சமூகமாக இன்றும் கருதப்படும் ஆபிரிக்க நாடுகள் தரப்படுத்தலில் இறுதி இடங்களை பெற்றுள்ளன.

இவ்வாய்வறிக்கையின் சுருக்கம் பெண்களுக்கு பூரண சுதந்திரத்தைக் கொடுத்து சமூக வாழ்வில் அவர்களுக்கும் சம அந்தஸ்தை கொடுப்போர் மேற்கத்தேய சமூகம். பெண்கள் தொடர்பான பிற்போக்கான சிந்தனைகளுடன் இன்றும் வாழும் ஒரு சமூகமே முஸ்லிம் சமூகம் என்ற இனவாதக்கருத்துகள் இவ்வாய்வுகட்டுரையூனூடாக மறைமுகமாக முன்வைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

உண்மையில் இஸ்லாம் இவ்விரு துருவ சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு நடுநிலையான சிந்தனையொன்றை முன்வைக்கின்றது. அந்த நடுநிலையான சிந்தனையை நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் தொடர்ந்தேர்ச்சையாக முஸ்லிம் சமூகம் தவறிழைத்து வருவதன் காரணமாக இஸ்லாம் கூறும் பெண்கள் தொடர்பான முற்போக்கான சிந்தனைகள் தொடர்ந்தும் ஊடகங்களால் இரட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

பெண்களைப் போகப் பொருட்களாகவும் ஆன்மாவற்ற உயிர்களாகவும் பேய்களாகவும் வர்ணித்துக் கொண்டிருந்த உலகிற்கு பெண்ணியம், பெண்விடுதலை என்ற கோஷங்களை முன்வைத்து எந்த ஒரு புரட்சியும் ஏற்படலாம் என்பதற்கு எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லாதிருந்த காலப்பிரிவிலேயே இஸ்லாம் பெண்ணுரிமைகளை அறிமுகப்படுத்தி சமூகத்தில் ஆண்களுக்கு நிகரான அந்தஸ்தைப் பெறுவோராக அவர்களை அடையாளப்படுத்தி அவர்களை சங்கைப்படுத்திய மார்க்கமே இஸ்லாம் என்றால் மிகையாகாது.

பெண்கள் ஆண்களுக்காக படைக்கபடவில்லை. சமூகத்தில் ஆணும், பெண்ணும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை ஒத்தவர்கள். பெண்ணிண் மார்க்க பங்களிப்பு மற்றும் அவளின் சமூக அந்தஸ்து என்பன ஆணை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல என்ற கருத்துகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்வைத்தது.

இந்த சிந்தனைகளைத் தெரியாத மேற்கத்தேய சமூகம் ஒரு புறமும் இந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்திக் காட்ட முயற்சிக்காத அல்லது பிழையாக விளங்கி கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் மறுபுறமும் இருப்பதன் காரணமாக இன்று முஸ்லிம் பெண்களின் சமூக பங்களிப்பு தொடர்ந்தும் அபிப்பிராய பேதங்களுக்குட்பட்ட, மேற்கு நாடுகளால் விமர்சிக்கப்படும் பிரச்சினையாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

எமது சமூகத்தில் பெண்கள் தொடர்பாக பேசப்படுகின்ற, எழுதப்படுகின்ற விடயங்கள் அதிகம் என்பது மறுக்கத்தக்க விடயமல்ல. எமது நூலகங்களில் பெண்கள் விவகாரத்துடன் தொடர்புறும் நூற்கள் அதிகம் உள்ளன. எனினும் அவற்றுள் பெரும்பாலானவை பெண்களின் உடலமைப்பு, தோற்ற அமைப்பு என்பவற்றை மையப்படுத்தி அவர்களது பொறுப்புக்களை வரையறுக்கும் முயற்சிகளையே அவை செய்து வருகின்றன. பெண்களின் சமூக பங்களிப்பு, பெண்கள் கல்வி, பெண்கள் அரசியல் பிரவேசம், பெண்கள் தலைமைப் பொறுப்புக்களை ஏற்றல் போன்ற சிந்தனைகள் ஆங்காங்கே எப்போதாவது பேசப்படும் சர்ச்சைக்குட்பட்ட சிந்தனைகளாகவே இருந்து வருகின்றன.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி தேக்க நிலையிலே இன்றும் உள்ளது என்பதை ஏற்கத்தான் வேண்டும். அதே சமயம் மேற்கில் பெண்களின் கட்டற்ற சுதந்திரம் ஒரு வளர்ச்சியல்ல. அது ஒரு வீக்கமே என்பதை அவர்கள் கிட்டிய எதிர்காலத்தில் உணர்ந்து கொள்வார்கள். இத்தேக்க நிலைக்கும், வீக்க நிலைக்கும் மத்தியில் ஒரு முஸ்லிம் பெண் எப்படி வாழ வேண்டும், மார்க்கத்திற்கு அவள் எத்தகைய பங்களிப்புக்களை வழங்க முடியும் என்ற தெளிவான சிந்தனைகளை அல்குர்ஆனும் ஸுன்னாவும் இஸ்லாமிய வரலாறும் எமக்கு அறிமுகப்படுத்துகின்றது.
இன்று இஸ்லாம் எழுச்சியடைந்து வருகின்றது என்பதற்கான பிரதான சான்று முஸ்லிம் பெண்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே. எனினும் தற்போதிருக்கின்ற நிலை வளர்ச்சியின் ஒரு படி நிலையே அன்றி முழுமையான வளர்ச்சியல்ல.

முன்பொரு காலம் இருந்தது. அப்போது வீட்டை விட்டு தனது ஆயுட்காலத்தில் இருமுறை வெளியேறும் பெண்ணே சிறந்த பெண்ணாகக் கருதப்பட்டாள். அவள் பிறந்த வீட்டிலிருந்து கணவனின் வீட்டிற்கு போகும் சந்தர்ப்பம், கணவனின் வீட்டிலிருந்து மண்ணறைக்கு போகும் சந்தர்ப்பம் என்பவையே அவை. அன்று, பெண்கள் கல்வி கற்கக் கூடாது; ஏனெனில் பெண்கள் வெளியே செல்வதால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன் என்ற மனப்பதிவே காணப்பட்டது. ஆச்சரியம் என்னவெனில் இக்கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் முன்வைக்கப்பட்டமையாகும். இஸ்லாம் இத்தகையதொரு விடயத்தை எமக்குக் கற்று தரவில்லை.

மதீனத்து பெண்கள் ஐவேளை தொழுகைக்கும் பள்ளிக்குச் செல்வார்கள். ஜுமுஆவுக்குச் செல்வார்கள். மதீனாவில் முனாபிக்களும் யூதர்களும் அதிகமாக வாழ்ந்த காலத்திலேயே இந்நடைமுறை பேணப்பட்டு வந்தது.
தொழுகையில் ஆண்களின் வரிசைகளுக்குப் பின்னால் பெண்களின் வரிசைகள் காணப்படும். பள்ளிவாயலில் பெண்கள் நுழைவதற்கென்று பாபுந்நிஸா (பெண்களின் நுழைவாயில்) என்ற வாயிலே மஸ்ஜிதுந்நபவியில் காணப்பட்டது. ஒரு மனிதன் தினந்தோறும் நபி(ஸல்) அவர்களது மஸ்ஜிதுந்நபவியில் ஆண்களின் வரிசையில் இறுதி வரிசையிலேயே தொழுது வந்தார். அவர் தொடர்ந்தும் இறுதி வரிசையில் இருப்பதற்கான காரணம் ருகூவுக்குச் செல்லும் போது தனது கைகளுக்கு இடையால் பின்னால் தொழும் பெண்களை பார்ப்பதற்காகவாகும். இந்த விடயம் நபி (ஸல்) அவர்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது பித்னா ஏற்படுகின்றது எண்ணி நபி (ஸல்) அவர்கள் பெண்களின் வருகையை தடை செய்யவில்லை.

அல்லாஹுத்தஆலா பெண்ணை ஆணுக்காகப் படைக்கவில்லை. மனிதனை எந்த நோக்கத்திற்காகப் படைத்தானோ அதே நோக்கத்திற்காகத் தான் பெண்ணையும் படைத்தான். அல்லாஹுத்தஆலா மனிதனது அடிப்படையான பணியைப் பற்றி பேசும் போது இரு சாராரும் பரஸ்பர ஒத்துழைப்புடன் நிறைவேற்ற வேண்டிய பணியாகவே அப்பணியை எடுத்து காட்டினான்.
விசுவாசம் கொண்ட ஆண்களும் விசுவாசம் கொண்ட பெண்களும் ஒருவருக்கொருவர் நேசமாக நடந்து கொள்வார்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்கம் பணியையும் செய்வார்கள்.

எனவே பெண்ணும் அல்லாஹுத்தஆலா ஏவிய இப்பணியை செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றாள். எனவே அவளை தடுக்கும் உரிமை கணவனுக்கோ, தந்தைக்கோ, சகோதரனுக்கோ கிடையாது. எனினும் பெண்ணின் வீடு என்ற அதிமுக்கியமான தஃவா களத்தை ஒழுங்குபடுத்திய பின்னரே சமூகம் என்ற களத்திற்குப் பிரவேசிக்க வேண்டும்.
அந்த அணுகுமுறையைத்தான் ஸஹாபா பெண்மணிகள் கையாண்டனர். ஆண்கள் அனைவரும் சமூக களத்தில் இறை பணியை செய்து கொண்டிருக்கும் போது பெண்கள் வீட்டுச்சூழலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் ஒரு பரம்பரையை கட்டியெழுப்பியதுடன் தமது சக்திக்கும், இயலுமைக்கும் ஏற்ப பல பொறுப்புக்களை ஏற்றுச் செயல்பட்டனர்.
புனித இஸ்லாத்திற்குள் முதலில் நுழைந்த கதீஜா அம்மையார் தனது செல்வத்தை இந்த மார்க்கத்திற்காக முதலீடு செய்தார்கள். தனது கணவனுக்கு நல்லதொரு மனைவியாகவும், தனது பிள்ளைகளுக்கு நல்லதொரு தாயாகவும் செயற்பட்டுள்ளார்கள்.

ஆஇஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் யுத்த களத்திற்குச் சென்றார்கள், யுத்தத்தில் காயப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களது மரணத்தின் பின் ஸஹாபாக்களுக்கும் தாபிஈன்களுக்கும் ஹதீஸ்களை கற்பிக்கும் மிகச் சிறந்ததோர் ஆசிரியராக (முஹத்திஸா) இருந்துள்ளார்கள்.

சுமையா (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்று கொண்ட ஒரு பெண். அஸ்மா (ரலி) அன்ஹா, உம்முல் பழல் (ரலி), ஹன்ஸா(ரலி) போன்ற ஸஹாபாப் பெண்களின் வரலாறுகளை வாசித்துப் பாருங்கள். அவர்கள் மிகச்சிறந்த பரம்பரையொன்றை வளர்த்து அப்பிள்ளைகளை மார்க்கத்திற்காகவே அர்ப்பணித்தார்கள்.

மார்க்கத்தை கற்று கொள்வதில் அன்றைய பெண்கள் வெட்கப்படவில்லை. ஆண்களுடன் போட்டி போட்டு கொண்டு மார்க்கத்தை கற்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டனர். நபி (ஸல்) அவர்களுடன் பேசி பெண்கள் மார்க்கத்தை கற்பதற்கு தனியான ஒரு நாளையே வாரந்தோறும் ஒதுக்கி கொண்டார்கள்.
மார்க்கத்திற்காக வாழ்ந்து தம்மை மார்க்கத்திற்காகவே அர்ப்பணித்தக் கொண்ட மனிதர்களின் வரலாறுகள் பேசப்படும் போது அதிக ஆண்களின் வரலாறுகளே பேசப்படுகின்றன. எனினும் மார்க்கத்தை பாதுகாப்பதில் பெண்களும் மிகப்பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்பதை எம்மால் மறந்து விடமுடியாது. ஒன்றில் அவர்கள் ஆண்களின் தியாகத்தின் பிண்ணியில் இருந்திருப்பார்கள். அல்லது அவர்களே மிகப் பெரும் தியாகியாக இருந்திருப்பார்கள்.

நாம் ஏற்கனவே மார்க்கத்திற்காக உயிர்தியாகம் செய்த முதல் மனிதர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்று பார்த்தோம். மார்க்கத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்குடன் இடம் பெற்ற முதலாவது ஹிஜ்ரத்தான அபீஸீனியாவுக்கான ஹிஜ்ரத்தில் ஆண்கள் 83 பேருடன் 19 பெண்களும் கலந்து கொண்டனர். குறைஷி காபிர்கள் இஸ்லாத்தைத் தீர்த்து கட்டும் நோக்கில் முஸ்லிம்களை அபூதாலிப் கணவாயில் போட்டு 3 வருடங்கள் அவர்களுடன் இருந்த தொடர்பை முழுமையாக துண்டித்து கொண்டனர். அங்கு முஸ்லிம்கள் அனைவரும் உண்ண உணவோ தாகத்தை தீர்க்கும் நீரோ இன்றி அதிக சிரமப்பட்டனர். அந்த சோதனையால் அதிகம் சிரமப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜ்ரத் என்ற 300 கி.மீ தொலைவான நீண்ட பயணத்தை எடுத்து கொள்ளுங்கள். உயர்ந்த மலைகள், அபாயம் நிறைந்த பாதைகள், இவற்றை முஸ்லிம் பெண்கள் கடந்து சென்று முஹாஜிரா என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளவில்லையா? உம்மு ஸலாமா (ரழி) அவர்கள் வழித்துணையின்றி தனியாக இம்மிகப்பெரும் தூரத்தை கடந்து செல்லவில்லையா? கர்ப்பிணி தாய்மார்கள், பால்குடி தாய்மார்கள் வயோதிப பெண்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் இம்மாபெரும் சோதனையை எதிர்கொண்டார்கள்.

உஹத் யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களை தாக்க வந்து கொண்டிருந்த இப்னு கமிஆவை தடுத்து நிறுத்தி அவனுடன் போராடியதில் உம்மு அமாரா (ரழி) அவர்களது உடலில் 12 காயங்கள் ஏற்பட்டன. இப்போரில் ஆயிஷா (ரழி) மற்றும் உம்மு ஸுலைம் (ரழி) போன்றோர் தொடர்ந்தும் காயப்பட்ட வீரர்களுக்கு வைத்தியம் செய்து பராமரித்து கொண்டிருந்தனர். பலமுறை தண்ணீர் நிரப்பி வந்து படைவீரர்களின் தாகத்தை தணிக்க உதவினர். உம்மு ஸல்மா (ரழி) அவர்கள் சிதறி ஓடிக்கொண்டிருந்த முஃமீன்களை அழைத்து ரோஷமூட்டி யுத்தத்தில் ஈடுபட செய்தார்கள். இப்படி அன்றைய முஸ்லிம் பெண்கள் நல்ல தாய்மார்களாக, நல்ல குடும்பத் தலைவிகளாக இருந்துள்ளதுடன் அவர்களில் பலர் சமூக களங்களிலும் தம்மால் இயலுமான பங்களிப்பை செய்திருப்பதை காண முடியும்.

நேர்வழிபெற்ற 4 கலீபாக்களின் காலத்திலும் இத்தகைய புரட்சிப் பெண்கள் பலரை நாம் காண்கின்றோம். அவர்கள் சமூகத்தில் அனைத்து தளங்களிலும் தமது பங்களிப்புக்களை வழங்கி வந்தனர். ஸஹாபி பெண்களிடமிருந்து மார்க்கத்தை கற்கும் நோக்கில் பல தாபியீன்கள் அவர்களை சந்திக்க வந்துள்ளனர். பிற்காலங்களில் பெண்களுக்கென்று தனியான இல்முடைய மஜ்லிஸ்கள் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
பெண்களின் பிரதான பொறுப்பு ஒரு தாயாக, குடும்பத் தலைவியாக இருந்து மிகச்சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதாகும். எனினும் இதன் பொருள் அவள் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டும் என்பதல்ல. பெண்கள் ஆண்களுக்கு பணிவிடை செய்வதற்காக படைக்கபட்டவர்களல்ல. ஒரு பெண்ணிண் பிரதான பணி எப்போதும் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருப்பது என்ற கருத்தை நாம் மார்க்கத்தில் எங்கும் காண முடியாது. அப்படி ஒரு பெண் இருப்பது கடமையுமல்ல. வரவேற்கத்தக்கது என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்து. எனவே அவளது பணியை அவள் செய்வதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது.

பெண்கள் விவாகரத்தில் இன்று மற்றொரு பிழையான மனப்பதிவும் சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. ஒரு பெண் கல்வி கற்கலாம், பல்கலைக்கழகத்திற்கு செல்லலாம். ஏன் தனியாக வெளிநாட்டிற்கு தொழில் வாய்ப்புக்களுக்காகக் கூடச் செல்லலாம். ஆனால் ஐவேளை தொழுகைக்குச் செல்வதற்கு மட்டும் தடை விதிக்கப்படுகின்றது. இது தொடர்பாக நவீன கால அறிஞர் யூசுப் அல்கர்ழாவி பின்வருமாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

'நான் தென்னாசிய நாடுகளுக்குச் சென்ற போது பள்ளிவாயல்களில் ஒரு பெண்ணையேனும் என்னால் காண முடியவில்லை. இது தொடர்பாக நான் அவர்களிடம் வினவிய போது இமாம் அபூஹனீபா பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்துள்ளார்கள் என்று கூறினார்கள். அப்போது நான் 'இக்கருத்து அபூஹனீபாவின் பழைய கருத்து. தற்போது பெண் சந்தைக்கும், பல்கலைக்கழகத்திற்கும் செல்கின்றாள். விமானத்தில் தனியாக பறக்கின்றார். ஏன் அவள் பள்ளிக்கு வருவதை மட்டும் தடை செய்கின்றீர்கள்?' என்று கேட்டார். 'சமூக பாரதூர செயல்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் பெண்கள் நீதிபதியாகக் கூட இருக்க முடியும் என்று கூறியவரே அபூஹனீபா. அந்த மனிதரின் பெயரைகூறி நீங்கள் இத்தகைய குறுகிய நிலைப்பாட்டுக்கு வந்துள்ளீர்களே' என்று கூறி கர்ளாவி அவர்களை கண்டித்தார்கள்.

ஒரு பெண் பள்ளிக்கு தொழுகைக்காகவோ அல்லது கற்பதற்காகவோ செல்வதற்கு அனுமதி கேட்டால் தடை செய்யும் அதிகாரம் ஆணுக்கு இல்லை என்று கூறுகின்ற மார்க்கமே இஸ்லாம். அத்தகைய மார்க்கத்தின் பெயரை பயன்படுத்தி எப்படி பெண்களை வீட்டில் அடைத்து வைக்க முடியும்?
எமது சமூகத்தில் இருக்கின்ற ஆண்களின் நிலை வியப்பை அளிக்கின்றது. அவர்கள் தமது மனைவிமார்களின் பெயர்களையோ அல்லது தாய்மார்களின் பெயர்களையோ அல்லது சகோதரிகளின் பெயர்களையோ உச்சரிப்பதற்கே கூச்சப்படுகின்றார்கள். பெண்களின் பெயர்களை அவர்கள் தரக்குறைவாக நினைக்கின்றனரா? அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா? அதே சமயம் ஸஹாபாப் பெண்களின் பெயர்களை கூச்சப்படாமல் சொல்கின்றோம் ஏன் இந்த இரட்டை வேடம்?

அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் வரலாறும் எமக்கு முன்மாதிரியான பெண் ஆளுமைகள் பலரை அறிமுகப்படுத்துகின்றன. பெண்கள் தொடர்பான சரியான எண்ணக்கருக்கள் மறைய ஆரம்பித்து மார்க்கத்தின் பெயரால் பெண் எப்போது வீட்டில் அமர்த்தப்பட்டாளோ அன்று இஸ்லாமிய சமூகத்தின் வீழ்ச்சியும் ஆரம்பமாக தொடங்கின. சமூகத்திலிருந்து பெண்கள் முழுமையாக ஓரங்கட்டப்பட்டனர்.

பெண்ணியல் வாதிகள் கூறுவது போன்று முஸ்லிம் சமூகத்தில் பெண் வன்முறை ,பெண் அடிமைத்துவம் என்பன அன்று உருவாகாவிட்டாலும் கூட மார்க்கத்தின் பெயரால் அவளை சமூகத்தை விட்டு ஓரங்கட்டும் நடவடிக்கை ஆரம்பமானது. பெண்களிடம் கலந்தாலோசனை செய்து விட்டு அதற்கு மாற்றமாக முடிவெடுங்கள், அவர்களுக்கு எழுத்தறிவைக் கற்பிக்க வேண்டாம். பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம். என்ற கருத்துக்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் ஆழமாக பதிய ஆரம்பித்தன.

பெண்ணை சமூகத்திலிருந்து ஓரம் கட்டும் முயற்சியை அன்றைய முஸ்லிம் சமூகம் பெண் வன்முறையாக கருதவில்லை. பெண்ணும் கூட அது தன் மீது ஏற்படுத்தபட்ட ஒரு அடிமைத்துவ வாழ்வு என்று எண்ணவில்லை. பெண்கள் தமது வீட்டையும் குடும்பத்தையும் நிர்வகிப்பதில் அவர்களிடம் எத்தகைய தயக்கமும் இருக்கவில்லை. ஏனெனில் பெண்ணினத்திற்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும் பாதுகாப்பும் அபரிமிதமாகவே கிடைத்தது.
நாகரீகம் வளர வளர பெண் வீட்டை விட்டு காலடி வைக்க துவங்கியதும் தான் பெண் சுதந்திரம் என்பது உணரப்பட்டு அதன் தேவை அறியப்பட்டு அந்த உணர்வு எண்ணமாகி, சிந்தனையாகி இன்றைய கால கட்டத்தில் சொல்லாகி, செயலாக வடிவெடுத்துள்ளது. இந்த சிந்தனை எல்லை கடந்து பேசப்பட்டதன் காரணமாக மேற்கத்தேய சூழலில் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் உருப்பெற்று மேற்கில் பெண்களுக்கு எல்லை மீறிய சுதந்திரம் கொடுக்கப்பட்டன. கூடவே முஸ்லிம் நாடுகளில் பெண்ணை இஸ்லாம் அடக்கி ஒடுக்குகின்றது என்ற சிந்தனையும் பரப்பப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தாலிபானகளின் பெண்கள் குறித்த கருத்துக்களும், ஆபிரிக்க நாடுகளில் முஸ்லிம் பெண்களின் பிற்போக்கான சிந்தனைகளும் அவர்களது கருத்துக்களுக்கு ஆதாரம்களாகக் கொள்ளப்பட்டன. பெண்ணியல்வாதிகளின் இக்கருத்துக்களுக்குச் சார்பாக முஸ்லிம் சமூகத்திலிருந்தும் ஓரிரு குரல்கள் ஒலிக்கவே அந்த நிலைப்பாடு உறுதியானது.
\
உண்மையில் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் இன்று மிகக்குறைவாகவே காணப்படுகிறது. சமூக தளத்திற்குள் காலடி எடுத்து வைத்து அவள் தனது பங்களிப்பை வழங்குவது ஒரு புறமிருக்கட்டும். அவளது முதற்களமான வீட்டைக் கூட அவளால் இன்னும் ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியாத பலவீனம் காணப்படுகின்றது. இந்நிலை முஸ்லிம் சமூகத்திற்குள் திட்டமிட்டு ஏற்படுத்தபட்ட ஒரு நிலை என்பதை விட பெண்களின் மார்க்க அறிவீனத்தின் காரணமாக அவர்களே தமக்கு இழைத்து கொண்ட ஒரு அநீதமே இது. இந்த அநீதியிலிருந்து முஸ்லிம் பெண் தன்னை காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். முஸ்லிம் பெண்ணின் பிற்போக்கான நடைமுறைகளைப் பயன்படுத்தி இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் குற்றஞ்சாட்டப்படும் பயங்கரத்திற்கெதிராக போராடும் மிகப் பெரும் பொறுப்பை முஸ்லிம் பெண் சுமந்து கொள்ள வேண்டும்.

அது சிந்தனையாகி சொல்லாகி செயலாக நடைமுறையாக மாற வேண்டும். பெண்ணியம் பேசும் மனிதர்களின் சிந்தனைகளை இஸ்லாமிய மூலாதாரங்களின் துணை கொண்டு எதிர்க்கும் ஆற்றலை எப்போது முஸ்லிம் பெண் சமூகம் பெற்றுக்கொள்ளுமோ அது இஸ்லாமிய எழுச்சியின் முக்கிய மைல் கல்லாக மாறி விடும். இன்று உலக சனத்தொகையில் ஏறக்குறைய 90 கோடி முஸ்லிம் பெணகள் உள்ளனர். இவர்களுள் விரல் விட்டெண்ணக் கூடிய பெண் ஆளுமைகளே இப்பெரும் பொறுப்பை சுமந்துள்ளனர். ஆனால் இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணிய சிந்தனைகளின் அடிப்படையில் பல்லாயிரம் அமைப்புக்களையே உருவாக்கி வெற்றிகரமாக தமது பணியை செய்து வருகின்றனர். ஆனால் சத்தியத்தின் பக்கம் உள்ள எம்மிடம் ஆஇஷாக்களாக, உம்மு அமாராக்களாக, சுமையாக்களாக ஓரிரு பெண்களே   உருவாகியுள்ளனர்.

எனினும் அந்த விரல்விட்டெண்ணக்கூடிய பெண்களின் பங்களிப்பு இன்று முஸ்லிம் உலகின் போக்கையே தலைகீழாக மாற்றி வருகின்றது. இப்பெண்களின் தொகை அதிகரிக்கும் பட்சம் மிக வேகமான இஸ்லாமிய எழுச்சியொன்றை முஸ்லிம் உலகில் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை எமது சமூகத்தில் ஏற்படுத்துவதற்காக நவீன இஸ்லாமிய எழுச்சிக்குப் பங்களிப்புச் செய்த சில முஸ்லிம் பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.

1924 இல் இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியுற்றதை அடுத்து சர்வதேச ரீதியில் இஸ்லாமிய கிலாபத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கமும், இந்திய உபகண்டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியும் தோற்றம் பெற்றன. முஸ்லிம் சமூகம் பெண்களை சமூக தளத்திலிருந்து ஓரங்கட்டியிருந்த சமயம் இவ்விரு இயக்கங்களும் இஸ்லாமிய எழுச்சி ஒன்றை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தனர். மேலும் பெண்ணிய சிந்தனைகளால் இஸ்லாம் களங்கமுறும் நிலையையும் அவதானித்த இவ்விரு இயக்கங்களும் தமது இயக்கங்களின் ஒரு பிரிவாக பெண்கள் பிரிவையும் ஆரம்பித்தார்கள்.
ஒரு பெண்ணிண் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பணிகள் ஒரு சிறந்த குடும்ப அலகைக் கட்டியெழுப்புவதாக அமைய வேண்டும் என்று எதிர்பார்த்த அவர்கள் அவர்கள் பெண்களின் சமூக பங்களிப்புக்கும் இடம் கொடுத்தார்கள்.
இவ்விரு இயக்கங்களும் பெண்ணிய சிந்தனைகளைப் போலன்றி பெண் சுதந்திரம் என்பதன் யதார்த்த வடிவத்தை மிகச் சரியாக விளங்கியிருந்தார்கள். இவ்விரு இயக்கங்களின் தோற்றத்துடன் முஸ்லிம் உலகெங்கும் ஹிஜாப் தொடர்பான மிகச்சரியான சிந்தனைகள் தோற்றம் பெற்றன.

அவற்றின் பெண்கள் பகுதிகள் இன்று குடும்பத்தை ஒழுங்குபடுத்தல், மிகச்சிறந்ததொரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படைகளை இடல் என்பவற்றையும் கடந்து முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இஸ்லாத்தின் தூய பெண்ணிய சிந்தனைகளை உலகறிய செய்வதன் மூலம் பெண்ணிய வாதிகளின் வாதங்களிலிருந்து இஸ்லாத்தை பாதுகாத்தல், பெண்களின் சமூக பங்களிப்பின் வரையறைகள், பெண்களின் அரசியற் பிரவேசத்தின் நியாயங்களும் வரையரைகளும் போன்ற சிந்தனைகளையும் முன் வைத்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எகிப்தில் செயற்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் சகோதரிகள் அமைப்பு 1932 இலேயே தோற்றம் பெற்றது. மக்கா காலத்தில் ஸஹாபா பெண்கள் மார்க்கத்தை பாதுகாப்பதற்காக எத்தகைய தியாகங்களை மேற்கொண்டார்களோ அதற்கு சமனான தியாகங்களை இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பல பெண்கள் அனுபவித்தனர். அதற்கு மிகச்சிறந்த உதாரணமே ஸைனப் அல் கஸ்ஸாலி. அவர்களது தியாகத்தின் விளைவாக இன்று பரவலான ஓர் இஸ்லாமிய எமுச்சி ஏற்பட்டு வருகின்றது. இந்த எழுச்சியின் சிம்ம சொப்பனங்களாக கருதப்படும் இன்றைய முஸ்லிம் பெண்களில் ஒரு சிலரை அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.

மர்வா ஷேர்பின் - நவீன கால சுமையா (ரழி) அன்ஹா
இவ்வருடம் ஜுலை மாதம் ஜேர்மனியில் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்பட்ட அகோர நிகழ்வை உலகம் எளிதில் மறந்து விடாது. மர்வா ஷேர்பின் என்றழைக்கபட்ட முஸ்லிம் பெண் அரச நீதிமன்றத்தில் 18 தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யபட்ட நிகழ்வே அது. மர்வா ஷேர்பின் என்றழைக்கபட்ட சாதாரண முஸ்லிம் கர்ப்பிணி பெண் தனது மார்க்கத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஹிஜாப் அணிந்து சென்ற போது அலெக்ஸ் என்ற இளைஞன் அவரை தீவிரவாதி என்று கூறி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இஸ்லாத்தையும் அந்த இஸ்லாமிய பெண்ணையும் தூற்றினான். தனது மார்க்க உரிமையை பாதுகாக்க மர்வா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கின் முடிவு மர்வாவுக்கு சார்பாக இருந்த போது குற்றவாளி திடீரென பாய்ந்து தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை உறுவி 3 மாத கர்ப்பிணி பெண்ணாண மர்வாவின் வயிற்றில் குத்தி மர்வாவையும் அவரது வயிற்றில் வளர்ந்து வரும் கருவையும் கொலை செய்தான். இந்த நிகழ்வை ஜேர்மன் காவற்துறை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததோடு மர்வாவை காப்பாற்ற வந்த அவரது கணவரையும் சுட்டதில் அவர் படுகாயமுற்றார்.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்கள் தமது இஸ்லாமிய தனித்துவத்தை பாதுகாப்பதற்காக நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருக்கின்ற ஆட்சியாளர்களும் முஸ்லிம் பெண்களின் உரிமைக்கெதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். இவ்விரு முறுகல் நிலைக்கும் மத்தியில் அங்கு மிக வேகமான ஓர் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு வருகின்றது. அந்த எழுச்சி அங்கு வாழும் மர்வா போன்ற இஸ்லாமிய விழுமியங்களைப் பேணிவரும் பெண்களால் ஏற்பட்டு வரும் எழுச்சியே என்றால் அது ஒரு மிகையான கருத்தாக இருக்காது.

யெமனிலிருந்து உதித்த புதிய நங்கை தவக்குல் கர்மான் உம்மு ஐய்மனாக
உம்மு ஐம்மான் (ரழி) அவர்களை நாம் மறந்திருக்க மாட்டோம். உஹத் யுத்தத்தில் முஸ்லிம்கள் பின் வாங்கி ஓடிக்கொண்டிருந்ததை பார்த்த உம்மு ஐமன் போர்க்களத்திற்கு வந்து ஓடுகின்றவர்களது முகத்தில் மண்ணை வாரி வீசுகின்றார். அவர்களை பார்த்து இந்தா 'இக் கைராட்டையை நீ எடுத்து கொண்டு வாளை என்னிடம் தா' என்று கூறி பின் வாங்கி கொண்டிருந்த முஸ்லிம்களை ரோஷமூட்டி தூண்டிக் கொண்டே இருந்தார்.

யெமனில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டத்தில் தவக்குல் கர்மான் என்ற 32 வயது நிரம்பிய அரபு பெண்ணிண் பங்களிப்பை உம்மு ஐமன் (ரழி) அவர்களின் பங்களிப்புடன் ஒப்பிட்டு பார்ப்பதில் தவறேதும் இருக்காது.
அல் - இஸ்லாஹ் என்ற இஸ்லாமிய கட்சியின் அங்கத்தவர்களுள் ஒருவரான தவக்கல் கர்மான் ஸாலிஹின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராக பல வருடங்களாக சவால் விடுத்து வருகின்றார். ஹிஜாப் அணிந்த நிலையில் இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி அஹிம்சை வழிப்போராட்டத்தை மேற்கொண்டுள்ள தவக்குல் கர்மான் யெமன் புரட்சியின் தலைவர் என்றழைக்கபடுகின்றார். இவரது அயராத போராட்டம் இவரை நோபல் பரிசு வரை அழைத்து சென்றுள்ளது. நோபல் பரிசு பெறும் முதல் அரபு பெண் தவக்குல் கர்மான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கபட்டதையடுத்து யெமனியர்களும் உற்சாகமடைந்து தமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக அதை கருதி புதியதொரு வீரியத்துடன் போராட்டங்களை மேற்கொண்டு யெமனில் நல்லாட்சி ஏற்பட வழி செய்தனர். தனது இப்பரிசை கர்மான் டியூனீசியா, எகிப்து,யெமன்,லிபியா, சிரியா போன்ற நாடுகளில் நல்லதொரு ஆட்சியை அமைக்கும் நோக்கில் உயிரிழந்துள்ள ஷஹீத்களுக்கு சமர்ப்பித்துள்ளமை முஸ்லிம் பெண்களுக்கு அவரது முன்மாதிரியை பறைசாற்றி நிற்கின்றது

 அரேபிய வசந்தம் என்ற பெயரில் கடந்த ஒரு வருட காலமாக அரபு நாடுகளில் நடந்து வரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் நவீன இஸ்லாமிய எழுச்சிக்கான ஒரு படிக்கல்லே. இன்று நடைபெற்றுவரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களின் விளைவாக இன்று டியூனீசியா,மொரோக்கா, எகிப்து போன்ற நாடுகளில் இஸ்லாமிய கட்சிகளின் கை ஓங்கியுள்ளது. இந்த மக்கள் எழுச்சி போராட்டங்களில் தவக்குல் கர்மானை போன்று பல்லாயிரக்கனக்கான பெண்கள் தமது விடுதலைக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடாத்துகின்றார்கள். எகிப்தில் சர்வாதிகார ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியை வீழ்த்திய பெருமை அஸ்மா மஹ்பூத் என்ற 26 வயதுடைய முஸ்லிம் பெண்ணுக்கே உரித்தாகியது. அஸ்மா மஹ்பூதின் உணர்ச்சிகரமான வார்த்தைகளே எகிப்தின் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை தஹ்ரீர் சதுக்கத்திற்கு அழைத்து வந்தது. எனவே இந்த நவீன மக்கள் எழுச்சி போராட்டங்களில் சாதாரண முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு அளவிட முடியாததாகும்.

இந்த வரிசையில் முஸ்லிம் உலகிற்கு பரிசாக கிடைத்த மற்றொரு ஊடகவியலாளரே யுவோன் ரிட்லி. 2003 இல் இஸ்லாத்தை ஏற்று கொண்ட யுவோன் ஆப்காணிஸ்தானுக்கும், பலஸ்தீனுக்கும் நேரடியாக சென்று அவர்கள் படும் அவலங்களை உலகறிய செய்தார். பிரித்தானியாவில் பிறந்த யுவோன் ரிட்லி மேற்கில் இஸ்லாம் தொடர்பாக முன்வைக்கபடும் குற்றசாட்டுகளுக்கு சர்வதேச ஊடகங்களை பயன்படுத்தி விடையளித்து வருகின்றார். ஈரான் … என்ற தொலைக்காட்சி ஊடகத்தில்   தற்போதைய ஊடகவியலாளராக உள்ள யுவோன் இஸ்லாத்தை ஏற்க முன் பல முஸ்லிம் சாரா சர்வதேச ஊடகங்களுக்காக வேலை செய்தவர். அரேபிய எழுச்சிப் போராட்டங்கள் குறித்து யுவோன் ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் சர்வதேச உலகின் கவனத்தை ஈர்த்த விடயங்களாகும்.

இப்படி பெண்களில் ஒரு சாரார் வீதிக்கிறங்கி நேரடியான போராட்டங்களில் ஈடுபட மற்றுமொரு சாரார் ஊடகங்கள் மூலம் கருத்தியல் ரீதியான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அன்றைய ஹன்ஸா- இன்று உம்மு முஹம்மத்
உம்மு முஹம்மத் என்பவர் கலாநிதி அப்துல்லாஹ் அஸாமின் மனைவி. பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் ஜிஹாதிகளில் கலந்து கொண்ட அப்துல்லாஹ் அஸாமை எதிரிகள் குண்டு வைத்துக் கொலை செய்தனர். அவரும் அவரது மகன் முஹம்மத், இப்ராஹீம் ஆகியோரும் பயணம் செய்த கார் ஒன்றிலே அந்த குண்டு பொருத்தப்பட்டிருந்தது. இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தந்தையும், இரு மகன்களும் ஷஹீதாகின்றார்கள். ஷஹீத்களின் குடும்பத்தினரை தரிசித்து ஆறுதல் சொல்லும் நோக்குடன் அப்துல்லாஹ் அஸாமிற்கு கீழ் பணியாற்றிய முஜாஹித்கள் கவலை தோய்ந்த முகத்துடன் உம்மு முஹம்மதிடம் வருகின்றார்கள். அவர்களது கவலை தோய்ந்த முகத்தை பார்த்த உம்மு முஹம்மத் 'ஏன் கவலைப்படுகின்றீர்கள். ஒரு அப்துல்லாஹ் அஸாம் நிலத்தில் புதைந்து விட்டால் அவரிலிருந்து எண்ணற்ற அப்துல்லாஹ் அஸாம்கள் புத்துயிர் பெற்று வருவார்கள். இது ஒரு வெற்றியாகும்.எமது ஜிஹாதிய வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை' என்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்த உம்மு முஹம்மதின் வார்த்தைகள் அன்று ஹன்ஸா (ரழி) அவர்கள் கூறிய வார்த்தைகளை ஒத்தாகவே அமைந்துள்ளன. காதிஸிய்யா யுத்ததிற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போது ஹன்ஸா (ரழி) அவர்கள் அன்று தனது நான்கு புதல்வர்களையும் யுத்தத்திற்கு அனுப்பி வைக்கின்றார். நான்கு பேரும் ஷஹீதான செய்தி கேள்விப்படவே ஹன்ஸா ஆனந்த கண்ணீர் வடித்த வண்ணம் என்னுடைய புதல்வர்கள் மூலம் என்னை கண்ணியப்படுத்திய அல்லாஹுவுக்கே எல்லாப்புகழும் என்று கூறுகின்றார்கள்.

உண்மையில் இத்தகைய எண்ணற்ற ஹன்ஸாக்கள் இன்று உம்மு முஹம்மத்களாக பலஸ்தீனிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தனது பிள்ளை மார்க்கத்திற்காக போராடி ஷஹீதாகுவதன் மூலம் இறைவனிடம் தான் கண்ணியம் பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு பலஸ்தீன் தாய்மாரின் நோக்கமாக இருந்து வருகின்றது. அந்த இலட்சியத்தை தமது குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் கலந்து ஊட்டிவிடுகின்றார்கள். இத்தகைய பெண்களால் தான் இன்றும் பலஸ்தீன் வல்லரசுகளின் இரும்புப் பிடிகளுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் எழுந்து நிற்கின்றது. குறிப்பாக பலஸ்தீன், சூடான், டியூனீசியா போன்ற நாடுகளில் நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் பங்களிப்பு ஆரோக்கியமாகவே காணப்படுகின்றன.

இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆஇஷா
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களை திருமணம் முடித்ததற்கான காரணம் தனது மரணத்தின் பின் குடும்பவாழ்வு மற்றும் பெண்களுடன் தொடர்பான மார்க்க விவகாரங்கள் மறைந்து விடக்கூடாது. இளம் வயதில் காணப்படும் ஆஇஷா (ரழி) அன்ஹா அவர்கள் அந்த சிந்தனைகள் சமூகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலாகும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள். உண்மையில் ஆஇஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது மரணத்தின் பின் மிகப்பெரும் ஆசிரியையாக இருந்துள்ளார்கள். ஸஹாபாக்களும், தாபிஈன்களும் தினந்தோறும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து மார்க்கத்தை கற்று கொள்வார்கள்.

அந்த ஆயிஷா (ரழி) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்த நவீன காலப் பெண்ணே பின்த் ஷாதிஃ என்றழைக்கபடும் ஆயிஷா அப்துர்ரஹ்மான். மிகச்சிறந்த எழுத்தாளராக, சிந்தனையாளராகவும், மொழியியலாளராகவும் இருந்த ஆயிஷா அப்துர்ரஹ்மான் கலாநிதி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அல்குர்ஆன் விளக்கவுரை துறையில் அல்குர்ஆனை அல்குர்ஆனின் மூலமே விளக்கும் ஒரு புதுமுகப்பார்வையை ஏற்படுத்தியவரே ஆஇஷா அப்துர்ரஹ்மான். ஸஹாபாப் பெண்களின் வரலாறுகள், நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பாக ஆஇஷா எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். ஆசிரியராக, பல பல்கழைகழகங்களில் பேராசியராக, உலகின் முன்னோடி பத்திரிகைகளின் ஊடகவியலாளராக என்று பல பதவிகளை ஆஇஷா வகித்துள்ளார். அரபு மொழியின் வளர்ச்சிக்காக ஆஇஷா மேற்கொண்ட முயற்சிகள் எண்ணற்றவை. இதற்காக சர்வதேச அளவில் பைஸல் விருது உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார்.

ஹதீஸ் துறையில் மிக ஆழமான புலமை கொண்டிருந்த ஆஇஷா பெண்களுக்கு அறிவூட்டுவதை தனது முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தார். நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பாகப் பேசும் இத்தகைய பெண்களின் அறிவுப்பங்களிப்பை எப்படி இஸ்லாமிய உலகம் மறந்து விட முடியும்? இஸ்லாமிய உலகில் அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செலுத்தியதனூடாக நவீன இஸ்லாமிய எழுச்சியின் பங்காளிகளாக மாறிய பல இஸ்லாமிய பெண் பிரபலங்கள் இங்கு நினைவு கூறப்பட வேண்டும். இக்கட்டுரையின் விரிவஞ்சி அவர்களது வரலாறுகளை சுருக்கமாக முன்வைக்கின்றேன்.

மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கழைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் உதவிப் பேராசிரியராக கடமையாற்றும் கலாநிதி ஸீனத் கௌஸர் தென்னாசியாவில் பேசப்படும் மிகப் பெரும் ஆளுமையாகும். இஸ்லாமிய அரசியல் சிந்தனை, நவீனத்துவம், ஐரோப்பிய தத்துவங்கள், முஸ்லிம் பெண்களின் சமூக பாத்திரம், மேற்கத்தேய ஆய்வுமுறைகள் போன்ற விடயங்களில் ஸீனத் மிகவும் விரிவான ஆய்வுகளை நடாத்தி பல நூல்களை படைத்து முஸ்லிம் உலகிற்கு பெருமை சேர்த்து வருகின்றார்.
டியூனீயாவின் நஹ்ழா இயக்கத்தை ஸ்தாபித்த ராஷித் அல்கன்னூஷி என்றழைக்கபடும் மிகப்பெரிய இஸ்லாமிய ஆளுமையின் மகள் கலாநிதி சுமையா அல் கன்னூஷி முஸ்லிம் சமூகம் கண்டு வரும் மற்றொரு மிகப்பெரும் அறிவாளுமை என்பதில் சந்தேகமில்லை.

… என்ற பிரபலமான இஸ்லாமிய வலைப்பின்னலில் தொடர்ச்சியாக பங்காற்றி வரும் சுமையாவின் எழுத்துகளும், பேச்சும் அரசியல் தத்துவம், இடைக்கால வரலாறு, சமகால மத்தியகிழக்கு அரசியல், பெண்ணிய சிந்தனைகளை கட்டுடைத்து தூய இஸ்லாத்தை முன்வைத்தல், ஸியோனிஸத்தை கருத்தியல் ரீதியாக எதிர்த்தல் போன்ற தலைப்புகளிலேயே அமைந்துள்ளது. அரபுலகில் நடந்து வரும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் தொடர்பாக கலாநிதி சுமையா கார்டியன், அல்ஜஸீரா போன்ற ஊடகங்களில் எழுதிவரும் கருத்துக்கள் மிக முக்கியமானவை.
இன்று நவீன இஸ்லாமிய உலகம் கண்டு வரும் வேறு இருபெரும் ஆளுமைகளே சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் தலைவர் யூசுப் அல் கர்ளாவியின் இரு புதல்விகளான கலாநிதி இல்ஹாம் அல் கர்ளாவி, கலாநிதி ஹிஷாம் அல் கர்ளாவி என்போராகும். நவீன இஸ்லாமிய எழுச்சியில் இவர்களது பங்களிப்பு தனியாக ஆய்வுக்கெடுத்து கொள்ள வேண்டிய விடயங்களாகும்.

அதே போன்று 2008 களில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞர் தாஹா ஜாவிர் அலவானியின் மனைவி முனா அபுல் பழ்ல் மற்றுமொரு மிகப்பெரும் பெண் ஆளுமை.

இந்த வகையில் நவீன இஸ்லாமிய எழுச்சிக்கு இன்று ஐரோப்பிய நாடுகளிலும் சரி, அரபுலகிலும் சரி முஸ்லிம் பெண்கள் செய்து வரும் பங்களிப்புக்களை அவதானிக்கும் போது அன்றைய ஸஹாபாப் பெண்களின் பங்களிப்புக்களே கண்முன் தோன்றுகின்றன.

எமது இலங்கைத் திருநாட்டிலும் மார்க்க விடயங்களில் பெண்களின் பங்களிப்பு முன்பிருந்ததை விட ஆரோக்கியமானதாகவே காணப்படுகின்றது. எனினும் அவர்களுல் பெரும்பாலானோர் ஓரிரு சொற்பொழ்வுகளுக்குச் சென்று அவற்றைக் கேட்பதுடன் அவர்களது பங்களிப்பை சுருக்கிக் கொள்கின்றனர். என்னும் சமூகத்தில் வாழும் மற்றொரு பெண் சாரார் சமூகத்தில் கர்தி தொடர்பாக காத்திரமான பங்களிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர் ஆண்கள் மார்க்கத்தைக் கற்பதற்கு நாடு பூராகவும் எண்ணற்ற கலாநிலையங்கள் காணப்பட்டன. ஆனால் அன்று பெண்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ள எந்ந ஏற்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் இன்று அந்த நிலை பரவலாக மாறி வருவதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. தற்போது கல்வி தொடர்பான பெண் சமூகத்தில் காணப்படும் விழிப்புணர்வு ஆண் சமூகத்தில் காணப்படும் விழிப்பணர்வை விட அதிகமாகவே உள்ளன.

ஒரு சில இஸ்லாமிய இயக்கங்களின் பெண்கள் அமைப்புக்கள் மிக ஆர்வத்துடன் பெண்கள் சமூகத்திற்கு இஸ்லாத்தின் தூய செய்தியை கொண்டு செல்கின்றனர். சிறார்களுக்கு ஆரம்ப மார்க்க அறிவையும் அல் குர்அனிய அறிவையும் வழங்கும் பல மத்ரஸாக்களின் ஆசிரியர்களாக பெண்களே உள்ளனர். மேலும் பாலர் பாடசாலைகள் முழுமையாக பெண்கள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன. பெண்கள் பாடசாலைகள் அதிகரிக்க வேண்டும், ஆண் பெண் கலப்புக் கல்வி தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றன. இவை யாவும் இஸ்லாம் எழுச்சி அடைந்து வருகின்றது என்பதற்குச் சிறந்த உதாரணங்களே.


இந்த அடிப்படைகளிலிருந்தே நாம் எமது சமூகத்தில் பெண்களின் தொடர்பான ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்களை முன்னெடுக்க வேண்டும். வீட்டில் இல்லத்தரசிகளாக வாழும் பெண்களுக்கு மார்க்கத்தை கற்பித்து அவர்களை சிறந்த குடும்பப்பெண்களாக, தமது பிள்ளைகளுக்கு இலட்சிய உணர்வை ஊட்டும் தாய்மார்களாக அவர்களை மாற்றும் பெரும் பொறுப்பை பெண்கள் சமூகமே பொறுப்பேற்க வேண்டும். பாலர் பாடசாலைகள், அல் குர்ஆன் மத்ரஸாக்கள், கனிஷ்ட பாடசாலைகள் என்பனவே ஒரு சமூகத்தின் அடிப்படை அத்திவாரங்கள். அந்த அத்திவாரங்களை நிர்மாணிக்கும் பொறுப்பைச் சுமந்தவர்கள் பெண்களே. இந்த அலகுகளை உருவாக்கி அவற்றை மேம்படுத்தும் பொறுப்புக்களையும் பெண்களே செய்ய வேண்டும். இது தவிர கல்வி , எழுத்து , வைத்தியம், மகளிர் விவகாரம், பெண் தலைமைகளை உருவாக்கள், போன்ற துறைகளிலும் பெண்கள் சமூகம் அதிக அக்களை செலுத்த வேண்டும். இலங்கை போன்ற ஒரு சிறுபான்மை நாட்டில் பெண்களின் இத்தகைய முயற்சிகள் சமூகத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது சந்தேகமற்ற விடயமாகும்.

நன்றி: http://azeezahmed.wordpress.com