திங்கள், 23 ஜூலை, 2012


சகோதரர் அஹமது தீதாத் பற்றி


இவரது முழு பெயர் – அஹமது ஹுசைன் தீதாத்

பிறப்பு                                     - ஜுலை 1, 1918
பிறந்த ஊர்                            - குஜராத், (இந்தியா)



1918-1942 வரை இவரது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள்

இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை இவர் பிறந்த சில காலங்களிலேயே தென்ஆப்ரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.  இவர் தனது 9வது வயதில் தென்ஆப்ரிக்கா சென்று தனது தந்தையுடன் இணைந்துவிட்டார்.

இவர் தென்ஆப்ரிக்கா சென்ற சிலகாலத்திலேயே இவரது தாயார் மரணமடைந்தார் (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்).  இவர் கடுமையாக தனது படிப்பில் கவனம் செலுத்தி 6-ஆம் வகுப்பிலேயே மிகச் சிறந்து ஆங்கிலப்புலமை மற்றும் பள்ளியில் நற்பெயர் பெற்றார்! (அல்ஹம்துலில்லாஹ்).  இவர் தனது 16 வது வயதில் வேலை செய்ய துவங்கினார்.

1936-ம் ஆண்டு பர்னிச்சர் சேல்ஸ்மேன் ஆக தனது வாழ்க்கைப் பயணத்தை துவங்கினார். அக்கால கட்டத்தில் நசாராக்களால் “இஸ்லாம் வாலால்“ பறப்பட்டது என்ற சில சர்ச்சைகள் வெளிவந்தன இந்த சர்ச்சைகளை கண்டு மனம் துவலாமல் நசாராக்களின் வேதங்களை ஆய்வு செய்ய துவங்கினார் இதன்மூலம் இவர் இஸ்லாத்தின் தாவா பணிகளுக்குள் தம்மை அற்பணித்துக்கொண்டார்!

1942-1956 வரை இவரது வாழ்வில் நடந்தவை

சகோதரர் அஹமது தீதாத் அவர்களது தாவாபணி (இஸ்லாமிய அழைப்புபணி) 1942 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற இடத்தில் அமைந்துள்ள ”அவோலன்-சினிமா” என்ற  ஹாலில் துவங்கியது.

முதன்முதலில் இவர் சொற்பொழிவுகள் நிகழ்த்தும்போது எத்தனை பேர் அதைக்கேட்டார்கள் தெரியுமா? மயங்கிவிடாதீர்கள் வெறும் 15 நபர்களே!

இவரது திறமையான பேச்சாற்றலில் மயங்கிப்போன மக்கள் இவரது சொற்பொழிவுகளை கேட்க ஆவலாக இருந்தனர். சில காலங்களுக்குப்பின்னர் இவரது சொற்பொழிவுகள் தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனஸ்பர்க் மற்றும் கேப்-டவுன் என்ற நகரங்களில் அரங்கேரியது அப்போது மக்கள் கூட்டம் ஆயிரத்தை தாண்டியது” தனது முதல் கூட்டத்தில் வெறும் 15 பேர்களுக்கு சொற்பொழிவாற்றுகிறோம் என்று இவர் கவலைப்படவில்லை! பிறகு நடந்த சொற்பொழிவுக்கூட்டங்களில் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் (அல்ஹம்துலில்லாஹ்).  இவர் துண்டுப்பிரச்சுரம் அளிப்பது, ஜும்ஆ பேருரை நிகழ்த்துவது முதற்கொண்டு நடைபெற்ற சொற்பொழிவுகளால் இஸ்லாத்திற்கும் கிருஸ்தவத்திற்கும் இடையே ஒரு இணைப்பு பாலத்தை அதாவது சகோதரத்துவத்தை வளர்த்தார்.


இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் – 1956-1986

இவரது பேச்சாற்றலிலும் தாவா சொற்பொழிவுகளையும் கேட்ட பொதுமக்கள் கூட்டம் அபரிமிதமாக வளர்ந்தது! கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தையும் அவர்களது ஆவலையும், இஸ்லாத்தைப்பற்றிய கேள்விகளையும் கருத்தில்கொண்டு இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் என்ற அமைப்பை 1956ஆம் ஆண்டு இவர் துவங்கினார்! (அறிந்துக்கொள்ளுங்கள் எமது ஆலிம் மற்றும் மவ்லவி சகோதரர்களே இவர் தங்களைப்போன்று எந்த ஜமாஅத்-ஐயும் நிறுவி இஸ்லாத்தை பிளவுபடுத்தவில்லை)

இந்த அமைப்பிற்கு உறுதுணையாக இருந்தவர்களும் காரணமாக இருந்தார்கள் (திரு. குலாம் ஹுசென் வெங்கர் மற்றும் திரு. தாஹிர் ரசூல்).  இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் இஸ்லாமிய புத்தகங்களை பிரசுரிப்பது, புதிதாக இஸ்லாத்ததை ஏற்றவர்களுக்கு இஸ்லாமிய வகுப்புகள் நடத்துவது போன்றவைகளேயாகும்!

1958ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களால் ”அஸ்-ஸலாம் எஜிகேஷனல் இன்ஸ்டியுட் என்ற அமைப்பு பெரேமர் என்ற பகுதியில் சுமார் 75 ஏக்கர் நிலத்தில் உருவானது.

இந்த அமைப்பு இவருக்கு 30 வருடங்கள் மிகவும் பக்கபலமாக அமைந்தது. இவர் பிப்லிகள் தியோலஜி Biblical Theology பற்றி ஆராய்ந்து அதிக இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்தார்.

மேலும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார். இந்த செயல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.  பிறகு இவர் தனது கைப்பட பல இஸ்லாமிய நூல்களை இயற்றினார், இஸ்லாமிய பிட்நோட்டீஸ்கள், பேம்ப்லட் போன்றவற்றை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வினியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்!  இது மட்டுமல்லாமல் பைபிள் பற்றி இஸ்லாமிய வகுப்புகளையும் நடத்தினார்!  இதன்மூலம் இவருக்கு இஸ்லாம், கிருஸ்தவம் மற்றும் ஜுதயிஷ மக்கள் கூட்டம் பெருகியது!

இவரது சர்வதேச சொற்பொழிவுகள் 1985-1995

1980 ஆம் ஆண்டிற்குப்பிறகு சகோதரர் தீதாத் தென் ஆப்ரிக்காவிற்கு வெளியேயும் தாவா பணிகளை துவங்க எண்ணினார்!
1985-ஆம் ஆண்டு இலண்டன் நகரில் உள்ள ”ராயல் ஆல்பர்ட் ஹால்” என்ற அரங்கில் 2 இஸ்லாமிய சொற்பொழிவு பிரச்சாரம் நிகழ்த்தினார்.

1986-ஆம் ஆண்டு இவருக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் பரப்பியதற்கு ”கிங் பைஷல் அவார்டு” கிடைத்தது!. இந்த அவார்டு இவருக்கு சர்வதேச அளவில் நற்பெயரை தேடித்தந்தது!

இவர் தனது 66-ஆம் வயதிலிருந்து புதுப்பொழிவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோண்டு மீண்டும் ஒரு 10 ஆண்டுகள் அயராது தனது இஸ்லாமிய தாவா பணிகளை நசாராக்களிடம் மேற்கொண்டார்! இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது பயணத்தை தொடர்ந்தார்!




இவர் இஸ்லாமிய தாவா பணிக்காக பயணித்த நாடுகளின் பட்டியல் இதோ! (அல்ஹம்துலில்லாஹ்!)

சவுதி ஆரேபியா மற்றும் எகிப்து (பல முறை)
ஐக்கிய ராஜாங்கம் எனப்படும் – இங்கிலாந்து (பலமுறை 1985 முதல் 1988 வரை)
பாகிஸ்தான் (சர்வாதிகாரி ஜியாவுல் ஹக்-ஐ சந்தித்தார்),
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
மாலத்தீவுகள் (நவம்பர்-டிசம்பர் 1987களில்) இச்சமயம் இவரை ஜனாதிபதி கயும் கவுரவித்தார்
சுவிட்சர்லாந்து (மார்ச் 1987 ஜெனிவாவில் சொற்பொழிவு)
US அமெரிக்க (1986களில் திரு. ஸ்வாகர்டு, ராபர்டு டவுக்ளஸ் மற்றும் மற்ற 2 பேச்சாளர்களுக்கு இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் அரிஜோனா மாகாணம், US)
ஸ்வீடன் மற்றும் டென்மார்க் (1991-ல் மட்டும் 3 இஸ்லாமிய சொற்பொழிவுகள்)
மறுபடியும் US அமெரிக்க, கனடா (1994 இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் கனடா)
ஆஸ்திரேலியா – (1996ல் அன்னாரது இறுதி சுற்றுப்பயணம், இதற்குப்பின் இவருக்கு பக்கவாதம் Stroke ஏற்பட்டது)

1996-2005 வரை அன்புமிக்க சகோதரர் அஹ்மத் தீதாத் அவர்களது இறுதிக்கட்ட சோகமான வாழ்க்கை

மே மாதம் 1996 ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களுக்கு வலது-கையின் பக்கம் பக்கவாதம் Paralysis அதாவது கழுத்து முதல் உடலின் ஒருபக்கம் முழுவதும் (அதாவது செரிபிரல் வாஸ்குலர் ஆக்சிடன் என்ற வாத நோய்) ஏற்பட்டது. இதனால் இந்த அன்புச்சகோதரர் பேச முடியாமலும் எதையும் விழுங்கக்கூட முடியாமலும் அவதிப்பட்டார்!  இவருக்கு ஏற்பட்ட இந்த நிலையைக்கண்டு உடனடியாக இவரை ரியாத் நகரில் உள்ள ”கிங் பைஷல் ஸ்பெஷலிஸ்டு மருத்துவமனை”க்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவரது இந்த நிலைமை 9 ஆண்டுகள் நீடித்தது மேலும் இக்காலகட்டத்தில் இவர் தென் ஆப்ரிக்காவில் வெருளம் என்ற பகுதியில் தனது வீட்டில் படுக்கையாகவே தனது கடினமான இறுதி 9 ஆண்டுகளை கழித்தார்! இவர் இந்த இக்கட்டான நிலையில் தனது மனைவியின் கவனிப்பில் இருந்துவந்தார்! அன்னார் அவர்கள் ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு தனது இல்லத்திலேயே இயற்கை எய்தினார்! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்).  இவரது மண்ணரை தற்போது வெர்குளம் என்ற தென்ஆப்ரிக்க நகரில் உள்ளது!  (மேலும் தகவலறிய www.ahmed-deedat.co.za முகவரிக்கு செல்லவும்)

சகோதரர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் மார்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதை நசாராக்கள் முன் நிறுத்தி தாவா பணிகளை மேற்கொண்ட இந்த சகோதரர் உண்மையில் நமக்காக பாடுபட்டுச்சென்றார்! இவரது பாணியில் நாமும் நமது வாழ்க்கைப்பயணத்தை துவக்குவோம்! பிரிந்துகிடக்கும் நம் ஜமாஆத் மக்களிடம் இணைப்பை ஏற்படுத்துவோம் மரணம் வரை முஸ்லிம் என்று சொல்வோம்!

சகோதரர்களுக்க என் அன்பான வேண்டுகோள்
நமது இந்த அன்புச் சகோதரருக்காக இரு சொட்டு கண்ணீர்விட்டு மண்ணரையில் சுவன நித்திரை கிடைக்க நமது ரப்புல் ஆலமீனிடம் பிரார்த்தியுங்கள்! இதுதான் நாம் இவருக்கு இவர் செய்த அறும்பணிக்கு நம்மால் இயன்ற ஒரு சிறு உதவியாகும்! (நபி வழியின் முறையை அறிந்து துவா செய்யலாம்!)


அஹமது தீதாத் அவர்களின் படைப்புக்களை தரவிறக்கம் செய்ய


Deedat’s Encounter with Christians Missionaries


Christ in Islam
presentation By Sheikh Ahmed Deedat about the Christ in Islam.


What the Bible Says About Muhammad PBUH
A great debate between Dr. Jamal Badawi and Dr. Anis Shorrosh, it took a place in Kansas City.


Muhammad PBUH the Greatest
A lecture presented by Sheikh Ahmed Deedat about the Prophet Muhammad (Peace and Bless be Upon Him), Sheikh Ahmed Deedat Well-Known as a muslim scholar who has had many debates in comparative religion with many christians scholars.


Was Christ Crucified ?
It’s a great debate between Sheikh Ahmed Deedat who is well-known as a muslim scholar in comparative religion and Dr.Floyd E. Clark who is a professor emeritus at Johnson Bible College USA. In this debate was the first appearnce for Dr. Anis Shorrosh whom Sheikh Ahmed Deedat had many debates with.


The Quran or The Bible Which is God’s Word ?
A day before the great debate with Dr. Jimmy Swaggart, this lecture took place in New York City, titled ” Qur’an or the Bible which is God’s Word ? ” presented by Sheikh Ahmed Deedat.


Is the Bible God’s Word ?
A great debate between Sheikh Ahmed Deedat and Jimmy Swaggart and the topic was Is the Bible God’s Word ?, it took place in U.S.A at the University of Louisiana, It’s Worth seeing Don’t miss it.


Is the Bible God’s Word Q&A

Muhummed in the Bible in response to Swaggart
A day after the great debate with Jimmy Swaggart at Louisiana University in the USA, Sheikh Ahmed Deedat in this lecture answer a question addressed to Jimmey Swaggart that “is the bible says anything about Muhammad? ” and Jimmey’s answer was “No!”. Here is Sheikh Deedat’s Answer.


Crucifixion Fact or Fiction (Debate)
A great debate between Sheikh Ahmed Deedat and Dr. Robert Douglas who has PhD in Religion, the debate took place at the University of Kansas on 16th November 1986. recommended


Popes Pious Pronouncement
A lecture presented by Sheikh Ahmed Deedat titled ” Popes Pious Pronouncement “


Quran or the Bible which is Gods Word
One of the Greatest dabates in the last century, Sheikh Ahmed Deedat accepted the challange and debated Dr. Anis Shorrosh, in this debate u can see how Anis delt with the audince, how weak is his Arabic language though he is an Arab! and many other things, Worth seeing …


(Q&A Session)


Is the Bible True Word Of God ?
One of the Greatest Debates, It’s between Sheikh Ahmed Deedat and Pastor Sjoberg, it’s worth seeing don’t miss it.


Is Jesus God ?
One of the greatest debates, where Sheikh Ahmed Deedat and Pastor Stanley Sjoberg was discussing one of the most important issues in christianity .. it’s really a great debate and worth seeing .. don’t miss it!


Tribute and Times of Sheikh Amed Deedat
How did Sheikh Ahmed live ? how did he start the Dawah ? who were coming to his work place to practice ?! How did he find the book ?  it sounds Arabic ! This Film talks about Sheikh Deedat’s Story the Great Muslim Scholar in Comparative religion in the 20th Century.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக