சனி, 8 செப்டம்பர், 2012



வரதட்சணை ஓர் பாவச்செயல்

புகழ் அனைத்தும் இறைவனுக்கே! இறை தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களை பின்பற்றி வாழும் நல்லடியார்கள் மீதும் இறைவன் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக! ஆமீன்.

படித்தவர் முதல் பாமரர் வரை... மகளை கரையேற்ற கடனை வாங்கி தத்தளிக்கும் பெற்றோர்கள். பட்டு சேலைக்கு மட்டும் பல இலட்சம் செலவழிக்கும்இ நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினர் வரை... அனைவருக்கும் பரிட்சயமான விஷயம்தான் வரதட்சணை.


ஒரு ஆணுக்கு திருமணம் பேச்சு துவங்கி விடுமானால், நல்ல பெண் கிடைத்தால் சொல்லுங்களேன் என்ற ரீதியில் தொடங்குகிறது இந்த பெண் பார்க்கும் படலம். நல்ல பெண் என்ற வார்த்தைக்கு ஒவ்வொரு தனிமனித அகராதியிலும் வேறுபட்ட பல அர்த்தங்கள்;. நல்ல பெண் என்பவள் தீன்வழி நடக்கும் குணமான பெண்ணா?... என்றால் நிச்சயமாக இல்லை.

இவர்களுக்கு ஒரே மகள் தான், தகப்பனாரும் வெளிநாட்டில் வேலை செய்கின்றார், எனவே கரக்கும் வரை கரக்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டுதான் களத்தில் இறங்குகின்றனர். தகுதி ஏற்றாப்போல விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதிக இலாபம் ஈட்டித்தர வீடு, நிலம் விற்க தரகர்கள் இருப்பது போல் மாப்பிள்ளை விற்கவும் தரகர்கள் இல்லாமலில்லை.

மாப்பிள்ளை வீட்டார் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அராஜகச் செயல்கள்
சொல்லி மாளாது. சாம்பார் கொண்டு வந்தால்தான் பிரியாணியில் கை வைப்பேன் என்று மாப்பிள்ளையின் உணர்ச்சி வசப்பேச்சு ஆகியவற்றிற்கு பெண்ணைப் பெற்ற காரணத்தால் பொறுமையுடன் கேட்டதை கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. மொத்தத்தில் இஸ்லாம் கூறும் வாழ்க்கை ஒப்பந்தம் இங்கு கேலிக் கூத்தாகவும், சந்தைப் பொருளாகவும் மாறிவிட்டது.

அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கை (ஒப்பந்தம்) செய்துள்ளனர் (அல்குர்ஆன் 4:21)

அல்லாஹ் தனது திருமறையில் திருமணம் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே என்பதாக குறிப்பிடுகிறான்.

வரதட்சணை என்ற பெயரில் இவர்கள் பணம் சம்பாதிக்க பிரயோகிக்கும் வியூகம் அலாதியானது. பணம் வேண்டாம் நகை மட்டும் போதும் உங்கள் பெண்ணுக்கு தானே போடுகிறீர்கள் என்ற ரீதியில் சிலரும், வரதட்சணை வாங்காத திருமணம் என்று விளம்பரபடுத்தி விலை உயர்ந்த சீர்வரிசைகளை மட்டும் திரைமறையில் பெற்றுக்கொள்வது சகஜமாகிவிட்டது.

இவர்கள் மேடையில் பெறப்படும் ரொக்கப் பணம் மட்டும் தான் வரதட்சணை என்றும் இதுவல்லாது தரப்படுகின்ற அனைத்தும் வரதட்சணையை சேராது என்றும் மேம்போக்கு வாதம் செய்கின்றனர். தனது கனவுகளை நினைவாக்கவும் தமது சொத்துக்களை விரிவடையச் செய்யவும் இவர்கள் பிரயோகிக்கும் ஆயுதம் தான் வரதட்சணை என்பது. மேடையில் வாங்கப்படும் ரொக்கப்பணம் மட்டும்தான் வரதட்சணை என்றால்?

o கை நீட்டி வாங்கும் கைக்கடிகாரமும், மாப்பிள்ளைக்கு என பெறப்படும் கழுத்துச் செயினும், மோதிரமும், வீடும், நிலமும் வரதட்சணை இல்லையா?

o நிச்சயதார்த்தம் என்ற பெயரில் பெரும்படை திரட்டி, உண்டு கூத்தாடி,பணச்சுமையை பெண் வீட்டார் மீது சுமத்துவது வரதட்சணை இல்லையா?

o புகுந்த வீட்டிற்கு பெண்ணை அழைத்து வரும் போது கேட்கும், பஞ்சு மெத்தையும், பட்டுத் தலையணையும், ஓலை விசிரியிலிருந்து, பண்டு பாத்திரங்கள், அரிசி, பருப்பு, மசாலா சாமான்கள் வரை சுருட்டிக் கொண்டு வருவதற்கு பெயர் வரதட்சணை இல்லையா?

o பண்டிகை நாளுக்காக காத்திருந்து பாத்திரங்கள் நிரப்பி பண்டங்கள் கேட்பதற்கு பெயர் வரதட்சணை இல்லையா?

o தலைப் பெருநாள் சாக்கில் புத்தாடை கேட்பதும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை தூண்டி மடியை நிரப்பிக் கொள்தற்க்கும் பெயர் வரதட்சணை இல்லையா?

o கர்பிணி மனைவியின் கவலை மணம் பார்க்காமல் பிரசவச் செலவு முதல்  குழந்தைக்கு பவுடர் சோப்பு வரை மாமனாரை தரச் சொல்லி நிற்பதற்கு பெயர்
வரதட்சணை இல்லையா?

o பிரசவம் முடிந்து திரும்பி வரும் போது குழந்தைக்கு வெள்ளி அரைஞான்
கயிறும், வெள்ளிக் கொலுசும் தங்க நகைகளும் கேட்பதற்கு என்ன பெயர்?

o மனிதர்களே, நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்! மேற்கண்டது மட்டும் வரதட்சணை சார்ந்தது அல்ல! இதுவல்லாது நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பணமாகவோ, பொருளாகவோ, நிலமாகவோ, சொத்தாகவோ, வாங்கப்படும் அனைத்தும் வரதட்சணையே!

o பெண்ணை பெற்ற ஓரே பாவத்திற்காக ஊர் வழக்கம் என்ற பெயரில் இவ்வளவு சுமையை பெண் வீட்டார்; மீது சுமத்துவது எவ்வளவு பெரிய கொடுமை. கருணை என்ற வார்த்தையே உங்கள் அகராதியில் இல்லையா?

o பணம் படைத்த பல மாடிக் கட்டிடத்திற்கு சொந்தக்காரர்களுக்கு வேண்டுமானால் இவை சாத்தியப்படலாம். அன்றாடப் பிழைப்புக்கு சைக்கிள் கடை நடத்தி வரும் நடுத்தர வர்கத்தினருக்கு?

o 30 வயது மூத்தமகள் வீற்றிருக்க சமீபத்தில் வயதுக்கு வந்த நான்காவது மகளின் எதிர்காலம் குறித்து கண்ணீர் சிந்தும் ஏழை முஸ்லிமின் நிலை உங்கள் மனக் கண்களுக்கு தெரியாதது ஏன்?!

o இவ்வாறு பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படும் இந்த திருமணத்தில் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்த பின்பும் இத்தோடு வாங்குவதை நிறுத்திக் கொள்வார்கள் என்பதில் என்ன நிச்சயம்!

o மேலும் கொடுக்க முடியாத பட்சத்தில் தன் இரத்தத்தை ஊட்டி வளர்த்த பெண் புகுந்த விட்டில் இந்த பணத்தாசை முதலைகளின் பிடியில் நிலைத்திருப்பாள் என்ற எதிர்காலப் புதிருக்கு விடையில்லை?!

ஸ்டவ் வெடிப்புக்கள் பெருகி வருவது எதைக் காட்டுகிறது! கவனக் குறைவினால் வெடித்த ஸடவ்கள் எத்தனை?! வசூலிக்க முடியாத வரதட்சணை பாக்கியால் வெடித்த ஸ்டவ்கள் எத்தனை?! என்று வினாக்கள் எழுந்தாலும் ஒன்று மட்டும் உறுதி. அதாவது வரதட்சணை பின்னணியிலும் ஸ்டவ்கள் வெடிக்கின்றன என்பதுதான்.

கல்நெஞ்சம் படைத்தவர்களே! பெற்ற கடனுக்காக கொடுத்து கொடுத்து
ஓட்டாண்டியாகி ஓலைக் குடிசையில் ஒடுங்கிக் கிடக்கும் பாதிக்கப்பட்ட ஏழை, படைத்த இறைவனிடம் கையேந்தினால் உங்கள் நிலை எவ்வாறு இருக்கும்?. சிந்திக்க மாட்டீர்களா?!

பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். அவனுக்கும்
அல்லாஹ்விற்கும் இடையே திரை இல்லை என்கிறது நபிமொழி.

வக்கிரமான வரதட்ணை இஸ்லாத்தில் எவ்வாறு நுழைந்தது?

மாமறையும், நபிமொழியும் பேணப்படாததால் தூய இஸ்லாம் மக்கள் மத்தியில் உலாவரவில்லை விளைவு இறையச்சம் தகர்த்தெறியப்பட்டு மாற்றுமத கலாச்சாரங்களை மக்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

தேர் இழுத்தல் - சந்தன கூடாகவும்

பாலபிஷேகம் - சந்தனபிஷேகமாகவும்

திதி - பாத்திஹாவாகவும்

தாலிக்கயிறு - கருக மணியாகவும்

தலைத்தீபாவளி - தலைப்பெருநாளாகவும் மாறியது

இந்த வரிசையில் மாற்று மதத்திலிருந்து தாரை வார்த்த ஒன்று தான் வரதட்சணை என்பது கணவன் தந்தாலும் பெறக்கூடாது, மணமகன் தருவதை பெற்றுக்கொள்ளும் தந்தை முட்டாள் மாறாக மணமகள் மற்றும் உறவினர் அனைவரும் சீதனம் வழங்க வேண்டும் என்று கூறும் மனுதர்ம கொள்கை இஸ்லாத்தில் துளிர்விட்டது!

பெண்களுக்கு சொத்துரிமையில்லாத இந்து மதத்தில் வெறுங்கையுடன் மணமகன் வரக்கூடாது என்று ஏர்படுத்தப்பட்டதுதான் சீதனம் (வரதட்சணை) என்பது! இந்த வரதட்சணை.

பேரம் பேசுவதில் முன்னிலை வகிப்பது பெண்கள்தான். தாயாக, மூத்த சகோதரியாக இருந்து பேரம் பேசும் இதே பெண்கள்தான், தன்னை கரையேற்ற தம் தந்தை பட்ட கஷ்டத்தையும் அவமானப்பட்டதையும் நேரில் கண்டு அனுபவப்பட்டவர்கள் மணமகன் வீட்டார் மீது கோபம் கொண்டு கொந்தளித்தவர்கள்தான் தமது மகனுக்கும், சகோதரனுக்கும் பேரம் பேசுகிறார்கள். காரணம் பெறப்போகும் செல்வத்தின்
பேராசைதான்! தம் தந்தை கஷ்டப்பட்டு அவமானப்பட்டது இந்த வரதட்சணையால் தானே! மணப்பெண்ணை பெற்றவருக்கும் இந்த கவலையும் அவமானமும் இருக்காதா? என்று உணர்;வு பூர்வமாக சிந்தித்திருந்தால் இந்த வரதட்சணை வந்திருக்காது.

(மஹர்) மணக்கொடை என்ற சொல் இஸ்லாத்தில் வழக்கொழிந்துவிடுமோ என்று அஞ்சுமளவுக்கு இந்த இந்துமத தாக்கம் முஸ்லிம்களிடையே புரையோடிவிட்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நபி வழித்திருமணம் நடந்து கொண்டிருந்த போதிலும் திரைமறையில் வாங்கப்பட்டதோ என்று அஞ்சப்படுகிறது.

வரதட்சணை வாங்காமல் மஹர் கொடுத்து திருமணம் செய்தால் மணமகனுக்கு ஏதும் உள் வியாதி உள்ளதோ?! ஆண்மை குறைவோ?! என்று சந்தேகிக்கும் வெட்கக்கேடான நிலைக்கு இன்றைய முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏன் வரதட்சணை வாங்குகிறீர்கள் என்று பெற்றவர்களை கேட்டால் எங்கள் பெண்பிள்ளைகளுக்கு கொடுத்தோம் அதனால் வாங்குகிறோம் என்று மழுப்பல் வாதம் பேசுகின்றனர். அனைத்துமே பெண் பிள்ளையாய் பெற்றவர்களுக்கு இவர்கள் என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்.

இறைபணியில் ஆர்வம் உள்ள சகோதரர்கள் கூட எனக்கு இதெல்லாம் விருப்பம் இல்லை வீட்டில் கட்டாயப்படுத்துகின்றனர் என்று உதட்டளவில் சொல்லிக்கொண்டு, வாங்கிய பணத்தையும் வங்கிக் கணக்கையும் சரிப்பார்க்கும் காட்சியை காண்கிறோம்.

பெண் என்ற ஒருத்தி கல்யாணம் என்ற நிகழ்வுக்கு பிறகு செய்யும் தியாகங்கள் ஏனோ இந்த வறட்டு இதயங்களுக்கு தென்படுவதில்லை.

பிறந்த வீட்டு முற்றத்தில் தோழியரோடு கூடிவிளையாடியவள்; ? அன்பின் மிகுதியால் தாயையும் தந்தையையும் சார்ந்து வாழ்ந்தவள், பிரிவைத் தாங்காது கதறும் தாயையும் எல்லா துக்கத்தையும் மனதில் பூட்டி சோர்ந்து கையசைக்கும் அருமை தந்தையையும் கூடிவிளையாடிய உயிர்தோழிகளையும் பிரிந்து அறிமுகமில்லாத அந்நிய ஊர் செல்கின்றாள். புதிய மனையையும் பார்க்காத முகங்கள் என்று வேறுபட்ட குடும்பச்சூழலில் தன்னைப்பழக்கிக் கொள்கிறாள். அங்கு தன் சோர்ந்த முகம் பார்த்து ஆறுதல் கூற ஆளில்லை. தலைவலி உடல்வலிக்கு மருந்து தடவி அன்பு செலுத்த அன்னையில்லை. ஒவ்வொரு செயலிலும் பயந்து செய்யவேண்டிய நிர்பந்தம். மாமியார் நல்ல குணம் ஆனால் கோபம் சட்டென்று வரும் என்றும் நார்த்தனாரிடம் ஜாக்கிரதையாக நடந்துக்கொள என்றும் விடுத்த எச்சரிக்கை அறிவுரைகளை அங்கு ஆராயப்படுகிறது. அதற்கேப்ப தன் செயல்பாடுகளை சீர்திருத்தி தியாகம் செய்கின்றாள்.

பிறந்த வீட்டில் நித்தம் ஒருவகை உணவு உண்டு. மீன் வாசம் மறைய வாசனை பூசிக் கொண்டவள் புகுந்த வீட்டில் மாமனாரின் உடல்நிலை கருதி உப்பில்லா சோற்றுக்கு தன்னை உடன்படுத்திக் கொள்கின்றாள். இந்த இளமை வயதில் நாவை அடக்கி பெண்மையின் இலக்கணம் பேணுகிறாள். இவ்வளவு துன்பத்தில் உழன்று இல்லறத்தில் பல தியாகம் செய்கின்றாள். கணவன் குணம் அறிந்து துணி துவைப்பது முதல் பிடித்த சட்டைக்கு இஸ்திரி இட்டு தயார் செய்து வைப்பது வரை பணம் பெறாத வேலைகாரியாக உழைக்கின்றாள்.

நினைத்த நேரம் அவனுக்கு சுகத்தை அள்ளி வழங்கி கர்ப்பம் தரிக்கின்றாள். இதுதான் இவளது தியாகத்தின் உச்சக்கட்டம். மசக்கை என்ற பெயரில் மயக்கம் ஆனாலும் வேலை செய்யத்தவறுவதில்லை. கருவை சுமக்கும் ஒரே காரணத்துக்காக உண்ணும் உணவெல்லாம் வாந்தியாக வெளியாகிறது. நடந்தால் மூச்சிறைப்பு. நினைத்தமாதிரி தூங்க முடியாத நிலை. இன்னும் பிரசவநாள் நெருங்கும் வரை இவள் படும் வேதனைகள் எழுத பக்கங்கள் போதாது.

பிரசவ வலி வந்து ஒரு பெண் துடிக்கும் நிலைகண்டு கல் நெஞ்சம்
கசிந்துருகிவிடும் கோலம். பிரசவ நேரத்தில் வாழ்வா, சாவா என்ற
மரணப்போரட்டத்தின் உச்சக்கட்டத்தில் ஈன்;;றெடுக்கிறாள் குழந்தையை. இத்தோடு இவள் தியாகம் முழுமை பெற்றுவிட்டதா? இல்லை! தான் உண்ட உணவு தனக்கே போதாத நிலையில் தன் குழந்தைக்கும் தன் இரத்தத்தை பாலாக ஊட்டும் தியாகத்தின் உச்சகட்டம். இவ்வாறு கட்டில் முதல் தொட்டில் வரை, பாலூட்டுதல் முதல் குழந்தையின் மலஜலம் அகற்றுதல் வரை செய்து நான்கு மதில்களுக்குள் ஒரு தியாகப்போராட்டமே நடத்தும் இந்த பெண் இனத்திடம் எனக்கு எவ்வளவு தருவாய் எனக்கேட்கும் ஒருவனை எவ்வாறு மனிதனாக கருதமுடியும்?

இந்த பெண்ணினத்தின் இதயச்சுவட்டில் படிந்த இரத்தச்சவடுகள் இந்த கல்நெஞ்சக் கொடுங்கோலர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. இவர்கள் பணத்தாசை மாயையில் மயங்கி சமுதாய இழிநிலையில் பாராமுகம் காட்டுகின்றனர்...

விளைவு...


o தன் வயது தோழி தாயாகி பலவருடமாக திருமண ஆசையில் ஏக்கப் பெருமூச்சிவிடும் முதிர் கன்னிகள் உருவாகும் நிலை.

o திருமணம் என்பது நம் வாழ்வில் இல்;லாது போகுமோ! என்ற ஐயத்தில் சிக்குண்டு தனது துணையை தானே முடிவு செய்கிறேன் என்று யாருடனாவது ஓடிப்போகும் காட்சி.

o இந்த வெகுளி பெண்ணை சாதகமாகப் பயன்படுத்தி காமப்பசி தீர்த்து அம்போ என்று தெருவில் விடும் கயவர்கள் ஏராளம்.

o இந்த அவமானம் தாங்காது தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் பெண்கள் பலர்.

o ஏன் இன்னும் சிலர் விபச்சார விடுதியில் தஞ்சம் புகும் நிலையும் உண்டு.

o ஐந்து பெண் குழந்தை பிறந்தால் அரசனும் ஆண்டியாவான் என்ற நிலை. எப்பாடுபட்டாவது தான் பெற்ற பெண்ணை கரை ஏற்ற வேண்டும் என்ற மன ஆதங்கத்தில் ஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்று பிச்சை எடுக்கும் நிலையில் பெற்றோர்.

o எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மனசாட்சியற்ற வரதட்சணை கொடுமைக்கு பயந்து கருவிலேயே அதை சிதைத்துவிடும் தாய்மார்கள் எத்தனை.

இளைஞர்களின் கடமை

பொற்றோருக்கு கட்டுப்படுகிறோம் என்று காட்ட எனக்கு இதெல்லாம் (வாங்குவது) உடன்பாடு இல்லைதான் ஆனால் வீட்டில் வற்புறுத்துகிறார்கள்? என்று சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்கு நாம் கேட்பது பிற்காலத்தில் உமது பெண்ணை மணம் முடிக்கும் மணமகன் இதே பதிலை கூறமாட்டானா? தான் வாங்கும் பிச்சையை நியாயப்படுத்த இஸ்லாத்தை ஏன் மாசுபடுத்துகிறீர்கள்? இறைவனுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் பெற்றோருக்கு கட்டுப்பட இறைவன் ஒருபோதும் கட்டளையிடவில்லை.

இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்,

நீர் அறியாத ஒன்றை அவர்கள் (பெற்றோர்கள்) எனக்கு இணைவைக்கும்படி
கட்டளையிட்டால் அவ்விருவருக்கும் கட்டுப்படாதே. (அல்குர்ஆன் 29:8)

படைத்தவனுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் படைப்பினங்களுக்கு கட்டுப்படாதே என்பது நபிமொழி. இளைஞர்களே! ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் வீட்டில் வற்புறுத்துகிறார்கள் என்று கூறி வரதட்சணை வாங்கி இதனால் சமுதாய பெண்கள் சீர்கெட்டுப் போவதற்கும், விபச்சாரிகளாக மாறுவதற்கும், பெண்குழந்தை கருவிலேயே அழிக்கப்படுவதற்கும் முழுப்பொறுப்புதாரிகள் நீங்கள்தான். மறுமையில் இறைவனின் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்படும் நாளை பயந்து கொள்ளுங்கள். அதில் ஒரு அணு அளவு தீமைக்கும் தண்டனை கிடைத்தே
தீரும். வரதட்சணைக்கு பயந்து கொல்லப்பட்ட ஒவ்வொரு சிசுவுக்கும்
பின்னனியில் உங்கள் கரங்கள் இருக்கின்றது.

உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தை) வினவப்படும் போது. (அல்குர்ஆன் 81:8,9)

எனவே அன்பு சகோதரர்களே! வரதட்சணை என்ற இந்த நச்சு வேர்களை மூட்டோடு அறுத்து எறிய வேண்டும்! பெற்றோர் வற்புறுத்தினால் அவர்களுக்கு கட்டுப்படாது மஹர் கொடுத்து திருமணம் செய்ய ஆர்வம் காட்ட வேண்டும். மேலும் தாய்மார்களாக, அக்கா, தங்கைகளாக இருக்கும் பெண்கள் தனது திருமணத்திற்கு தன் பெற்றோர் பட்ட கஷ்டத்தை கருத்தில் கொண்டு தன்மகனுக்கு கேட்பது நியாயமற்ற செயல் என்று கருதி தம்வீட்டு ஆண்களை தடுக்க வேண்டும்!

எல்லாவற்றிற்கும் மேலாக வரதட்சணை வாங்கப்படக்கூடிய திருமணத்தை
ஜமாத்தார்களும் பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டும்! தன் விருப்பத்திற்கு
மாறாக வரதட்சணை வாங்கப்பட்டால் திருமணம் முடிந்த பின் ஊரார் முன்னனியில் திருப்பிக் கொடுத்து புரட்சி செய்ய வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வழக்கில் இருந்த மஹர்தொகை புத்துயிர் பெற்று 101, 1001ம் காணாமல் போக வேண்டும்.
வரதட்சணையால் குமுறும் இதயங்கள் இறைவனிடம் கையேந்தினால் ஏற்படும் விபரீதத்தை புரிந்து நாம் வரதட்சணை என்ற இந்த மாற்றுமத கலாச்சாரத்தை அடியுடன் ஒழித்துக்காட்ட வேண்டும். வரதட்சணை துடைத்தெரியப்பட்டு நபிவழியில் எளிமையாக நம் திருமணம் நடைபெற்று மறுமலர்ச்சி மலர வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

நன்றி: சாதிக்குல் அமீன், உண்மையான உலகம்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012



பெண்ணே பெண்ணே! – (தொடர் 9)
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

பெண்ணே! பெண்ணே! அநியாயம் வேண்டாம் கண்ணே!
பெண்ணின் அன்பு, பாசம் காரணமாகவும் அவள் அநியாயக்காரியாக மாறும் நிலை ஏற்படுகின்றது. தன் பிள்ளை மீது கொள்ளும் பாசத்தின் காரணமாக அடுத்த பிள்ளைகளுக்கு அநியாயம் செய்கின்றாள். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீதி, நியாயமாகப் பேச வேண்டும் என்பதை மறந்து தனது பிள்ளையின் தவறை மறைத்துப் பேசுகின்றாள். அடுத்த பிள்ளைகளின் சின்னத் தவறையும் பூதாகரமாக்கிக் காட்ட முயற்சிக்கின்றாள்.

கணவன் மீதுள்ள பாசத்தால் கூட பெண் இப்படி நடந்து கொள்வதுண்டு. பக்கச்சார்பு என்பது பெண்ணின் பிறவிக் குணம் போன்றே ஆகிவிட்டது.

திருமணம் தொடர்பில் பெண்களின் அநியாய முகம் அகோரமாகக் காட்சியளிப்பதைச் சமூகத்தில் காணலாம்.

ஒரு ஆண் பலதாரமணம் புரிந்திருந்தால் முதல் மனைவி இரண்டாம் மனைவிக்கு அநியாயம் செய்து, எப்படியாவது இருவரையும் பிரித்துவிட சதி செய்வதைக் காண்கின்றோம். சில போது இரண்டாம் மனைவி முதல் மனைவியை அந்தரத்தில் விட்டுவிட்டுத் தன் கணவன் தன்னோடு மட்டும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றாள். இதனால் முதல் மனைவி மட்டுமன்றி அவளது குழந்தைகளும் நடுத்தெருவுக்கு வரும் நிகழ்வுகளை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம்.

இவ்வாறே ஒருவன் தனது மனைவி இறந்த பின்னர் அல்லது விவாகரத்தான பின்னர் இன்னொரு திருமணம் முடித்தால் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டவள் முதல் தாரத்தின் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதைக் காண்கின்றோம். அவர்களை வேலைக்காரக் குழந்தைகள் போன்று நடாத்துவதையும் முறையாக உண்ணக் கொடுக்காமல், நிம்மியாகத் தூங்கவிடாமல் அநியாயம் செய்கின்றாள். சில வேளை அவளுக்கு இவரை முடிக்கும் முன்னர் வேறு திருமணம் முடித்திருந்து குழந்தையும் இருந்து விட்டால் இந்தப் பிள்ளைகளின் பாடு பெரும்பாடுதான். இதனால் சிலர் மனைவி மரணித்து விட்டால் விபச்சாரம் செய்தாலும் பரவாயில்லை வேறு திருமணம் முடித்துவிடக் கூடாது என எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிலவேளை முதலாம் தாரத்தின் பிள்ளைகள் பெரிய பிள்ளைகளாக இருந்தால் தமது தந்தையின் இரண்டாம் தாரத்தை அவர்கள் இம்சிப்பதையும் கூட காணமுடிகின்றது. இந்த சூழ்நிலைகளிலெல்லாம் பெண்ணின் அநியாய முகம் ஆக்ரோசமாகக் காட்சியளிக்கும்.

பெண்ணிடம் இருக்கும் இன்னொரு நீதியற்ற அல்லது அநியாய முகம்தான் ஒருவரைப் புகழ்வதாக இருந்தாலும், இகழ்வதாக இருந்தாலும் அதில் நடுநிலையைக் கடைப்பிடிப்பதில்லை. தமக்கு விருப்பமானவர்களின் குறைகளைக் கண்டு கொள்ளாமல் புகழ்ந்து தள்ளுவர். தமக்குப் பிடிக்காதவர்களின் நிறைகளை நினைத்துப் பார்க்காமலேயே இகழ்ந்து தள்ளுவர். இதனால் இவர்கள் அடிக்கடி கட்சி மாறும் சூழ்நிலை ஏற்படுகின்றது.

தனது சகோதரி பக்கத்து வீட்டுக்காரியோடு கோபம். அதனால் தானும் அவளுடன் கோபம். அவள் பக்கத்து வீட்டுக்காரியோடு கோபித்துக் கொண்டால் தனது பிள்ளைகளும் அவளுடன் கோபித்துக் கொள்ள வேண்டும். அவர்களது வீட்டுக்குப் போகக் கூடாது. அத்துடன் பிரச்சினை நின்றுவிடாது. அந்த வீட்டுக்கும் போகக் கூடாது. அவர்களுடைய பிள்ளைகளுடனும் விளையாடக் கூடாது என்று சட்டம் போடுவர். ஏன் தமது தாய் அடிக்கடி இப்படி மாறுகின்றாள் என்பதை அறியலாமலேயே அந்தப் பிஞ்சுகள் பெற்றோர் சொல்லை முழுமையாகக் கேட்கவும் முடியாமல், தட்டவும் முடியாமல் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் பெற்றோருக்குத் தெரியாமல் விளையாடுவார்கள், உறவை வளர்ப்பார்கள். தமக்குள் ஏற்பட்ட கோபத்திற்காகப் பிஞ்சு உள்ளங்களில் எதற்காக நஞ்சை ஊற்ற வேண்டும்?

தமக்கு நெருக்கமானவர்கள் அடுத்தவர்களுடன் பகைத்துக் கொண்டால் அதற்கான காரணத்தைப் பார்க்க வேண்டும். அதில் யார் பக்கம் நியாயம் இருக்கின்றது என்று அவதானிக்க வேண்டும். நமக்கு வேண்டியவர்களிடத்தில் நியாயம் இல்லையென்றால் அவர்களுக்கு எந்த வகையிலும் நாம் ஒத்துழைக்கக் கூடாது.

‘அநியாயம் செய்தோர் பக்கம் நீங்கள் சாய்ந்து விட வேண்டாம். (அவ்வாறெனில்) நரகம் உங்களைத் தீண்டும். அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவரும் இல்லை. பின்னர் நீங்கள் உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.’ (11:113)

அநியாயத்திற்குத் துணை போவது நரகம் சொல்வதற்குக் காரணமாக அமையும் என இந்த வசனம் கூறுகின்றது.

‘மஸ்ஜிதுல் ஹராமுக்குச் செல்லவிடாது உங்களைத் தடுத்த ஒரு கூட்டத்தாரின் மீதுள்ள வெறுப்பு (அவர்கள் மீது) வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்டவேண்டாம். நன்மை செய்வதிலும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கொள்ளுங்கள். மேலும், பாவம் செய்வதிலும், வரம்பு மீறுவதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்காதீர்கள். மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாவான்.’ (5:2)

எனவே, அநியாயத்திற்கும், அக்கிரத்திற்கும் துணை போய்விடக் கூடாது என்பதில் அவதானம் தேவை.

‘உனது சகோதரன் அநியாயம் செய்திருந்தாலும் அவனுக்கு உதவி செய் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபியவர்களிடம் அநியாயத்திற்குட்பட்டவர்களுக்கு உதவுவது நியாயம். அநியாயக்காரனுக்கு எப்படி உதவுவது, என்று கேட்டபோது ‘அநியாயம் செய்பவனை அநியாயம் செய்வதை விட்டும் தடுப்பதுதான் அவனுக்குச் செய்யும் உதவி’ என்று கூறினார்கள்.’ (புஹாரி: 6952) எனவே, உங்களுக்கு வேண்டியவர்கள் அநியாம் செய்ய உதவாதீர்கள். அவர்களை அநியாயத்தை விட்டும் தடுங்கள். அதுவே நீங்கள் அவர்களுக்குச் செய்யும் உதவியாகும்.

பெண்களில் சிலர் தான் பெற்ற பிள்ளைகளுக்கே அநியாயம் செய்பவர்களாக உள்ளனர். மருமகளுக்கு, மாமிக்கு, உடன் பிறந்த சகோதர – சகோதரிகளுக்கு, கணவன் குடும்பத்தினருக்கு, கணவனின் மறு மனைவிகளுக்கு, அவர்களின் குழந்தைகளுக்கு, அண்டை அயவர்களுக்கு என சிலரது அநியாயப் பட்டியல் நீண்டுகொண்டே செல்வதுண்டு. இவர்கள் தமது வாழ்நாளில் தாம் சில அநியாயங்களுக்கும், அவமதிப்புக்களுக்கும் ஆளானபோது தமது மனம்பட்ட கஷ்டங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். இதைச் சிந்தித்தாவது அநியாயத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முனைய வேண்டும்.

அநியாயம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அல் குர்ஆனும், ஹதீஸும் எச்சரிக்கின்றன. இந்தத் தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமென்றால் நாம் யாருக்கு அநியாயம் செய்தோமோ அவர்களிடம் முதலில் மன்னிப்புக் கோர வேண்டும். அடுத்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி தண்டனையிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

‘தனது அநியாயத்தின் பின் எவர் பாவமன்னிப்புத் தேடி, (தன்னைச்) சீர்செய்து கொள்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரை மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாவான்.’ (5:39)

தௌபாச் செய்து தன்னை சீர் செய்து கொள்கின்றவர்களுக்கு மன்னிப்பு உண்டு என இந்த வசனம் கூறுகின்றது. இல்லையென்றால் நாளை மறுமையில் இதற்காகவும் பரிகாரம் காண நேரிடும்.

‘ஒருமுறை நபியவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து ‘அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாகப் போனவன் யார் என்று தெரியுமா’ எனக் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘யாரிடத்தில் ஒரு தீனாரோ, திர்ஹமோ இல்லையோ அவர்தான் ஓட்டாண்டி என்று கூறினர்’ அதற்கு நபியவர்கள் ‘அனைத்தையும் இழந்த ஓட்டாண்டி அவன் அல்ல. நாளை மறுமையில் ஒருவன் தனது தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அமல்களோடு வருவான். அப்போது சிலர் வந்து இவன் எனது செல்வத்தை எடுத்தான், இவன் என்னை அடித்தான் என முறைப்பாட்டை முன்வைப்பார்கள். இவனது நன்மையை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அதற்குப் பின்னரும் சிலர் வந்து என்னைப் பற்றிப் பொய் சொன்னான், அவதூறு சொன்னான் என்றெல்லாம் முறைப்பாடு வைப்பார்கள். இப்போது இவனிடம் நன்மைகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களது பாவத்தை எடுத்து இவன் மீது போடப்பட்டு இவன் நரகத்தில் வீசப்படுவான். இவன்தான் உண்மையான ஓட்டாண்டியாவான் எனக் கூறினார்கள்.’

சகோதரிகளே!
செய்த அநியாயங்கள் எதுவாக இருந்தாலும் நிச்சயமாக மறுமையில் கணக்குத் தீர்க்கப்படும். அடுத்தவர்கள் பற்றி சொன்ன பொய்கள், அவதூறுகள், செய்த அநியாயங்கள் என அனைத்துக்கும் நிச்சயம் மறுமையில் கணக்குத் தீர்க்கப்படும். அது விசாரணை நாள். எந்தக் குற்றத்தையும் மறைக்க முடியாத நாள். அந்த நாளில் அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அநியாயம் வேண்டாம் கண்ணே! செய்த அநியாயங்களுக்கு இன்றே, இப்போதே உரியவர்களிடம் மன்னிப்புக் கேட்டு உங்களை நீங்கள் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.


பெண்ணே பெண்ணே! – (தொடர் 8)
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

அநியாயம் வேண்டாம் கண்ணே!
இஸ்லாம் நீதி நெறிகளைப் போற்றும் மார்க்கமாகும். அநியாயத்தை இஸ்லாம் அணுவளவும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ இல்லை. இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்ததால் யூதர்கள் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டது. இந்த வெறுப்புணர்வு கூட அநியாயத்திற்குக் காரணமாகிவிடக் கூடாது எனப் போதித்த மார்க்கம் இஸ்லாமாகும்.

“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநிறுத்துபவர்களாகவும் (அதற்கு) சாட்சியாளர்களாகவும் இருங்கள். ஒரு கூட்டத்தின் மீதுள்ள வெறுப்பு, நீங்கள் நீதி செலுத்தாதிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே பயபக்திற்கு மிக நெருக்கமானதாகும். மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாவான்.” (5:8)

பெண்களில் பலர் நீதி நெறியை மறந்து அநியாயமாக நடந்துகொள்பவர்களாகவும், அநியாயத்திற்குத் துணை போகின்ற வர்களாகவும் இருக்கின்றனர். தனக்கும், தான் நேசிப்பவர்களுக்கும் ஒரு சட்டம், ஒரு நிலைப்பாடு. தான் வெறுப்பவர்களுக்கு வேறு நிலைப்பாடு என்ற இரட்டை நிலைப்பாடு பெண்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது.

மாமியார் கொடுமை:
பெண்களின் நீதி நெறிக்கு முரணான அநியாயமும், அக்கிரமமும் நிறைந்த கோர முகத்தின் வெளிப்பாடாகவே மாமியார் ஸ்தானம் திகழ்கின்றது. நானும் ஒரு பெண் என் மருமகளும் ஒரு பெண் என்ற நிலைப்பாடு இல்லாமல் மருமகளின் உணர்வுகளை ஊனப்படுத்தும் நடவடிக்கைகளில் சிலர் இறங்கிவிடுகின்றனர். குத்து வார்த்தைகள், கேவலப்படுத்தல், குறைத்துப் பேசுதல், கோள் மூட்டுதல், குற்றம் குறைகளைத் தேடுதல், நன்மை நலவுகளைக் கூட குறைமதியோடு நோக்குதல் போன்ற பல ரூபங்களில் மாமியாரின் அநியாய முகம் களை கட்டும்.

தான் பெற்ற பிள்ளையை ஒரு மாதிரியாகவும் தன் மருமகளை ஒரு மாதிரியாகவும் பார்த்து, அதில் பாகுபாட்டை வெளிப்படுத்துவர். பெண்களின் இந்த இழிகுணங்களால்தான் “மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொற்குடம்” போன்ற பழமொழிகள் நிலவி வருகின்றன.

சில மாமிகள் அவர்கள் மருமகளாக இருக்கும் போது தமது மாமியாரின் கொடுமைக்கு ஆளாகியிருப்பர். இத்தகைய பெண்கள் தமது மருமகள் குறித்து எப்படி நியாயமாக சிந்திக்க வேண்டும். எனது மாமியார் என்னைக் கேவலப்படுத்தும் போது நான் எவ்வளவு கேவலப்பட்டேன். அது போலதான் எனது மருமகளும் அவதிப்படுவாள். அந்த நிலைக்கு அவளை நான் தள்ளக் கூடாது என்று நினைக்க வேண்டும். ஆனால் நான் எவ்வளவு கஷ;டப்பட்டேன் இவள் மட்டும் சொகுசாக இருப்பதா? என்று நினைத்து மாமியார் மருமகளை “ரெக்கின்” (சுயபபiபெ) செய்ய ஆரம்பித்துவிடுகின்றாள்.

தனது மகளுக்கு அவளது மாமியார் வீட்டில் நடக்கும் அநியாயங்களை வாய் கிழிய எதிர்ப்பவள் தனது மருமகளுக்கு அதே அநியாயங்களை முன்நின்று செய்கின்றாள். இவ்வாறு பெண்ணின் கோர முகத்தின் வெளிப்பாடாக மாமியார் அந்தஸ்து மாறிவிட்டதே!

“நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும் நீங்கள் பேசும்போது நீதியாகவே நடந்து கொள்ளுங்கள்.” (6:152)
தனது மகனையும் மருமகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் பெண்கள் இந்த வசனத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சொல்லும், செயலும் நீதியானதாக இருக்க வேண்டும்.

பெண்ணின் அன்பு முகத்தின் வெளிப்பாடு தாய்மையாகும். இந்தத் தாய்மை நிலையிலும் பெண் சிலபோது அநியாயத்தை வெளிப்படுத்துவது ஆச்சர்யமாகும்.

ஆண் பிள்ளைகளை ஒரு மாதிரியும், பெண் பிள்ளைகளை ஒரு மாதிரியும் பார்த்து அநியாயம் செய்துவிடுகின்றாள். சில போது பெண் பிள்ளை பருவமடைந்து அவளை கட்டிக் கொடுக்க முடியாத நிலையில் தானும் கஷ;ப்படும் நிலை வரும் போது இவள் பேசும் பேச்சுக்களும் நடக்கும் விதங்களும் அந்த இளம் நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தி விடுகின்றது. பொறந்த நேரமே செத்துத் தொலஞ்சிருந்தா நிம்மதியா இருந்திருக்கும். இதுட தரித்திரியம் முடிஞ்சபாடில்ல. இப்படியெல்லாம் பேசி அவளின் உள்ளத்தைக் காயப்படுத்தும் உள்ளமும், ஆண் பிள்ளை-பெண்பிள்ளை என வேறுபாடு காட்டிப் பார்ப்பது தாய்மையின் அநியாயமாகும்.

இந்த நிலை அவள் பாட்டியாகும் போது வேறு ரூபத்தில் வெளிப்படுகின்றது. ஒரு பாட்டி தனது மகனின் பிள்ளைகளுடன் நடந்து கொள்ளும் முறையையும் மகளின் பிள்ளைகளுடன் நடந்து கொள்ளும் முறையையும் எடுத்து நோக்கினால் அதிலும் வேறுபாடும், வித்தியாசமும் இருக்கின்றது.

மகளின் பிள்ளைகளிடம் மிக அன்பாக இருக்கும் பாட்டி மகனின் பிள்ளைகளிடம் குறைவாகவே அன்பை வெளிப்படுத்துகின்றாள். மகனின் பிள்ளைகளுக்கும், மகளின் பிள்ளைகளுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படும் போது மகளின் பிள்ளைகளின் பக்கம் சாய்ந்துவிடுவதைப் பார்க்கலாம்.

மருமகளின் மீதுள்ள கோபத்தின் வெளிப்பாடாக இந்தப் பாகுபாடு வெளிப்படுகின்றது. இவ்வாறு அன்பு முகம் கூட அநியாய முகமாக மாறும் ஆச்சர்யம் நிகழ்ந்து வருகின்றது.

மருமகள்கள் மாமியார்களால் பாதிக்கப்பட்டால் அதற்கும் அவர்கள் குறைவில்லாமலே பழி தீர்த்துக் கொள்கின்றனர். மாமியார் கொடுமை என்பது திருமணம் முடித்து ஒரு வருடங்களுக்குள் முடிந்துவிடும். ஆனால் மருமகள் இதற்குப் பல வருடங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழி தீர்த்துக் கொள்கின்றாள்.

நான் ஒரு வயது முதிர்ந்த தாயை நோய் விசாரிப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர் தன் மருமகள் வீட்டில்தான் இருந்தார். அப்போது அந்தத் தாயின் மகனும், மருமகளும் ஒரு திருமண விருந்திற்காகச் சென்றிருந்தனர். இந்தத் தாய் படுத்த படுக்கையாக இருந்தார். மலசலம் எல்லாம் படுத்த படுக்கையோடு போகும் நிலை. நாம் சென்றதும் அந்தத் தாய் அவசரமாக மருமகள் வர முன்னர் சாப்பிடுவதற்கு ஏதாவது சரி தாங்க! எனக் கெஞ்சினார். சாப்பிட்டால், குடித்தால் கட்டிலிலேயே மலசலம் கழிப்பாள் என்பதால் மருமகள் உணவு, பானம் கொடுப்பதில்லை என அந்த மூதாட்டி கூறினார். பூனையைப் பட்டினி போட்டு சாகடித்த பெண் நரகம் செல்வாள் என்று கூறிய மர்க்கத்தைப் பின்பற்றும் ஒரு மருமகளின் கல் மனதைப் பார்த்தீர்களா? இப்படி எத்தனை பேர் உலகிலேயே நரக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ. அல்லாஹ்தான் அறிவான். இந்தக் காட்சியைக் காணும் போதுதான் நபி(ஸல்) அவர்கள் முதிர் வயதில் வாழ்வதை விட்டும் பாதுகாப்புத் தேடியதன் உண்மையான அர்த்தம் புரிந்தது.

மாமியார் என்பது பெண்ணின் அநியாய முகத்தின் ஒரு பகுதியென்றால் மருமகள் என்பது மறு பகுதியாகக் கோர காட்சி தருவதை உலக மட்டத்தில் பரவலாகக் காணமுடிகின்றது. இந்த இருசாராரும் இஸ்லாமிய வரையறைகளை மீறிச் செயற்படுவதுதான் இந்த செயற்பாடு தொடர்வதற்கு வழியாக அமைந்துள்ளது. தனக்கு தன் மாமி செய்ததை மன்னிக்கும் மனநிலை மருமகளுக்கு வர வேண்டும். அறியாமையாலும், தவறான உளவியல் பாதிப்புக்களினாலும் மாமி ஸ்தானத்தில் இருப்போர் சில தவறுகளைச் செய்துவிடுகின்றனர். நான் செய்தது தவறு என்பதை அவர்கள் உணர்ந்து அவதிப்படும் தருணத்தில் மருமகள் தனது பதிலடியையும், பழி தீர்க்கும் நடவடிக்கையையும் ஆரம்பித்து விடுகின்றாள். இந்த நிலையில் நல்ல பெண்களும் தனது இறுதிக் காலத்தைக் கவலையுடன் கழிக்கும் நிலை ஏற்படுகின்றது. இதற்கு முடிவே இல்லையா?

மாமியார்களைப் பெறுத்தவரையில் மகன் மீது கொண்ட அபரிமிதமான பாசம் தனது மகளை எங்கிருந்தோ வந்தவள் ஆள்கிறாளே என்ற தவறான எண்ணம், மருமகள் மகனைக் கைக்குள் போட்டுக் கொண்டு தான் பெற்றெடுத்து வளர்த்த மகனைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுவாளோ என்ற எண்ணம். இவளை அடக்கி வைக்காவிட்டால் இவள் என்னை அடக்க ஆரம்பித்துவிடுவாள் என்ற பயமெல்லாம் சேர்ந்து தப்பாகச் செயற்பட வைக்கின்றது.

எனவே, அவர்களின் வயது, தியாகம் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு அவர்கள் விடயத்தில் பழிவாங்கும் போக்கைக் கைவிட்டு பணிந்து போகும் பக்குவத்தை மருமகள்மார் பெற வேண்டும். தான் தனது கணவன் மூலம் அனுபவிக்கும் எல்லா அனுகூலங்களுக்கும் காரணமாக இருந்தவள் தனது மாமிதான் என்பதை உணர்ந்து விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.

பெண்ணின் அன்பு, பாசம், பற்று என்பவை கூட பலவிதத்தில் அவளை அநியாயக்காரியாக மாற்றிவிடுகின்றது.


பெண்ணே பெண்ணே! – (தொடர் 7)
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

ஒழுங்கீனம் வேண்டாம் கண்ணே!
சில பெண்கள் பண்பாடோ, நாகரீகமோ இல்லாமல் நடந்து கொள்வதைக் காணலாம். இவர்களின் இத்தகைய பண்பாடற்ற நாகரீக மற்ற இயல்புகளும், நடத்தைகளும் அடுத்தவர்களுக்கு பெருத்த அசௌகரியத்தை அளித்து வருகின்றன. எனினும் இத்தகைய பெண்கள் இவ் இழி குணங்களின் பாதிப்பை உணர்வதில்லை. இவர்களின் இங்கிதமற்ற நடத்தைகளால் அடுத்த சமூகம் முஸ்லிம் சமூகத்தையே தரக்குறைவாக எடை போடும் நிலையும் ஏற்படுவதுண்டு.

சில பெண்கள் பயணத்தின் போது பக்கத்திலிருக்கும் பெண்களுடன் பேசிக் கொண்டு வருவர். அது அந்த பஸ்ஸில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும். குடும்பப் பிரச்சனை, பக்கத்து வீட்டுப் பிரச்சனையென்று அலசிக் கொண்டு வருவர். அடுத்தடுத்த இருக்கைகளில் இருப்பவர்கள் ஏளனமாகப் பார்ப்பது கூட இவர்களுக்குப் புரிவதில்லை.

சில நேரங்களில் பயணங்களில் இருக்கும் போது தொலைபேசி அழைப்பு வந்தால் ஊருக்கே கேட்க உரத்துக் கத்துவார்கள். இவர்களின் இத்தகைய நடத்தைகளால் முஸ்லிம்கள் நாகரிகம், பண்பாடு அற்றவர்கள் என்ற எண்ணப் பதிவு அடுத்தவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.

ஒருவரது வீட்டுக்குள் நுழைவதாக இருந்தால் ஸலாம் சொல்லி பதில் வந்ததன் பின்னர் அவர்கள் உள்ளே வாருங்கள் என கூறிய பின்னரே உள்ளே நுழைய வேண்டும். சில பெண்கள் திறந்த வீட்டுக்குள் எதுவோ நுழைவது போன்று நுழைந்து விடுவர். வீட்டில் இருப்பவர்களுக்கு முன்னால் போய் நிற்கும் வரை இவர்கள் உள்ளே வந்தது அவர்களுக்குத் தெரியாதிருக்கும்.

சிலர் “மாமி… வேலையா” என்று கேட்டுக் கொண்டே அடுப்பங்கரை வரை வந்துவிடுவர். வீடென்பது அவரவருக்குரிய அமைதிக்குரிய இடமாகும். அவரவர் தத்தமது இல்லத்தில் எந்த நிலையில் இருப்பர் என்று கூறவே முடியாது. எனவே, ஸலாம் கூறி அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழைய வேண்டும். இது பற்றி அல் குர்ஆன் கூறும் போது,

“நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறெந்த வீடுகளிலும் நீங்கள் அனுமதி கோராமலும், அதில் உள்ளோருக்கு ஸலாம் கூறாமலும் நுழைய வேண்டாம். நீங்கள் உபதேசம் பெறுவதற்கு இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.” (24:27) என்று கூறுகின்றது.

இந்த வசனத்தைக் கவனத்திற் கொள்ளாமல் நடந்து கொள்வது அநாகரிகமான நடத்தை மட்டுமன்று மார்க்க வரம்பை மீறுவதாகவும் திகழ்கின்றது.

ஒருவரது வீட்டுக்கு ஒருவர் செல்கிறார். கொஞ்சம் தாமதித்து வாருங்கள் என வீட்டுக்காரர் சொல்கின்றார். இப்போது அந்த மனிதர் திரும்பி வந்தாக வேண்டும். இவன் “ஒரு மனிசனா? இவன்ட வீட்டுக்கு இனி நாயும் போகாது!….” என்றெல்லாம் பேசுகின்றனர். ஒருவருடைய வீட்டுக்குச் சென்று மூன்று முறை ஸலாம் கூறி பதில் கிடைக்கவில்லையென்றால் திரும்பிவிட வேண்டும். அதே வேளை ஆள் இருந்து நீங்கள் போய் பின்னர் வாருங்கள் என்றால் மறுப்போ, மனக் கசப்போ இல்லாமல் திரும்பிவிட வேண்டும். வீட்டுக்காரர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியாது. எனவே இதனை ஒரு குறையாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது. இது பற்றி அல் குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.

“அங்கு நீங்கள் எவரையும் பெற்றுக்கொள்ள வில்லையாயின், உங்களுக்கு அனுமதியளிக்கப்படும் வரை அதில் நீங்கள் நுழைய வேண்டாம். “நீங்கள் திரும்பி விடுங்கள்!” என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள். இதுவே உங்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.” (24:28)

சில பெண்கள் பொருத்தமற்ற நேரங்களில் அடுத்த வீட்டுக்குச் சென்று கதைத்துக் கொண்டிருப்பார்கள். வீட்டுக்காரர்களுக்கு வெறுப்பு வெறுப்பாக வரும். ஆனால் என்ன செய்ய என்று வேண்டா வெறுப்புடன் கதைத்துக் கொண்டிருப்பார்கள். உணவு சமைக்கும் நேரம், பகல் உணவு உண்டு ஓய்வெடுக்கும் நேரம், இரவு தூங்கச் செல்லும் நேரம் என நேர-காலம் தெரியாமல் அடுத்தவர் வீட்டுக்குச் சென்று வளவள என பேசிக் கொண்டிருப்பது அருவருக்கத்தக்க நடத்தையாகும்.

சில பெண்கள் தனக்கு ஓய்வென்றால் அடுத்தவர்களுக்கும் ஓய்வாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் கதைத்துக் கொண்டிருப்பர். இதுவும் அநாகரீகமான நடத்தையாகும். சிலர் தனக்குத் தூக்கம் போகவில்லையென்பதற்காக அடுத்தவருடன் கதைத்துக் கொண்டிருப்பர். இதில் வயது போனவர்கள் சிலருடைய நடத்தை பலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்து விடுவதுண்டு. அவர்களுக்கு வீட்டில் வேலையில்லை. கதைத்துக் கொண்டிருக்க ஆளும் இல்லை. அடுத்தவர் வீட்டுக்குச் சென்று ஹாயாகக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். அவள் தனது வேலையையும் முடித்துக் கொள்ள முடியாமலும் இவர்களது முகத்தையும் முறித்துக் கொள்ள முடியாமல் படும் திண்டாட்டம் சொல்லிமாளாது.

சில பெண்கள் இருப்பர். பக்கத்து வீட்டு பாத்திமா பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருப்பாள். அங்கு போய் கதை கொடுப்பர். படிச்சால் தானே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று ஒரு லெச்சர் கொடுப்பர். சில போது என்னத்தப் படிச்சிக் கிழிக்க, படிச்சி தொழிலா செய்யப்போற, பொம்பள படிச்சாலும் அடுப்பங்கரையிலதான் அவட வாழ்க்கை கழியும் என்ற தொணியில் பேசி மனதைக் குழப்புவர். நன்றாகக் கதைத்து அரைமணி, ஒரு மணி நேரத்தைத் திருடிவிட்டு நீ படி புள்ள என நடையைக் கட்டுவர். அந்த பாத்திமாவின் நெருப்பு நிமிடங்களைக் கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் மனதில் குழப்பத்தையும், எரிச்சலையும் உண்டுபண்ணி விட்டுப் போய்விடுவர். அடுத்தவர்களின் நிமிடங்களைக் கொள்ளையடிப்பது கொடிய குற்றம் என்பதை இவர்கள் உணருவதே இல்லை.

சில பெண்கள் ஒரே இடத்திற்கு அடிக்கடி செல்வார்கள். செல்லும் போதெல்லாம் தேவையில்லாமல் பேச்சை நீட்டிக் கொண்டு செல்வர். இதனால் அடுத்தவர் எரிச்சல்பட நேரிடும். நித்தமும் போனால் முற்றமும் சலிக்கும் என்ற முதுமொழியை இத்தகையவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சில பெண்கள் இவ்வாறு போவதுடன் நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். “என்ன உங்கட மாமி ஒரு மாதிரியா இருக்கிறா? ஏதும் பிரச்சினையா?….” என்று கிளருவர். வீட்டுக்காரி தனி அறைக்குச் சென்றால் அப்போதும் கூடவே சென்று வீட்டு சாமான்களை உலத்த ஆரம்பிப்பாள்.

இன்னும் சில பெண்கள் அடுத்த வீட்டுக்குச் சென்று அவர்களது போனைக் கண்ட பின்னர் ஒரு கோல் எடுக்கிறேன் எனக் கேட்டு அடுத்த முனையில் இருப்பவர்களுடன் “நான் யார் பேசுறன்.. சொல்லுங்க பாப்பம்… எங்கள மறந்துட்டீங்க… எங்கட ஞாபகம் இல்லை… சமைச்சிப்பீங்களா? என்ன கறி……” என தேவையில்லாத விஷயங்களையெல்லம் பேசித் தொலைப்பார்கள். இப்போது கைபேசிகள் பரவலானதால் இந்தப் பண்பாடற்ற செயற்பாடுகளும் குறைந்துவிட்டது.

சில பெண்கள் விருந்துக்கு அழைக்கப் படாமல் செல்வதுண்டு. சிலர் கூடவே ஓரிருவரை அழைத்துக் கொண்டு செல்வதுமுண்டு. ஒருவர் விருந்துக்கு அழைத்தாலே தவிர செல்லக் கூடாது. ஒருவரது அனுமதியின்றி அவரது விருந்துக்கு இன்னுமொருவரை அழைத்துச் செல்லலாகாது.

சில பெண்கள் ஒரு வீட்டுக்கு விருந்துக்குச் செல்வர். எந்த வீட்டில் விருந்தினர்கள் வந்தாலும் வீட்டுப் பொண்களுக்கு ஒரு திடீர் டென்ஷன் உண்டாகிவிடுகின்றது. அதே நேரம் வீட்டுக்கு விருந்தினர்கள் வரும் போது வீட்டுப் பிள்ளைகளின் தொல்லைகளும் இரட்டிப்பாகிவிடுவதுண்டு. இந்த நேரத்தில் விருந்துக்கு வந்தவர்கள் கூட உதவினால் அல்லது பிள்ளைகளையாவது கவனித்துக் கொண்டால் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சில பெண்கள் செதுக்கி வைத்த சிலை போல இருப்பர். சமையல் பணியில் உதவவும் மாட்டார்கள். குழந்தைகளைச் சமாளிக்கவும் மாட்டார்கள். சில போது சமைக்கிற பெண்ணே தன்னுடன் ஒழுங்காகக் கதைக்கவில்லையென பின்னர் கோபித்துக் கொள்வர்.

மற்றும் சிலர் இருக்கின்றனர். திபுதிபு என திடீர் விஜயம் செய்வர். வீட்டுக்காரர்களுக்குக் கையும் ஓடாது… காலும் ஓடாது.. என்ன செய்வது என தலையைப் பிய்த்துக் கொள்வர். இந்த இலத்திரனியல் யுகத்தில் அறிவித்துவிட்டுச் செல்வதில் இவர்களுக்கு என்ன நஷ;டமோ தெரியவில்லை.

சிலர், கூப்பிட்டுவிட்டார்கள்ளூ வேன் போகிறதுளூ சும்மா போகிற வேனில் குஞ்சு குறுமான்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு போய் அந்த வீட்டை மட்டுமல்ல அக்கம் பக்கத்து வீடுகளையும் ஒரு கலக்குக் கலக்கிவிட்டு வந்துவிடுவர். கூப்பிட்டவர்கள் ஏண்டா கூப்பிட்டேன் என நொந்து நோகும் அளவுக்கு நடந்து கொள்வர்.

மற்றும் சிலர் பகல் சாப்பாட்டுக்கு அழைக்கப்பட்டால் பகல் மூன்று-நாலு மணிக்குச் சென்று வீட்டுக்காரர்களைக் காக்க வைத்தே வெறுக்க வைத்துவிடுவர். ஒரு முஸ்லிம் எந்த வகையிலும் அடுத்த மனிதர்களுக்கு தொல்லை கொடுக்காதவனாக இருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் எமது நடவடிக்கைகள் அடுத்தவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தாவண்ணம் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எம்மிடம் குடிகொண்டுள்ள ஒழுங்கீனமாக செயற்பாடுகளைக் களைய வேண்டும். எமக்காக என்றில்லாவிட்டால் கூட அடுத்தவர்களுக்காகவாவது பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் நாம் சீர் செய்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பெண்ணே!.. பெண்ணே!… ஒழுங்கீனம் வேண்டாம் கண்ணே!…


பெண்ணே பெண்ணே! – (தொடர் 6)
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

தப்பெண்ணம் வேண்டாம் கண்ணே!
சிலருக்கு அடுத்தவரைப் பற்றி எப்போதும் கீழ்த்தரமான எண்ணம் தான் இருக்கும். அடுத்தவர் எதை ஏன்இ என்ன நியாயத்திற்காகச் செய்கின்றனர் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். சிலர் பொறாமை காரணத்திற்காகவும் உளவு மனபப்பான்மையாலும் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். பெண்களில் பலருக்கு இந்த நோய் இருக்கின்றது.

ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவருக்கு அருகில் செல்ல வேண்டி ஏற்பட்டால் இவர்களின் நடையின் வேகம் குறையும் தேவையில்லாமல் அந்த இடத்தில் ஏதேனும் ஒரு வேலையை ஆரம்பிப்பர். அவர் பேசும் பேச்சில் முடிந்தவரை சிலதையாவது கேட்டு அதற்கு கைஇ கால்இ மூக்குஇ காது வைத்து இவள் எப்படியாவது ஒரு கதை அமைத்துவிடுவாள்.

இருவர் இரகசியமாக ஏதாவது பேசுவது போல் தென்பட்டால் காதைக் கூர்மையாக்கிக் கொண்டு அவர்களின் உதட்டு அசைவைக் கண்காணித்தவாறு அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அபரிமிதமான முயற்சி செய்வாள்.

அடுத்த வீட்டு முற்றத்தில் யாராவது பேசிக் கொண்டிந்தால் தனது முற்றத்தைக் கூட்டுவது போல் தோரணை செய்து அவர்களின் பேச்சு எதைப்பற்றிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை அவதானித்துக் கேட்டு அனுமானித்துக் கொள்வாள். இத்தகைய பெண்களுக்கு ஜன்னல் ஓரம்இ வீட்டு வாசல்இ வேலியோரம் என்பன பிடித்த இடமாகத் தெரியும்.

சில பெண்கள் தனது மகளும்இ மருமகனும்இ மகனும் மருமகளும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காகக் கூட கண்ணையும்இ காதையும் கூர்மையாக்கிக் கொண்டு அலைவதுண்டு.

அடுத்தவர்களின் கடிதங்கள்இ அவர்களின் ஓட்டோகிராப்இ டயரிஇ இஈமெயில்இ செல்போனில் வந்துள்ள ளுஆளு கள் இவற்றைப் படிப்பது சிலருக்கு விறுவிறுப்பான நாவல் படிப்பதை விட சுவாரஷ;யமாக இருக்கும்.

இன்னும் சிலர் இருக்கின்றனர். தூரத்தில் இருவர் பேசிக் கொண்டிருப்பர். அவர்கள் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை அறிய வேண்டும் என்று ஆவல் கொள்வர். இவர்கள் சிலபோது ஏதேனும் உள நோயால் பாதிக்கப்பட்டிருப்பர். யார் என்ன பேசினாலும் தன்னைப் பற்றித்தான் பேசுகின்றார்களோ என்ற சந்தேகம் இவர்களுக்கு எழும். இதே நேரம் அவர்களில் யாராவது இவளைப் பார்த்துவிட்டால் தன்னைப் பற்றித்தான் பேசுகின்றனர் என உறுதியாக நம்ப ஆரம்பித்து விடுவாள். எனவேஇ அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை அறிய முயற்சிப்பாள். முடியாவிட்டால் சிலபோது அவர்களில் ஒருவரிடம் மெதுவாகக் கதை கொடுத்து என்ன பேசப்பட்டது என்பதை அறியும் வரை அவளுக்கு உறக்கமே வராது. அடுத்தவர்கள் மீது கெட்ட எண்ணம் ஏற்படுவதால்தான் இந்த உளவுக் குணம் உண்டாகின்றது. குர்ஆனும்இ ஹதீஸும் இந்த உளவுக் குணத்தைத் தடுக்கின்றது.

உளவு பார்ப்பவர்களுக்கு ஏதேனும் செய்தி கிடைத்தால் வேட்டைக்குச் சென்றவர்களுக்கு நல்ல வேட்டை மிருகம் கிடைத்த மகிழ்ச்சியைப் பெறுவார்கள். உளவு பார்த்தால் போதும் என்றிருந்தவருக்கு தனது உளவுப் பணியின் முடிவை அடுத்தவர்களுக்குச் சொல்லும் வரை நிம்மதியிருக்காது. எனவேஇ அவள் புறம் பேச வேண்டிய நிலை ணஏற்படுகின்றது. எனவேதான் அல்லாஹ் தன் திருமறையில்இ

‘நம்பிக்கை கொண்டோரே! எண்ணங்களில் அதிகமானதைத் தவிர்ந்து கொள்ளுங்கள். நிச்சயமாக எண்ணங்களில் சில பாவமாகும். மேலும்இ நீங்கள் துருவித்துருவி ஆராயாதீர்கள். இன்னும்இ உங்களில் சிலர் மற்றும் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்த தனது சகோதரனின் மாமிசத்தை உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுத்து விடுவீர்கள்’ (49:12) என்று கூறுகின்றான்.

இந்த திருமறை வசனத்தை நன்றாக அவதானியுங்கள். இதில் அல்லாஹுத்தஆலா
1. தீய எண்ணத்தைத் தடுக்கின்றான்.
2. உளவு பார்ப்பதைத் தடுக்கின்றான்.
3. புறம் பேசுவதைத் தடுக்கின்றான்.
இந்த மூன்று தவறுகளும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்தவைகளாகும். எனவேதான் நபி(ஸல்) அவர்களும் ‘தப்பெண்ணம் கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் தப்பெண்ணம்தான் பெரிய பொய்யாகும். உங்களில் ஒருவருக்கொருவர் ஒற்றுக் கேட்காதீர்கள்இ உளவு பார்க்காதீர்கள்இ இரகசியம் பேசாதீர்கள்இ பொறாமை கொள்ளாதீர்கள்இ பகைமை கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாகவும்இ உங்களுக்கு மத்தியில் சகோதரர்களாகவும் ஆகிவிடுங்கள். என்று கூறினார்கள்.’ (அறி: அபூஹுரைரா(ரழி)இ ஆதாரம்: புஹாரி:6066)

எனவேஇ இந்த ஹராத்திலிருந்து நாம் விடுபட வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் என்ன பேசினால் நமக்கென்ன? அவர்கள் பேசுவதைப் பதிவதற்கு மலக்குகள் இருக்கிறார்கள். நாம் என்ன செய்கின்றோம் என்பதும் அல்லாஹ்வால் கண்காணிக்கப்படுகின்றது. என உறுதி கொண்டுஇ இந்த உளவுப் பணியை உதறித் தள்ளுங்கள்.
அடுத்தவர்களின் குறைகளை அறிந்து கொள்வதில் அலாதிப் பிரியத்துடன் திரியும் பெண்கள் தம்மைச் சூழும் பெரும் ஆபத்தை அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அடுத்தவர் குறைகளை அறிய ஆவல் கொண்டால் உங்கள் குறைகளும் பகிரங்கத்திற்கு வந்துவிடும். இதை நடைமுறையிலும் நீங்கள் உணரலாம்.

‘உள்ளத்தில் ஈமான் நுழையாமல் உதட்டளவில் மட்டும் ஈமான் கொண்டவர்களே! முஸ்லிம்கள் குறித்து புறம் பேசாதீர்கள்! அவர்களின் குறைகளையும் தேடித் திரியாதீர்கள்! ஏனெனில்இ யார் முஃமின்களின் குறைகளைத் தேடித் திரிகின்றார்களோ அவர்களின் குறைகளை அல்லாஹ் தேட ஆரம்பித்துவிடுவான். யாருடைய குறையை அல்லாஹ் தேடுகின்றானோ அவனது வீட்டிலேயே அவனை அல்லாஹ் இழிவுபடுத்துவான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (ஆறி: அபூபர்ஸா அல் அஸ்லமிஇ ஆதா: அபூதாவுத்:48:82)

எனவேஇ அடுத்தவர் குறையைத் தேடுவதை அடியோடு நிறுத்துங்கள்.

சில பெண்கள் இந்த இயல்பு காரணமாக அடுத்தவர்களை உற்றுப் பார்ப்பார்கள். அடுத்த வீட்டில் என்ன நடக்கிறதுஇ யார் வருகின்றார்கள்இ என்ன கொண்டு வருகின்றார்கள்இ எவ்வளவு நேரம் தங்கினார்கள்இ இவ்வளவு நேரம் என்ன பேசியிருப்பார்கள் எனப் பல ஆய்வுக் கேள்விகள் இவர்களது அடி மனதில் உதித்துக் கொண்டே இருக்கும். விடை கிடைக்காவிட்டால் இவர்களுக்கு நிம்மதியாக இருக்க முடியாது. எனவேஇ கேட்டுத் தொலைத்துவிடுவது என்று முடிவு செய்துவிடுவர்.

இதனால் யார் வந்தது? என்ன பார்சல் பெரிதாக இருந்திச்சே! அவ்வளவு நேரம் என்ன செய்தார்கள்! உங்கட வீட்டுக்காராரும் இல்லை! அவங்க எங்க தங்கினார்கள்! என அலுத்துப் போகும் வரைக்கும் கேட்டுத் தொலைப்பர். இத்தகைய பெண்கள் யாரிடத்திலும் நல்ல பெயர் வாங்க முடியாது. அடுத்தவர் விஷயத்தில் அளவுக்கு மீறி மூக்கை நுழைப்பது ஆகுமானதுமல்ல. அழகானதுமல்ல. உண்மையில் இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் இவர்களுடன் கூடப் பிறந்த பொறாமைக் குணமும் அடுத்தவர் பற்றிய தப்பான எண்ணங்களும்தான் காரணியாக இருக்கும்.
அடுத்த வீட்டுக்குள் அவர்களது அனுமதியில்லாமல் பார்வையை ஓடவிடுவது ஹராமாகும். எனவேதான் ஸலாம் கூறி பதில் வந்த பின்னர்தான் உள்ளே செல்ல வேண்டும். அந்த ஸலாத்தைக் கூட உள்ளே பார்த்துக் கொண்டு சொல்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

‘நபி(ஸல்) அவர்களது வீட்டுக்குள் ஒருவர் பார்வையை விட்டார். அவர் பார்ப்பதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் நீ பார்ப்பது முன்னரே தெரியுமென்றால் உன் கண்களில் குத்தியிருப்பேன். பார்வை நுழைவதற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என்று கூறினார்கள்.’ (புஹாரி:6901)

இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸுக்குத் தலைப்பிடும் போது

ஒருவர் வீட்டுக்குள் உற்றுப் பார்த்து அவர்கள் இவரது கண்ணைப் பழுதாக்கினால் இதற்குத் தெண்டப் பரிகாரம் இல்லை என்ற தலைப்பில் இடம்பெறச் செய்துள்ளார்கள்.

எனவேஇ இது சாதாரண குற்றமில்லை என்பதைக் கவனத்திற் கொள்ளவும். அடுத்தவர்கள் பேசுவதை ஒற்றுக் கேட்பது குறித்து நபி(ஸல்) அவர்கள் கண்டித்துக் கூறும் போதுஇ

‘யார் ஒரு கூட்டத்தில் பேசும் பேச்சை அவர்கள் வெறுக்கும் நிலையில் கேட்கின்றாரோ அவரது காதில் மறுமையில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படும் எனக்கூறினார்கள்.’ (முஸன்னப் இப்னு அபீiஷபா:102இ 25964 – அல் அதபுல் முப்ரத்:1159 – தபரானி:11472)

எனவேஇ ஒற்றுக் கேட்காதீர்கள்ளூ உளவு பார்க்காதீர்கள்ளூ அடுத்தவர்களைப் பற்றி தப்பாகக் கவலைப்படாமல் உங்களைப் பற்றி சிந்தியுங்கள். சில பெண்களிடம் இந்த இயல்பு இருக்கும் அதே நேரத்தில் இந்த உளவு வேலைக்குத் தமது உளவினர்களைம் பயன்படுத்தி அவர்களையும் குற்றவாளியாக்குகின்றனர். மறுமையை மனதில் கொண்டு இந்தக் குற்றச் செயலை விட்டும் விலகிக் கொள்வோம்.


பெண்ணே பெண்ணே! – (தொடர் 5)
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

போலிப் புகழாரம் வேண்டாம் கண்ணே!
சில பெண்கள் போலிப் புகழ் பாடுவதில் வல்லவர்களாகத் திகழ்வர். தம்மைப் பற்றி எப்போதும் பீற்றித் திரிவர். இவர்களை அடுத்தவர்கள் மிக இலகுவாக அடையாளம் கண்டு கொள்வர். அவர்கள் பேசும் தொணி, ஸ்டைல், சப்ஜக்ட் அனைத்துமே அவர்களது புகழ் போதையைப் படம்பிடித்துக் காட்டிவிடும். இவர்கள் பெருமை பேசிவிட்டு நகர்ந்ததும் அடுத்த பெண்கள் இவளின் பேச்சைச் சொல்லிச் சொல்லியே சிரிப்பர். தாம் தம்மைச் சூழவுள்ள பெண்களால் இழிவாக நோக்கப்படுவதை உணராமலே இவர்கள் பீற்றித் திரிவர். இத்தகைய இயல்பைக் கொண்ட பெண்கள் மிக விரைவாகவே அடுத்தவர்களுக்கு பலிக்கடாக்களாகக் கூடியவர்கள். எனவே, இந்த குணம் ஆபத்தானது. இத்தகைய பெண்களை ஒரு பெண்ணோ அல்லது ஆணோ சில போலிப் புகழ் வார்த்தைகள் மூலம் இலகுவாக ஏமாற்றி காரியம் சாதித்து விடுவர். உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது, உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன என்று கூறவே முடியாது போன்ற சாதாரண புகழ் வார்த்தையில் கூட சரிந்து விடுவர். எனவே, இந்தக் குணம் அவசியமாக இல்லாது ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

போலிப் புகழ் பாடுபவர்களை பல கூறுகளாகப் பிரித்து நோக்கலாம்.

சுய புராணம் பாடும் பெண்கள்:
இவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி புகழ்பாடுவர். நான் அப்படி, நான் இப்படி, எனக்கென்றால் இப்படித்தான், நான் அணிந்துள்ள ஆடை, போட்டுள்ள நகை என்று சம்பந்தமே இல்லாமல் பேசுவர். இவர்கள் உண்டது, குடித்ததிலிருந்து பீற்றித் திரிவர்.

பிறர் தன்னைப் புகழும் போதே பணிவைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறும் போது எந்தத் தேவையும் இல்லாமல் உள்களை நீங்களே புகழ்ந்து தள்ளுவதை எந்த ரகத்தில சேர்ப்பதென்று சிந்தித்துப் பாருங்கள்.

“தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் என எண்ணிக்கொள்வோரை (நபியே!) நீர் பார்க்க வில்லையா? மாறாக அல்லாஹ்வே, தான் நாடுவோரைப் பரிசுத்தப்படுத்துகின்றான். மேலும், அவர்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.” (4:49)

தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வது யஹூதி, நஸாராக்களின் பண்பாக இருந்ததை குர்ஆன் சுட்டிக் காட்டுகின்றது.

சுய புகழ்பாடும் பெண்களிடம் நான் நான் என்ற எண்ணமும், பெருமையும், கர்வமும் குடிகொண்டிருக்கும். இவ்வாறு சுய புராணம் பாடும் பெண்களிடம் கீழ்க்காணும் குணங்களும், இயல்புகளும் காணப்படுவது தவிர்க்கமுடியாததாகும்.

01. தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதற்காக தனது ஆடை, செயற்பாடு, செலவினங்கள் அனைத்திலும் தன் சக்திக்கு மீறிச் செயற்பட ஆரம்பிப்பாள். இதனால் இவள் வாழ்வில் பலத்த இழப்புக்களைச் சந்திப்பாள்;. தான் பெரிய தர்மசாலி எனப் பீற்றுபவள் பிறர் முன்நிலையில் பிச்சைக்காரனுக்கும் வாரி வழங்கி தனது வள்ளல் தன்மையை நிரூபிக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவாள். இவ்வாறு இல்லாத செலவுகளைத் தானாக ஏற்படுத்திக் கொள்வாள்.

02. சிலர் எனது பிள்ளைகள், எனது ஊர், எனது குடும்பம் எனப் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்கள். தம்மைப் பற்றி மற்றவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் சும்மா பீற்றித் தள்ளுவார்கள்.

03. இத்தகையவர்கள் பிறர் தம்மைப் புகழ வேண்டும் என எதிர்பார்ப்பர். புகழப் புகழ கொப்பில் ஏறிக் கொண்டே செல்வார்கள். எந்த இடத்தில் விழுவார்கள் என்பது இவர்களுக்கே தெரியாது.

04. இத்தகையவர்கள் தம்மைப் புகழ்பவர்களுக்காக எதையும் செய்யவும், இழக்கவும் தயாராவார்கள்.

இத்தகையவர்களிடம் புகழ்ந்து புகழ்ந்தே கறக்க வேண்டியதைக் கறந்துவிடலாம். இத்தகைய பெண்கள் ஆண்களின் வஞ்சக வலையில் இலகுவாக விழுந்துவிடுவர். சாதாரண தொலைபேசிப் பேச்சில் உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது! நீங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றீர்கள்! உங்கள் சிரிப்பு, தலை வாரும் ஸ்டைல் எனக்குப் பிடித்திருக்கிறது!… என்பன போன்ற சாதாரண வஞ்சக வார்த்தைகளுக்கே கிறுங்க ஆரம்பித்து விடுவர்.

இன்றைய நவீன உலகில் சாதாரண ஒரு “மிஸ் கோல்” (Missed Call) மூலம் இத்தகைய பெண்கள் தமது வாழ்வை இழந்துள்ளனர். இணையத்தில் எதிர்த் தரப்பில் இருந்து பேசும் ஆண் யார்? எவர்? என்று தெரியாமலேயே அவனது போலிப் புகழாரத்தில் மயங்கி போஸ் கொடுத்து வாழ்வை இழக்கும் பெண்கள் இருக்கின்றனர். எனவே, புகழப்; போதைக்கு அடிமையாவது ஆபத்தான குணமாகும்.

05. இத்தகைய பெண்கள் சபைகளிலும், நிகழ்ச்சிகளின் போதும் பிறர் பார்வை தம்மீது விழ வேண்டும் என்பதில் அக்கறை எடுப்பர். இது அவர்களின் வாழ்வில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

06. என்னிடம் அது இருக்கு, இது இருக்கு எனப் பீற்றுவர். அடுத்த வீட்டு ஆயிஷhவின் நகையைப் போட்டுக் கொண்டு போய் போன மாதம் தான் இதை வாங்கினேன் என ரீல் விடுவாள்.

07. தன்னைப் பெரிய புத்திசாலியாகவும், சிந்தனை வாதியாகவும் காட்டிக்கொள்ள கரிசனை எடுப்பாள். என்றாவது ஒரு நாள் முட்டாள்தனம் தெரிய வர நொந்து நூலாகிப் போவாள்.

08. இப்படிப்பட்ட பெண்கள் அவசியமின்றி அதிகம் பேசுவர். தன்னைப் பற்றியே அடிக்கடி பேசுவதால் கேட்பவர்களுக்கும் எரிச்சல் எரிச்சலாய் வரும்.

09. சில வேளை இவர்கள் அடுத்தவர்களைப் புகழ்வார்கள். அது கூட தன்னைப் புகழ்வதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கும். “நீங்க சுகமில்லாம இருக்கும் போது வந்த மனிதர் நல்ல மனிசர்கள். நீங்க ஏன்ட சொந்தம் என்று தெரிந்து தான் உங்களைப் பார்க்கவந்தாங்க” எனக் கூறி அதிலும் தன்னை உயர்த்திக் கொள்வாள்.

10. தனது அந்தஸ்தைக் குறைக்கும் எனக் கண்டால் நீதி நியாயத்தையும், சத்தியத்தையும் இத்தகையவர்கள் மறுப்பார்கள்.

11. பலவீனமான ஏழை மக்களிடம் கர்வத்துடன் நடந்து கொள்வர். இவர்களுடன் கதைத்தால் தமது ரெஸ்பெக்ட் குறைந்துவிடும் என நினைப்பர். பணக்காரர்கள் பதவியில் உள்ளவர்களைக் கண்டால் விழுந்து விழுந்து உபசரிப்பர்.

12. தம்மைப் புகழாமல் தமது குறைகளைச் சுட்டிக்காட்டும் நல்லவர்களையும், நண்பர்களையும் பகைத்துக் கொள்வர். இதனால் இவர்கள் நல்ல நண்பர்களை இழந்து நயவஞ்வகக் கூட்டத்தின் நடுவே தான் வசிக்க நேரிடும்.

13. கர்வத்தின் காரணத்தினாலும், பெருமையின் காரணத்தினாலும் தனது தவறுகளை உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்ள முன்வரமாட்டார்கள். இதனால் இவர்கள் திருந்தும் வாய்ப்பு ரொம்ப ரொம்பக் குறைவாகும்.

இது போன்ற மற்றும் பல பாதிப்புக்கள் போலிப் புகழாரம் பாடுபவர்களுக்கு ஏற்படும். நாம் கூறிய அனைத்தும் இத்தகைய ஒருவரிடம் குடிகொண்டிருக்காவிட்டாலும் இவற்றில் பல இருக்க வாய்ப்புள்ளது.

போலிப் புகழாரம் இத்தகைய பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதால் உங்களை நீங்களே புகழ்ந்து தள்ளுவதைத் தவிருங்கள். பிறரிடம் பேசிய பின்னர் நான் பேசிய பேச்சில் என்னை நானே புகழ்ந்து தள்ளும் வார்த்தைகள், செய்திகள் இடம் பெற்றதா என்பதைச் சிந்தித்துப் பார்த்து அவற்றை நீக்க முயற்சி செய்யுங்கள்.

ஒரு உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்! உங்களை நீங்களே எந்தளவுக்கு புகழ்கிறீர்களோ அந்தளவுக்கு உங்கள் மதிப்பும், மரியாதையும் அடுத்தவர் மனங்களில் குறைய ஆரம்பிக்கும். நீங்களே உங்களைப் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டியது தான். உங்களைப் புகழத்தக்க ஒருவராக சமூகம் மதிக்காது.


பெண்ணே பெண்ணே! – (தொடர் 4)
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

பதட்டம் வேண்டாம்! கண்ணே!
சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் அதிகம் அலட்டிக் கொள்பவர்களாகவும், பதட்டம் கொள்பவர்களாகவும் பல பெண்கள் காணப்படுகின்றனர். பதட்டம் சில பெண்களுடன் கூடப்பிறந்த குணமாகக் குடிகொண்டிருக்கும். வாழ்வில் இறக்கங்கள் ஏற்பட்டாலோ இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டாலோ வாழ்வே சூனியமாகிவிட்டது போன்று நடந்து கொள்வர், ஒப்பாரி வைப்பர், கண்ணத்திலும் மார்பிலும் அடித்துக் கொள்வர், படபட எனப் பொரிந்து தள்ளுவர். உலகில் எவருக்கும் ஏற்படாத இழப்பு தனக்கு ஏற்பட்டது போன்று நடந்து கொள்வர்.

சில பெண்கள் அல்லாஹ்வையே குறைகூறுவர். அல்லாஹ்வுக்கு கண் இல்லாயா? என்று கேட்பர். சோதிக்க வேண்டும் ஆனால் இப்படிச் சோதிக்கக் கூடாது என அல்லாஹ்வுக்கே போதிக்க ஆரம்பித்து விடுவர். பொறுமையும், கழாகத்ர் பற்றிய நம்பிக்கையும் உள்ள எந்த மனிதனும் இந்த நிலையை அடையமாட்டான்.

சிலர் ஏற்பட்ட சின்ன தோல்வி, இழப்பு, போன்றவற்றை எண்ணி அடுத்த கட்டம் என்ன என்ற முடிவு இல்லாமல் தற்கொலைக்குக் கூட சென்றுவிடுகின்றனர். இவர்களது உள்ளம் சவால்களைச் சந்திக்கத் தயங்குகின்றது. இழப்புக்களைத் தாங்க மறுக்கின்றது. பரீட்சையில் தோல்வி என்பதற்காகவும், காதலில் தோல்வி என்பதற்காகவும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பரீட்சை என்பது வாழ்க்கைக்காக. வாழ்க்கையே பரீட்சைக்காக அல்ல என்பதை இவர்கள் உணர மறுக்கின்றனர். காதலன் ஏமாற்றிவிட்டான் என்பதற்காகப் பல பெண்கள் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வது எவ்வளவு முட்டாள்தனம்! மாமியார்-மாப்பிள்ளை கொடுமை போன்ற பல பிரச்சினைகளுக்கும் சிலருக்கு தற்கொலை தீர்வாகின்றது. கணவன் அடித்து விட்டான் என்பதற்காக நெருப்பில் எத்தனை பெண்கள் எரிந்து செத்துள்ளனர். ஈமான் இன்மையும், கழாகத்ரை ஏற்றுக் கொள்ளும் பக்குவமின்மையும், பொறுமையின்மையும், பதட்டம் மற்றும் அவசர புத்தி போன்ற கெட்ட குணங்களும் தான் இத்தகைய இழிவான முடிவுகளின் முன்பால் தள்ளுகின்றன.

அவசரம் ஷைத்தானின் நின்றுமுள்ளது என்பது நபிமொழியாகும். ஷைத்தான் நல்ல முடிவின்பால் மனிதனை இட்டுச் செல்ல மாட்டான். அவ்வாறே எமது வாழ்வில் நிதானம் தேவை அவசரம், பதட்டம் தவிர்க்கப்பட வேண்டும்.

“யாருடைய உள்ளம் சுருங்கியிருக்கின்றதோ அவருடைய நாவு நீளமாக இருக்கும்”

என்பது அரபு முதுமொழியாகும். இவர்கள் அதிகம் பேசுவார்கள். படபடவென பொறிந்து தள்ளிக் கொண்டே இருப்பார்கள். உனக்கு என்ன துன்பம் ஏற்பட்டு விட்டது என்று இப்படிப் பதறுகின்றாய் என்று கேட்டால், எனக்கு இன்னும் என்ன துன்பம் தான் ஏற்பட்டுவிடவில்லை என்று பட்டெனப் பதில் சொல்வார்கள்.

இவர்களது பேச்சும், செயலும் அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை நிராகரிப்பதாகவே இருக்கும். இருக்கும் அருளுக்கு நன்றி செலுத்த மாட்டார்கள். இல்லாத அருள்களைப் பற்றியே பேசிப் பேசி அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பார்கள். இதனால் இருக்கும் அருளின் அருமை தெரியாது. இருப்பதை வைத்து வாழ்வை அனுபவிக்கவும் இவர்களால் முடியாது. இருக்கும் அருளை நிராகரிக்கும் இத்தகையவர்களது வாழ்வு வளம்பெற மாட்டாது. செழிப்புறவும் மாட்டாது.

“நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக நான் உங்களுக்கு மேலும் அதிகப்படுத்து வேன் என்றும், நீங்கள் (நன்றி செலுத்தாது) நிராகரித்தால் நிச்சயமாக எனது தண் டனை கடுமையானதாக இருக்கும் என்றும் உங்கள் இரட்சகன் அறிவித்ததை (எண்ணிப்பாருங்கள்.)”
(14:07)

அதிகம் பதட்டப்படுபவர்கள் எப்போதும் தனக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கின்றனர். எனது வீட்டில் எல்லோருடைய கணவர்களும் அழகானவர்கள் ஆனால் எனது கணவர் மட்டும் அழகற்றவர். எனது குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் எனது பிள்ளைகளை விட அழகானவர்கள். இப்படியெல்லாம் கவலைப்படுபவர்கள் இருக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் பெண்களையும், குழந்தைப் பாக்கியம் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் பெண்களையும் ஒருகணம் சிந்தித்துப் பார்த்தால் இந்தக் கவலை இவர்களை வாட்டுமா? வதைக்குமா? எனவே, எமக்கு கீழ் இருப்பவர்களை எண்ணிப் பார்த்துத் திருப்திப்படக் கற்றுக் கொள்ள வேண்டும்.நமக்கு முன்னர் வாழ்ந்த நபிமார்கள், நல்லவர்கள் தமது வாழ்வில் சந்தித்த துன்பங்கள், சோதனைகள் என்பவற்றை சற்று படித்து பயன்பெற முயல வேண்டும்.

அடுத்து நடந்து விட்ட நல்லவற்றை நினைவில் வைத்து மீட்டிப் பார்க்கலாம். இழப்புக்கள், தோல்விகள் என்பவற்றை மறக்க முயல வேண்டும். இழப்புக்களை அடிக்கடி நினைவுபடுத்தி அதையே அசைபோட்டுக் கொண்டிருந்தால் அமைதி கிடைக்காது. எனவே, இழப்புக்கள் மற்றும் தோல்விகளை மறக்க வேண்டும்;. மறக்கும் சூல்நிலைகளை உருவாக்க வேண்டும்.

அடுத்து அல்லாஹ் நாடியது நடக்கும். அதை யாராலும் மாற்ற முடியாது என்று உறுதியாக நம்ப வேண்டும். கழாகத்ரின்மீது உறுதியான நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் மலை போன்ற சோதனைகளையும் தாங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். கழாகத்ர் பற்றி அல்லாஹ் கூறும் போது,

“உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலை கொள்ளாதிருப்பதற்காகவும், உங்களுக்கு அவன் வழங்கியவற்றிற்காக ஆணவம் கொள்ளாதிருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தினான்.) ஆணவமும், தற்பெருமையும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்” (57:23)

என்று கூறுவதும் இதைத் தான் உணர்ததுகின்றது.

ஏற்பட்ட எந்த இழப்பு சோர்வையும், நம்பிக்கை ஈனத்தையும் ஏற்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையீனம் இன்னும் பதட்டத்தையே அதிகரிக்கும். எனவே, இழப்புக்கள் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் மீண்டும் முயற்சிகளை முடுக்கி விடவேண்டும். விழுந்தால் எழ வேண்டும். இதுதான் இயல்பான யதார்த்தமான நிலையாகும். நான் விழுந்து விட்டேன் விழுந்து விட்டேன் என்று புலம்பிக் கொண்டிருந்தால் ஆகப் போவது எதுவும் இல்லை.

அடுத்து வாழ்வில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் சிலரது கடந்த கால வாழ்வை அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஆயிரம் சோகங்களையும், இழப்புக்களையும் அவமதிப்புக்களையும் தாண்டித் தான் வாழ்வில் உயர்வையும் அந்தஸ்தையும் அடைந்துள்ளனர் என்ற உண்மையை இதன் மூலம் அறியலாம்.

அடுத்து தொழுகையை முறையாகப் பேணித் தொழுவதன் மூலம் இந்தப் பதட்டத் தன்மையைத் தவிர்க்கலாம் எனக் குர்ஆன் கூறுகின்றது.

“நிச்சயமாக மனிதன் பெரும் பதட்டக் காரனாகப் படைக்கப்பட்டுள்ளான்”

“அவனுக்குத் தீங்கு நேர்ந்தால், பதட்ட மடைகின்றான்”

“மேலும், அவனுக்கு நன்மை ஏற்பட்டால் (பிறருக்கு வழங்காது) தடுத்துக் கொள் கின்றான்”

“தொழுகையாளிகளைத் தவிர”

“அவர்கள் தாம், தமது தொழுகையில் நிரந்தரமாக இருப்பவர்கள்.” (70: 19-23)

இந்த வசனம் தொழுகையை முறையாக, நிரந்தரமாகப் பேணித் தொழுபவர்கள் நிதானமாக வாழும் பக்குவத்தைப் பெறுவர் எனக் குர்ஆன் கூறுவதால் ஐவேளைத் தொழுகை மூலம் அல்லாஹ்விடம் மண்டியிடும் பக்குவத்தைப் பெற்று விட்டால் பதட்டத் தன்மையைத் தவிர்க்கலாம்.

அடுத்து அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்வதன் மூலம் மனதைத் திடப்படுத்தி அமைதிப் படுத்தலாம்.

“நம்பிக்கை கொண்டோரின் உள்ளங் கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன” (13:28)

எனவே, அதிகம் திக்ர் செய்து மன அமைதி பெறுவதன் மூலம் பதட்டத் தன்மையைத் தவிர்க்கலாம்.

அடுத்து பதட்டப்படும் பெண் தன் பதட்டத் தன்மையை குழந்தைகளிடமும், தன்னைச் சூழ இருப்பவர்களிடமும் பரவிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பதட்டம் ஒரு தொற்று நோயாகும். ஒரு சபையில் ஒருவர் பதட்டப்பட்டால் அனைவரையும் அது தொற்றிக் கொள்ளும். பதட்டப்படும் பெண்ணின் கட்டுப்பாட்டில் வாழும் குழந்தைகளிடமும் பதட்டத் தன்மை படர்ந்து விடும்.

சில பெண்களது பதட்டம் சில கணவர்களைக் கொலைக் களத்துக்குக்கூட இழுத்துச் சென்றுள்ளன. எனவே, உங்கள் பதட்டம் அதிகரிக்காமல் இருக்க நீங்கள் நிதானமானவர்கள் மத்தியில் வாழ வேண்டும். எனவே, உங்கள் குழந்தைகள், கணவன் என்போர் பதட்டப்படக் கூடாது என்றால் உங்கள் பதட்டத்தை அவர்களிடம் நீங்கள் காட்டக் கூடாது. அடுத்து, குழந்தைகளைக்கூட கஷ;டங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்களாகவும், பதட்டப்படாதவர் களாகவும் வளர்ப்பது முக்கியமாகும்.

உங்கள் பதட்டத்தை பலமடங்காகப் பெருக்கக் கூடியவர்களை இணங் கண்டு அவர்களுடனான உறவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை அகராதியிலிருந்து பொறுமை எனும் பதத்தை அழித்துவிடத் துடிக்கும் நண்பர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

மார்க்க அறிவும், பொறுமையும் உள்ள நன்மக்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவு ஞானம்மிக்கவர்களிடம் ஆலோசனை பெறுங்கள். இதன் மூலம் அமைதி பெறுங்கள்.

வாழ்க்கை என்பது சோதனையே! அதனை உறுதியுடனும், நம்பிக்கையுடனும், நிதானத்துடனும் அனுகத் தயாராகுங்கள். வாழ்வில் வெற்றி பெறுங்கள். எனவே, பதட்டம் வேண்டாம் கண்ணே!