செவ்வாய், 23 அக்டோபர், 2012




அல்காபிரூன் - நிராகரிப்போர்
மெளலவி E.M.அப்துர் ரஹ்மான்



1.சொல்லுக: நிராகரிப்பவர்களே! 2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன். 3.மேலும், நான் வணங்குகிறவனை நீங்களும் வணங்குபவர்களல்லர்.4. இன்னும் நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குகிறவனுமல்லன். 5. மேலும், நான் வணங்குபவணை நீங்களும் வணங்குபவர்களல்லர். 6.உங்களுக்கு உங்களது மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.

சர்வ சக்தியும் உடையவன் இறைவன் ஒருவனேயென உணரும் ஒருவன், அழிவின் பக்கமே கொண்டு போகும் பலவீனமான படைப்புகளை ஒருக்காலும் வணங்க மாட்டான். எனவே அல்லாஹ்வை உண்மையாகவே நம்பும் நான், நீங்கள் அறியாமையின் காரணத்தால் வணங்கும் படைப்புகளை ஒருக்காலும் வணங்கமாட்டேன்.நான் கொண்டுள்ள உண்மையான தன்மைகளை நீங்கள் உணரும்வரை, என் வழியிலேயே என்னை விட்டுவிடுங்கள். உங்களுக்குத் தற்போது உங்கள் வழி சிறந்ததாகத் தோன்றலாம். அடுத்து எது உண்மையென்று தெரிந்து கொள்வீர்கள்.

இவ்வத்தியாயம் இறங்கிய வரலாறு
அபூஜஹீல், ஆஸ்பின்வாயில், வலீத்பின் முஙைரா, அஸ்வத் போன்ற குறைஷிக் காபிர்களான பிரமுகர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான அப்பாஸ் அவர்கள் மூலம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு பின்வருமாறு சொல்லி அனுப்பினார்கள்.

நமது தெய்வங்களைப் பற்றியும் அவைகளுக்கு வணக்கம் செய்வது பற்றியும் முஹம்மது தூஷணமாக பேசக்கூடாது. நமது கூட்டத்தாரில் தலைத்தனம் வகிக்க வேண்டுமென்று அவருக்கு விருப்பம் இருந்தால் அவரைத் தலைவராக்கி விடுகிறோம். பொருள் கிடைக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் அதிகமான பொருளை சேகரம் செய்து கொடுக்கிறோம். அழகிய பெண் வேண்டுமென்ற ஆசை இருந்தால் நமது குலத்தில் அழகில் சிறந்த பெண்ணை கொடுக்கிறோம்.

இவ்விசயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டதும், இவை ஒன்றுமே எனக்கு தேவையில்லை. எனது சமூகத்தவராகிய நீங்கள் கேவலமான முறையில் நாசமடையாமல் நேர்மையான பாதையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதுதான் எனது விருப்பம் என்று பதில் சொல்லி அனுப்பினார்கள். ஆசைகளைக் காட்டி முஹம்மது அவர்களை வசப்படுத்த முடியாதென்பதைத் தெரிந்த குறைஷித் தலைவர்கள், வேறொரு சமரச யோசனையைச் சொல்லி அனுப்பினார்கள். அதாவது:

நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டுமானால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும். ஒரு வருஷம் அவர் நமது தெய்வங்களை வணங்கி வரவேண்டும். மறு வருஷம் நாம் அவருடைய கடவுளை வணங்குவோம். இவ்வாறு செய்து வருவது இருவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு நல்ல வழி. இச்சமரச யோசனைக்கு மறுப்பாகவே இந்த அத்தியாயத்தில் உள்ள விஷயங்களைக் கூறும்படி இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளான்.

கருத்துரை
எல்லாவற்ரையும் படைத்து இரட்சித்து ஆளும் சர்வ சக்தியுள்ள ஒரே இறைவனை நான் வணங்குகிறேன். நீங்கள் அவனால் சிருஷ்டிக்கப்பட்ட சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்றவைகளையும் உங்கள் கைகளால் உண்டாக்கப்பட்ட சிலைகளை வணங்கி வருகிறீர்கள். இந்த படைப்புகளும், சிலைகளும் உங்களைக் காப்பாற்றக் கூடியவை என நீங்கள் விசுவாசம் கொண்டிருக்கின்றீர்கள். இவைகளால் இலாபமோ நஷ்டமோ உண்டாக்க முடியாது. இந்த உணர்ச்சி உங்களுக்கு உதயமாகும் வரை என் வழியில் என்னை விட்டுவிடுங்கள் உங்கள் வழியில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள்.வணக்கத்திற்கு மூலமானது தவ்ஹீது எனும் இறைவன் ஒருவன் என்பதை நிலைநிறுத்துவதும், ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை வைத்தல் நிராகரிப்பாகும்.

இதன் சிறப்பு
நபித்தோழர் நெªபல் பின் முஆவியா அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதரே நித்திரைக்குச் செல்லுங்கால் நான் எதை ஓத வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் குல்யா அய்யுஹல் காபிரூன் என்ற அத்தியாயத்தை ஓதிவிட்டு நித்திரை செல்லுங்கள் அது (ஷிர்க்) இணைவைத்தலை விட்டும் அகற்றக் கூடியதாகும். (மனத் தூய்மையுடன்) ஓதுபவன் ஷிர்க்கை விட்டும் காப்பாற்றப்படுகிறான். அப்படியே மரித்தாலும் (தவ்ஹீத்) ஏக தெய்வக் கொள்கியின் மீதே மரிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அஹ்மது, அபூதாவூது,திர்மதீ, நஸயீ.)

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்



அல் பீல்  -  யானை
மெளலவி E.M.அப்துர் ரஹ்மான்



أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ﴿١﴾ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ﴿٢﴾ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ﴿٤﴾ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

1.யானை(ப்படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்க வில்லையா? 2.அவர்களுடைய சூழ்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? 3.மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். 4.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. 5.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப்போல் அவன் ஆக்கி விட்டான்.

யானைப்படை அழிந்த வரலாறு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன், அப்ரஹா என்ற பெயருள்ள அரசன் மக்காவிற்கு கிழக்கிலுள்ள எமன் நாட்டில் அரசு செலுத்தி வந்தான். இயற்கையில் அவன் துற்குணமுள்ளவன். மக்காவிலுள்ள  கஃபாவானது  அரபியர்களிடம்  விசேஷ மதிப்பு  பெற்றிருந்தது  பற்றி அவன் பொறாமை கொண்டு தன் நாட்டின் தலைநகர் ஸன்ஆ விலும்மொரு பெரிய கோவிலை கட்டினான். மக்காவிற்குச் ஹஜ்ஜு செய்யக் கூடாதென்றும் தன்னுடைய கோவிலுக்கே எல்லோரும் வரவேண்டுமென்றும் பிரகடன படுத்தினான். இவன் வார்த்தைக்கு ஒருவரும் மதிப்பு கொடுக்கவில்லை.

அரபியர்கள் வழக்கப்படி கஃபாவிற்கே யாத்திரை போனார்கள் இவன்கட்டிய கோவிலுக்கு யாரும் வரவில்லை. அதைப்பற்றி அவனுக்கு அதிக வருத்தம் உண்டு. இப்படியிருந்து வரும் சமயம் இவனுடைய கோவிலில் மலபாதை கழித்து ஆபாசம் செய்துவிட்டார்கள். அதைப்பற்றி  விசாரிக்கும்போது அவ்வாறு செய்தது  மக்காவாசி என்று தெரிந்தது. சிறிது  காலத்திக்குப்பின்  அந்தக்  கோவிலும்  தீப்பற்றி எரிந்து விட்டது. விசாரணையில்  மக்காவாசியே தீ வைத்ததாக  தெரிந்தது.  இவ்விரு  சம்பவங்களாலும் இயற்கையில் அவனுக்கு கஃபாவின் மீதும் மக்கா வாசிகளின் மீதும் இருந்து வந்த கோபம் மிகவும் அதிகமாகி விட்டது.

கஃபாவை இடித்து நாசம் செய்துவிட வேண்டுமென்று தீர்மானித்து, ஒரு பெரிய படையுடன் மக்காவை நோக்கி புறப்பட்டான்.அப்படையில் யானைகள் அதிகம் இருந்ததால் யானைப் படைகள் என்று கூறப்பட்டது. அதில் மிகப்பெரிய யானையின் பெயர் மஹ்மூது. கஃபாவை மட்டும்தான் இடித்துத் தகர்க்கப் போவதாகவும் பொதுமக்களுக்கு எத்தகைய  இடையூறும் விளைவிக்கப்  போவதில்லையென்றும் ஆனால் இடிப்பதை எவராவது தடுத்தால் எல்லோரையும் தொலைத்து விடுவதாயும்  முற்கூட்டியே மக்காவாசிகளுக்கு  சுற்றறிக்கை அனுப்பி விட்டான். இதனால்  நபி (ஸல்) அவர்களின்  பாட்டனார்  அப்துல் முத்தலிபைத்  தவிர்த்து  பாக்கியுள்ள மக்காவாசிகள் அனைவரும் பீதியினால் நகரை விட்டும் பக்கத்திலுள்ள மலைகளில் போய் மறைந்து கொண்டார்கள்.

அப்துல் முத்தலிபும் அப்ரஹாவும் 

அப்ரஹாவின் படைகள் மக்காவிற்குச் சிறிது தூரத்திலுள்ள வாதியே முகஸ்ஸர் என்ற இடத்தில் தங்கி இருந்தன. ஒரு தினம் அப்துல் முத்தலிப் அவர்கள் அப்ரஹாவிடம் விஜயம் செய்ய, அப்ரஹா அவர்களை வரவேற்று உமது தேவை என்ன என வினவினான். எனது ஒட்டகைகளை உமது படையினர் பிடித்துக் கொண்டார்கள், அதனைப் பெற்றுச் செல்லவே வந்திருக்கிறேன் என்றார். இதைக்கேட்ட அப்ரஹா வியப்புடன் உமது ஒட்டகையைப் பற்றிய விசயத்தைத்தான் தெரிவிக்கிறீர், நான் கஃபாவை இடிக்க வந்திருக்கிறேனே அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று அப்ரஹா சொல்ல அதற்கு முத்தலிப் ஒட்டகைக்கு நான் சொந்தக்காரன் என் பொருளை நான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் கஃபாவின் சொந்தக்காரன் வேறு. அவன் உடமையை அவன் காப்பாற்றிக்கொள்வான். என அர்த்தமுடன் பதிலுரைத்தார். ஒட்டகைகளைக் கொடுத்து அப்துல் முத்தலிபை அனுப்பிவிட்டு அப்ரஹா காஃபாவை இடித்து தரை மட்டமாக்கும்படி தனது யானைப்படைக்கு உத்தரவு பிறப்பித்தான். கட்டளையை நிறைவேற்ற யானைப்பாகர்கள், யானைகளை எவ்வளவுதான் அடித்து மிரட்டியும் அவை ஒரு அடிகூட முன் எடுத்து வைக்கவில்லை. ஏனேன்றால் மஹ்மூது என்ற தலமை யானை கஃபாவை நோக்கிச் செல்ல மறுத்து முன்னால் படுத்து விட்டது. அதைக் கிளப்ப அவர்களால் முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் அவைகள் முழுச் சத்தியாக்கிரகம் செய்துவிட்டன.

கரு நிறமான பறவைகள் 

இச்சமயம் ஜித்தா கடற்கறையின் திசையிலிருந்து கரு நிறமான பறவைகள் கூட்டங் கூட்டமாக பறந்து வந்தன. ஒவ்வொரு பறவையின் இரு கால்களிலும் அலகிலும் பொடிக் கற்கள் இருந்தன. யானைப் படையினர் நேருக்கு நேர் அவை வந்ததும் ஆகாயத்தில் பறந்துக்கொண்டே அப்பொடிக் கற்களை படைகள் மீது எறிந்தன. அக்கற்கள் யார்மீது விழுந்தனவே அவர்கள் மெல்லப் பட்ட வைகோள்களின் சக்கை போன்று ஆயினர்.

கஃபாவை இடித்துத் தள்ள கட்டளை பிறந்தபொழுது மறுத்துச் சத்தியாக்கிரஹம் செய்த யானைகளைத் தவிர்த்து மற்றெல்லாப் படையினரும் இக்கதிக்குள்ளாயினர். ஆங்காங்கே மலைகளில் மறைந்துக் கொண்டிருந்த மக்காவாசிகள், குரைஷிகள் கண்கூடாக பார்த்தனர். கஃபாவை தாக்க வந்த பெரும்படை சிறிய  பரவைகளால்  நாசமாக்கப்பட்டது, நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னறிக்கையான அற்புதம் என்றும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் நடந்த 55 வது நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

எனவே, தங்களின் படை பலத்தாலோ, செல்வச் செருக்காலோ, நாவன்மையாலோ அல்லாஹ்வின் மார்க்கத்தை அழித்துவிடக் கணவு காண்பவர்கள், யானைப் படையின் கதியும், அதன் சம்பவமே போதிய சான்றாகும்.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்



தூய்மையானவர்களைத் தவிர….


குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா அல்லது கூடாதா என்பதில் பலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதனை நாம் சற்று கவனமாக ஆராய்வோம்.

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.    

“நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. “தூய்மையானவர்களைத் தவிர (வெறெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்” (அல்குர்ஆன் 56:78,79)

நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு எழுதிய கடிதமொன்றில் ‘குர்ஆனைப் தூய்மையானவர்களைத் தவிர மற்றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூபக்ருபின் முஹம்மதுபின் அம்ரு பின் ஹஜ்மு (ரலி) நூல்கள்: நஸயீ, பைஹகீ, தாரகுத்னி

மேற்காணும் ஆயத்தில் இதனைத் தொடமாட்டார்கள் எனும் வாசகம் இருக்கிறது. இதனை என்று சொல்லப்பட்டிருப்பது “பாதுகாக்கப்பட்ட ஏட்டை” என்பதுதான் பொருள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் கூறுகிறார்கள்.

அடுத்து நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் ‘குர்ஆனைப் பரிசுத்தமானவரின்றி மற்றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதியிருப்பதால்  நபி (ஸல்) அவர்களே பாதுகாக்கப்பட்ட ஏட்டை என்று பொருட்கொள்ளாது குர்ஆனை என்று தானே பொருள் கொண்டிருக்கிறார்கள் எனலாம். அப்படி என்றால் அவர்கள் தொடவேண்டாம் என்று கூறாது “தொடமாட்டார்” என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறிருக்க தொடமாட்டார் என்னும் வார்த்தைக்கு தொட வேண்டாம் என்று பொருட்கொள்வது எங்கனம் பொருந்தும்?

அவ்வாறே ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் அந்த வாசகம் குர்ஆனைப் தூய்மையானவர்தான் தொடவேண்டும் என்பதைப் பொதுவாகக் காட்டுகிறதே தவிர ஒளுவில்லாதவர் அதைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டுவதாக அது அமைந்திருக்கவில்லை.

ஏனெனில் தூய்மையானவர் என்ற வார்த்தை பல கருத்துக்களைக் கொண்ட பொதுச் சொல்லாக அமைந்திருக்கிறது. அதற்கு [1] ஒளு செய்து சுத்தமானவர் [2] கையை மட்டும் களுவி சுத்தமானவர் [3] குளித்து சுத்தமானவர் [4] ஷிர்க் [இணைவைத்தல்] என்னும் அசுத்தத்தை அகற்றி முஸ்லிம் என்ற வகையில் சுத்தமானவர் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் கொள்ள இடமிருப்பதால் ஒளு செய்து தூய்மையானவர் என்று மட்டும் பொருள் கொள்வதற்கு தக்க ஆதாரம் குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இருந்தாக வேண்டும். அவ்வாறிருப்பதாக தெரியவில்லை. அல்லாஹ்வும், ரசூலும் பொதுவாக சொல்லியிருக்கும் ஒரு வார்த்தைக்கு அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அதற்கு குறிப்பிட்டு விளக்கம் தராதிருக்கும்பொழுது , தக்க ஆதாரமின்றி அதற்கு இதுதான் விளக்கம் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது?

ஆகவே மேற்காணும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் ஒளுவில்லாது குர்ஆனைத் தொட்டால், அவ்வாறு அவர் தொடுவதைத் தடுப்பதற்கு மார்க்க ரீதியாக நம்மிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

திங்கள், 22 அக்டோபர், 2012



மனோ இச்சைக்கு வழிப்படுதல்


4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.

5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம் இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும் வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்். அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்். ஆனால் அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

5:77. ”வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாாின் மனோ இச்சைகளை நீ்ங்கள் பின்பற்றாதீர்கள்். அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன் தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்”" என்று (நபியே!) நீர் கூறுவீராக!

7:176. நாம் நாடியிருந்தால் நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்் எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்் அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் – ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.

6:150. ”நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்”" என்று கூறும்் அவர்கள் சாட்சி கூறினால் (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் – நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள் மறுமையை நம்பாதவர்கள் ஆகியோாின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் – ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.

6:56. ”நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்”" (என்று நபியே!) நீர் கூறுவீராக ”உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்் (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்் மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்”" என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.

18:28. (நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்் இன்னும் எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்் ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காாியம் வரம்பு மீறியமாகி விட்டது.

25:43. தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?

28:50. உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில் நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்் இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்் நிச்சயமாக அல்லாஹ் அக்கரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.

30:29. எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்் ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர்.

47:16. இன்னும் அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்் ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும் எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து் ”அவர் சற்று முன் என்ன கூறினார்?”" என்று (பாிகாசமாகக்) கேட்கின்றனர்் இத்தகையோாின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள் தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.

45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சாீர மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ அவனை நீர் பார்த்தீரா? மேலும் அநிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு் இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை அதை்துவிட்டான். எனவே அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?

79:37-41 எனவே எவன் வரம்பை மீறினானோ – இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- அவனுக்கு நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.

38:26. (நாம் அவாிடம் கூறினோம்்) ”தாவுூதே! நிச்சயமாக நாம் உம்மை புூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்் ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதுமாக)த் தீர்ப்புச் செய்யும்் அன்றியும் அனோ இச்சையைப் பின் பற்றாதீர்் (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.

4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்். ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

53:23. இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும் தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள் எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்


அல்குர்ஆன் யாருக்குச் சொந்தம்?


முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இன்று அல்குர்ஆன் தங்களுடைய வேத நூல் எனவே அது தங்களுக்குறியதே என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். அதனால் அதனை முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் அதனை அவர்களுக்கு கொடுக்க மறுத்து விடுகின்றனர். அவர்கள் அசுத்தமானவர்கள்; எனவே அவர்கள் அதைத் தொடக்கூடாது என்று சட்டம் வகுத்துள்ளனர். எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் குர்ஆனைப் படித்து விளங்கி அதிலுள்ள உயர்ந்தகருத்துகளை அறியும் வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் குர்ஆனை தங்களுடைய  நூல் என்று சொந்தம் பாராட்டுவதால் அவர்களும் அதை நம்பி தங்களுக்கும்  குர்ஆனுக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக்  கொள்கின்றனர்.

குர்ஆன் முஸ்லிம்களுக்குரிய வேதம் எனக்குறுகிய துவேஷ கண்ணுடன் பார்க்கின்றனர். அதே சமயம் முஸ்லிம்களாவது தினசரி ஓதி உணர முற்படுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை.  முஸ்லிம்களுடைய வீடுகளில் பெரும்பாலும் குர்ஆன் அழகிய பட்டு உரையால் போர்த்தப் பட்டு பரணியில் கைபடாத இடத்தில் பத்திரமாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அதை எடுத்துப்பார்த்தாலே  அதன் மேல் தூசுகள் படிந்திருக்கும். அது கீழே இறக்கப்பட்டு தூசி தட்டப்பட்டு கூலிக்கு ஆள் பிடித்து இறந்தவருக்காக ஓதப்படும். அந்த சமயத்தில் கூட வீட்டிலுள்ளோர்  அதை ஓத முற்படமாட்டார்கள்.

உயிரோடுள்ளவர்கள் ஓதி உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டிய முஸ்லிம்கள், அந்த குர்ஆனை இறந்தவர்களுக்கு கத்தம் பாத்திஹா என்று ஆக்கி வைத்திருக்கிறார்கள். மிஞ்சி மிஞ்சிப்போனால் தகராறு, பிரச்னை ஏதும் வந்துவிட்டால் குர்ஆனை வைத்து சத்தியம் செய்வார்கள். இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதும், குர்ஆனை வைத்துச் சத்தியம் செய்வதும் அந்த குர்ஆனின் போதனைக்கே முரணான செயல்கள் என்பதையும் பெரும்பான்மை முஸ்லிம்கள் அறியமாட்டார்கள்.

குர்ஆனை ஒளூ இல்லாமல் தொடக்கூடாது; அது பாவம் என்று இந்த முல்லாக்கள் சட்டம் வகுத்து வைத்திருப்பதை இந்த முஸ்லிம்கள் அப்படியே வேதவாக்காகக் கொண்டு குர்ஆனுக்கு அருகில் வருவதைக் கூட பயப்படுவார்கள். தொழுது வரக்கூடிய  ஒரு சில முஸ்லிம்கள்  தொழுது முடித்து வீட்டுக்குக் கிளம்பும் முன்னர் பள்ளியிலிருக்கும் குர்ஆனை  எடுத்து திறந்து தலையில் வைத்து பின்னர் முத்தம் கொஞ்சி அப்படியே மீண்டும் இருந்த இடத்தில் மூடி வைத்துவிடுவார்கள். அவர்கள் குர்ஆனுக்குச் செலுத்தும் அதிகபட்ச மரியாதை அவ்வளவுதான்.

தப்லீகில் சென்று வரும் முஸ்லிம்களோ தினசரி ஒரு ஜுஸ்வு ஓத வேண்டும் என்ற  கட்டாயத்தில்  தவறாமல் பொருள் அறியாமல் கடகட என ஓதி அதன் பொருள் அறியாமல் ஓதி வருவார்கள். அவர்கள் அந்தக் குர்ஆனில் ஓதிவரும் எத்தனையோ வசனங்கள் அவர்கள் செய்து வரும் பல மார்க்க முரணான மத்ஹபு சார்ந்த செயல்களை வன்மையாகக் கண்டித்துக் கூறும். ஆனால் அவர்கள் பொருள் அறியாமல் ஓதி வருவதால்  குர்ஆனின் கண்டனங்கள் ஒன்றும் அவர்களின் உணர்வுகளைத் தூண்டாது. மவ்லவிகள் அப்படிப்பட்ட வசனங்களின் பொருள் உணர்ந்து ஓதினாலும்  அது தங்களூக்கு இடப்பட்ட கட்டளைகள் அல்ல. காபிர்களைப்  பார்த்து சொல்லப்பட்ட கண்டனங்கள் என்று அசட்டுத்தனமாக  இருந்து விடுகிறார்கள்.

குர்ஆன்  தமிழ் மொழி பெயர்ப்பைப் பார்த்து பொது மக்களில் யாரும் இந்த மவ்லவிகளிடம் வந்து இந்த வசனனங்களுக்குரிய விளக்கத்தைக் கேட்டால், இந்த மவ்லவிகள் சிறிதும் கூசாமல் இந்த வசனங்கள் முஸ்லிம்களூக்கு அல்ல; யூதர்களுக்கு அல்லது கிறிஸ்தவர்களூக்கு காபிர்களுக்கு என்று பதில் அளித்து விடுகிறார்கள். முஸ்லிம் பொதுமக்களும் மவ்லவிகளின் அசட்டுத் தனமான பதிலை அப்படியே வேதவாக்காகக் கொண்டு மீண்டும் அவர்கள் செய்து வரும்  அத்தவறுகளையே  செய்யத் துணிகின்றனர். எனவே குர்ஆன் அப்படிப்பட முஸ்லிம்களைச் சபித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிய மாட்டார்கள்.

பொதுவாக அல்குர்ஆன் யாருக்குச் சொந்தம் என்று வரும்போது அது எங்களுக்கே சொந்தம் என்று நெஞ்சில் அடித்துப் பேசும் முஸ்லிம்கள், அதனுள்ளே உள்ள வசனங்கள் பற்றி வரும்போது இது யூதர்களுக்கு; இது கிறிஸ்தவர்களுக்கு; இது காபிர்களுக்கு என்று பெரும்பாலான வசனனங்களை முஸ்லிம் அல்லாதவர்களுக்காக ஆக்கிவிடுகிறார்கள். அதாவது அல்குர்ஆனின் பெரும்பகுதி முஸ்லிம்களுக்குரியதல்ல, முஸ்லிம் அல்லாத யூத, கிறிஸ்த்தவ, நிராகரிப்பாளர்களுக்குரியது என்று கூறி விடுகிறார்கள். அப்படியானால் அல்குர்ஆன் தங்களுக்குரியது என்று பெரும்பான்மை முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடுவதில் எதுவும் பொருள் இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

உண்மை என்ன தெரியுமா? அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்காகவும் அந்த மக்களை படைத்துப் போஷித்து வரும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இறுதி வேதமாகும்.(அல்குர்ஆன் 6:90, 42:7, 81:27)  அந்த குர்ஆனின்  உபதேசங்களை ஏற்று அதன்படி வழி தவறாமல் நடப்பவர்கள், குர்ஆனின் நன்மாரயத்தைப் பெறுகிறார்கள். அந்த குர்ஆனின் உபதேசத்தை தங்களின் முதுகுக்குப் பின்னால்  தூக்கி எறிந்து விட்டு தங்களின் மூதாதையர்களின், முன்னோர்களின், இமாம்களின், பெரியார்களின், வலிமார்களின், மவ்லவிகளின், ஆலிம்களின் உபதேசங்கள் என்று கூறி மனிதக் கற்பனைகளை யாரெல்லாம் எடுத்துச் செயல்படுகிறார்களோ அவர்கள் அனைவரையும் குர்ஆன் சபிக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து கொள்வார்களாக.

அவர்கள் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத குடும்பங்களில் பிற்ந்திருந்தாலும் சரி, முதலில் பிறப்பினால் நாங்கள் முஸ்லிம்கள்; அதனால் குர்ஆனுக்குச் சொந்தக்காரர்கள் என்ற வாதத்தை முஸ்லிம்கள் விட்டுவிட வேண்டும். பண்பில்லா, மனித நேயம் மறந்த மக்களால் மிகக் கேவலமாக இழிவாக மதிக்கப்படக்கூடிய ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருந்தாலும், அவர் இந்த குர்ஆனின் போதனைகளை ஏற்று அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஒப்புக்கொண்டு அவனை மட்டுமே வணங்கி அவனிடம் மட்டுமே தனது தேவைகளைக் கேட்டு, படைக்கப்பட்ட மலக்குகள், அவுலியாக்கள், இமாம்கள், பெரியார்கள், முன்னோர்கள், மூதாதையர்கள் ஆகிய படைப்பினங்களை வணங்குவதை விட்டும், அவர்களிடம் தனது தேவைகள் குறித்து முறையிடுவதை விட்டும், தனது வேண்டுதல்களை வைப்பதை விட்டும் முற்றிலுமாக விலகிக்கொண்டாரோஅவரே அல்லாஹ் பொருந்திக் கொள்ளும்  உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்.

இஸ்லாமிய வாழ்க்கை நெறியும் அல்குர்ஆனும் பிறப்பின் அடிப்படையில் யாருக்குமே சொந்தம் இல்லை. யாரெல்லாம் இஸ்லாத்தின் ஏவல் விலகல் கட்டளைகளை எவ்வித சுய விளக்கமும் கொடுக்காமல் அப்படியே ஏற்று, அதன்படி வழுவாமல் நடந்து வருகிறார்களோ அவர்களே அந்த குர்ஆனுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை உரிய முறையில் செலுத்தியவர்கள் ஆவார்கள். அவர்கள் பிறப்பால் எக்குலத்தில் பிறந்தாலும், பிற மக்களால் மிக இழிவாக வெறுத்து ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருந்தாலும் அவர்கள் மக்களில் மிக உயர்ந்தவர்களே.

அதற்கு மாறாக பிறப்பால் மிக மிக உயர் குலத்தில் பிறந்தாலும், முஸ்லிம் தாய், தகப்பனுக்கே பிறந்திருந்தாலும் இஸ்லாத்தின் ஏவல் விலக்கல்களைப் புறக்கணித்து அல்லது அவற்றிற்கு சுய விளக்கம் கொடுத்து தங்களின் மனோ இச்சையின் படி நடக்கிறார்களோ அவர்களை நாளை மறுமையில் முஸ்லிம்களுடைய பதிவேட்டில் அல்லாஹ் சேர்க்க மாட்டான். உலக மக்கள் அனைவரின் இறைவனான அல்லாஹ்வின் இறுதி வேதமான அல்குர்ஆனை ஓதி உணர்ந்து அதன்படி செயல்படாதவர்களுக்காக நாளை மறுமையில் அந்த குர்ஆனும் பரிந்துரை செய்யாது.

எனவே முஸ்லிம்கள் முஸ்லிம் தாய், தகப்பனுக்குப் பிறந்த ஒரே காரணத்தால் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதை விட்டும் விலகிக் கொள்வார்களாக. அது கொண்டு இறைவனின் இறுதி வேதமான அல்குர்ஆன் தங்களுக்கே சொந்தம் என்ற குருட்டு வாதத்தையும் விட்டொழிப்பார்களாக. அல்குர்ஆனை முஸ்லிம் அல்லாத  தாய், தகப்பனுக்குப் பிறந்தவர்கள் ஓதி உணர்வதை தடுக்காதிருப்பார்களாக. அவர்கள் அசுத்தமானவர்கள்;  அவர்களுக்குக் குர்ஆனை கொடுக்கமாட்டோம் என்று வீண்வாதம் செய்யாதிருப்பார்களாக.

குர்ஆன் முஸ்லிம்களாகிய எங்களுக்கே சொந்தம்; எங்களது வேதம் என்ற முட்டாள் தனமாக சொந்தம் கொண்டாடுவதை விட்டும் விலகிக் கொள்வர்களாக. அது கொண்டு மற்றவர்கள் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம்; அவர்களுக்குரிய வேதப்புத்தகம்; நமக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற தவறான எண்ணத்தில் அதைப் புறக்கணிப்பவர்களாகவும், அறிவு குறைந்த முஸ்லிம்களை  கோபப்படுத்தி அதன் மூலம் அவர்கள் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்குடன் அல்குர்ஆனை எரிப்பவர்களாகவும் இருக்க முஸ்லிம்கள் துணை போகாதிருப்பார்களாக.

கடலிலும், கரையிலும் ஏற்படும் குழப்பங்கள் அனைத்தும் தங்கள் கரங்களால் ஏற்ப்பட்டவையே என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை ஓதி உணர்ந்து தங்களின் கரங்களை அல்லாஹ்வுக்குப் பொருத்தமான வழியில் ஈடுபடுத்தவார்களாக. இதுவே உண்மை முஸ்லிம்களின் இலட்சணமாகும்.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்


தன்னந்தனியே தனித்து நிற்கும் நாள்…!


73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.

82:1. வானம் பிளந்து விடும்போது

82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-

82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,

82:4. கப்றுகள் திறக்கப்படும் போது,

82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

81:1. சூாியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது

101:4.அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

80:34.அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் – தன் சகோதரனை விட்டும் -

80:35.தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

80:36.தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

80:37.அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல

39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.

50:41.மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.

50:42. அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மாித்தோர்) வெளியேறும் நாளாகும்.

36:51. மேலும், ஸுர் ஊதப்படடதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

36:52. ”எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?”" என்று அவர்கள் கேட்பார்கள்

39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.

19:80.இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.

50:22.”நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.”" (என்று கூறப்படும்).

10:45.அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள் ; அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.

79:35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

23:101.எனவே ஸ_ர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாாித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

44:41.ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.

82:19. அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.

3:30. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;.

14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவாகளாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங்க கொண்டு) சூணியமாக இருக்கும்.

18:48.அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வாிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ”நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்”" (என்று சொல்லப்படும்).

18:49.இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ”எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பொியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே!”" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்

24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.

41:20.இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராகன அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.

41:21.அவர்கள் தம் தோல்களை நோக்கி, ”எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்?”" என்று கேட்பார்கள்; அதற்கு அவை; ”எல்லாப் பொருட்களையும் பேசம் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசம்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்”" என்று கூறும்.

70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.

70:11.அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாாித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிாியப்படுவான்: தன் மக்களையும்-

70:12.தன் மனைவியையும், தன் சகோதரனையும்-

70:13.அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

70:14.இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிாியப்படுவான்).

52:46. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.

69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ”என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!

69:26. ”அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-

69:27. ”(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?

69:28. ”என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!

69:29. ”என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!”" (என்று அரற்றுவான்).

69:30. ”(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அாிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”"

69:31. ”பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு; ”அத்தூதருடன் நானும் – (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?”" எனக் கூறுவான்.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்


அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!



(நபியே!) நீர் கூறும்! நீங்கள் அல்லஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்.

அல்குர்ஆன் 3:31

 (நபியே!) நீர் கூறுவீராக நீங்கள் எனக்கு வழிப்பட்டு நடப்பீர்களேயானால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான்.

அல்குர்ஆன் 48:16


 அல்லாஹ்வுக்கும் (அவனது)  தூதருக்கும் வழிபடுங்கள்,  அன்றியும் நீங்கள் செய்பவற்றை  யெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனே.

அல்குர்ஆன் 58:13, 3:33


 நீங்கள் இறை நம்பிக்கையுடையோர் (மூஃமீன்)களாயின் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படியுங்கள்.

அல்குர்ஆன் 8:1

 (மூஃமீன்களே) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜக்காத்தை கொடுங்கள்; மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.

அல்குர்ஆன் 24:56

 எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். 

அல்குர்ஆன் 24:52


 எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான பாக்கியத்தை வெற்றிகொண்டு விட்டார்.

அல்குர்ஆன் 33:71

 நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களேயானால் அவன் உங்களது நற்செயல்களில் எதனையும்  உங்களுக்கு குறை வைக்கமாட்டான்.

அல்குர்ஆன் 49;14

 இறைனம்பிக்கைக் கொண்டோர்(மூஃமீன்)களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; மேலும் அவனது தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்.  உங்களிடையே ஏதாவது ஒரு விஷயத்தில் பினக்கு ஏற்பட்டு விட்டால், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் உங்களுக்குமிகவும் சிறப்பான அழகான முடிவாகும்.

அல்குர்ஆன் 4:59

 எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து  நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிளில்  பிரவேசிக்கச் செய்வான்; அங்கு கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் இது மகத்தான பாக்கியமாகும்.

அல்குர்ஆன் 4:13

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்