புதன், 31 அக்டோபர், 2012



ஸலாம் கூறுங்கள்



”நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி(ஸல்) அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்று கூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி(ஸல்)அவர்கள் அனுமதி வழங்க, அவர் உள்ளே வந்தார்” என ரிப்யீ இப்னு ஹிராஷ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)

------------------<<<<OOOOO>>>>-------------------

”நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. ‘ஸலாம்’ கூறாமல், அவர்கள் இருந்த அறையில் நுழைந்துவிட்டேன். நீ திரும்பச் சென்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு, பின்னர் உள்ளே வா என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என கில்தா இப்னு ஹன்பல்(ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மது, அபூதாவூத்ு மற்றும் திர்மிதீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”அனுமதி பெறுவது (மார்க்கச்) சட்டமாக ஆக்கப்பட்டது பார்வையின் காரணத்தால்தான் என்று நபி(ஸல்) கூறினார்கள்” என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, திர்மிதீ மற்றும் நஸயீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ, இடப்புறமோ ஒதுங்கி நின்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்வார்கள்”" என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)

------------------<<<<OOOOO>>>>-------------------

”முன் அனுமதி பெறாமல் பிறருடைய வீட்டின் உட்பகுதிகளைப் பார்ப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அப்படி ஒரு முஸ்லிம் (பிறருடைய வீட்டின் உட்பகுதிகளை) பார்த்துவிட்டால் (அவர் அனுமதி பெறாமல்) அவ்வீட்டில் புகுந்தவர் போன்று ஆகிவிடுகிறார்” என தவ்பான்(ரலி) அறிவிக்கிறார் .(நூல்: அபூதாவூத்், திர்மிதீ) மேற்கண்ட நபிமொழியை இமாம் புகாரி அவர்கள், தம் ‘அல்அதபுல் முஃப்ரத்” எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

------------------<<<<OOOOO>>>>-------------------

”ஒருவர் தன் பார்வையை ஒரு வீட்டினுள் முறையற்று செலுத்தும்போது அவ்வீட்டுக்காரர் உற்றுப் பார்த்த அவரின் கண்ணைப் பறித்தால்கூட, அதற்காக அவரை நான் குறை கூறமாட்டேன். அடைக்கப்படாத (திரையிடப்படாத) ஒரு வாசலை, யாரேனும் உற்று நோக்கினால், நோக்கியவர் மீது குற்றம் ஏதுமில்லை. வீட்டுக்காரர்களே குற்றவாளிகளாவர் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”"என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். (நூல் : திர்மிதீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”வீட்டில் ஓர் ஆண் தொழுது கொண்டிருக்கும்போது அவரின் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டால், தொழுது கொண்டிருப்பவர் தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் என்று) சொல்வதே அனுமதி அளித்ததாகும். பெண் ஒருத்தி தொழுது கொண்டிருக்கும்போது அவ்வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கேட்கப்பட்டால், அப்பெண் தன் புறங்கையைப் புறங்கையில் அடித்து சப்தம் உண்டாக்குவதே அனுமதி அளிப்பதாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்” என அபூஹ{ரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: பைஹகீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”நான் நபி(ஸல்) அவர்களிடம் இரவு மற்றும் பகல் நேரங்களில் வருவேன். நான் இரவில் வரும்போது அவர்கள் கனைத்து எனக்கு அனுமதி அளிப்பார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்கும்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தால் கனைப்பார்கள்; நான் நுழைந்துவிடுவேன். அவர்கள் தொழாமல் இருந்தால் எனக்கு (வாய்மொழியில்) அனுமதி அளிப்பார்கள்” என அலி இப்னு அபீ தாலிப்(ரலி) (நூல்: நஸயீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் வந்து அனுமதி கோர, யார் அது என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, அபூபக்ர் என்று பதில் சொன்னார்கள். அதன் பிறகு உமர்(ரலி) வந்து அனுமதி கேட்டார்கள். யார் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, உமர் என்றார்கள் அதன் பின்பு வந்த உதுமான்(ரலி) அவர்களும் தம் பெயர் கூறியே அனுமதி பெற்றார்” என அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி, முஸ்லிம்)

------------------<<<<OOOOO>>>>-------------------

”என் தந்தைக்கு இருந்த கடன் விஷயமாக, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்கள் வீட்டுக்) கதவைத் தட்டினேன். (வீட்டிற்குள்) இருந்து நபி(ஸல்) அவர்கள் (கதவைத் தட்டுவது) யார் எனக் கேட்டார்கள். நான்தான் என்று குரல் கொடுத்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நான்தான் ”என்றால் யார்” என்று அதிருப்தியோடு கேட்டார்கள்” என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், மற்றும் திர்மிதீ)

------------------<<<<OOOOO>>>>-------------------

”நபி(ஸல்) அவர்களுடன் நான் சென்ற இடத்தில் ஒரு பாத்திரத்தில் பால் இருந்தது. நபி(ஸல்) அவர்கள், அபூஹுரைராவே, திண்ணைத் தோழர்களை இங்கே அழைத்து வாருங்கள் என்றார்கள். நான் திண்ணைத் தோழர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்” என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)

------------------<<<<OOOOO>>>>-------------------

”இரவில் நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தூங்குபவர்கள் எழுந்துவிடாத முறையிலும் விழித்திருப்பவர்களுக்கு (மட்டும்) கேட்கும்படியாகவும் ‘ஸலாம்” கூறுவார்கள்” என மிக்தாத்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)

------------------<<<<OOOOO>>>>-------------------

”ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும்போது, யா அல்லாஹ்! நல்ல முறையில் நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகிறேன். இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டே வெளியேறுகிறோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் என்று கூறிவிட்டுப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களுக்கு ‘ஸலாம்” கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மாலிக்கில் அஷ்அரி(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)

    ------------------<<<<OOOOO>>>>-------------------

(அடுத்தவர் வீட்டினுள் செல்ல) அனுமதி கேட்பது மூன்று     தடவையே. உனக்கு (மூன்று தடவைகளுக்குள்) அனுமதி அளிக்கப்பட்டுவிட்டால்,     (அவ்வீட்டில் நுழையலாம்) அவ்வாறு அனுமதி கிடைக்கவில்லையெனில், திரும்பிவிடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, முஅத்தா, அபூதாவூத் மற்றும் திர்மிதீ)

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

ஞாயிறு, 28 அக்டோபர், 2012



 அல்லாஹ்வின் மீது நம்பிக்கை
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா


அடிப்படை விளக்கம்
அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கும் தன்மைகள் (ஸிஃபத்துகள்) செயல்கள் அனைத்தும் உண்மையே என நம்புவதாகும். அந்தத் தன்மைகளையும் செயல்களையும் கொண்டுதான் அல்லஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும். அத்துடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி கூறியுள்ள தன்மைகளையும், செயல்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்குர்ஆனிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளதில் நமது அறிவைக் கொண்டு கருத்து, பொருள் மாற்றத்தையோ செய்யக்கூடாது.
அவனுடைய தன்மைகளுக்கும் செயல்களுக்கும் படைப்பினங்களின் தன்மைகளையும் செயல்களையும் உதாரணமாக உவமையாக கூறக்கூடாது.
படைப்பினங்களின் தன்மைகளைக் கொண்டும் செயல்களைக் கொண்டும் அல்லாஹ்வின் தன்மைகளையும் செயல்களையும் விவரிக்கக் கூடாது.
அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள் பற்றி கூறப்பட்டுள்ள குர்ஆனின் வசனங்களை பொருளற்றவை என்று கூறக்கூடாது.
அல்லாஹ் தன்னைப்பற்றி அல்குர்ஆனில் கூறியிருக்கும் வசனத்திற்கேற்ப அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும்.

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ  وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

..... அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை அவன் (யாவற்றையும்) செவியுறுபவனாகவும்) உற்று நோகியவனாகவும் இருக்கிறான். (ஸுரா அஷ்ஷுறா 42:11)

இதன் அடிப்படையில் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறியிருக்கும் எந்த தன்மைகளையும் அவை அவனுக்கு இல்லை என்று மறுக்கக் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களை மாற்றக் கூடாது. அவைகளை புரட்டி, திருத்தி மாற்றுப் பொருள் கூறவும் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களிலும் அவனது அழகிய திருப்பெயர்களிலும் முரண்பட்ட பொருளை புகுத்தக்கூடாது. எந்நிலையிலும் அல்லாஹ்வின் தன்மைகளுக்கு படைப்பினங்களின் தன்மைகளை உவமையாக கூறக் கூடாது.

நிச்சயமாக அல்லாஹ்விற்கு நிகரானவர் எவரும் இல்லை. அவனுக்கு சமமானவரும் எவரும் இல்லை. அவனுடைய தன்மையைப் பெற்றவரும் எவருமில்லை. அல்லாஹ்வை அவனது படைப்பினங்களைக் கொண்டு கணித்துவிடக் கூடாது. கணித்துவிடவும் முடியாது. அல்லாஹ் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மிக அறிந்தவன். அவன்தான் முற்றிலும் உண்மையை உரைப்பவன். அவனது படைப்பினங்கள் அனைத்தையும் விட அவன்தான் மிக அழகிய முறையில் பேசுபவன். ஆகவே அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் அனைத்தும் சரியானைவையும், உண்மையானவையுமாகும். அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் தன்மைகளுடன்தான் நாம் அவனை ஈமான் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அவனது தூதர்கள் அனைவரையும் உண்மையாளர்கள் என்றும் அல்லாஹ்வால் மெய்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் நம்பிக்கைக் கொள்ளவேண்டும். ஆகவே இறைத்தூதர்கள் அல்லாஹ்வைப் பற்றி கூறியுள்ள அழகிய தன்மைகள் அனைத்தும் அவனுக்கு உரியனவே என ஈமான் கொள்ள வேண்டும். அல்லாஹ்வைப் பற்றி உறுதியான ஆதாரமும், தெளிவான அறிவுமின்றி பேசுபவர்களின் வழிமுறையை நாம் பின்பற்றக் கூடாது. இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக. இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.

இவ்வசனங்களிலிருந்து நாம் விளங்க வேண்டியவை என்னவெனில்:

1. இறைத்தூதர்களுக்கு முரண்பட்டு அல்லாஹுவை பற்றி வர்ணிப்பவர்களின் வர்ணணைகளை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

2. இறைத்தூதர்கள் அல்லாஹுவை பற்றி கூறுவது அனைத்தும் எல்லாக் குறைகளை விட்டும் தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்டது. எனவேதான் அவர்களுக்கு அவனது அருளும் பாதுகாப்பும் உண்டு என வாக்களிக்கின்றான்.

3. அல்லாஹ் அவனுக்கு வைத்துக் கொண்ட பெயர்களிலும், அவன் வர்ணிக்கும் அவனது அழகிய பண்புகளிலும் அவன் கூறும் முறை என்னவெனில், அவன் தனக்கு தகுதியற்றதை தன்னிடம் இல்லையென்றும், தனக்கு தகுதியானதை தனக்கு இருக்கின்றது என்றும் கூறுகின்றான்.
எனவே, நபிவழியையும் நபித்தோழர்களையும் பின்பற்றும் நன்மக்கள் எந்நிலையிலும் அல்லாஹ்வின் தூதர்கள் கற்றுக் கொடுத்த இறைக் கொள்கையிலிருந்தும், ஈமானிய வழியிலிருந்தும் திரும்பிடக் கூடாது. நிச்சயமாக இதுவே மிக நேரான வழியாகும். இது அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள் .இறைத்தூதர்கள், "ஸித்தீக்' என்ற உண்மையாளர்கள், "ஷஹீத்' என்ற இறை பாதையில் உயிர்நீத்த தியாகிகள், "ஸôலிஹ்' என்ற நல்லோர்கள் ஆகியோரின் வழியாகும்.

அல்லாஹ் தன்னைப்பற்றி வர்ணித்துள்ள வசனங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த, திருக்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானது என்று கூறப்பட்ட சூரத்துல் இக்லாஸ் இக்கருத்தைத்தான் உறுதிப்படுத்துகிறது.

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُلَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ  وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவருடைய) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.அன்றியும், அவனுக்கு நிகராகவும் ஒன்றுமில்லை. (ஸூரா அல்இக்லாஸ் 112:1-4)

மேற்கூறப்பட்ட திருவனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள  வேண்டியவைகள்:

1) அல்லாஹ் என்ற வார்த்தை அகிலத்தைப் படைத்து பரிபாலித்து இரட்சித்து வரும் ஏக இறைவனுக்குரிய பெயராகும். இது "இலாஹ்' என்ற பதத்திலிருந்து வந்ததாகும். இதன் பொருள் "உண்மையில் வணக்கத்திற்கு தகுதியானவன்' என்பதாகும்.

2) அல்லாஹ் ஏகனே. அவனது உள்ளமை, அவனது பெயர்கள், அவனது தன்மைகள், அவனது செயல்கள் அனைத்திலும் அவனுக்கு இரண்டாமவர் இல்லை, அவனுக்கு நிகரானவர் இல்லை, அவனுக்கு ஒப்பானவர் இல்லை.

3) அஸ்ஸமது (தேவையற்றவன்) என்ற வார்த்தையின் பொருளாவது "தனது ஆட்சி, அறிவு, கண்ணியம், சிறப்பு அனைத்திலும் அவன் பூரணமானவன். அவன் யாருடைய தேவையுமற்றவன், அவனைத் தவிர யாவரும் அவன்பால் தேவையுடையவர்களே.

4) அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அதாவது அவன் யாருடைய தகப்பனுமல்ல. அவன் எவருக்கும் பிறந்தவனுமல்ல. அதாவது அவன் எவரின் பிள்ளையுமல்ல. அவன் முற்றிலும் படைப்பினங்களுக்கு அப்பாற்பட்டவன். அவனே முந்தியவனும் முதலாமவனுமாவான். படைப்பினங்களை விட்டும் படைப்பினங்களின் தன்மையை விட்டும் முற்றிலும் தூய்மையானவன்.

5) ஆகவே, அவனுக்கு நிகராக எவருமில்லை. அவனைத் தவிர அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே. அந்த படைப்பினங்களில் எதுவும் அவனுக்கு சமமாகவோ நிகராகவோ ஒப்பானதாகவோ இல்லவே இல்லை. அல்லாஹ்தான் பூரணமானவன்.

இவ்வாறே திருக்குர்ஆனின் மிக மகத்தான வசனம் என்று வர்ணிக்கப்பட்ட "ஆயத்துல் குர்ஸி' என்ற பின்வரும் வசனமும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَىُّ ٱلۡقَيُّومُ‌ۚ لَا تَأۡخُذُهُ ۥ سِنَةٌ۬ وَلَا نَوۡمٌ۬‌ۚ لَّهُ ۥ مَا فِى ٱلسَّمَـٰوَٲتِ وَمَا فِى ٱلۡأَرۡضِ‌ۗ مَن ذَا ٱلَّذِى يَشۡفَعُ عِندَهُ ۥۤ إِلَّا بِإِذۡنِهِۦ‌ۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ‌ۖ وَلَا يُحِيطُونَ بِشَىۡءٍ۬ مِّنۡ عِلۡمِهِۦۤ إِلَّا بِمَا شَآءَ‌ۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَـٰوَٲتِ وَٱلۡأَرۡضَ‌ۖ وَلَا يَـُٔودُهُ ۥ حِفۡظُهُمَا‌ۚ وَهُوَ ٱلۡعَلِىُّ ٱلۡعَظِيمُ

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்காது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

மேற்கூறப்பட்ட திருவசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவை:

1) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரியவன் இல்லை. எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது. அல்லாஹ்விற்கு செய்யும் வணக்க வழிபாடுகளை அவனைத் தவிர வேறு யாருக்கும் செய்யக்கூடாது.

2) அவனே என்றென்றும் உயிருள்ளவன்; நிலையானவன். அவனைத் தவிர  இவ்வுலகத்தில் உள்ள அனைத்து வஸ்துக்களும் அழியக்கூடியவையே ஆகும்.  அவனுக்கு மரணமுமில்லை, சிறு தூக்கமுமில்லை. அவன் எந்நேரமும் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்தவனாகவே இருக்கின்றான். வானங்களில் உள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே சொந்தமானவை. ஏனெனில் அவனே அவைகளை படைத்தான். அவைகளை படைக்கும் விஷயத்தில் அவனுக்கு வேறு எந்த உதவியாளரும் இல்லை. அவ்வாறே படைப்பினங்களை நிர்வகிப்பதிலும் அவனே முழு அதிகாரம் பெற்றவன்.

3) அவன் அனுமதி கொடுக்காமல் எவரும் எவருக்கும் சிபாரிசு செய்ய முடியாது. படைப்பினங்கள் எவ்வளவுதான் அந்தஸ்தில் உயர்ந்தாலும் அவைகள் அல்லாஹ்வின் அடிமைகளே. அல்லாஹ்வே அனைத்தையும் அடக்கி ஆளும் அகிலங்களின் அனைத்தின் அரசனாக இருக்கின்றான். அவனிடம் எவரும் துணிவு கொள்ளவோ அதிகாரம் செலுத்தவோ அவனை நிர்பந்திக்கவோ முடியாது. எவரும் அல்லாஹ்விடத்தில் தனக்குரிய அந்தஸ்தைக் கொண்டு தான் விரும்பியவர்களுக்கெல்லாம் அவனிடம் பரிந்துரை செய்யலாம் என்று துணிந்துவிட முடியாது. மாறாக, பரிந்துரை செய்வதற்கும், யாருக்காக பரிந்துரை செய்யலாம் என்றும் அல்லாஹ் அனுமதி வளங்க வேண்டும். அப்போதுதான் பரிந்துரையையும் அவன் ஏற்றுக் கொள்வான்.

4) அல்லாஹ்வின் அறிவே முழுமையானது.  அல்லாஹ் எதையும் அவன் நாடிய அளவே படைப்பினங்கள் அறிந்து கொள்ள முடியும். படைப்பினங்களின் அறிவு முழுமையானதல்ல!.

5) அவன் தன் படைப்பினங்களை விட்டும் உயர்ந்தவன், மகத்தானவன். ஏழு வானங்களுக்கு மேல் அவன் அமைத்திருக்கும் "குர்ஸி" ஏழு வானங்களை விடவும் ஏழு பூமிகளை விடவும் மிக விசாலமானது என்று அவன் கூறியதிலிருந்து அவனது மகத்தான ஆற்றலையும் மாபெரும் வல்லமையையும் விளங்கிக் கொள்ளலாம்.

6) வானங்கள் பூமிகளை படைத்தது அவனுக்கு இலகுவானதே. அதில் எவ்வித சிரமமோ அவனுக்கு இல்லை. அவ்வாறே அதில் கோடானக் கோடி படைப்பினங்களை படைத்ததும் அவனுக்கு சிரமமானதல்ல. வானங்களையும் பூமிகளையும் அதிலுள்ள அனைத்து படைப்பினங்களையும் பாதுகாப்பதும் இரட்சிப்பதும் நிர்வகிப்பதும் அவனுக்கு மிக இலகுவானதே. அவன் அத்தகைய மாபெரும் ஆற்றலும் சக்தியும் படைத்தவன்.

"குர்ஸி என்பது அல்லாஹ்வுடைய பாதத்தின் ஸ்தலமாகும்'' என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. (முஸ்தத்ரகுல் ஹாகிம், முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரகுத்னி, முஃஜமுத் தப்ரானி, ஸஹீஹ் இப்னு குஜைமா.)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் இரவில் இவ்வசனத்தை ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலர் இருப்பார். காலை வரை ஷைத்தான் அவரை அணுகமாட்டான். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பின்பும் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அவர் சுவனம் நுழைய மரணத்தைத் தவிர வேறெந்த தடையும் இல்லை. (ஸூனனுன் நஸôயீ, அஸ்ஸில்ஸலத்துல் ஸஸீஹா)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி வர்ணித்து இருக்கும் அனைத்து தன்மைகளையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் திருக்குர்ஆனின் விளக்கவுரை களாகும். ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிஞர்களால் ஏற்று கொள்ளப்பட்ட உறுதிமிக்க, சரியான (ஸஹீஹ்) ஹதீஸ்களில் வந்துள்ள அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள், பண்புகள் அனைத்தும் அவனுக்கு உண்டு என நாம் ஈமான் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் உள்ளன. பார்க்க 4:13, 4:80, 4:59, 33:36.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்



அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்
ஷேக் முகம்மது ஸாலிஹ் இபின் அல்-உதைமீன்


இந்தக்கடமையே கடமையே மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம் நிர்ணயம் செய்து வருபவன்.

இன்னபொருள் என்று கூறுவதற்கு இயலாத நிலையிலிருந்து இல்லாமையிலிருந்து படைத்தவன் அவனே. தாயின் வயிற்றில் மூன்று இருள் உரைகளுக்குள்ளே இருந்தபோது அல்லாஹ்வே தனது அருளினால் வளர்த்துப் பரிபாலித்தான். அந்த நிலையில் அவனைத்தவிர எந்த சக்தியும் உனக்கு உதவி செய்ய இயலாத நிலையிலிக்க, உணவளித்து உனது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தேவைப்படும் அனைத்தையும் அருளினான்.

وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لاَ تَعْلَمُونَ شَيْئا ً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأَبْصَارَ وَالأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ 

ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 16 : 78)

கண்சிமிட்டும் நேரம் அல்லாஹ் தன் அருளை மறுத்துவிட்டால் மனிதன் அழிந்துவிடுவான்; ஒரு வினாடி அவன் தனது உதவியைத் தடை செய்துவிட்டால் மனிதனால் வாழ்முடியாது. அல்லாஹ்வின் அருளும் அவனது உதவியும் மகத்தானது.

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلاَةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لاَ نَسْأَلُكَ رِزْقا ً نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى

 (நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான். (அல்குர்ஆன் 20 : 132)

 உன்னிடமிருந்து அல்லாஹ் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான். அதனால் விளையும் நற்பலன்களும் உன்னையே வந்தடைகின்றன.
அவன் உன்னிடம் தன்னை மட்டுமே வணங்கவேண்டும்; எதையும் இணையாக்கக் கூடாது என்பதையே விரும்புகிறான்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإِنسَ إِلاَّ لِيَعْبُدُونِ مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْق ٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ 

ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை. அன்றி எனக்கு ஆகாரம் கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. (நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும் அசைக்கமுடியாத பலசாலியுமாவான். (அல்குர்ஆன் 51 : 56, 57, 58)

 அல்லாஹ்தான் நமது ரப்பு, நாம் அவனுடைய அடிமைகள். அவன் யாவற்றையும் வளர்த்து காப்பவனாக இருக்கின்றான். அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அடியார்களாக நாம் இருக்கின்றோம்.

 அல்லாஹ்வின் அருட்கொடைகள் நம்மீது இடைவிடாது பொழிந்துகொண்டிருக்க அவனுக்கு நன்றி செலுத்தாமல் அவனை நிராகரித்தால் அவனுக்கு மாறு செய்தால் அது எவ்வளவு பெரிய வெட்கங்கெட்ட செயலாகும்.

 மனிதர்கள் எவரேனும் உபகாரம் செய்திருந்தால் அவருக்கு மாறுசெய்யவும் அவரது விருப்பத்துக்கு முரணாகவும் நடப்பதற்கு நீ நிச்சயமாக வெட்கப்படுகிறோம். அவ்வாறிருக்க நாம் அடைந்திருக்கும் அனைத்து அருட்கொடைகளும் அவனது உபகாரம்தான். தீங்குகளிலிருந்து காப்பாற்றப்படுவது அது அல்லாஹ்வின் அருளினால்தான. அப்படி இருக்க அல்லாஹ்விற்கு மாறு செய்வது எப்படி நியாயமாகும்.

 அல்லாஹ் கூறுகிறான்.

 وَمَا بِكُمْ مِنْ نِعْمَة ٍ فَمِنَ اللَّهِ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ

 உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். உங்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவனிடமே முறையிடுகிறீர்கள். (அல்குர்ஆன் 16 : 53)

 وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِه ِِ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَج ٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيداً عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلاَةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلاَكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ

(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்கவேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தெரிந்தேடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் தந்தையாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப்பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடைய இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையைக் கடைபிடித்தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய இரட்சகன். இரட்சகர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன். உதவி செய்கிறவர்களிலும் அவனே மிக்க நல்லவன். (அல்குர்ஆன் 22 : 78)

அடிப்படைக் கடமைகள்

 1.அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும், நற்செயல்கள் செய்வதும் அல்லாஹ்வை நேசிப்பதும், அவனை கணியப்படுத்துவதன் மூலம் மனம் தூய்மையடைகிறது. அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை உறுதியடைகிறது.

 2.ஒவ்வொரு நாளும் இரவு பகலில் ஐந்துவேளை தொழுகையை நிலைநாட்டவேண்டும். அதன் காரணமாக அல்லாஹ் தவறுகளை மன்னித்து அந்தஸ்தை உயர்த்துகிறான். இதயத்தையும் சூழ்நிலைகளையும் சீர்படுத்துகிறான். இந்த நல் அமலை அடியான் இயன்ற வகையில் நிறைவேற்றியே ஆகவேண்டும்.

فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا خَيْرا ً لِأنْفُسِكُمْ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِه ِ فَأُوْلَائِكَ هُمُ الْمُفْلِحُون

 உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுக்குச் செவிசாய்த்து வழிப்பட்டு நடந்து, தானமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையோர் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள் (அல்குர்ஆன் 64 : 16)

 நபி (ஸல்) அவர்கள் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) நோய் வாய்ப்பட்டிருந்தபோது கூறினார்கள் : நின்ற நிலையில் நீர் தொழுது கொள்வீராக! அது உமக்கு இயலவில்லையென்றால் உட்கார்ந்த நிலையில், அதுவும் உமக்கு இயலாவிட்டால் படுத்த நிலையில் தொழுதுகொள்வீராக! நூல் : புகாரி.

 3.ஜகாத்
அது உனது செல்வத்தின் சிறு பகுதியாகும். அதை முஸ்லிம்களில் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் கடனில் மூழ்கியவருக்கும் வழிப்போக்கர்களுக்கும் ஜகாத்துக்குத் தகுதிபெற்ற இவர்களல்லாதவர்ககளுக்கும் வழங்கவேண்டும்.

 4.வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றல்
எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும்… (அல்குர்ஆன் 2 : 185)

 நிரந்தரமாக பலவீனமடைந்து நோன்பு நோற்கச் சக்தியற்றவர் ஒவ்வொரு நோன்புக்குப் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்.

 5.வசதி பெற்றவர் வாழ்வில் ஒருமுறை ஹஜ் செய்வது.
இந்த ஐந்தும் அல்லாஹ்வுக்கு நிறைவேற்றவேண்டிய அடிப்படைக் கடமைகளாகும். இவையல்லாத அனைத்தும் சூழ்நிலைகளுக்கேற்ப விதியாகும் கடமைகளாகும். உதாரணம் : அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது, அல்லது காரணங்களால் ஏற்படும் கடமையாகும். உதாரணமாக அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்வது.

 இக்கடமைகளை செய்வது மிக எளிதானது. இக்கடமைகளை நிறைவேற்றினால் இம்மை மறுமையில் ஈடேற்றமடைந்து நரகிலிருந்து விடுதலைபெற்று சுவனத்தினுள் நுழைவது நிச்சயம்.

كُلُّ نَفْس ٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ

 ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகிக்க வேண்டியதாகவே இருக்கின்றது. (எனினும்) உங்கள் (செயல்களுக்கான) கூலிகளை நீங்கள் பூரணமாக அடைவதெல்லாம் மறுமைநாளில்தான். ஆகவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் புகுத்தப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3 : 185)

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்

சனி, 27 அக்டோபர், 2012



குர்ஆனும் சுன்னாவும்


அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அல்குர்ஆன் 33:21

குர்ஆனையும் சுன்னாவையும் மறுத்து வாழ்வது என்பது நம்முடைய நம்பிக்கையில் – ஈமானில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அது மிகப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடியதாக இருக்கின்றது. குர்ஆனிலும் மற்றும் சுன்னாவிலும் தகுந்த பரீட்சயம் அல்லது அறிவு இல்லாததன் காரணமாக இன்றைக்கு முஸ்லிம்கள் தாங்கள் கண்களில் காண்பதெல்லாம் இஸ்லாம் என்று ஷேக்மார்கள் பின்னாலும் முரீதுகள் பின்னாலும் அவ்லியாக்கள் பின்னாலும் உலமாக்கள் பின்னாலும் ஓடிக்கொண்டு இஸ்லாம் அல்லாதவைகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வருவதைப் பார்த்து வருகின்றோம். மேலும் இவர்களைப் பின்பற்றுவதும் அவர்களிடம் தங்களது கோரிக்கைகளை வைப்பதும் அவர்களது கப்றுகளுக்கு ஜியாரத் செய்வதும் நன்மையான காரியங்கள் என்றும், அவை நன்மைகளைகளையும் இறைப் பொறுத்தத்தையும் பெற்றுத் தரும் என்றும் நம்பிக்கொண்டு அவர்களைப் புனிதமானவர்களாகக் கருதி தங்களது பிழை பொறுத்தருளப் பிரார்த்திப்பதும் இன்று நடைமுறையில் முஸ்லிம்களிடம் காணப்பட்டுக் கொண்டிருக்கும் வழிகேடுகளாகும்.

இன்னும் முக்கியமான நாட்களாக சில நாட்களைத் தேர்வு செய்து கொண்டு அந்த நாட்களில் சூரா ஃபாத்திஹாவை ஓதுவது குர்ஆனைக் குழுவாக அமர்ந்து ஓதி அதனை கத்தம் செய்வது மேள தாளத்தோடு சந்தனக் கூடு எடுப்பது அவுலியாக்களின் பிறந்த மற்றும் இறந்த தின வைபவம் கொண்டாடுவது இவைகளெல்லாம் இஸ்லாத்தில் உள்ளவை என்றும் இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இறைவனுடைய நெருக்கத்தையும் பாவ மன்னிப்பையும் நன்மைகளையும் பெற்றுத்தரக் கூடியவைகள் என்று நம் முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றார்கள். இவைகளெல்லாம் குர்ஆனைப் பற்றியும் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளான சுன்னாவைப் பற்றியும் அறியாதவர்களினால் பின்பற்றப்படுகின்ற வழிகேடுகளாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இறைவனுடைய குர்ஆனையும் இறைத்துாதர் (ஸல்) அவர்களின் போதனைகளைப் பின்பற்றுவது ஒன்றே ஒரு மனிதனை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்.

இன்றைக்கு வழிகேடுகள் எல்லாம் காட்டுத் தீ போல மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதில் ஒரு உண்மையான முஸ்லிம் தன்னை இழந்து விடாமல் பாதுகாக்க விரும்பினால் அவன் குர்ஆனைப் பற்றியும் இறைத்துாதர் (ஸல்) அவர்களது போதனைகளைப் பற்றியும் மிகத் தெளிவாக அறிந்திருப்பதோடு தன்னுடைய வாழ்க்கையில் முழமையாக அவற்றை பின்பற்றவும் வேண்டும். மேலும் நாம் அறிந்து கொண்ட இந்த சத்தியத்தை பிறருக்கு எடுத்து வைப்பதிலும் நாம் கண்ணுக் கருத்துமாக இடை விடாது பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

இன்று துரதிருஷ்டவசமாக சிலர் சுன்னாவையும் அதனைப் பின்பற்றுவதன் மதிப்பையும் மறுக்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் தாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் நடைமுறைகள் உண்மையானவை தானா என்று அறிந்து கொள்ள முற்படாமலேயே இருக்கின்றார்கள். மேலும் சிலர் சுன்னாவைப் பற்றிய சந்தேகத்திலேயே தங்களது வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் இப்பொழுது ஒரு கடைத்தெருவுக்குப் போகின்றோம் என்றால் நமக்குத் தேவையான பொருள்களில் எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுத்து வாங்கின்றோமில்லையா? அதைப் போல சுன்னாவிலும் எது ஸஹீஹானது (ஆதாரமுள்ளது) எது ழயீஃபானது (புனைந்துரைக்கப்பட்டது பொய்யானது) என்பதை இனங் கண்டு பின்பற்றுவதும் அவசியம் தானே! அதே போல புத்தகக் கடைக்குச் சென்றால் நமக்குப் பிடித்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் புத்தகத்தின் மீது நம்முடைய முகங்களைத் தொலைத்து விடும் அளவுக்கு அதில் மூழ்கி விடுகின்றோம் அதைப் போலவே நமக்குப் பிடிக்காத புத்தகத்தை தொட்டுக் கூடப் பார்ப்பதில்லை. இதே போல மனநிலையை சுன்னாவிலும் செலுத்துவது எவ்வாறு? எனக்குச் சுன்னாவைப் பின்பற்றுவது பிடிக்கவில்லை அதனால் நான் அதனை அறிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை என ஒதுங்கி விடலாமா?!

ஓருவர் இறைத்துாதர்கள் செய்து காட்டிய அற்புதங்களை மறுக்கின்றார் ஒருவர் ஐந்து நேரத் தொழுகைகளுக்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று நேரத் தொழுகைகள் போதுமென்கின்றார் நோன்பு நோற்க வேண்டும், அதற்கு எதற்கு 30 நாட்கள் ஒன்றிரண்டு நாட்கள் இருந்தால் போதும் தானே!  என இன்னும் சிலர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கீழ்படிவது அவர்களது வாழ்நாளுடன் முடிந்து விட்டது இப்பொழுது அதற்கு அவசியமில்லை என்று சுன்னாவை மறுப்பதில் ஒவ்வொரு அளவுகோள்களை வைத்துக் கொண்டு அதனை மறுத்துக் கொண்டு இருப்பதை நம் நடைமுறையில் காண முடிகின்றது. இவர்கள் தங்களது அலுவல்கள் மற்றும் நேரங்களை இந்த சுன்னாவை எதிர்ப்பதிலும் அதனைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதிலேயே கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தெளிவான ஹதீஸ்களுடன் பொய்யான ஹதீஸ்களும் கலந்து விட்டிருக்கின்ற காரணத்தால் அதனை இனம் பிரிக்கும் அளவுக்கு அதற்கான கல்வி ஞானம் இல்லாத காரணத்தால் ஹதீஸ்களை என்னால் பின்பற்ற இயலாது அதனைப் பின்பற்றுவதிலிருந்து நான் விலகி இருக்கவே விரும்புகின்றேன் என்று சிலர் கூறிக் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்களுடைய சுன்னாவிற்குக் கட்டுப்படாமல் அவற்றைப் புறக்கணித்துக் கொண்டு இருப்பதை நாம் காண முடிகின்றது. இந்த இவர்களது பிடிவாதத்தை விளக்க வேண்டுமென்றால் : ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவனுக்கு மருந்துகள் தேவைப்படுகின்றது. இன்று உண்மையில் மருந்துக் கடைகளில் உண்மையான மற்றும் போலி மருந்துகளும் விற்கப்படுகின்றதெனில் போலியைத் தவிர்த்து விட்டு நல்ல மருந்துகளை வாங்குவதற்கு நாம் எவ்வாறு அதில் பரிச்சயப்பட்ட நபரைத் தேடி அவரது துணையை நாம் பெற்றுக் கொள்வதில் எதுவும் நம்மைத் தடுத்து விடாது என்பது நடைமுறை உண்மையாகும். தனக்குாிய அந்த அசலான மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருவன் விரும்புவானா அல்லது அசலும் போலியும் கலந்திருக்கின்றது. எனவே நான் எந்த மருந்தையும் வாங்கப் போவதில்லை யாருடைய துணையையும் தேடப் போவதில்லை என்று கூறி சாவை எதிர்கொள்வானா?

இன்றைக்கு கடவுளே இல்லை என்ற கொள்கையும் நன்மைகளும் தீமைகளும் நம்மைச் சுற்றி இருந்து கொண்டிருக்கும் பொழுது நம்முடைய இந்த நிலைப்பாடு இத்தகைய தீமைகளில் நாம் ஈடுபட்டு விடுவதிலிருந்து நம்மைத் தடுத்து விடாது. எனவே ஆதாரமான ஹதீஸ்களும் ஆதாரமற்ற ஹதீஸ்களும் கலந்து இருக்கின்றது என்ற காரணத்தைக் கூறி நான் சுன்னாவைப் பின்பற்ற மாட்டேன் என்று கூறுவது சுன்னாவை அவமிதிக்கும் செயலாகும். இந்த உலக வாழ்க்கையில் நமக்கு எது நல்லது எது கெட்டது என்று நாம் தேர்ந்தெடுத்து அனுபவிக்கின்றோமோ அது போல சுன்னாவையும் நாம் எது ஆதாரமுள்ளது எது ஆதராமற்றது என்று அறிந்து சுன்னாவைப் பின்பற்றுவதும் அந்த சுன்னாவிற்குக் கட்டுப்பட்டு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும்தான் ஒரு முஸ்லிமின் மீது உள்ள அடிப்படைக் கடமையாகும். சுன்னாவைத் தேர்ந்தெடுக்கின்ற விசயத்தில் எது ஆதாரமற்றது என்று தெரிய வருகின்றதோ அதனை அறிந்த மாத்திரத்திலேயே உதறித் தள்ளிவிடுவதும் ஒரு உண்மையான முஸ்லிமின் மீதுள்ள கடமையுமாகும்.

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். அல்குர்ஆன் 16:44

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 5:92

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் 6:153

நன்றி: www.ரீட்இஸ்லாம்.காம் 


உலக ஆதாயம் தேடுதல்
புலவர் செ.ஜஃபர் அலீ 


நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்: உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்( அல்குர்ஆன் 2:42)

எல்லாம் வல்ல அல்லாஹ், தெள்ளத் தெளிவாகத் இவ்வாறு எச்சரிக்கின்றான்; இந்த எச்சரிக்கை மார்க்கமறியாத சாமான்யர்களுக்கு அன்று மார்க்கத்தை அறிந்து கொண்டவர்களுக்கு! குறிப்பாக ஆலிம் என்றும் மெªலவி என்றும் கூறித் திரிபவர்களுக்கு இந்த எச்சரிக்கை நூற்றுக்கு நூறு பொருந்தும்.

நான் எத்தனையோ மெªலவி மார்களைச் சந்தித்து மார்க்க விஷயங்களைப் பற்றி பேசியுள்ளேன். அவர்களில் சிலர் மெªனம் சாதித்து விட்டு, மார்க்கம் அறியாதவர்களிடம் சென்று நம்மைப் பற்றிப் புறம் பேசுவர்.

அதே நேரத்தில் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்; என்ன செய்வது? எங்கள் பிளைப்புக்காக சில பித்அத்துகளைச் செய்யவேண்டி உள்ளது; மேலும் தவிர்க்கமுடியாத நேரத்தில் ஷிர்க்கையும் செய்துவிட்டு, அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பும் செய்து கொள்கிறோம் என்று கூறுகின்றனர்.

உண்மை எது? பொய் எது? என்று தெரியாமல் இல்லை. அறிந்து கொண்டே மெய்யுடன் பொய்யைக் கலந்தும் உண்மையை மறைக்கவும் செய்கின்றனர்.

இவர்கள் தம் வயிற்றுக் பிழைப்புக்காக, பெரியதொரு துரோகத்தை மார்க்கத்தின் பெயரால் மக்களுக்குச் செய்கின்றனர். தம் கற்பனையான விளக்கத்தை, குர்ஆன் வசனங்களும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களுக்கும் அளிக்கின்றனர். தம்மனம் போன போக்கில் சில நூல்களை எழுதுகின்றனர். குப்பைத் தொட்டிகளுக்குப் போக வேண்டியவை, மார்க்கத்தின் பெயரால், அல்லாஹ்வின் இல்லங்களிலே தஞ்சம் புகுகின்றன. மார்க்கம் அறியாத அப்பாவிகள் அவற்றை இஸ்லாமிய நூல்கள் எனச் சொல்கின்றனர். அவற்றை உண்மை என நம்புகின்றனர். இசை கச்சேரிகளுக்கு இஸ்லாமிய இன்னிசை விருந்து என்று பெயர் சூட்டுபவர்கள்தானே இவர்கள்?

அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கைகளாலேயே நூலை எழுதி வைத்துக்  கொண்டு, பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்கு கேடுதான்! அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்கு கேடுதான்! (அல்குர்ஆன்2:79)

இந்த அற்பகிரயர்கள், தம் நூல்களைப் பரப்புவதன் மூலம், முழுமையான அல்லாஹ்வின் வேதத்தையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் முறைகள், அங்கீகாரங்கள், வாய்மொழிகள் இவற்றையும் மக்களுக்கு மறைத்துவிட நாடுகின்றனர்.

எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம்(சொந்த) மக்களை அறிவதை போல (இந்த உண்மையை) அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர் உறுதியாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.( அல்குர்ஆன்2:146)

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும் நேர்வழியையும், அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ உறுதியாக அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.  (அல்குர்ஆன்2:159)

மாயையிலும், பொய்மையிலும், கவர்ச்சியிலும் மனிதன் தன் இதயத்தைப் பறி கொடுக்கிறான். பறிகொடுத்து பறிகொடுத்து பலவீனமான இதயத்தையும் மனிதன் பெறுகின்றான். அவ்வாறு பலவீனமானவை தம் சொந்த இலாபங்களுக்காக மார்க்க வேடதாரி வியாபாரிகள் பயன் படுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனிடமே உங்கள் தேவைகளைக் கேட்டுபெறுங்கள் என்று அறிவுரை பகராமல் உங்களை பேய் பிடித்திருக்கின்றது; பிசாசு துரத்துகின்றது; ஷைத்தான் உங்களை ஆட்டி படைக்கின்றான்; எனவே ரூபாய் நூற்று ஒன்று தாருங்கள்; நான் நல்ல கனமான தாயத்து ஒன்று செய்து தருகின்றேன்; எந்த கெட்ட ஷைத்தானும் உங்களை நெருங்காது என்று கூறி அவர்களிடமிருந்து பணத்தைபறிக்க வழிப்பறிக் கொள்ளைக் காரர்களை விடக் கேவலமாக நடந்து கொள்கின்றனர். எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக்கொள்கிறார்களோ, உறுதியாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தவிர வேறுதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்த மாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.( அல்குர்ஆன் 2:174)

அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலுருந்து (மக்களைத்) தடுக்கின்றார்கள். உறுதியாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை. (அல்குர்ஆன் 9:9)

எனவே, இறையடிமைச் சகோதரர்களே! இத்தகைய வேடதாரிகளை மக்களூக்கு இனங் காட்டுவதுடன், நாமும் நம்முடைய ஈமானைக் காப்பாற்றி கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒருவனையே வணங்கி, அவனிடமே நம் தேவைகளுக்காகக் கையேந்துவோம்! எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் அவனையே வழிபட்டு, அவனிடமே உதவி தேடக்கூடியவர்களாக ஆக்கி அருள்வானாக! (ஆமீன்)

நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்: உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்( அல்குர்ஆன் 2:42)

எல்லாம் வல்ல அல்லாஹ், தெள்ளத் தெளிவாகத் இவ்வாறு எச்சரிக்கின்றான்; இந்த எச்சரிக்கை மார்க்கமறியாத சாமான்யர்களுக்கு அன்று மார்க்கத்தை அறிந்து கொண்டவர்களுக்கு! குறிப்பாக ஆலிம் என்றும் மெªலவி என்றும் கூறித் திரிபவர்களுக்கு இந்த எச்சரிக்கை நூற்றுக்கு நூறு பொருந்தும்.

நான் எத்தனையோ மெªலவி மார்களைச் சந்தித்து மார்க்க விஷயங்களைப் பற்றி பேசியுள்ளேன். அவர்களில் சிலர் மெªனம் சாதித்து விட்டு, மார்க்கம் அறியாதவர்களிடம் சென்று நம்மைப் பற்றிப் புறம் பேசுவர்.

அதே நேரத்தில் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்; என்ன செய்வது? எங்கள் பிளைப்புக்காக சில பித்அத்துகளைச் செய்யவேண்டி உள்ளது; மேலும் தவிர்க்கமுடியாத நேரத்தில் ஷிர்க்கையும் செய்துவிட்டு, அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பும் செய்து கொள்கிறோம் என்று கூறுகின்றனர்.

உண்மை எது? பொய் எது? என்று தெரியாமல் இல்லை. அறிந்து கொண்டே மெய்யுடன் பொய்யைக் கலந்தும் உண்மையை மறைக்கவும் செய்கின்றனர்.

இவர்கள் தம் வயிற்றுக் பிழைப்புக்காக, பெரியதொரு துரோகத்தை மார்க்கத்தின் பெயரால் மக்களுக்குச் செய்கின்றனர். தம் கற்பனையான விளக்கத்தை, குர்ஆன் வசனங்களும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களுக்கும் அளிக்கின்றனர். தம்மனம் போன போக்கில் சில நூல்களை எழுதுகின்றனர். குப்பைத் தொட்டிகளுக்குப் போக வேண்டியவை, மார்க்கத்தின் பெயரால், அல்லாஹ்வின் இல்லங்களிலே தஞ்சம் புகுகின்றன. மார்க்கம் அறியாத அப்பாவிகள் அவற்றை இஸ்லாமிய நூல்கள் எனச் சொல்கின்றனர். அவற்றை உண்மை என நம்புகின்றனர். இசை கச்சேரிகளுக்கு இஸ்லாமிய இன்னிசை விருந்து என்று பெயர் சூட்டுபவர்கள்தானே இவர்கள்?

அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கைகளாலேயே நூலை எழுதி வைத்துக்  கொண்டு, பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்கு கேடுதான்! அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்கு கேடுதான்! (அல்குர்ஆன்2:79)

இந்த அற்பகிரயர்கள், தம் நூல்களைப் பரப்புவதன் மூலம், முழுமையான அல்லாஹ்வின் வேதத்தையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் முறைகள், அங்கீகாரங்கள், வாய்மொழிகள் இவற்றையும் மக்களுக்கு மறைத்துவிட நாடுகின்றனர்.

எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம்(சொந்த) மக்களை அறிவதை போல (இந்த உண்மையை) அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர் உறுதியாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.( அல்குர்ஆன்2:146)

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும் நேர்வழியையும், அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ உறுதியாக அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.  (அல்குர்ஆன்2:159)

மாயையிலும், பொய்மையிலும், கவர்ச்சியிலும் மனிதன் தன் இதயத்தைப் பறி கொடுக்கிறான். பறிகொடுத்து பறிகொடுத்து பலவீனமான இதயத்தையும் மனிதன் பெறுகின்றான். அவ்வாறு பலவீனமானவை தம் சொந்த இலாபங்களுக்காக மார்க்க வேடதாரி வியாபாரிகள் பயன் படுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனிடமே உங்கள் தேவைகளைக் கேட்டுபெறுங்கள் என்று அறிவுரை பகராமல் உங்களை பேய் பிடித்திருக்கின்றது; பிசாசு துரத்துகின்றது; ஷைத்தான் உங்களை ஆட்டி படைக்கின்றான்; எனவே ரூபாய் நூற்று ஒன்று தாருங்கள்; நான் நல்ல கனமான தாயத்து ஒன்று செய்து தருகின்றேன்; எந்த கெட்ட ஷைத்தானும் உங்களை நெருங்காது என்று கூறி அவர்களிடமிருந்து பணத்தைபறிக்க வழிப்பறிக் கொள்ளைக் காரர்களை விடக் கேவலமாக நடந்து கொள்கின்றனர். எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக்கொள்கிறார்களோ, உறுதியாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தவிர வேறுதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்த மாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.( அல்குர்ஆன் 2:174)

அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலுருந்து (மக்களைத்) தடுக்கின்றார்கள். உறுதியாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை. (அல்குர்ஆன் 9:9)

எனவே, இறையடிமைச் சகோதரர்களே! இத்தகைய வேடதாரிகளை மக்களூக்கு இனங் காட்டுவதுடன், நாமும் நம்முடைய ஈமானைக் காப்பாற்றி கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒருவனையே வணங்கி, அவனிடமே நம் தேவைகளுக்காகக் கையேந்துவோம்! எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் அவனையே வழிபட்டு, அவனிடமே உதவி தேடக்கூடியவர்களாக ஆக்கி அருள்வானாக! (ஆமீன்)

நன்றி: www.ரீட்இஸ்லாம்.காம் 


அழிவுப் பாதையில் மனிதன்!


இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன.

அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் காரணமாக அவை ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படி பொருட்களின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொண்டு மனிதன் பெரிதும் முன்னேறி விட்டதாகப் பெருமையடிக்கிறான். ஆக மனிதன் வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து பெருமையடிக்கிறான்.

ஒரு காலத்தில் ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகம் போல் காட்சி அளித்தது. அன்று ஓர் ஊரில் உள்ளவர்களுக்கு, இதுபோல் பல ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியாதிருந்தது; அது ஒரு காலக்கட்டம். பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு ஊரிலிருப்பவர்களும் தங்கள் ஊரைப் போல் உலகில் வேறு பல ஊர்களும் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். ஆயினும் ஓர் ஊரில் இடம் பெறும் சம்பவங்கள் பக்கத்து ஊருக்குத் தெரியாதிருந்த நிலை; காலகட்டம்.

பிராணிகளில் பிரயாணம் செய்யும் அளவு முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், பக்கத்து ஊர்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உடனடியாகத் தெரிய முடியாமல் இருந்தாலும், காலம் தாழ்ந்து அறிந்து கொள்ளும் நிலைக்கு முன்னேறினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி இன்றை விஞ்ஞான யுகத்தில், ஒரு காலத்தில் ஒரு சிற்றூரே உலகமாக இருந்த நிலைமாறி இன்று உலகமே ஒரு சிற்றூரின் நிலைக்கு,ஏன்? ஒரு கையடக்கத்தில் இருப்பது போல் முன்னேறிவிட்டது.

ஆனால் இது மனிதனின் முன்னேற்றம் என்று கூறுவதுதான் அறிவீனமாகும். மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்கள் அனைத்திலும் பாடுபட்டான்; கடுமையாக உழைத்தான்; தனது மூளையைக் கசக்கினான். அதன் பலன் அவன் பாடுபட்ட அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான , ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைக் கண்டன. மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக மனிதன் நினைப்பது மடமையல்லவா?

இப்போது அன்றிருந்த ஒரு பொருளின் நிலையோடு இன்றிருக்கும் அதே பொருளின் முன்னேற்றத்தை- வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது போல், அன்றிருந்த மனிதனோடு இன்றைய மனிதனின் முன்னேற்றத்தை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றிருந்த மனிதன் படிப்பறிவற்றவனாக, எழுத்தறிவு அற்றவனாக ஏன்? இன்றைய மனிதன் கூறும் நாகரீகம் அற்றவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக இருந்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதனுக்குரிய மனிதப் பண்புகள் நிறைவாகவே அவனிடம் காணப்பட்டன. திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலைப் பெற்றிருந்தான். அதிகமான நினைவாற்றலைப் பெற்றிருந்தான். கூர்மையான பார்வையுடையவனாக இருந்தான். களைப்பில்லாமல் நீண்ட தூரம் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். நீண்ட வயதுடையவனாக இருந்தான். இன்று மனிதனைத் தாக்கும் பெருங்கொண்ட நோய்கள் அன்றிருந்ததாக வரலாறு இல்லை.

ஆம்! அன்று மனிதன் பிக்கல், பிடுங்கல் இல்லாத அமைதியான, ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தான். மனிதன் தன்னில் பாடுபடுவதை மறந்து தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் பாடுபடுவதை பெரும் சாதனையாகக் கொண்டு அவற்றில் முனைந்ததால் அந்தப் பொருள்கள் அதிசயத்தக்க அளவில் முன்னேறின.

மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான். அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான்.

இப்படி மனிதனின் கடும் உழைப்பின் காரணமாக மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சி மனிதனை பின்னடையச் செய்தனவே அல்லாமல், மனிதனை முன்னடையச் செய்யவில்லை. உதாரணமாக ஒரு தச்சன் காலையிலிருந்து மாலை வரை ஒரு மரத்தில் கடுமையாக உழைத்தால், அது அழகியதொரு மேசையாக உருவெடுத்து விடும். ஆனால் உழைத்த அந்த மனிதன் மாலையில் கடுமையான சோர்வுக்கு ஆளாகி விடுகிறான். இப்படி மனிதன் தனக்கு வெளியே எந்தப் பொருளில் பாடுபட்டாலும் அந்தப் பொருள் முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த உழைப்பைச் செலுத்திய மனிதன் அதனால் சோர்வடைகிறான், பின்னடைகிறான் என்பதிலும் ஐயமில்லை.

இப்படி மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் கடுமையாக உழைத்து அவற்றை முன்னேறச் செய்துள்ளான். அவை மூலம் மனிதன் இவ்வுலகில் சில வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஆயினும் அத்துடன் நில்லாது தன்னளவிலும் பாடுபட்டிருந்தால், அவனும் உண்மையிலேயே முன்னேறி இருக்கலாம். ஆனால் தன்மீது பாடுபடுவதை மனிதன் மறந்து விட்டான்.

மனிதன் வெளிப்பொருள்களில் பாடுபடுவது கொண்டு ஆகாயத்தில் பறப்பதைக் கற்றுக் கொண்டான். அதையும் தாண்டி விண்ணில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஏன்? நீரில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. இது அவனுடைய பரிதாபத்திற்குரிய நிலை என்பதை மறுக்க முடியாது. மனிதன் தன்னில் பாடுபட்டு அன்றிருந்த மனிதர்களைவிட குணத்தில், பண்பில், ஒழுக்கத்தில், மனித நேயத்தைப் போற்றிப்பேணி வளர்ப்பதில் முன்னேறி இருந்தால் மனிதனைப் பாராட்டலாம்.

அதற்கு மாறாக இன்றைய மனிதன் அன்றைய மனிதனை விட மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் பின்னடைந்துள்ளான். அதிகம் பின்னோக்கிச் செல்ல வேண்டாம். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காமராஜ், கக்கன் போன்ற அரசியல்வாதிகளிடம் காணப்பட்ட தொண்டு செய்யும் மனப்பான்மை , அரசியலில் சுய ஆதாயம் அடையும் நோக்கமின்மை, அதனால் வஞ்ச லாவண்யத்துக்கு அடிமையாகாமல் இருந்த நற்பண்பு இவற்றை இன்றைய அரசியல்வாதிகளில் யாரிடமாவது காட்ட முடியுமா? எளிதில் புரிந்து கொள்வதற்கு இதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

இன்று பகுத்தறிவு மனிதனிடம் மிகைத்துக் காணப்படுவது ஐயறிவு பிராணிகளிடம் கூட காணப்படாத கேடு கெட்ட நிலை. போதை, ஆட்டம், பாட்டம், களியாட்டம், சூது, மாது இவை தான் இன்றைய மனிதனின் கேடுகெட்ட நிலை. தான் பிறந்த நோக்கத்தையே மறந்த நிலை. தன் இனத்தையே அதிலும் அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என்று கூட பாராமல் வன்செயல்கள், குண்டுகள் மூலம் ஈவிரக்கம் சிறிதும் இல்லாமல் கொன்றொழிக்கும் மனிதனை மனிதன் என்பதா? மிருகங்களை விட கேடு கெட்ட மிருகம் என்பதா? இந்த கேடு கெட்ட மிருக நிலைக்கு அவர்களை வார்த்தெடுத்தது யார்?

அகிலங்களிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து நிர்வகிக்கும் ஏகன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை அவதாரங்களாகவும், கடவுள் குமாரனாகவும், கடவுள் நேசர்களாகவும் (அவுலியா) கற்பனை செய்து, அந்தப் போலிக் கடவுள்களை காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒரு பக்கம்; இந்தப் புரோகிதர்களின் தயவில் ஆட்சியைக் கைப்பற்றி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும் அரசியல் புரோகிதர்கள் மற்றொரு பக்கம், இந்தப் பொய்க் கடவுள்களையும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் மக்களை ஏமாற்றி, சுரண்டிப் பிழைக்கும் எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் ஒழித்துக் கட்ட புறப்பட்டுள்ளோம் என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரேயொரு, இணை துணை இல்லாத, தேவை எதுவும் இல்லாத இறைவனையும் ஓழித்துக் கட்ட முயலும் நாத்திகர்கள்; இந்த மூன்று சாராரும் தான் இன்றைய உலகின் இழி நிலைக்கு காரணமாகத் திகழ்கிறார்கள்.

இந்த மூன்று சாராரின் தவறான போதனை, வழிகாட்டல் காரணமாகத்தான் மனிதன் ஐயறிவு மிருகத்திலும் கேடுகெட்ட நிலைக்கு தாழ்ந்து கொண்டிருக்கிறான். அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

உண்மையில் மனிதன் முன்னேற ஆசைப்படாமல், இவ்வுலகில் மனிதனாக, மனிதப் புனிதனாக, அமைதி, சுபீட்சம், சுகம் அனைத்துடன் இவ்வுலகில் வாழ்வதுடன், மகத்தான பேற்றை அடைய விரும்பினால், அவன் இந்த மூன்று சாரார்களிடமிருந்தும் விடுபட்டாக வேண்டும்.

மதங்களை வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதப்புரோகிதர்களிடமிருந்து விடபட வேண்டும். தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கும் போலி அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிக்கப் புறப்பட்டு, ஒரு உண்மைக் கடவுள்களையும் மறுக்கும் நாத்திகர்களின் பிடியிலிருந்தும் விடுபட வேண்டும். மனிதனே மனிதனுக்கு நேர்வழி காட்ட முடியும் என்பது திருடனே திருடனுக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒப்பாகும்; பரீட்சை எழுதும் மாணவனே கேள்வித்தாள் தயாரிப்பதற்கு ஒப்பாகும்; எனவே படைத்த ஓரே இறைவனை மட்டும் இறைவனாக ஏற்று அவனது இறுதி வழிகாட்டல் நூல் – நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்.

நன்றி: www.ரீட்இஸ்லாம்.காம் 


எது மெய்ஞானம்
எம்.பி.ரபீக் அஹ்மத்

அறிவுலகில் கிரேக்க அறிஞர்களுக்கு தனி இடம் இருந்து வருகின்றது. சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப் பார்ப்போமேயேனால் முதலில் அறிவு, ஞானம் ஆகியவற்றின் நீரூற்று, கிரேக்கிலிருந்துதான் தொடங்கியது என்று பலர் நினைக்கின்றார்கள். இங்கே பிறந்த ‘சாக்ரடீஸ்’ (Socrates Athens in 469 BC) அறிவுலக தந்தை என்றும் ‘பிளாட்டோ’ (Plato)வை அறிவுலக மேதை என்றும் அழைக்கின்றார்கள்.

சாக்ரடீஸின் பார்வையில் மனிதன் தான் ஆராயவேண்டிய பொருளே தவிர இந்த வையகம் அல்ல. உன்னையே நீ அறிந்துகொள் என்ற கோட்பாட்டை சாக்ரடீஸ்தான் உலகத்திற்கு அறிமுகப்படுத்தினான். நாம் காணும் அல்லது அனுபவிக்கும் இந்த உலகம் உண்மையில் இல்லாத ஒன்றாகும், என்பது அவனுடைய தத்துவமாகும். நாம் காணும் உலகம் ஒரு கற்பனை உலகம் – இது நிஜமல்ல. உண்மையான ஒரு நிஜ உலகின் ஒரு நிழல் உலகமாகும். உணர்வு பூர்வமாக பெறப்படும் அறிவு நம்பத்தகுந்த அறிவே அல்ல. காதுகளை அடைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு நம் கற்பனை உலகில் மூழ்கிப் பெறப்படும் அறிவே உண்மையான அறிவாகும் என்பது சாக்ரடீஸின் கொள்கையாகும். இந்த தத்துவம் தான் இந்தியாவிற்குள் புகுந்து இந்து வேதங்களில் இடம்பெற்று ‘வேதாந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆக இந்து மதத்தின் கண்ணோட்டத்தில் நாம் வாழும் இந்த உலகம் (பிராக்கரதி) மாயையாகும். இது பிரம்மா காணும் கனவாகும். இது ஈஸ்வரனின் லீலையாகும். இங்கு நடைபெறும் எல்லாமே நாடகமாகும். எதுவுமே இங்கு உண்மையில்லை. மாறாக உண்மையின் மாதிரியாகும். இங்கு யாரும் ஆண்டானுமில்லை, அடிமையுமில்லை.  கடலும் இல்லை, மலையும் இல்லை. எல்லாமே அகப்பார்வையின் கோளாராகும். இந்தப்பார்வைதான் நம் நாட்டில் ஒருவித சோம்பேறித்தனம் நிலவுவதற்கு இந்தப் பார்வைதான் அடிப்படைக் காரணமாகும்.

உலகை வெறுத்தல் – இவ்வுலகத்தை துறத்தல் தான் உண்மையான தெய்வ பக்திக்கு அடையாளம் – போதிமதிகளும் – துரவிகளும் மனித குலத்தில் உயர்ந்தவர்கள் என்ற உணர்வு உண்டானதற்கு இந்த நம்பிக்கைதான் அடிப்படை காரணமாகும். இதே கருத்துதான் ‘ஈரானிய தஸவ்வுஃப்’ என்ற போர்வையில் நம் நாட்டு முஸ்லிம்களிடமும் புகுந்து தொற்றிக்கொண்டது. ஆன்மீக பாடல்கள் முனாஜாத் கீர்த்தனைகள் என்ற பெயரால் முஸ்லிம்களை எல்லாவிதத்திலும் வியாபித்துக்கொண்டது. ஆக உலகம் என்பது ஒரு அருவெறுக்கத்தக்க பொருள் என்ற எண்ணம் முஸ்லிம்களிடமும் பரவி விட்டது.

 திருகுர்ஆன் இந்த உலகிற்கு அருளப்படுவதற்கு முன்புவரை உலகமே மாயம் – வாழ்வே மாயம் – எல்லாமே மாயம் – அனைத்தும் பொய் என்ற நம்பிக்கை எங்கும் வியாபித்திருந்தது.

திருகுர்ஆன் வந்தது – சாக்ரடீஸ், அரிஸ்டாட்டலின்  (Aristotle 350 BC)இந்த வேதாந்தத்தை தவிடு பொடியாக்கியது. இந்த வலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த மனித குலத்திற்கு இந்த வசனத்தின் மூலம் அறைகூவல் விட்டது. அந்த வசனம் இதுதான்.

மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு. அல்குர்ஆன் 38:27

இந்த வசனத்தின் மூலம் இந்த அகிலத்தை இந்த உலகத்தை மாயை என்றும் வீணானது என்றும் எண்ணுபவர்களை திருகுர்ஆன் காபிர்கள் மறுப்பவர்கள் என்று பிரகடனம் செய்கிறது. மனிதனை தனிமைப்படுத்தும் மூலையில் முடங்கச் செய்யும் முடவராக்கும் சன்னிதானங்களின் மடங்களையும் அவர்களின் வேதியியல் நம்பிக்கைகளையும் தஸவ்வுஃபின் அஸ்திவாரங்களயும் இந்த ஒரு ஆயத்தின் மூலம் இறைவன் நிர்மூலமாக்கி விட்டான்.

இது ஒரு சாதாரண வசனமல்ல. இந்த உலகை மாயை என்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட போர் பிரகடனமாகும். இதை உறுதிப்படுத்தும் வகையில் இறைவன் இன்னொரு வசனத்தில் மூலம் இந்த உண்மைக்கு மெருகூட்டுகின்றான்.

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் – நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 29:44

அல்லாஹ் இவ்வுலகை உண்மையைக் கொண்டே படைத்துள்ளான். கற்பனையைக் கொண்டல்ல. இந்த வையகம் போலியானதோ பொய்யானதோ அல்ல. அறிவுள்ள மக்களுக்கு இவ்வ்வசனத்தில் சிறந்த ஒரு அத்தாட்சியுள்ளதாக இறைவன் சுட்டிக்காட்டுகிறான். இவ்வுலகை உண்மை என்று நம்புவர்களை இறைவன் இவ்வசனத்தில் விசுவாசிகள் என்று அழைக்கிறான். இவ்வுலகை போலியானது – வீணானது என்பதை ஆணித்தரமாக மறுக்கும் வகையில் மேலும் ஒரு வசனத்தை அருளியுள்ளான். அந்த வசனம்:

மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். அல்குர்ஆன் 44:38,39

இந்த உலகை மாயை என்று நினைக்காமல் உண்மை என்று நம்பி அதில் உள்ள ஒவ்வொரு பொருளையும் ஆழமாக ஆராய இறைவன் கட்டளையிடுகின்றான். இனி வரும் வசனங்களில் இறைவன் அறிவிற்கும் ஆராய்சிக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்று வலியுறுத்துகின்றான்.

வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உாியது. இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். அல்குர்ஆன் 3:189

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அல்குர்ஆன் 3:190

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, ”எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”" (என்றும் பிரார்த்திப்பார்கள்) அல்குர்ஆன் 3:191

இப்பொழுது சொல்லுங்கள் சகோதரர்களே! உலகமே மாயம் என்று நம்பும் வேதாந்தத்தால் எப்படி இறைவனை அடைய முடியும். இப்படிப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து அல்லாஹ் காப்பற்றுவனாக!

நன்றி: www.ரீட்இஸ்லாம்.காம்

வெள்ளி, 26 அக்டோபர், 2012



பெருநாள் தொழுகை முறை

ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்


பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று மார்க்கம் கூறுகின்றது என்றால் பெருநாள் தொழுகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.(இது பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகளில் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகளிலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளது. அப்படிச் சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.(இதுவும் பின்னர் விளக்கப்பட்டுள்ளது).
மற்ற தொழுகைகளை விட அதிக முக்கியத்துவம் அக்கப்பட்டதில் இருந்து இத்தொழுகையின் அவசியத்தை அறிந்து கொள்ளலாம்.

தொழுகை நேரம் 
இன்றைய தினத்தில் நாம் முதல் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பயிரிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: பர்ராஃ பின் ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 951, 965, 968, 976, 5545, 5560,

மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தினத்தில் முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வயுறுத்துகின்றது. முதல் காரியமாக பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால் சுபுஹ் தொழுது முடித்த மறு நிமிடமே தொழுது விடவேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் பொதுவாக சுபுஹு தொழுகைக்குப் பின்னர் சூரியன் நன்கு வெப்பப்படும் வரை தொழுவதற்குத் தடை உள்ளது.

சுபுஹுக்குப் பின் சூரியன் உதித்துப் பிரகாசிக்கின்ற வரை தொழுவதையும், அஸருக்குப் பின் சூரியன் மறைகின்ற வரை தொழுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 581

இந்த ஹதீஸில் சுபுஹுக்குப் பின்னர் சூரியன் முழுமையாக வெப்பப்படும் வரை தொழுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதால் அந்த நேரம் முடிந்தவுடன் பெருநாள் தொழுகையின் நேரம் துவங்கி விடுகின்றது.

தமிழகத்தில் அனேக இடங்கல் காலை 11 மணி வரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையைத் தொழுகின்றார்கள். இது தவறாகும்.

பெருநாள் தொழுகை மைதானத்தில் தொழவேண்டிய தொழுகையாகும்.
தொழுகையைத் தாமதப்படுத்தும் போது வெயின் கடுமை காரணமாக மைதானத்தில் மக்கள் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
கடுமையான வெப்பம் நரக வெப்பத்தின் வெப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும் போது தொழுகையை (வெப்பம் தணியும் வரை) தாமதப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)    நூல்: புகாரி 534, 537, 538, 539

பள்ளிவாசல் சென்று தொழ வேண்டிய கடமையான தொழுகைகளைக் கூட வெயின் கடுமையைக் காரணம் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமதப்படுத்துமாறு கட்டளையிட்டுள்ளார்கள். மக்கள் சிரமப்படக் கூடாது என்பதில் அந்த அளவுக்குக் கவனமாக இருந்துள்ளார்கள். எனவே நபிவழியைப் பின் பற்றித் தொழுவது என்றால் மைதானத்தில் தான் இத்தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும். மைதானத்தில் மக்கள் வெயிலைத் தாங்க முடியாத நேரத்தில் தொழுவது மேற்கண்ட நபிவழிக்கு முரணாக அமைகிறது.

மேலும் பெருநாள் தினத்தில் முதல் காரியமாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் சூரியன் முழுமையாக வெப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழுது விடுவது தான் சரியான செயலாகும்.

தொழுகையும் குத்பாவும்
பெருநாள் தொழுகை ஜும்ஆ தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்துகள் தொழுகையும், சொற்பொழிவும் அடங்கியதாகும். ஜும்ஆவின் போது முதல் இமாம் உரை நிகழ்த்தி விட்டுப் பின்னர் தொழுகை நடத்த வேண்டும். ஆனால் பெருநாள் தொழுகையில் முதல் தொழுகை நடத்திவிட்டு அதன் பிறகு இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 962

பாங்கு இகாமத் உண்டா? 
நோன்புப் பெருநாலும், ஹஜ் பெருநாலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை.
அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் (ரலி) நூல்: புகாரி 960

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள். எனவே பெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ இல்லை.

பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் உண்டா? 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாலும், ஹஜ்ஜுப் பெருநாலும் முஸல்லா என்ற திடலுக்குச் செல்வார்கள். அவர்கள் முதன் முதல் (பெருநாள்) தொழுகையைத் தான் துவக்குவார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 956

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 964, 989, 1431, 5881, 5883

சில ஊர்களில் பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் என்ற பெயரில் இரண்டு ரக்அத் தொழும் வழக்கம் இருந்து வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய, நபிவழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.

தொழுகை முறை
பெருநாள் தொழுகை மற்ற தொழுகைகளைப் போன்றது தான். ஆயினும் இதற்கென சில கூடுதல் அம்சங்கள் உள்ளன. எனவே, இந்தக் கூடுதல் அம்சங்கள் எவை என்பதை மட்டும் நாம் பார்ப்போம். மற்றபடி உளூச் செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்ற தொழுகைக்கு உள்ள அனைத்துக் காரியங்களும் பெருநாள் தொழுகைக்கும் செய்யப்பட வேண்டும்.

பெருநாள் தொழுகைக்காக நின்றவுடன் இமாம், பெருநாள் தொழுகைக்கான நிய்யத் சொல்க் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. நிய்யத் என்பதன் பொருள் மனதால் எண்ணுவதாகும். வாயால் மொழிவதல்ல! எந்த வணக்கத்தில் ஈடுபட்டாலும் வணக்கத்தில் ஈடுபடும் எண்ணம் இருப்பது அவசியமாகும். வாயால் சொல்வது நபிவழியல்ல! இதை முன்பே நாம் விளக்கியுள்ளோம்.

கூடுதல் தக்பீர்கள்
சாதாரண தொழுகைகல் சொல்லப்படும் வழக்கமான தக்பீர்களை விட பெருநாள் தொழுகையில் கூடுதலான தக்பீர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களுமாக மொத்தம் 12 தக்பீர்கள் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல்கள்: திர்மிதி 492 அபூதாவூத்

இந்த ஹதீஸில் 7+5 தக்பீர்களை கிராஅத்திற்கு முன்பு சொல்ல வேண்டும் என்று கூறப்படுகின்றது.

சாதாரண தொழுகைகல் உள்ள எல்லா அம்சங்களும் பெருநாள் தொழுகையிலும் உண்டு என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அந்த அடிப்படையில் தக்பீர் தஹ்ரீமாவிற்குப் பிறகு ஓத வேண்டிய அல்லாஹும்ம பாஇத் பைனீ...... அல்லது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ..... போன்ற துஆக்கல் ஏதேனும் ஒன்றை ஓதிக் கொள்ள வேண்டும். பிறகு 7 தக்பீர்கள் கூற வேண்டும். பிறகு கிராஅத் ஓத வேண்டும்.

தக்பீர்களுக்கு இடையில்....
ஒவ்வொரு தக்பீருக்குமிடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீசும் இல்லை. ஆனால் இன்று நடைமுறையில் தக்பீர் சொல்லும் போது கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் தக்பீர் என்ற சொல்லை தக்பீர் கட்டுதல் என்ற அர்த்தத்தில் விளங்கியிருப்பது தான்.

தஹ்லீல் என்றால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுதல்
தஸ்பீஹ் என்றால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுதல்
தஹ்மீத் என்றால் அல்ஹம்துல்லாஹ் என்று சொல்லுதல்
எனப் பொருள்.

இதே போல் தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்று சொல்வது தான் இதன் பொருளாகும்.

தொழுகைக்குப் பிறகு 33 தடவை தக்பீர் சொல்ல வேண்டும் என்றால் 33 தடவை கைகளை நெஞ்சின் மீது அவிழ்த்துக் கட்டுதல் என்று விளங்க மாட்டோம். இது போன்று தான் 7+5 தக்பீர்கள் சொல்வார்கள் என்பதற்கு கைகளை அவிழ்த்துக் கட்டுதல் என்று பொருள் கொள்ளக் கூடாது. 7+5 தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்பது தான் இதன் பொருள். இந்தக் கூடுதல் தக்பீர்களுக்கு இடையில் ஏதேனும் திக்ருகள் சொல்ல வேண்டும் என்று கூறுகின்றார்கள். சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் என்ற திக்ரை தக்பீர்களுக்கிடையில் கூறும் வழக்கம் சில பகுதிகல் இருந்து வருகின்றது. இதற்கும் நபி வழியில் ஆதாரம் இல்லை.

இந்த தக்பீர்களுக்கு இடையில் ஓத வேண்டும் என எந்த ஒரு திக்ரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளைக் கட்டிய நிலையிலேயே அல்லாஹு அக்பர் என ஏழு தடவை கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ ஆதாரம் ஏதுமில்லை.

ஓத வேண்டிய அத்தியாயங்கள்
பெருநாள் தொழுகையில் தக்பீர்கள் கூறிய பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதிவிட்டு ஓத வேண்டிய சூராக்கள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (அத்தியாயம்: 87) ஹல் அதாக ஹதீசுல் காஷியா (அத்தியாயம்: 88) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர். பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் வந்து விட்டால் அவ்விரண்டிலுமே மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1452

அபூ வாகித் அல்லைஸி (ரலி)யிடம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பெருநாள் தொழுகையிலும், நோன்புப் பெருநாள் தொழுகையிலும் என்ன ஓதுவார்கள்? என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கேட்ட போது, அவ்விரு தொழுகைகலும் காஃப் வல் குர்ஆனில்மஜீத் (அத்தியாயம்: 50) இக்தர பதிஸ் ஸாஅ (அத்தியாயம்: 54) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என்று பதிலத்தார்கள்.
நூல்: முஸ்லிம் 1477

மேற்கண்ட ஹதீஸ்கள் என்னென்ன அத்தியாயங்களை பெருநாள் தொழுகையில் ஓத வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிய சூறாக்களை நபித்தோழர்கள் அறிவிப்பதிருந்து கிராஅத்தைச் சப்தமிட்டு ஓத வேண்டும் என்பதும் தெவாகின்றது.
இவ்வாறாக மற்ற தொழுகைகளைப் போன்ற ருகூவு, சுஜுதுடன் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும்.

பெருநாள் (குத்பா) உரை
பெருநாள் தொழுகை முடிந்ததும் மக்களுக்கு இமாம் உரையாற்றுவது நபிவழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் இரு பெருநாட்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 962

இந்த ஹதீஸ்கன் அடிப்படையில் முதல் தொழ வேண்டும். அதன் பிறகு தான் உரை நிகழ்த்த வேண்டும். ஆனால் இன்று பெரும்பாலான ஊர்கல் தொழுவதற்கு முன்பாக ஓர் அரை மணி நேர உரை முதல் நடைபெறும். அதன் பிறகு தொழுகையும், அதற்குப் பிறகு இரண்டு உரைகளும் நடைபெறும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைக்கு மாற்றமான செயலாகும்.

மிம்பர் (மேடை) இல்லை
வழக்கமாக ஜும்ஆவின் இரு உரைகளும் பள்யில் உள்ள மிம்பரில் ஆற்றப்படும். அது போல் பெருநாள் தொழுகைக்குப் பிறகு மிம்பரில் நின்று உரையாற்ற வேண்டுமா? அல்லது தரையில் நின்று உரையாற்ற வேண்டுமா? என்று இப்போது பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள். அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)
நூல்: இப்னு குஸைமா.

இந்த ஹதீஸ் அடிப்படையில் இமாம் தரையில் நின்று தான் உரையாற்ற வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உரையை) முடித்து இறங்கி பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 978

இந்த ஹதீஸில் நஸல (இறங்கி.......) என்று வருகின்றதே! மிம்பர் இருந்ததால் தானே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறங்கினார்கள் என்று நபித்தோழர் அறிவிக்கிறார் என்ற சந்தேகம் நமக்கு வருகின்றது. நஸல என்ற வார்த்தைக்கு நாம் கொள்கின்ற சரியான பொருன் மூலம் நம்முடைய சந்தேகம் நீங்கி விடுகின்றது.

நஸல என்ற வார்த்தை (1) உயரமான இடத்திருந்து இறங்குதல் (2) தங்குதல் (3) இடம் பெயர்தல் என்று மூன்று பொருட்கல் பயன்படுத்தப்படுகின்றது.

ஜாபிர் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் நஸல என்ற வார்த்தைக்கு முந்திய இரண்டு பொருட்கள் கொடுக்க முடியாது. மூன்றாவது பொருளை அதாவது இடம் பெயர்தல் என்ற பொருளைத் தான் கொடுக்க வேண்டும். காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் நின்று உரையாற்றினார்கள் என்று மேற்கண்ட இப்னு குஸைமா ஹதீஸ் தெவாகக் கூறுகின்றது எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அங்கிருந்து நகர்ந்து பெண்கள் பகுதிக்கு வந்தார்கள் என்று அந்த ஹதீஸுக்கு விளக்கம் அத்தால் நமக்கு ஏற்படும் அந்தச் சந்தேகம் நீங்கி விடுகின்றது.

பெருநாள் தொழுகைக்குப் பின் சுன்னத் உண்டா? 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் (அவர்கள் வேறு எந்தத் தொழுகையையும்) தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
நூல்: புகாரி 989

இந்த ஹதீஸின் படி பெருநாள் தொழுகையின் முன்போ, பின்போ எந்தத் தொழுகையும் கிடையாது என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

புதன், 24 அக்டோபர், 2012



தியாகத் திருநாள்



இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.

ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாட்டம் ஒரு நன்நாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது.

அதே போல், நாம் அல்லாஹ்வின் அடியார்கள். அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். அப்து( அடியான்) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. நமக்கு “முஸ்லிம்” என்று பெயரிட்ட நபி இப்றாஹிம்(அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக.

நபி இப்றாஹிம் (அலை) அவர்களது வாழ்வின் ஆரம்பக்கட்டத்திலிருந்தே, இளமைப் பருவத்திலிருந்தே, அல்லாஹ் ஒருவனுக்கே வழிப்பட வேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் ஏற்படும் பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு, தான் கொண்ட தெளஹீதை நிலை நாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது ‘ரப்’பின் திருப்பொருத்தமே தனது வாழ்வின் இலட்சியம், அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அன்பு மகளை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த தியாக வாழ்க்கை இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன. “இப்ராஹிமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்.” (அல்குர்ஆன் 3:95)

இப்றாஹிம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்து, அவற்றை வியாபாரம் செய்வது கொண்டு பிழைப்பு நடத்துபவர். இந்தத் தீய செயல் இப்றாஹிம்(அலை) அவர்களின் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்திலே தீ எனச் சுடுகின்றது. பால் மணம் மாறாத அந்தப் பாலப் பருவத்திலேயே தன் தந்தையை நோக்கிச் சொல்கிறார்கள்.

“என் அருமைத் தந்தையே, உங்கள் கைகளால் வடித்தெடுத்த இந்தப் பெரியார்களின் சிலைகளை தெய்வமென்று நம்பி, மக்களை வழிபடச் சொல்கிறீர்களே? இது நியாயந்தானா? நமது அற்ப உலக வாழ்வுக்காக மக்களை நரகப் படுகுழியில், படு நாசத்தில் விழச்செய்வது சரிதானா? நாளை நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் விடுவானா?” என்று கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக அள்ளி வீசினார்கள். பெற்ற தந்தைக்கோ அளவு கடந்த கோபம் வருகின்றது. நான் பெற்ற பிள்ளை என்னையே எதிர்ப்பதா? எனது குடும்ப, வயிற்றுப் பிரச்சனையில் மண்ணை அள்ளிப் போடுவதா? என்று அங்கலாய்க்கிறார். “மகனே! இதுதான் நமது பிழைப்படா! இதை விட்டால் நாம் உயிர்வாழ்வது எப்படியடா! குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பாக வந்து முளைத்திருக்கிறாயே!” என்று அதட்டுகிறார்.

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் இந்த இடத்தில் பெற்று வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்துப் போஷித்துப் பரிபாலித்து வரும், அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள். தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம், “மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை – வெறும் சிலைகளே! இவற்றாலோ, இவற்றுற்குரிய பெரியார்களாலோ, உங்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர்களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியார்களின் சிலைகளை வாங்கிக் கொள்ளலாம்” என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, “நீ என் கண்ணிலும் விழிக்காதே; உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்”, என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார்.

“இதிலிருந்து நீ விலகிக் கொள்ளவில்லையானால் உன்னை நிச்சயமாகக் கல்லால் எறிவேன்; என்னை விட்டும் என்றென்றும் தூரப்போய்விடு” (அல்குர்ஆன் 19:46) என்றார்.

ஆதரிப்பார் யாரும் இல்லாமலும் ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும் அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவக்குகிறார்கள் இப்ராஹீம்(அலை)அவர்கள். அடுக்கடுக்காக இடுக்கண்கள் வந்த போதிலும் கொண்ட கொள்கையை, ஏகத்துவ பிரச்சாரத்தை, சிலை, கபுரு உடைப்புப் பிரச்சாரத்தை இப்ராஹிம்(அலை)அவர்கள் கை விடுவதாக இல்லை. துணிவாகத் தொடர்கிறார்கள். ஒரு இடத்திலே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு. ஒரு பெரிய சிலையின் தோளிலேயே ஆயுதத்தை மாட்டிவைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள்.

தாங்கள் வணங்கும் தெய்வங்கள் இவ்வாறு சின்னா பின்னப்படுத்தப்பட்டு நொறுங்கிக் கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் பதை பதைக்கிறார்கள். கடுமையான கோபத்திற்குள்ளாகிறார்கள். விசாரிக்கும் போது, இப்ராஹிம் என்ற பெயராம், வாலிபனாம், அவன் தான் நமது தெய்வங்களை ஏளனம் செய்கிறவன்; அவன் தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அழைத்து வந்து – இல்லை இழுத்து வந்து இப்ராஹிம் (அலை) அவர்களை விசாரிக்கின்றனர். “என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்கள்” என்று அந்த மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். “தன் முன்னால் நடந்தது கூடத் தெரியாத வெறும் சிலைகளையா தெய்வம் என்று வணங்குகிறீர்கள்” என்று குத்திக் காட்டுகிறார்கள்:- (அல்குர்ஆன் 21:60-67) துணிச்சலாக, சிலை, கபுரு வணக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறார்கள். பிரச்சனை முற்றி இறுதியில் மன்னன் நம்ரூதின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படுகிறார்கள். மன்னன் என்ற பயமோ நடுக்கமோ இப்றாஹிம்(அலை) அவர்களுக்குச் சிறிதும் இல்லை. தைரியமாக நெஞ்சுயர்த்தி தான் கொண்டுள்ள அல்லாஹ் ஓருவன் மட்டுமே என்ற கொள்கையை மன்னனிடம் எடுத்து சொல்கிறார்கள், முடிவு, நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். அல்லாஹ் (ஜல்) உத்தரவு கொண்டு, கரிக்கும் நெருப்புக் குண்டம் சுகம் தரும் சோலையாக மாறுகின்றது. (அல்குர்ஆன் 21:68,69)

நபி இப்றாஹிம்(அலை) அவர்களுக்கு, இதோடு சோதனை முடிந்து விட்டதா? இல்லை! மீண்டும் தொடர்கின்றது -தொடர்கதை போல், அன்புக்கினிய ஆசை மனைவியையும், பல்லாண்டு காலம் ஏங்கி, இறைவனிடம் பன்முறை வேண்டிப் பெற்ற அருமைப் பச்சிளம் பால்குடி மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பக்கா(மக்கா) பாலைவனத்தில் கொண்டு விடுமாறு இறை உத்தரவு வருகின்றது. இதனால் இறைவனுக்கு என்ன லாபம் என்று சிந்திக்கவில்லை இப்ராஹிம் (அலை). பந்தம், பாசம், ஆசை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இறை உத்தரவைத் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் கடமை என எண்ணி, இறை உத்தரவை நிறைவேற்றத் துணிகிறார்கள்.

ஆதரிப்பார் யாரும் இல்லாத கடும்பாலை வனத்திலே அருமை மனைவியையும், அன்பு மகனையும் கொண்டு போய் விட்டு விட்டு நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் நபி இப்றாஹிம்(அலை). “எங்களுக்கேன் இந்தக் கடுஞ்சோதனை? இதைத்தான் உங்கள் இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறானா?” என்ற பாச மனைவியின் கேள்விக்கு, “ஆம்!” என்ற பதிலே இப்றாஹிம்(அலை) அவர்களிடமிருந்து கிடைக்கின்றது. அப்படியானால் அந்த இறைவன் எங்களுக்குப் போதுமானவன் என்று அன்பு மனைவியாரும் ஆறுதல் அடைகிறார்கள்.

நாட்கள் செல்கின்றன. கொண்டு வந்த உணவுப் பொருள், தண்ணீர் அனைத்தும் தீர்ந்து விட்டன. பசியின் கொடுமையினால் பச்சிளம் பாலகனுக்குப் பால் இல்லை. பல நாட்கள் தாயும், சேயும் பட்டினி. பசி தாங்காது சேய் வீறிட்டு அழுகின்றது. தனயனின் பசித்துயர் தாங்காது, தாயின் உள்ளம் படாத பாடு படுகின்றது. மகனின் பசி போக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் வரளும் நாவை ஈரப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்காதா? என்று ஏங்குகின்றது பெற்ற உள்ளம். அதற்காக இங்கும் அங்கும் ஓடுகிறார்கள் – அன்று அவர்கள் ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் பொருத்திக் கொண்டான். தனயனின் கால்களுக்கடியிலேயே “ஜம் ஜம்” நீரைப் பெருக்கெடுத்தோடச் செய்து, ஹஜ்ஜுக்கு வரும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்கள் அன்று ஓடிய அந்த மலைகளுக்கிடையே ஓடுவதை ஹஜ்ஜின் ஒரு அமலாகவும், ‘ஜம்ஜம்” தண்ணீரை ஒரு புனிதப் பொருளாகவும் ஆக்கி விட்டான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். துன்பம் முடிவுற்றதா? இல்லை! சோதனை இன்னும் தொடர்கின்றது.

பச்சிளம் பாலகன் வளர்ந்து ஒடியாடித் திரிகின்ற பருவம். இடையிடையே இப்ராஹிம்(அலை) பக்கா(மக்கா) வந்து அன்பு மனைவியையும், ஆசை மகனையும் பார்த்துச் செல்கிறார்கள். ஒரு நாள் நபி இப்றாஹிம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனை தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இங்கு, நபிமார்களின் கனவில் ஷைத்தான் வர முடியாது என்பதால் இறை உத்தரவு என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அது தான் போலும். அவனது நாட்டத்தை நிறைவேற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து, தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விபரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயில்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. “அன்புத் தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளர்களாகவே காண்பீர்கள்” (அல்குர்ஆன் 37:102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள்.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! இந்த இடத்திலே, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முன்னால், தங்கள் பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அைனத்தும் ஒன்றுமே இல்லை; அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவுச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனயனும் எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்து பாருங்கள். ஆம்! தாங்கள் கண்ட கனவைச் செயல்படுத்த, பெற்ற மகனைத் தன் கரங்களாலேயே அறுத்துப் பலியிடத் துணிந்து அழைத்துச் செல்கிறார்கள். எந்த உள்ளமும் பதை பதைக்காமல் இருக்க முடியாது. கடுமையான சோதனைக்கட்டம். இப்றாஹிம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பிள்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையின் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகிறார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தான் அடித்துத் துரத்துகிறார்கள்.

இறுதியில் பலியிடப் போகும் மகனை நெருங்குகிறான். சாகச வார்த்தைகளைக் கூறுகின்றான். “தந்தையோ வயது முதிர்ந்தவர்; நீயோ வாழ வேண்டிய வயது. உலக வாழ்க்கையை இனிமேல் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையில் உன்னைப் பலியிடப் போகின்றாரே உன் தந்தை. அதற்கு நீ இடங் கொடுக்கலாமா?” தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ, தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள். தந்தை, தாய், தனயன் மூவரின் செயல்களை அல்லாஹ் பொருத்திக் கொண்டு அதன் ஞாபகார்த்தமாக ஹாஜிகள் இன்றும் மூன்று இடங்களில் கல் எறிவதை, ஹஜ்ஜின் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான். அல்லாஹ் (ஜல்) இறுதியில் இப்றாஹிம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களைக் கீ கிடத்திக் கழுத்தில் கத்தியை ஒட்டத் தயாராகிறார்கள்.

ஆம்! மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு எந்த அளவு வழிப்பட்டு நடக்கிறான்? என்று அல்லாஹ் சோதிக்கிறானேயல்லாமல் அந்தச் சோதனையால் மனிதன் முன் காணப்படும் வேதனையில் சிக்க வைக்க வேண்டுமென்பது, அல்லாஹ்(ஜல்)வின் விருப்பமன்று. எண்ணற்ற தடங்கல்கள் ஏற்பட்ட பின்பும் தனக்கு வழிப்படும் ஒரே நோக்கம் தவிர வேறு நோக்கம், தந்தை, தாய், தனயன் மூவருக்கும் இல்லை; இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக நிருபிக்கப்பட்ட பின் அந்த வேதனை அவர்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நாடினான் போலும்! இதோ இறைவன் கூறுகிறான், “ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹிம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, யா இப்றாஹிம்! என்றழைத்தோம். திட்டமாக நீர் ஒரு கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கும் நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹிம் – இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.” (அல்குர்ஆன் 37 :103-110)

இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ்(ஜல்) ஏற்றுக்கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும்வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! அல்லாஹ்வின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால், அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக ஆகி விட்டதால், அந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நமக்கு ஒரு ஈதையே(பெருநாளைேய) அல்லாஹ்(ஜல்) கொடுத்திருக்கிறான். வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவராலும் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட கஃபத்துல்லாவை வலம் (தவாஃப்) வருவதை ஒரு வணக்கமாகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்று கஃபத்துல்லாவைக் கட்டிய இடத்தை (மகாமே இப்றாஹிம்) தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன் 2:125)

தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவைதான். நாம் அல்லாஹ்வின் அடிமைகள். அவனே நமது எஜமானன். நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும்.

“(நீர்) கூறும்!

எனது தொழுகை, எனது ஹஜ்ஜின் கிரியைகள், என் வாழ்வு, என் மரணம் (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே.” (அல்குர்ஆன் 6: 162)

எந்த ஒரு காரியத்திலும் நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும் இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லா பெரும் பேறுகளைத் தரும். நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிாபார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக! ஆமீன்.

அடுத்து, இங்கு இன்னொரு படிப்பினையும் பெற முடிகின்றது. நபிமார்கள், வலிமார்கள், நல்லடியார்கள் இவர்கள் அனைவரும் இறைவனுக்குப் பூரணமாகக் கட்டுப்பட்டு, தியாக வாழ்க்கை வாழ்ந்ததன் காரணமாகத் தான் இறைவனிடத்தில் உயர் பதவிகளையும், இறை திருப்தியையும் பெற்றுக் கொண்டார்கள்; இன்று மக்களுக்கு மத்தியில் பெரிது படுத்திக் காட்டப்படும் மாயாஜல வித்தைகள் போன்ற மந்திர தந்திரக் கதைகளை வைத்து அல்ல! உதாரணமாக ஒரு பெரியார் இன்னொருவரது கோழியைப் பிடித்து அறுத்துச் சமைத்துச் சாப்பிட்டு விட்டார். கோழிக்குச் சொந்தக்காரன் வந்து சண்ைடயிட்டான். உடனே, சாப்பிட்டு எறிந்த எலும்புகளை எல்லாம் சேர்த்து, உயிர் பெற்றுவிடு என்று அந்தப் பெரியார் சொன்ன மாத்திரத்தில் கோழி உயிர் பெற்று எழுந்து விட்டது என்று கதை சொல்வார்கள். நபி(ஸல்) அவர்களுக்கே பிறரது பொருளை அனுமதி இன்றிச் காப்பிட உரிமை இல்லை என்றால், இந்தப் பெரியாருக்கு எங்கிருந்து அனுமதி கிடைத்தது. ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி வலியாக இருக்க முடியும்? ஹராமைச் சாப்பிட்டவர் எப்படி ‘கராமத்’ காட்ட முடியும்? ஊரான் வீட்டுக் கோழியை அறுத்துச் சாப்பிட்ட இந்தக் கதையையும் இறைவனுக்காகப் பெற்ற மகனையே அறுக்கத் துணிந்த, இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக வரலாற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இறைவன் எதைப் பொருத்திக் கொள்வான் என்று சிந்தியுங்கள்.

நபிமார்களுக்குரிய முஃஜிசாத்தாக இருப்பினும், வலிமார்களுக்குரிய கராமத்தாக இருப்பினும் அல்லாஹ்வின் அனுமதி இன்றி அவர்கள் விரும்பியவுடன் செய்ய முடியாது. “எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் செய்ய முடியாது. “எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் கொண்டு வர முடியாது”. (அல்குர்ஆன் 40:78) மேலும் அவை அவர்களுக்குரிய சாதாரண அடையாளங்களில் ஒன்றே அல்லாமல் இன்று நம்மவர்கள் பெரிதுபடுத்திக் காட்டும் அளவுக்கு முக்கிய இடத்தைப் பெற்றவை அல்ல. அவர்களது சிறப்பெல்லாம், அவர்களது ஈமானையும் தக்வாவையும் வைத்துத் தான். (அல்குர்ஆன் 10:63, 49:13) இந்த மாயாஜலக் கதைகளை வைத்து அல்ல. இந்தக் கட்டுக் கதைகளைச் சொல்லித்தான் பெரியார்களின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதில்லை. அல்குர்ஆன், ஹதீதுக்கு ஒத்த அவர்களின் உண்மையான போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னாலே போதும்.

நபி இப்றாஹிம்(அலை) அவர்கள் வரலாற்றிலும், அவர்கள் கூர்மையான கத்தியைக் கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களின் கழுத்தை அறுத்தார்கள்; கழுத்து அறுபடவில்லை; அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆகி விடுவோமோ என்ற அச்சத்தில், ஆத்திரமுற்று பக்கத்திலிருந்த பாறாங்கல்லில் கத்தியை ஓங்கி அடித்தார்கள். பாறாங்கல் இரண்டாகப் பிளந்து விட்டது, என்று இங்கும் ஒரு மாயாஜால மந்திரக் கதையை இட்டுக் கட்டியிருக்கிறார்கள்.

கீழ்க் குறிப்பிடப்படும் அல்குர்ஆன் வசனங்களை மீண்டும் ஒருமுறை உற்று நோக்குங்கள்.

“ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, இப்றாஹிம் அலை, மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை யா இப்ராஹிம் என்றழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான, பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.” (அல்குர்ஆன் 37 : 103 – 107)

சாதாரண அறிவு படைத்தவனும் இவ்வசனங்களைப் பார்த்த மாத்திரத்தில் இப்றாஹிம்(அலை) மகனை குப்புறக்கிடத்தியவுடன், அல்லாஹ் அவரை அழைத்து விட்டான்; அறுக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை; அப்படிப்பட்ட கதைகளெல்லாம் வெறும் கட்டுக் கதைகள் தான் என்பனவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.

உண்மைக்குப் புறம்பான, மாயாஜல மந்திரக் கட்டுக் கதைகளைப் பெரியார்கள் வலிமார்கள் விஷயத்தில் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டு விட்ட ஒரு சாரார் அந்தப் பழக்க தோசத்தில் அல்குர்ஆன் தெளிவாக பறை சாற்றிக் சென்றிருக்கும், ஒரு சம்பவத்திலும், தங்கள் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இங்கு இன்னொன்றையும் கவனித்து விளங்கிக் கொள்ளுங்கள். அல்குர்ஆனைக் கொண்டு நிலைநாட்டப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்திலேயே இப்படி மாயாஜல மந்திரக் கதைகளை உண்டாக்கியவர்கள் ஆதாரப் பூர்வமில்லாத வலிமார்கள் வரலாறுகளில் எந்த அளவு புழுகு மூட்டைகளை அள்ளி விட்டிருப்பார்கள் என்பதைச் சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ள முடியும். இந்த வகையில் உருவானது தான், செத்த கோழியும் உயிர் பெற்று எழுந்த கதையாகும்.

இவற்றிற்கெல்லாம் மூல காரணம் என்ன என்று பார்க்கும் போது வலிமார்கள் விஷயத்தில் அளவு கடந்த கட்டுக் கதைகளையும் மாயாஜாலக் கதைகளையும் கட்டி விட்டு, பாமர மக்களுக்கு மத்தியில் வலிமார்களைப் பற்றி ஒரு “இமேஜை” உண்டாக்கி, சுருங்கச் சொன்னால் குறைஷிக்காபிர்களைப் போல், அவர்களைக் குட்டித் தெயய்வங்களாக்கி, அதன் மூலம் சமுதாயத்தில் கபுரு வணக்கத்தை உண்டாக்கி வயிறு வளர்க்க வேண்டும்; பிழைப்பு நடத்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய நோக்கமாகும். அல்லாஹ்(ஜல்) இந்தக் கயவர்களின் மாய வலையிலிருந்து இந்தச் சமுதாயத்தைக் காத்தருள்வானாக!

“மனிதரில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி (அவற்றை ஜனங்களுக்குச் சொல்லி) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து அறிவின்றி (ஜனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)

அல்குர்ஆன்  ஹதீதுகளுக்கு மாற்றமான, இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலக் கட்டுக் கதைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அல்குர்ஆன்  ஹதீதுகளை மட்டும் வைத்துச் செயல்படுவதை இந்த “ஈத்” இலட்சியமாக் கொள்வோமாக!

 நன்றி: இப்னு ஹத்தாது/www.ரீட்இஸ்லாம்.நெட்


மார்க்கம் மிக மிக எளிதானது




இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 22:78)

அல்லாஹ் இவ்வசனத்தில் இஸ்லாத்தில் எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகின்றான். மனித சமுதாயம் மிகவும் சுலபமாக பின்பற்றக் கூடிய ஒரு அழகிய வாழ்க்கை நெறியினை தான அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இஸ்லாத்தில் மிக முக்கியமான கட்டாய கடமையான தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, ஜகாத் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நின்று கொண்டு தொழ இயலாதவர்கள் உட்கார்ந்து தொழட்டும்; உட்கார்ந்து தொழ இயலாதவர்கள் படுத்துக்கொண்டு தொழட்டும் என்பது போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று மனித இயற்கைக்கு மாற்றமாக எந்த ஒன்றையும் இஸ்லாம் நமக்குக் கற்றுதரவில்லை. உதாரணமாக ரமழான் மாதத்தில் நோன்பு நோர்க்க இயலாத அளவிற்கு நோய் வாய்ப்பட்டவர்கள் ரமழான் அல்லாத மாதங்களில் நோன்பு நோற்கவேண்டும் என்று அல்லாஹ் 2:185 வசனத்தில் கூறுகின்றான். அதே போன்று மனித சக்திக்கு அப்பாற்பட்ட எந்த ஒன்றையும் இஸ்லாம் நமக்கு கட்டாயக் கடமையாக்கவில்லை (உ.தா.எ) வசதி வாய்ப்பு பெற்றவர்கள்தான் ஹஜ் செய்ய வேண்டும்; ஜகாத் கொடுக்கவேண்டும். இப்படி உயர்வான மிகவும் சுலபமான இஸ்லாத்தை ஏற்றுள்ள முஸ்லிம் சமுதாயம் இஸ்லாத்தை பின்பற்றுவதில் மிகவும் கஷ்டப்படக் கூடியவர்களாக இருப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

ஒரு வயதான பெண்மணி என்னிடம் சொன்னார்கள். எனது கணவர் இறந்த உடன் என்னை வானத்தைப் பார்க்கக் கூடாது; பூமியைப் பார்க்க கூடாது என்றும், இதுதான் இத்தாவின் முறை என்றும் சொன்னார்கள். அப்பொழுது நினைத்தேன் மனிதனின் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயத்தை எல்லாம் மார்க்கம் சொல்லி இருக்குமா? என்று, அதற்கு நான் சொன்னேன் நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்மணிக்கு இத்தாவுடைய நேரத்தில் வெளியில் சென்று வேலை செய்வதற்கு அனுமதி வழங்கி இருக்கின்றார்கள். இவை எல்லாம் நாமாக இஸ்லாத்தின் பேரில் கஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமோ மனித நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தையோ மனிதனுக்கு கஷ்டமான ஒரு விசயத்தையோ மார்க்கமாக ஒரு போதும் எடுத்தியம்பவில்லை.

இப்படி இஸ்லாம் முஸ்லிம்கள் மத்தியில் கடின மானதற்குக் காரணம் என்ன? முஸ்லிம்களின் அறியாமையா? அல்லது மார்க்க அறிஞர்கள் தமது கடமையினை மறந்ததினாலா என்றால், முஸ்லிம்கள் அறியாமையிலும் இருக்கின்றார்கள்; மார்க்க அறிஞர்கள் தமது கடமையை முறையாகச் செய்யாமல் இருக்கின்றார்கள். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாம் என்று எதற்கெல்லாம் சொல்லமுடியும் என்பது கூட தெரியாமல் தான் இருக்கின்றார்கள்.

இன்று முஸ்லிம்களில் சிலர் இஸ்லாத்தில் தெளிவு பெற்று குர்ஆனில் உள்ளவைகளையும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழி முறைகளையும் எடுத்துச் சொல்லும் போது முஸ்லிம்கள் ஓர் ஆச்சரியமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள். இஸ்லாம் என்று எதனைச் சொல்ல முடியுமோ அதை காஃபிர்கள் இடத்தில் சொல்லும் போது அவர்கள் ஓர் ஆச்சரியமான கண்ணோட்டத்தில் பார்த்தாக அல்லாஹ் 50:2 வசனத்தில் கூறுகின்றான். காஃபிர்கள் இஸ்லாத்தினை ஓர் ஆச்சரியமான கண்ணோட்டத்தில் பார்ப்பதிலாவது அர்த்தம் இருக்கின்றது. இஸ்லாத்தை தங்களது மார்க்கமாக ஏற்றுள்ள முஸ்லிம் இஸ்லாத்தை ஆச்சரியமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள் என்றால் முஸ்லிம் சமுதாயம் உண்மையிலேயே அறியாமையில் தான் இருக்கின்றது.

இப்படி இஸ்லாத்தில் அடிப்படையே தெரியாமல் இருக்கின்ற முஸ்லிம் சமுதாயம் தர்ஹாவிற்கு செல்லாதே, மெளலூது ஓதாதே, தாயத்து தட்டு, ஃபாத்திஹா போன்ற சடங்குகளை செய்யாதே என்று சொன்னால், சொல்பவர்கள் மீது ஏதாவது ஒரு முத்திரையினைக் குத்த முயற்சிப்பார்களே தவிர சொல்வதை செவி சாய்க்க மாட்டார்கள். செவிடன் காதில் ஊதிய சங்கை போன்றுதான். இப்படி எதனையும் சிந்திக்காமல் இருக்கக் கூடிய சமுதாயத்திற்கு மத்தியில் நாம் என்ன செய்வது என்பதை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதற்குக் காரணம் என்ன?  நமது சமுதாயத்தில் எங்கே கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து அந்த தவறினை நிவர்த்தி செய்தால் நமது சமுதாயம் இஸ்லாத்தை தெளிவாக புரிந்து கொள்ளும்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் உங்களிடம் இரண்டைவிட்டு செல்கின்றேன்; அந்த இரண்டையும் பற்றிப் பிடித்திடிருக்கும் காலம் எல்லாம் நீங்கள் ஒருபோதும் வழிதவறவே மாட்டீர்கள்; ஒன்று அல்குர்ஆன், இரண்டு எனது சுன்னத்தான வழிமுறை. அறிவிப்பாளர் மாலிக்பின் அனஸ்(ரழி) நூல்: முஅத்தா 1599

நமது சமுதாயம் வழிகெட்டு, நெறிகெட்டு சடங்குகளிலும் சம்பிர தாயங்களிலும் மூட – பழக்க வழக்கங்களிலும், வெட்டி அனாச்சாரங்களிலும் மூழ்கியிருப்பவதற்குக் காரணம் எதைப் பின்பற்றினால் வழிதவற மாட்டார்களோ அதைப் புறகணித்துவிட்டு மனித சொந்த அபிப்பிராயங்களையும் மனித கற்பனைகளையம் பின்பற்றியதன் விளைவு, முஸ்லிம் சமுதாயம் இன்று வழிகேட்டின் பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது.

நமது சமுதாயம் குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் பின்பற்றக் கூடியவர்களாக உருவாக வேண்டும் என்று ஆசைபடுவதற்கு முன்னால் தமது குடும்பத்தினர்களையும் உறவினர்களையும் நண்பர்களையும் குர்ஆனையும் ஹதீஸ் கிரந்தங்களையும் படிப்பதற்கு ஆர்வம் ஊட்டவேண்டும். வாங்கிப் படிக்க வசதி இல்லாதவர்களுக்கு வசதி உள்ளவர்கள் வாங்கிக் கொடுக்க முயற்சி செய்யவேண்டும். நமது சகோதரர்களுக்கு மத்தியில் காணப்படும் குறைபாடுகளை கண்டு நான் மிகவும் கவலை அடைகிறேன். நமது சகோதரர்களோடு ஏகத்துவ கொள்கை நின்றுவிட்டதே ஒழிய, அவர்களது குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினருக்கும் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அல்லாஹ் திருமறையில் 26:214 வசனத்தில் நபியை பார்த்து கட்டளையிடுகின்றான். நபி(ஸல்) அவர்களுக்கு சத்திய இஸ்லாம் கிடைத்த மாத்திரத்தில் அவர்கள் முதலில் அழைப்புப் பணி செய்தது தமது குடும்பத்தினர்களிடத்திலும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அல்லாஹ் திருமறையில் 33:21 வசனத்தில் கூறுகின்றான். உங்களுக்கு அழகிய முன்மாதிரி உங்கள் நபியிடத்தில் இருக்கின்றது. நாமும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு இந்த வசனத்தை எடுத்துச் சொல்கின்றோம். அந்த முன்மாதிரியான நபி(ஸல்) அவர்கள் செய்த செயலை எத்தனை பேர் செய்து இருக்கின்றோம் என்பதை இஸ்லாமிய சகோதரர்களே சற்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இஸ்லாத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் எடுத்துச் சொல்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாக இருக்க, அந்த கடமையை மறந்தவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம் அல்லாதவர்களுக்குத்தான் இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல இயலவில்லை. தெளிவான மார்க்கம் இருந்தும் முஸ்லிம் சமுதாயம் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் வெட்டி அனாச்சாரங்களிலும் மூடப்பழக்க வழக்கங்களிலும் மூழ்கி இஸ்லாமிய வளர்ச்சிக்கு முஸ்லிம் சமுதாயமே ஒரு முட்டுக் கட்டையாக இருக்கின்றார்களே அவர்களையாவது சீர்திருத்த முயற்சி செய்தோமா? சமுதாயத்தை விடுங்கள் உங்களது குடும்பத்தினர்களையும் உங்களது உறவினர்களையும் சீர்த்திருத்தினீர்களா?

அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்தை வழிநடத்திச் செல்ல வேண்டிய மார்க்க அறிஞர்கள், மார்க்கத்திற்கு நாங்கள் தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லக்கூடிய மார்க்க அறிஞர்கள் மீண்டும் மீண்டும் அறியாமை என்னும் இருளுக்குத்தான் கொண்டு சென்றார்களே தவிர, இஸ்லாம் என்னும் வெளிச்சத்திற்கு கொண்டு செல்வது இருக்கட்டும், காண்பிக்கக் கூட முயற்சி செய்யவில்லை. திருமறை குர்ஆனில் 2:257 வசனத்தில் பக்கம் கொண்டுவர நாடுகின்றான். ஷைத்தானோ மனிதர்களை வெளிச்சத்திலிருந்து இருளின் பக்கம் கொண்டு செல்ல நாடுவதாக” அல்லாஹ் சொல்லிக் காண்பிக்கின்றான். எந்த இஸ்லாத்தின் மூலம் அல்லாஹ் மனிதர்களை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வர நாடுகின்றானோ அந்த சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்ட ஆலிம்கள் ஷைத்தானின் நோக்கத்தினை நிறைவேற்றக் கூடியவர்களாக இருப்பதை நினைத்தால் வேதனையாகத்தான் உள்ளது. ஆலிம்களை இப்படி விமர்சனம் செய்கின்றேனே என்று ஒன்றும் நினைக்க வேண்டாம். இவர்களை விமர்சனம் செய்வது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல.(சிறிதளவு கூட இஸ்லாமிய எழுச்சியில், மலர்ச்சியில், வளர்ச்சியில், அக்கறை ஆர்வம் அற்றவர்களாக தாமும் செய்யாமல், செய்பவனையும் செய்யவிடாமல், மேய்கின்ற மாட்டை கெடுக்கின்ற மிதங்கொண்ட மாடுகளை போன்று இஸ்லாமிய வளர்ச்சியினை தடுக்கின்றார்களே என்ற ஆத்திரம்தான். இவர்களை விமர்சிப்பதில் குர்ஆனின் 2:159 வசனப்படி தவரொன்றுமில்லை. இவர்களை இனம் காட்டினால் தான் இருக்கின்ற இளைய தலைமுறை இஸ்லாத்தின் உண்மை நிலையினை உணர்ந்து உருவாகும்.)

தமிழகத்தில் உள்ள பெருவாரியான பள்ளிகளில் ஜமாஅத்துல் உலமா சபையினை சார்ந்தவர்கள்தான் இமாமாகப் பணி புரிகின்றார்கள். இவர்கள் எல்லாம் ஒரு கூட்டம் “குர்ஆனில் உள்ளவற்றை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றி, ஒவ்வொரு பள்ளியிலும் மார்க்க பிரச்சாரம் செய்தார்கள் என்றால் நமது சமுதாயத்தினை ஓரளவாவது வழிகேட்டிலிருந்து மீட்க முடியும் என்பது திண்ணம்.  ஆனால் இவர்கள் இதனை செய்யமாட்டார்கள். இமாமத் செய்யும் ஊரில் உள்ள நாட்டாண்மைகளுக்கும் பெரியவர்களுக்கும் மார்க்கத்தை வளைத்து கொடுக்க வேண்டும் என்று வேண்டுமானால் தீர்மானங்களை நிறைவேற்றி செம்மையாக செயல்படுவார்களே தவிர சத்தியத்தினை எடுத்துச் சொல்லமாட்டார்கள். யூதர்களோடு யாரையாவது ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுத வேண்டுமானால் நமது ஆலிம்களை யூதர்களோடு ஒப்பிட்டு எழுதலாம்.  இவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் குணாதிசியங்களில் யூதர்களோடு ஒத்தவர்களாகவே இருக்கின்றார்கள். அல்லாஹ் திருமறையில் 2:146 வசனத்தில் யூதர்கள் குர்ஆனை இறைவேதம் என்பதை அறிவார்கள் எப்படி என்றால் தன்னுடைய குழந்தையை அறிவது போன்று; இருந்தும் மறைப்பார்கள் என்று கூறுகின்றான். யூதர்களைப் போன்று ஆலிம்களும் குர்ஆனை அறிவார்கள்; இருந்தும் உலகில் கிடைக்க கூடிய ஒரு சில சுகபோகத்திற்காகவும் உலக ஆதாயத்திற்காகவும் குர்ஆனை மக்கள் மத்தியில் மறைப்பார்கள்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே! இப்படிப்பட்டவர்கள் நமது சமுதாயத்தை சீர்திருத்தி விடுவார்கள் என்று நாம் நினைப்பது கானல் நீரே. மார்க்கத்தின் உண்மை நிலையை உணர்ந்த நாம் – அறிந்த நாம் உண்மையான உணர்வுகளோடும் ஆர்வத்தோடும் அல்லாஹ்விற்காக என்ற எண்ணத்தோடும் செயல்பட முயற்சி செய்யாதவரை அறியாமையில் மக்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். ஒருபகுதியில் மக்கள் வழிகேட்டில் இருக்கின்றார்கள் என்றால் அங்கு இதன் அடிப்படையில் செயல்பட ஆள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அறிந்தவர்கள் செம்மையாக செயல்படாதவரை அறியாமை என்னும் இருள் நீங்காது. இது நான் அனுபவப்பூர்வமாக கண்ட ஒன்று. அல்லாஹ் நமக்கு குர்ஆனையும், ஹதீஸையும் படிப்பதற்கு உதவி புரிந்தான். அல்லாஹ்வின் வாக்கினை மக்கள் மத்தியில் நிலை நாட்டுவதற்காக நாம் அனைவரும் அல்குர்ஆனின் அடிப்படையில் செயல்பட முன் வரவேண்டும்; இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ்வுடைய சன்மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்; நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 42:13)

நன்றி: www.ரீட்இஸ்லாம்.நெட்